Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 05,2013 IST
கடவுள் மிகவும் எளிமையானவர். பக்தியாலேயே அவனை அடைய முடியும். பக்தியே முக்திக்கு வழி. பக்தி செய்வது மிகவும் சுலபம். தவம், தியானம், பூஜை போன்றவைகளை விட, மனதால் பகவானை துதி செய்வது சுலபம். மனதுக்குள்ளேயே பகவானை வழிபடுவது இன்னும் விசேஷமானது. எளிமையாக இருந்தே, எளியவனான கடவுளிடம் பக்தி வைக்கலாம்.நம்முடைய பூஜை, பக்தி இவைகளை கண்டு, மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென் பதில்லை; ..

பதிவு செய்த நாள் : மே 05,2013 IST
பணி ஓய்வுக்கு பின்...சமீபத்தில் என் சித்தப்பா வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் பணி ஓய்வு பெற்று ஆறு மாதம் ஆகியிருந்தது. நான் சென்ற நேரத்தில், சித்தப்பாவும், சித்தியும் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் செஸ், பல்லாங்குழி, தாயக்கட்டை காய்கள் போன்ற விளையாட்டுப் பொருட்கள் இருந்தன. சித்திக்கு கேரம் போர்டெல்லாம் ஆடத் தெரியாதே என, நான் வியந்தேன். அப்போது, ..

பதிவு செய்த நாள் : மே 05,2013 IST
மே 11 - மங்கையர்கரசியார் குருபூஜைகல்வியறிவு பெருகி விட்ட இந்தக் காலத்தில், பெண்கள் சாதிப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், புராண காலத்திலேயே ஒரு பெண்மணி தன் மதத்தைக் காக்கும் பொருட்டு பெரும் சாதனை புரிந்திருக்கிறார். அவர் தான் மங்கையர்க்கரசி. மதுரையை ஆண்ட மகாராணி.மதுரையில் நின்றசீர் நெடுமாறன் ஆட்சி செய்து வந்த வேளை. அவர் மானி என்னும் பெயர் கொண்ட சோழநாட்டு பெண்மணியை ..

பதிவு செய்த நாள் : மே 05,2013 IST
லென்ஸ் மாமாவின் அமெரிக்க தோழி... வெள்ளைக்காரப் பெண்... இவருக்கு இசை ஆர்வம் அதிகம். அதிலும், தமிழ் படித்தவர்! தன் பெயரை மீனாட்சி என்று மாற்றி வைத்துக் கொண்டவர்."அவ, சென்னை வந்து இருக்காளாம்... போன் பண்ணினா... சாயங்காலமா கன்னிமாரா ஓட்டல் வரச் சொல்லி இருக்கா... உன்னையும் தான்...' என்றார் லென்ஸ் மாமா.மாலை — கன்னிமாரா ஓட்டல்!முதலிலேயே கிளம்பிச் சென்று இருந்தார் மாமா! அங்கு, என்னை, ..

பதிவு செய்த நாள் : மே 05,2013 IST
* எல்.அபிராமி, ஓசூர் : இயல்பாகவே நகைச்சுவை குணம் பெண்களிடம் அதிகமா, ஆண்களிடம் அதிகமா?பெண்களைக் கண்டதும், அவர்களுடன் பேசும் போதும், நகைச்சுவை பொங்கிவிடும் ஆண்களிடம்!*****சு.மணியரசு, கடலூர் : ஒரு முறைக்கு, 100 முறை சிந்தித்து செய்த செயலும் கூட தோல்வி அடைந்தால்...நூறு முறை செய்த சிந்தனையிலும், ஓட்டைகள் கண்ணில் படவில்லை என்பதே பொருள்.****என்.சரவணன், கோவை: எந்தக் கட்சி, ஆட்சிக்கு ..

பதிவு செய்த நாள் : மே 05,2013 IST
கடந்த, 1955ம் ஆண்டின் ஆரம்பத்தில் டி.ஆர்.சுந்தரம் புரட்சிகரமான ஒரு வங்காளக் கதையைத் தேர்ந்து எடுத்தார். அதற்கு, திரைக்கதை, வசனம் எழுத டைரக்டரும், எழுத்தாளருமான ஸ்ரீதரை ஒப்பந்தம் செய்தார். மகேஸ்வரி என்ற அப்படத்தில் நடித்தவர்கள் ஜெமினி கணேசன், சாவித்திரி, மனோகர், தங்கவேலு, எம்.என்.ராஜம் போன்றோர். பிரிட்டிஷ் ஆதிக்கம் நிறைந்திருந்த சமயத்தில், கடல் கொள்ளைகள் நிறைய நடந்தன. ..

பதிவு செய்த நாள் : மே 05,2013 IST
ஜவஹர்லால் நேரு எழுதுகிறார்: நான் இங்கிலாந்திலிருந்து படிப்பு முடித்து இந்தியா திரும்பியதும், உயர் நீதிமன்ற வழக்கறிஞரானேன். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, வாழ்க்கை எந்த நோக்கமும், பயனும் இன்றி, மந்தமான இயந்திர வாழ்க்கையாகப்பட்டது. வாழ்க்கை, தன் பொலிவை இழந்து விட்டது. அதன் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஒருவேளை, நான் பல துறையையும் பற்றி கற்ற என் கலப்புக் கல்வி தான், ..

பதிவு செய்த நாள் : மே 05,2013 IST
ஹாலிவுட் வட்டாரத்தில், ஏஞ்சலினா ஜோலிக்கென, தனி மரியாதை உள்ளது. தான், சம்பாதிக்கும் பணத்தின் கணிசமான பகுதியை, உலகின் பல பகுதிகளிலும் உள்ள, அகதிகளின் மறு வாழ்வுக்காக, தானமாக அளித்து விடுவார். மனிதாபிமான செயல்களுக்கு, முதலில் உதவிக் கரம் நீட்டுவது, ஏஞ்சலினாவாகத் தான் இருக்கும்.இவருக்கு, தற்போது, 37 வயதாகிறது. ஆனாலும், ஹாலிவுட்டில், இன்னும் பிசியான நடிகையாகவே, வலம் ..

பதிவு செய்த நாள் : மே 05,2013 IST
மீண்டும் வில்லனான பாண்டியராஜன்!காமெடி நடிகரான பாண்டியராஜனை, அஞ்சாதே படத்தில் வில்லனாக்கினார் இயக்குனர் மிஷ்கின். அதையடுத்து, தன் காமெடி இமேஜை மாற்றிக்கொள்ளும் முயற்சியாக, மாறுபட்ட கேரக்டர்களில் நடித்த பாண்டியராஜன், இப்போது சத்திரம் பேருந்து நிலையம் என்ற படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில், தன்னை டெரராக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக, தன் திருட்டு ..

பதிவு செய்த நாள் : மே 05,2013 IST
அமைச்சராயிருக்கும், தன் பழைய நண்பர் ஆதிகேசவனை, சந்திப்பதற்காக, அவரது வீட்டிற்கு, தன் கிராமத்து நண்பருடன் கிளம்பிச் சென்றார் கிருஷ்ணமூர்த்தி.ஒரு புறம்போக்கு நில ஆக்கிரமிப்புப் பிரச்னையில், தனக்குச் சாதகமாய் காரியம் சாதிப்பதே, அவரது பயண நோக்கமாய் இருந்தது.கிருஷ்ணமூர்த்தி, கிராமத்து விவசாயியோ, கூலித் தொழிலாளியோ கிடையாது. அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர். ..

பதிவு செய்த நாள் : மே 05,2013 IST
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்... என்ற பாரதியின் பாடல் இன்றும் கனவாகவே இருக்கிறது.நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து 66 ஆண்டுகளாக பேசப்படும் திட்டம், நதிநீர் இணைப்பு. லோக்சபா, சட்டசபை தேர்தல்களின் போது மட்டும், அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரமாக இத்திட்டம் அமையும். ஆனால், ஆட்சிக்கு வரும் கட்சிகளோ இத்திட்டத்தை ..

பதிவு செய்த நாள் : மே 05,2013 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், "டிகிரி' படித்தவள். எனக்கு திருமணம் முடிந்த முதல் மாதத்திலேயே பிரச்னை துவங்கியது. இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். என் கணவர் ஒரு அம்மா பைத்தியம். எனக்கு என்ன வாங்கி கொடுத்தாலும், நான் என்ன சொன்னாலும், அதை அப்படியே அம்மாவிடம் போய் சொல்லி விடுவார். இது தவிர, "செக்ஸ்' விஷயத்திலும் அவர் சரியில்லை. நான் வலிய போனாலும் ஈடுபாடு காட்ட மாட்டார். ..

பதிவு செய்த நாள் : மே 05,2013 IST
பிரிட்டன் இளவரசி டயானா, தன்னுடைய, மனிதாபிமான செயல்களால், உலக மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர். கடந்த, 1997ல், பாரீசில் நடந்த கார் விபத்தில், அவர் மரணமடைந்தார். அவருடன் மிக நெருங்கி பழகிய, பிரபல ஹாலிவுட் நடிகை ஷெலோ ரோகாஸ், தன், கடந்த கால நிகழ்வுகளை, "தி பவர் ஆப் பாசிடிவ் டிரிங்கிங்' என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில், இளவரசி டயானாவை பற்றிய, சுவராசியமான ..

பதிவு செய்த நாள் : மே 05,2013 IST
சூடிக் கொள்வதில் சுகம்!* மனம்ஒரு மளிகைக் கடை!உள்ளேதொங்கும் துலாக்கோலில்எடைக்கல்லாய் இருப்பதுஎதிர்பார்ப்பு!* விற்பனை செய்யும்விருப்பத்தோடு காத்திருக்கிறோம்கடை முழுக்ககமகமக்கும் கனவுகளோடு!* சில கடை கனவுகள்சீக்கிரமாய் விற்றுவிடுகின்றன...சிலருக்கோமாலை விழும்வரைஆளே வருவதில்லை!* வாங்க வருபவர்கள்கடையை வைத்துத்தான்பொருளைத் தீர்மானிக்கின்றனர்!* மளிகைக் கடையில்உப்பு ..

பதிவு செய்த நாள் : மே 05,2013 IST
ரவி, தன் மனைவி மற்றும் தாயாருடன் காரில், சென்று கொண்டிருந்தான். வழியில், முதியோர் இல்லம் ஒன்று, கண்ணில்பட்டது. அதன் அருகில், காரை நிறுத்தினான்.""அம்மா... இந்த வீட்டு திண்ணை மேல, கொஞ்ச நேரம் உட்கார்ந்திரு. நானும், ரமாவும் என் நண்பர் வீட்டுக்குப் போயிட்டு வந்து, உன்னை அழைத்துச் செல்கிறோம்,'' என்றான் ரவி."ஏம்ப்பா... உன் நண்பர் வீட்டுக்கு, நானும் வந்தால், உன் கவுரவம் ..

பதிவு செய்த நாள் : மே 05,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X