Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
வழிக்கு கொண்டு வர வேண்டுமா?வெளியூரில் வசிக்கும் என் மகளை பார்க்க சென்றிருந்த போது, ஐந்து வயதான என் பேத்தியைப் பற்றி, 'தாமதமாக எழுகிறாள்; சரியாக சாப்பிடுவதில்லை, சொன்ன பேச்சு கேட்பதில்லை...' என்று புகார் கூறினாள், என் மகள்.பள்ளியில் கோடை விடுமுறை விட்டிருந்ததால், ஒரு வாரம் என்னிடம் இருக்கட்டும் என்று பேத்தியை அழைத்து வந்தேன். அவளிடம், 'சொன்ன பேச்சு கேட்டால், உனக்கு ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர். அக்னிப் பரிட்சா என்ற படத்தில், நடிக்க வாய்ப்பு இருப்பதாக ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
பிரபல நாளிதழ் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற அந்த முதியவரை, கடந்த வாரம் சந்தித்தேன். சமூக அவலங்கள் அவரை வெகுவாக பாதித்துள்ளது; கொதிப்பாக பேசினார். சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றை விவரித்தார்...'நாகர்கோவிலில் உள்ள பிரபலமான அசைவ ஓட்டல்பா அது! அங்கு, மாலை, 4:00 மணிக்கு இஞ்சிச்சாறு சேர்த்து சுவையான டீயும், சுடச்சுட மெது வடையும் போடுவாங்க. இதனால், மாலையில் அங்கு மக்கள் கூட்டம் ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
எம்.கண்ணன், பொள்ளாச்சி: நிம்மதியை கொடுப்பதும், அதைக் கெடுப்பதும் பணம்... உங்கள் கருத்து என்ன?தவறு; அதை, கையாளும் திறமை படைத்தவன், இரண்டிற்கும் நடுவில் இருக்கிறான்.எஸ்.கே.குலசேகரன், போடிநாயக்கனூர்: அசைவ உணவு உண்பதால், உடல் பலம் கூடுமா?கொலஸ்ட்ரால் தான் கூடும். அசைவம் ரத்தக் கொதிப்பைக் கூட்டும்; மாரடைப்பை கொண்டு வரும். சைவம் சாப்பிடும் யானை, குதிரை, காட்டெருமை, நீர்யானை ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
செல்வம் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களை பார்த்து, பொறாமைபட தெரிந்த அளவிற்கு, அவர்களது வெற்றி ரகசியங்களை அறிந்து கொள்ளத் தெரியவில்லை நம்மவர்களுக்கு!'எவ்வளவு தேறும் இவருக்கு...' என்று கேட்கத் தெரிந்த அளவிற்கு, 'இவர்களைப் போல நாமும் வர வேண்டாமா...' என்று உந்து சக்தியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரிவது இல்லை.சிலருடைய அபார வளர்ச்சிகளை பார்க்கும்போது, வெற்றியின் ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான், எம்.பில்., ஆங்கிலம் படிக்கும் கறுப்பு மற்றும் சுமாரான பெண்; வயது, 24. திருமணம் முடிந்து, நான்கு மாதங்கள் ஆகின்றன. 'பெண்ணை நாங்கள் படிக்க வைக்கிறோம்...' என்று கூறி, வேலைக்கே செல்லாதவரை, எம்.பி.ஏ., பட்டதாரி என்று பொய் சொல்லி, என்னை, திருமணம் செய்தனர், மாப்பிள்ளை வீட்டார். திருமணத்திற்கு முன்பே, இரு வீட்டாருக்கும் கல்யாணச் செலவு, சீர் வரிசை, துணி ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
மே 6, 1916ல் பிறந்த நடிகர் பி.யு.சின்னப்பாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அன்று, புதுக்கோட்டையில் உள்ள சாமியார் மடத்தின் வாசலில், கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து, கோட்டும், சூட்டுமாக ஒரு மனிதர் இறங்கினார். அவர் தேடி வந்த சாமியார், மூலையில் மவுனமாக அமர்ந்திருந்தார். அவர் கையை பிடித்து, 'சின்னசாமி... நீ இருக்க வேண்டிய இடம் இந்த சாமியார் மடம் இல்ல; கலை உலகம். ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
மெகா பட்ஜெட்டில் விஜய்ஆண்டனி படம்!நான், சலீம் மற்றும் பிச்சைக்காரன் படங்களைத் தொடர்ந்து, சைத்தான் படத்தில் நடித்த விஜய் ஆண்டனி, தற்போது, எமன் படத்தில் நடித்து வருகிறார். இதுவரை, தான் நடித்த படங்களை, தானே தயாரித்து நடித்த அவர், இப்படத்தை, லைக்கா நிறுவனம் தயாரிக்க, முதல் காப்பி அடிப்படையில், படத்தை தயாரித்து கொடுக்கிறார். இதற்கு முன், இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட்டிற்குள் ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
இறைவனிடம், 'இதைக் கொடு, அதைக் கொடு...' என வேண்டுவது தான் வழக்கம். ஆனால், இறைவனே, 'அவனுக்கு இதைக் கொடு...' என கடிதம் எழுதிய அற்புதம் நம் நாட்டில் நிகழ்ந்துள்ளது.சங்கீதத்தில் மேதாவியான ஹேமநாத பாகவதர், தான் எனும் அகம்பாவத்தில், மதுரையில் இருந்த சங்கீத வித்வான்களைப் போட்டிக்கு அழைத்தபோது, பாணபத்திரரை போட்டியில் கலந்து கொள்ளுமாறு வற்புறுத்தினார் அந்நாட்டு மன்னன். ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
புரட்சியாளர் பிறப்பதில்லைபுரட்சியாளன் பிறப்பதில்லைஉருவாக்கப்படுகிறான்!சர்வாதிகாரம்தலை தூக்கும் போது,ஜன சமுத்திரம்பொங்கி எழுவதுஅவசியம்!உழைப்பை சுரண்டிகுருதி குடிக்கும்குள்ள நரி யார்?காயப்படும் எறும்பும்கடிக்க முற்படும்அடிபடும் நாமும்துடிப்பது தவறல்லவே!ஓட்டுக்காகநோட்டு வாங்கிஜனநாயக உரிமையைஅடகு வைப்பதா?பாட்டாளிக்கும்பாட்டுக்கும்உயிர் ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
மே, 2 - திருநாவுக்கரசர் குருபூஜைஇறந்தவரை உயிர் பெறச் செய்வது சாமான்யமான விஷயமா? அதையே செய்து சாதனை படைத்தவர் திருநாவுக்கரசர். அந்த மாபெரும் மகான் வாழ்ந்த பூமி, கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள, திருவாமூர். இங்கு, புகழனார் - மாதினியார் தம்பதிக்கு மகனாக பிறந்தார் மருள்நீக்கியார். இவரின் சகோதரி திலகவதியாருக்கு அவ்வூரில் சேனைத் தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
ஆடம்பரமான இரட்டை படுக்கையறையில், குப்புறப் படுத்திருந்த, வயலட் கட்சித் தலைவர் ஆனந்த தீர்த்தன், திடீரென்று தூக்கம் கலைந்து, தலையை மட்டும் தூக்கி, தலையணையை முறைத்தார்.'ஸ்பாஞ்சு மாதிரி இருக்க வேண்டிய தலயாணி, பாறாங்கல்லா கனக்குது; தூத்தேறி...' என நினைத்து, தலையணையை, 'மடார் மடார்' என்று அடித்தார்.''என்ன... காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா...'' என்றபடி, படுக்கையறைக்குள் ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
'அண்ணாவின் உவமைகள்' நூலில், இன்றைய தேர்தல் சூழ்நிலைக்கும் பொருத்தமாக கண்ணில்பட்ட சில உவமைகள்: காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற, அபாரத் திறமை பெற்ற ஈ.வெ.ரா., பிரசாரத்திற்காகப் புறப்படுகிறார் என்றால், என்ன அர்த்தம்? நோயாளி வீட்டுத் திண்ணையிலேயே பெரிய டாக்டர் உட்கார்ந்திருக்கிறார் என்றால் என்ன பொருள்? நோய் அவ்வளவு கடுமை என்று அர்த்தம்!கழகத்திலிருந்து விலகிச் ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
ஆண்கள் அளவுக்கு பெண்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என, இனி யாரும் சொல்ல முடியாது. கேரளாவின் சங்கனாஞ்சேரியை சேர்ந்த நித்யா ரெஞ்சி என்ற பெண், கை விரல் நகங்களில், அழகிய வண்ணங்களில், கட்சி சின்னங்களை தீட்டியுள்ளார். அட... பிரமாதமான பிரசார யுக்தியாக இருக்கிறதே!— ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
தலைவர்கள் பாடினால்...ஜெயலலிதா: தொட்ட இடம் துலங்கவரும்... வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும். அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்...கருணாநிதி: ஸ்டாலின் மற்றும் கனிமொழியை பார்த்தபடி, தங்கங்களே... நாளை தலைவர்களே.... நம் தேசம் காப்பவர் நீங்கள்!விஜயகாந்த்: மனைவி ஒரு மந்திரி... அவதானே ராஜதந்திரி...ம.ந., கூட்டணி: முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக...'நோட்டா'வுக்கா ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
கலைகளை பயில, ஜாதி தடையாக இருக்குமா என்று கேட்டால், ஆம் என்கிறார், திருவனந்தபுரத்தை சேர்ந்த தனுஜா என்ற ஏழைப்பெண். இவருடைய கணவர், குடி நோயாளி என்பதால், இரு மகன்களுடன் வறுமையில் வாடினார் தனுஜா. அந்நிலையிலும், மூத்த மகன் நிதீஷை, கலை பயிற்சி நிலையமான, கலா மண்டலத்தில் சேர்த்தார். அங்கு, அவருக்கு ஜாதியின் பெயரால் பல தொல்லைகள் தந்து, ஒன்பது மாத பயிற்சிக்கு பின் ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
வங்க தேசத்தை சேர்ந்த எழுத்தாளர், தஸ்லிமா நஸ் ரீன், 'பெண்களுக்கும், ஆண்களைப் போன்ற சுதந்திரம் வேண்டும்...' என்ற கருத்தை, தன் கதைகளில் வலியுறுத்தியதால், 21 ஆண்டுகளுக்கு முன், நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.அவருடைய பெற்றோர் இறந்த போது கூட, இறுதியாக, அவர்களது உடல்களை காண, அந்நாட்டு அரசு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.தற்சமயம், இந்தியாவில் தங்கியுள்ள இவருக்கு, ..

பதிவு செய்த நாள் : மே 01,2016 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X