Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
இந்த லோகத்தில் சிலரை ஏமாற்றி விடலாம். ஆனால், ஏமாற்றப்பட்டவர்கள், பரலோகத்தில் வந்து காத்திருந்து, ஏமாந்த பொருளைப் பெற்று விடுவர். நாவிதன், சலவைத் தொழிலாளி, செருப்பு தைப்பவன் மற்றும் வைத்தியன் ஆகியோரை ஏமாற்றக் கூடாது என்பது சாஸ்திரம்.ஒரு செருப்பு தைப்பவனிடம், செருப்பு வாங்கிவிட்டு, பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் ஒருவர். செருப்பு தைப்பவன் காலமாகி, பரலோகத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
குட்டு வாங்கிக் கொண்டே இருக்காதீர்கள் பெண்களே...பத்து வருடங்களுக்கு முன், என் கணவர், அரசு துறையில், "கிளார்க்'காக இருந்தார். எனவே, என்னுடைய கல்யாணத்திற்கு வரதட்சணையாக, 15 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொடுத்தார் என் தந்தை. சில ஆண்டுகளில், என் கணவர், உயர் பதவிக்கு வந்து விட்டதால், சம்பளம், கிம்பளம் அதிகரிக்கவே, குடி, சூதாட்டம் என, வரவுக்கு மேல் செலவு செய்ய ஆரம்பித்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
மே 4 - திருநாவுக்கரசர் குருபூஜைநமக்கு வீட்டிலோ, அலுவலகத்திலோ ஒரு சோதனை வந்துவிட்டால் போதும்..."அடப்பாவி, எதற்காக என்னை இந்த பூமியில் பிறக்க வைத்தாய். கண்டவன் வாயிலெல்லாம் என்னை விழ வைக்கிறாயே... இருப்பது போதவில்லையே... அத்தியாவசிய தேவைக்காவது ஏதாவது தருகிறாயா? அரிசி 50 ரூபாய்க்கு விற்பது <உன் கண்ணுக்கு தெரியலையா?' என்று கடவுளைத் திட்டித் தீர்த்து விடுவோம். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
நண்பர் ஒருவருக்கு, சமீபத்தில் திருமணம் நடந்தது. ஜாதகம், ஜோசியத்தில் மிகுந்த நம்பிக்கையும், பற்றும் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். நண்பருக்கு செவ்வாய் தோஷம் இருந்ததால், திருமணம் தள்ளிப் போய் கொண்டே இருந்தது. இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன் ஒரு நாள், "மணி... நாளை மறுநாள் எனக்குக் கல்யாணம்...' என்றார்."என்னப்பா... திடுதிப்பென்று கல்யாணம்ன்னு சொல்றே... எப்போ பொண்ணு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
*தா.கதிரரசு, மைலாப்பூர் : புத்தகங்கள், பத்திரிகைகள் படிக்கும் பழக்கம், இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகம்?கேரள மாநிலம் முதலிடம் வகிக்கிறது! படிக்கும் பழக்கம் அதிகமென்பதாலேயே, அங்கே, "டிவி' எடுபடவில்லை! அடுத்து வரும் மாநிலம் மேற்கு வங்காளம்... வங்காளிகளும் நிறைய படிப்பவர்கள் தான்!****எஸ்.மீனாட்சி, கோடம்பாக்கம்: "ஐந்து ஹார்ஸ் பவர் மோட்டர், பத்து ஹார்ஸ் பவர் மோட்டர்' என, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
மாடர்ன் தியேட்டர்ஸ் தொழிலாளர்கள் பிரச்னை காரணமாக, ஷூட்டிங் முடிந்து நடிக-நடிகையர்கள் வீடு திரும்பும் போது, காரை வழி மறித்து தாக்குவது என, சில தொழிலாளிகள் முடிவு செய்திருந்தனர். இந்த பிரச்னையை சமாளிக்க டி.ஆர்.சுந்தரம் ஒரு யுக்தி செய்தார். அதன்படி, நடிகர்களின் காருக்கு முன்பாக தான் செல்வது என்று முடிவு செய்து, டி.ஆர்.சுந்தரமே, வண்டியை எடுத்தார். வண்டியில் கேமராமேன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
தூர தேசங் களுக்கு, சாதாரண வகுப்பில், நீண்ட தூரம் பயணிப்போரின் அவஸ்தையை சொல்லவே வேண்டாம். "எப்போது தான், நாம் செல்ல வேண்டிய இடம் வருமோ...' என, விரக்தியின் உச்சத்துக்கே சென்று விடுவர்.பல லட்சம் கோடி ரூபாய்களை, வங்கி கணக்கில் கொட்டி வைத்திருக்கும், கோடீஸ்வரர்கள், இந்த விஷயத்தில், சற்று மாற்றி யோசிக்க துவங்கினர். சவுதி அரேபியா இளவரசர் அல்-வலீத் பின் தலால், பிரபல ஹாலிவுட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
திராவிட நாடு, தனி நாடாக வேண்டுமென்ற குறிக்கோளோடு, தி.மு.க., மக்களிடையே செல்வாக்கு பெற்று வருவதை அறிந்த மத்திய அரசு, தி.மு.க.,வை எப்படியாவது அழித்திட வேண்டுமென்று திட்டமிட்டது. அதன் எதிரொலியாக, தனி நாடு பிரிவினைச் சக்திகளைத் தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.தனி நாடு தடைச் சட்டத்தை, கொண்டு வந்து, பிரிவினைக் கட்சிகளைத் தடை செய்வதற்கான சட்டப் பிரச்னைகளை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
குடிசை படலை திறந்து உள்ளே நுழையும் போதே மீன் குழம்பின் வாசம் மூக்கைத் துளைத்தது. மூக்கை நன்றாக உள்ளுக்கு இழுத்து வாசத்தை அனுபவித்தபடி ஐந்தாம் வகுப்பு படிக்கும் ராஜா, புஸ்தகப் பையை மூலையில் வைத்துவிட்டு உள்ளே வந்தான்.""ஆத்தா இன்னைக்கு நம்ப வீட்டிலே மீன் குழம்பு சோறா?''குழம்பின் வாசம் அவனுள் பசியை தோற்றுவித்தது. ""ஆமாண்டா ராஜா. உங்கப்பனுக்கு மனசு வந்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
அமெரிக்காவை சேர்ந்த, பிரபல பாப் பாடகி மடோனா, சிலிர்க்க வைக்கும் நடனத்தாலும், கிறங்க வைக்கும் குரலாலும், உலகம் முழுவதும் உள்ள, லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர். தற்போது, இவர், ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளார்.அதிகம் சம்பாதித்த, பிரபலங்களின் பில்லியனர் கிளப்பில், மடோனாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. பாப் பாடகி ஒருவர், பில்லியனர் கிளப்பில் இடம் பெறுவது, இதுவே முதல் முறை. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
நிறுத்துவதற்கு இடமிருக்கிறதா, இல்லையா என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல், கடன் வாங்கியாவது கார் வாங்கும் நடைமுறை, நம் நாட்டில் அரங்கேறி வருகிறது. நம் நாட்டில் உள்ள, பல பெரிய நகரங்களில், பிசியான வர்த்தக பகுதிகள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றில் கூட, கார்களை நிறுத்துவதற்கு, போதிய அளவில் வசதிகள் செய்யப்படுவது இல்லை.இதனால், மக்கள் நடமாட்டமும், வாகன ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
அன்பு சகோதரிக்கு—தற்சமயம், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் நான். அலுவல் நிமித்தம் அடிக்கடி வெளியூர் செல்வேன். வேலையில் இருக்கும்போது ஓய்வே கிடையாது எனலாம். ஒரு நாளைக்கு, குறைந்தது பத்து மணி நேரமாவது வீட்டிற்கு வெளியே செலவிட வேண்டியிருக்கும்.விடுமுறை நாட்களிலும் ஓய்வு கிடையாது. வேலையின் தன்மை அப்படி. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது; எல்லாரும் பாராட்டும்படி அமைதியாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
படம் தயாரிக்கும் ஜி.வி.பிரகாஷ்!நான் படத்தில், விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்ததைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷையும், ஹீரோவாக்கும் முயற்சி நடந்தது. ஆனால், கடைசி நேரத்தில் நடிப்பில் ஆர்வமில்லை என்று சொல்லி, தயாரிப்பாளராகி விட்டார். மதயானைக் கூட்டம் என்ற பெயரில், படம் தயாரிக்கும் ஜி.வி.பிரகாஷ், அப்படத்துக்கு தான் இசையமைக்கவும் இல்லை. அந்த வாய்ப்பை, ரகுநந்தனுக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
மியான்மர் நாட்டின் தலைநகரான யாங்கோனில், புகழ் பெற்ற வன விலங்கு சரணாலயம் உள்ளது. இங்கிருந்த பெண் புலி ஒன்று, இரு குட்டிகளை ஈன்றது. பின், சில நாட்களில் இறந்து விட்டதால், தாய் இல்லாமல் தவித்து போன இரு குட்டிப் புலிகளுக்கும், உடல் நலக் குறைவு ஏற்பட்டது.வன விலங்கு அதிகாரிகள், புலி குட்டிகளுக்கு, புட்டி மூலம் பால் புகட்டிப் பார்த்தனர்... ஆனால், அவை குடிக்கவில்லை. இதனால், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
காதலும் கற்றுமற!* சாதாரணமாயிரு...காதலானாலும்கானலானாலும்!* நீயழுவதைவிடபிரிந்தவர் அழுவதேகாதல் வெற்றி!* திசை மாறுவதேகாதலிலும்,புயலிலும்இயற்கை!* தோற்றால்துவளாமல்காதலும் கற்றோமெனத்துள்ளலாம்!* காமமாய்காதலித்தவருக்குதுரோகமிழைத்தல்சுலபமே!* மனதைப்பறித்தவளுக்காய்,வாழ்வைவிட்டுக் கொடுத்தலும்காதல்தான்!* ஆக,காதலும்கற்றுமணக்கலாம்...கலைந்தால்மறக்கலாம்!— ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2013 IST
என் அப்பா, ஒரு தொண்டு நிறுவனம் நடத்தியவர். தமிழகத்தில் மூலை முடுக்கிலுள்ள கிராமங்களை தேர்ந்தெடுத்து, ஏழை மாணவர்களுக்கு இலவச கோடைக்காலப் பயிற்சி, அளிப்பது வழக்கம். அந்த, பத்து தினங்களும் இலவச உணவும் அளிக்கப்படும். அந்த சமையல் பொறுப்பைத் தான், பிச்சை ஏற்றிருந்தான். நூறு பேருக்கானாலும், நொடியில் சமைத்து விடுவான். அதனாலேயே அப்பாவுக்கு பிடித்த தொழிலாளியாகி விட்டான்.சில ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X