Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
ஓட்டு போட மறக்காதீர்!விரைவில் தேர்தல் வரவிருக்கிறது; ஆனால், சிலர் தேர்தலை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. அத்துடன், பலர் ஓட்டு போட ஓட்டுச்சாவடிக்கே செல்வதில்லை. அன்று, 'டிவி' பார்த்து, விருந்து சாப்பிட்டு, பொழுதை கழிக்கின்றனர். ஓட்டு போடுவோரில் சிலர், ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டுவிட்டு வந்து விடுகின்றனர். தேர்தலன்று சில விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்வது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.பிரபல இந்தி திரையுலகின், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனிடம், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
'பத்திரிகைகளை நாளேடு, வார ஏடுன்னு சொல்கின்றனரே... 'ஏடு'ங்கிறது ஓலைச் சுவடியை குறிக்கும் சொல். அதன்பின், அச்சிடப்பட்ட இதழ்களையும் ஏடுன்னு சொல்றது வழக்கமாகி விட்டது. ஆனா, புத்தகத்தை மட்டும் நூல்ன்னு சொல்றோமே தவிர, ஏடுன்னு ஏன் சொல்றதில்ல?' என்று நடுத்தெரு நாராயணனிடம் கேட்டேன்.'ஏடுங்கிறது புத்தகத்தையும் குறிக்கிற சொல் தான். 'ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது'ன்னு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
கே.சங்கரன், ஆலந்தூர்: அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே கொள்கையாக எதை கருதுகிறீர்கள்?உங்களுக்கு தெரியாதா என்ன? 'சந்தர்ப்பவாதம்' - இது தான், இன்று அனைத்து கட்சிகளின் ஒரே கொள்கை! ப.குருதேவி, சோமனூர்: இந்தக் காதில் வாங்கி, அந்த காதில் விட்டு விடுவது சரியா, தவறா?ஒரு விஷயத்தில் சரி! அது, நாம் விரும்பாவிட்டாலும், வலுக்கட்டாயமாக மற்றவர் பற்றி கூறப்படும் வம்பு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
மனக்கவலை மாற்றல் அரிது என்கிறார் வள்ளுவர். மன்னிக்க வேண்டும் ஐயனே! மனக்கவலை மாற்றல் எளிது தான். கவலைப்பட்டு உடல் மற்றும் மனநலத்தை கெடுத்து, அனைத்தையும் பறி கொடுத்தவர்கள் போல், பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு, நோயாளிகள் போல் ஆகிவிட்ட நம் மக்களை மீட்டெடுக்க வேண்டும். முடியாது எனக் கூறி, இவர்களுக்கு கதவடைக்க இயலாது, ஐயனே!கவலை என்பதை, இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
ஜகஜ்ஜால பிரதாபனின் கைபேசி சிணுங்கியது. சட்டைப்பையிலிருந்து எடுத்து பார்த்ததில், குறுஞ்செய்தி வந்திருந்தது; பொத்தானை அழுத்தி வாசித்தான்...'அன்பரே... ஊதா கட்சியில் சேர வேண்டுமா? கீழ்க்கண்ட எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுங்கள் 9988776655' என்றிருந்தது.ஜகஜ்ஜால பிரதாபனின் கண்கள், குயுக்தியாய் மின்னின. உதடுகளை வளைத்து, சுழித்து, பற்களால் வலிக்காமல் கடித்தான். நெற்றியும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
மீண்டும் தீவிரவாத கதையை இயக்கும் மணிரத்னம்!கடந்த, 1992ல், தீவிரவாதத்தை மையப்படுத்தி, ரோஜா என்ற படத்தை எடுத்தார் மணிரத்னம். அதன்பின், தீவிரவாத கதையை தொடாதவர், தற்போது, கார்த்தி - சாய் பல்லவி நடிப்பில், தீவிரவாத கதையை இயக்க உள்ளார். முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்க உள்ள இப்படத்தில், சில வெளிநாட்டு வில்லன்களை தீவிரவாதிகளாக நடிக்க வைக்கவிருக்கிறார்.— சினிமா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
சென்னையிலுள்ள, தரும மிகு கந்த கோட்டத்தில் அருள் புரியும் முருகன் கோவிலில், ஒரு சமயம், அடியார்கள் எல்லாம் கூடி, 'நம் கோவிலுக்கு உற்சவ விக்ரகம் வேண்டும்...' என்று முடிவெடுத்தனர்.சிற்ப சாஸ்திர திறமைசாலிகளைக் கொண்டு, பஞ்சலோகத்தில், உற்சவ விக்ரகம் ஒன்றை வார்த்து முடித்தனர். பின், வார்ப்படத்தை பிரித்த போது, விக்ரகம், 'பளபள'வென மின்னி, ஒளி வீசியது. ஆனால், ஆங்காங்கே சிறு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
கண்ணதாசன் எழுதிய, 'எண்ணங்கள் ஆயிரம்' நூலிலிருந்து: நல்ல உள்ளமும், ஞாபக மறதியும் படைத்த பொதுமக்களே...உங்களை வணங்குகிறோம்; தெய்வம் வரம் கொடுப்பது போல, எங்களுக்கு பதவி கொடுத்து, உங்களை வாழ வைக்க வந்த எங்களை, வாழ வைக்கிறீர்கள் என்பதால், உங்களை மதிக்கிறோம்.அரசியல்வாதிகளான நாங்கள் அன்று எப்படி இருந்தோம், இன்று எப்படி இருக்கிறோம் என்று நீங்கள் ஆராயக் கூடாது. அன்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
அன்புள்ள அம்மா —என் வயது, 24; திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. என் கணவர் கை நிறைய சம்பாதிக்கிறார். நான் படித்திருந்தாலும், என்னை வேலைக்குப் போய் கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்லி விட்டார். பொழுதுபோக்கிற்காக கைவினைப் பொருட்களைத் தயார் செய்து, தெரிந்தவர்களுக்கு விற்கிறேன். என்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறார் என் கணவர். தாம்பத்ய வாழ்க்கையிலும் எந்தக் குறையும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
ஏப்., 26 - வராக ஜெயந்திதிருமண முகூர்த்தம் குறிக்கும் போது, சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் பார்த்து குறிப்பர். நல்ல நேரத்தில் மணமக்கள் மகிழும் போது, நல்ல குழந்தைகள் பிறப்பர். காலம் தவறி உறவு கொண்டு பிறக்கும் பிள்ளைகளால், பிரச்னை தான் எழும்.காஷ்யபர் என்ற முனிவருக்கு, திதி என்ற மனைவி உண்டு. இவளுக்கு, ஒருநாள், தெய்வ வழிபாட்டுக்குரிய மாலை நேரத்தில் கணவருடன் கூட ஆசை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
வருகிறது தேர்தல்!வருகிறது தேர்தல்தயாராகுங்கள் ஏந்தல்களே!வாக்குறுதிகளைவக்கணையாய் கூறிவாக்கு கேட்டு வரப் போகின்றனர்!பாரீன் மாதிரிஆக்குவேன் என்பார் ஒருவர்...'சரக்கே' கிடையாதென்பார் மற்றொருவர்...வெற்றி பெற்றதும்சரக்கை ஏற்றிபாரீனுக்கேபறந்து விடுவர்!ஓட்டுப் போடமெட்ரோ ரயிலில் கூடமெனக்கெட்டு கூட்டி வருவர்...ஓட்டு போட்டு முடிந்ததும்பாசஞ்சர் ரயிலில் கூடஏற்றி விட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
மாலை, கதிரவன் அஸ்தமிக்கும் வேளை; வேலைக்கு சென்றவர்கள், அவரவர் வீட்டிற்கு, திரும்பியபடி இருந்தனர். மணி, 7:30 ஆகியும், வேலைக்கு சென்ற மகள் சரண்யா, இன்னும் வரவில்லையே என்று, கணவனிடம் புலம்பினாள் யசோதா.''விடுபுள்ள... அவ என்ன சின்னப்புள்ளயா...'' என்றார் ராமசாமி.கணவரிடம் இருந்து இப்படி ஒரு பதில் வருமென்று, அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவளது மன உளைச்சலையும், சுமைகளையும் பங்கிட, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
ரஷ்யா மற்றும் துருக்கியின் எல்லையில் அமைந்துள்ள நாடு ஜார்ஜியா. இங்கு, மூட நம்பிக்கை அதிகம். அதுவும், 'மொபைல் போன்கள், சைத்தானின் கருவி...' என்ற பிரசாரம், இங்கு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போன்கள் வாங்குவதை, பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர். ஆனால், விற்பனையாளர்கள், கில்லாடிகள் அல்லவா!தங்கள் கடைகளுக்கு பாதிரியார்களை அழைத்து வந்து, மொபைல் போன்களை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
ஒரு காலத்தில், கணவனை இழந்த பெண்களை பார்ப்பதோ, அவர்களை வீட்டு விசேஷங்களுக்கு அழைக்கவோ மாட்டார்கள். இன்றும் கூட, ஒரு சிலர், இரக்கமின்றி இப்பெண்களை நல்ல காரியங்களில் இருந்து ஒதுக்கித் தான் வைக்கின்றனர். ஆனால், கர்நாடகாவில் உள்ள, குத்ரோலரி கோகர்ணநாத கோவிலில், கணவனை இழந்த பெண்கள் பூசாரிகளாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இக்கோவிலில், இரு ஆண்டுகளுக்கு முன், கணவனை இழந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, EPIC என டைப் செய்து, இடைவெளி விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, 9444123456 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். 'No Record found' என்று வந்தால், 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும். வாக்களிப்பது நம் கடமை. வாக்களிக்கும் உரிமை பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்வது நம் பொறுப்பு.வெயில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
தென் அமெரிக்காவில் உள்ள நாடு பெரு; இங்கு தான், உலகின் மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றான, அமேசான் ஆறு பாய்கிறது.இங்குள்ள அடர்ந்த வனப் பகுதியில், மயாண்டுகாவு என்ற இடத்தில், 6.4 கி.மீ., நீளம் உள்ள ஒரு சிற்றாறு பாய்கிறது. இதை, 'கொதிக்கும் நதி' என, அழைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.இந்த ஆற்றின் நீர், 50 - 90 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும், சில இடங்களில், 100 டிகிரி செல்சியசை தாண்டி, கொதிக்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
மலையாள நடிகரும், கம்யூ., எம்.பி.,யுமான இன்னசென்ட், பார்லிமென்டில் பேசும் போது, தான் ஒரு புற்று நோயாளி என்றும், நோயுடன் போராடி வெற்றி பெறுவேன் என்றும் கூறி, 'எம்.பி.,களின் வருகை பதிவேட்டில், சோனியா பெயருக்கு அடுத்து, என் பெயர் இருக்கிறது. கையெழுத்து போடும் போது, பக்கத்தில் நான் இருந்தாலும், அவர், என்னை கண்டுகொள்வதில்லை. யாரையும் கவனிக்காமல், வேகமாக நடந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
'செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா...' என, ஆய்வு செய்து வருகிறது, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா. இன்னும் சில ஆண்டுகளில், அங்கு, மனிதர்களை குடியமர்த்துவதற்கான வேலையும் வேகமாக நடக்கிறது.இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில், உருளைக் கிழங்கு விவசாயம் செய்வதற்கான ஆராய்ச்சியை தீவிரப் படுத்தியுள்ளது நாசா. இதற்காக, பெரு நாட்டின் லிமா நகரில், இடம் தேர்வு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X