Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
'டி.வி' தொடர் தயாரிப்பாளர்களே...சமீபத்தில், ஒரு தனியார் தொலைக்காட்சி, குழந்தைகளுக்கான, 'இரு மின்மினி பூச்சிகளின் கதை' என்ற தலைப்பில், குழந்தைகளின் சுட்டித்தனங்களை, ஒலிபரப்புகிறது. இத்தொடரை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆர்வமாக பார்க்கின்றனர்.இத்தொடரில், குழந்தை கதாபாத்திரம் ஒன்று, பள்ளி செல்ல பிடிக்காமல், விடுமுறை எடுப்பதற்காக, வயிற்று வலி மற்றும் தலைவலி ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரை தொடர் - ஜன 17, 1917 - 2017வாத்தியாரிடம், நம்மாழ்வார், 'எனக்கு படத்தில் வேடம் வேண்டும்; இல்லையென்றால், இனி, இந்தப் பக்கமே வரமாட்டேன்...' என்று, உரிமைக் குரல் எழுப்பினார்.அவரை பொறுத்தவரை, அது நியாயந்தான்; தன் வாழ்நாள் முழுவதும் வாத்தியார் மற்றும் அவர் மகனோடு நடித்து வாழ்க்கையை கழித்தவர். சினிமாவில் வேடம் இல்லை என்றால் எப்படி... அவர் உள்ளம் ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
'வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்' என்பதை, சமீபத்தில், அனுபவப்பூர்வமாக நேரில் கண்டு உணர்ந்தேன்.சென்னை வர, ஐதராபாத் விமான நிலையத்தில் காத்திருந்தேன். அதிகாலை, 5:00 மணிக்கே எழுந்து, அறையை காலி செய்து, ஆட்டோ பிடித்து, விமான நிலையம் வந்து சேர்ந்தால், 8:00 மணி விமானம், மதியம், 2:00 மணிக்குத்தான் புறப்படும் என, விமான நிலைய அதிகாரிகள் குண்டைத் தூக்கிப் போட்டனர்.விமானத்தில், 'பிரேக் ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
க.வேல்முருகன், பொள்ளாச்சி: அரசு அலுவலகங்களில் எந்த ஒரு வேலையும் விரைவில் பைசல் செய்யப்படாமல் இருக்கிறதே... காரணம் என்ன?அரசு ஊழியரின் அரட்டை, பொறுப்பின்மை, திறமைக் குறைவு, சோம்பேறித்தனம், தேவைக்கு அதிகமான ஊழியர், ஊழல், லஞ்சம் இவற்றுக்கெல்லாம் தலைமை வகிப்பது போல் உள்ள, 'ரெட்டேப்பிசம்' - சிவப்பு நாடா நடைமுறை!* எம்.ராமமூர்த்தி, திருப்பூர்: அரசின், வி.ஆர்.எஸ்., திட்டத்தில் ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
சென்னை, தேனாம்பேட்டை அப்பல்லோ கேன்சர் மருத்துவமனையை ஒட்டியுள்ள, சிறிய விடுதி ஒன்றில், கேன்சர் நோயாளியாக தங்கியிருந்து, சிகிச்சை பெற்று வருகிறார், 'நெல் ஜெயராமன்!'திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த, கட்டிமேடு கிராமத்தில், ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர், ஜெயராமன். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், மறைந்த, இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வார் ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
விடுமுறையில், நீச்சல், ஓவியம் மற்றும் டிரைவிங் என, இன்ன பிறவும் கற்றுக் கொள்வது இருக்கட்டும். இந்த விடுமுறையில், உங்கள் குழந்தைகளுக்கு, புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.நிறைய புத்தகங்கள் படிப்பவர்களுடைய மூளை, மற்றவர்களை விட, கூர்மையாக இயங்குகிறது; எந்தத் துறையிலும், வெற்றி பெறுகின்றனர்; இது, திரும்பத் திரும்ப பல ஆய்வுகளில், ஆதாரப்பூர்வமாக ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரத படம்!மூத்த மலையாள எழுத்தாளர், என்.டி.வாசுதேவநாயர், மகாபாரதத்தை தழுவி எழுதிய, 'இரண்டாம் ஊழல்' என்ற கதையை, திரைப் படமாக, ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் என, ஐந்து மொழிகளில் எடுக்கின்றனர். மகாபாரத பீமன் கதாபாத்திரத்திற்கு, முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ள இப்படத்தில், பீமனாக, ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
ஒரு சமயம், உமாதேவியை, 'காளி...' என அழைத்தார், சிவபெருமான். காளி என்றால், கருமைநிறம் உடையவள் என்பது பொருள். 'சுவாமி... தங்களால் காளி என அழைக்கப்பட்ட நான், தங்களை குறித்து தவமிருந்து, பொன்னிறத்தை அடைவேன்...' எனக் கூறி, தவம் செய்ய சென்றாள், அம்பிகை.இமயமலையில் இருந்த ஓர் ஏரிக்கரையில், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தவம் செய்யத் துவங்கினாள் காளி. அங்கே, வேங்கை புலி ஒன்று, ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
அன்புள்ள சகோதரிக்கு — என் வயது, 32; தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் ஆபரேட்டராக பணிபுரிகிறேன். திருமணம் முடிந்து, ஒரு ஆண்டிலேயே விவாகரத்து ஆகி விட்டது.தற்போது, என் கம்பெனியில் வேலை செய்யும் ஒருவரை காதலிக்கிறேன்; அவரும் என்னை விரும்புகிறார். ஆனால், அவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர்.அவர் மனைவி இவருடன் பேசுவது இல்லை. இவரே சமையல் உட்பட, வீட்டு வேலைகள் ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
தமிழகத்தில் மட்டும், ஆண்டுதோறும், சாலை விபத்தில், 5,000 பேர், இறப்பதாக தகவல்கள் கூறுகின்றன.தாங்கள் செய்த தவறுக்காகவோ, செய்யாத பிழைக்காகவோ, தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர் என்பது, எவ்வளவு பெரிய துன்பம்!விலைக்கு கிடைக்கிற உரிமங்கள்; சாலை விதிகளை மீறுவதை, சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்வோர், அலட்சியம் மற்றும் கவனக்குறைவு போன்றவை, உயிர்களை பறித்தபடி உள்ளன.இவை தவிர, ஒரு பிரதான ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
மே 10 - அழகர் வைபவம்வைகை ஆறு இன்று போல் அன்று இல்லை. ஒருகாலத்தில், வைகை ஆற்றின் இருமருங்கிலும், ஏராளமான மரங்கள் இருந்தன; அவற்றில், வாசனை மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து, வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியின் அழகை, 'பரிபாடல்' போன்ற இலக்கியங்கள் விவரிப்பதிலிருந்து, அதன் வளத்தை அறியலாம்.தன் திருமணத்துக்கு வந்தவர்களின் தாகம் தீர, சிரசை, ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
முரண்!மோசடி மன்னனுக்குவெளிநாட்டில் பாதுகாப்புசோற்றுக்கு வித்திடும்விவசாயிக்கோ உள்ளூரில் தடியடி!கம்பிகளின் வாசலில்வெள்ளை வேட்டியின்சாஷ்டாங்க நமஸ்காரம்!நாட்டை அழகாய் ஆளஆட்சியிலிருப்போருக்கு மனமில்லைஆளப்படுவோருக்கு பணமில்லை!அடுப்பெரிக்க விறகுண்டு...வயிற்றை நிரப்ப சோறுண்டா?மீத்தேன் தேவையில்லை...பட்டினி போக்கும்பசுமை வயல் போதும்!என்னை போன்றோருக்குபேனா ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
ஈரோடு தமிழன்பன் எழுதிய, 'பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்' நூலிலிருந்து: பாரதிதாசன் புதுவையில் இருந்த காலம் அது... ஒருநாள், கவிஞரின் மனைவி பழனியம்மாள், 'மாட்டுக்கு தீவனம் தீர்ந்து விட்டது; தெருவில் வைக்கோல் வண்டி வரும்; பார்த்துக் கூப்பிடுங்கள்...' என்று சொல்லி, மற்ற வேலைகளை செய்ய வீட்டுக்குள் போய் விட்டார்.திண்ணையில் அமர்ந்து, அவ்வழியே வைக்கோல் வண்டி வருகிறதா என்று ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
வீட்டுக்குள் நுழையும் போதே, ''என்னடா ஆச்சு... இந்த வேலையாவது கிடைச்சுடுமா?'' என்ற அம்மாவின் கேள்வி எரிச்சலுாட்டியது என்றால், அருகில், ஒரு அழகான இளம் பெண் நின்றிருக்கும் போது, அதைக் கேட்டது கோபத்தை ஏற்படுத்தியது.வாசலில் நின்றிருந்த பெண்ணிடம் அம்மா பேசுவது கேட்டது... ''இவந்தாம்மா என் பையன்... பி.காம்., படிச்சிருக்கான். படிச்சு முடிச்சு, ஆறு வருஷம் ஆச்சு; இன்னும், ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
இளநீர், பதநீர், ரோஸ்மில்க், பாதாம் கீர், ப்ரூட் மிக்சர், தயிர் மற்றும் மோர் என, தாகம் தணிக்க பல பானங்கள் இருந்த போதும், 'பால் சர்பத்' என்ற பானத்தை பருகி, வெரைட்டி காட்டுகின்றனர், ராமநாதபுரவாசிகள்.கொளுத்தும் வெயிலுக்கு, 'குளுகுளு'வென ஏதேனும் பானம் பருகினால், நாவுக்கும், தொண்டைக்கும் இதமாக இருக்கும் என்று நினைப்போருக்கு பால் சர்பத் ஏற்றது.பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
* கிரிக்கெட் வீரர், 'ஓவரா' பேசுவார்.* ரவுடி, 'அடிச்சு' பேசுவார்.* ஓட்டல் சர்வர், 'சூப்'பரா பேசுவார்.* வக்கீல், 'பீஸ்'புல்லா பேசுவார்.* பாஸ்ட் புட் ஓனர், 'காரசாரமா' பேசுவார்.* ஐஸ் விற்பவர், 'குளிர குளிர' பேசுவார்.* டெய்லர், 'கட்' செய்து பேசுவார்.* மீன் வியாபாரி, 'நாறடித்து' பேசுவார்.* கண்டக்டர், 'நடந்து நடந்து' பேசுவார்.* டிரைவர், 'நிறுத்தி நிறுத்தி' பேசுவார்.* ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
இப்போதெல்லாம் பெரும்பாலான உணவகம், விருந்துகள், திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மேஜிக் முக்கிய நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது.மேஜிக் திறனுடன், எதிரில் உள்ளவர்களின் மனநிலையை கணித்து, அதை, 'காமிக்'காக செயல்படுத்தும் திறன் இருந்தால், ஒரு ஷோவுக்கு, 10 ஆயிரம் ரூபாய் முதல், இரண்டு லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.படத்தில் உள்ளவர் பெயர், நகுல் ஷெனாய்; இவர் லாஸ்வேகாஸ் ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
தேவையான பொருட்கள்:மாங்காய் - 1 பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 1மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டிபூண்டு - 4 பல்மிளகு, சீரகம் - தலா அரை தேக்கரண்டிகொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு, பெங்காயத்தூள், உப்பு மற்றும் நெய் - தேவைக்கேற்ப.செய்முறை: மாங்காயின் தோல் மற்றும் கொட்டையை நீக்கி, சிறிய துண்டுகளாக்கி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து வேக விடவும்; ஆறிய பின், விழுதாக அரைக்கவும். ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
தேவையான பொருட்கள்:மாங்காய் - 1பச்சை மிளகாய் - 2கொத்தமல்லி தழை - 1 கப்புளி - கொட்டைப்பாக்கு அளவுஎண்ணெய், கடுகு, பெருங்காயத்தூள் மற்றும் உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: மாங்காயை தோல் சீவி துருவவும். புளியை சிறிதளவு நீரில் ஊற வைக்கவும். கொத்தமல்லி தழையை சுத்தம் செய்யவும். மாங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு, புளி மற்றும் கொத்த மல்லி தழையை, மிக்சியில் சேர்த்து, தேவையான தண்ணீர் ..

பதிவு செய்த நாள் : மே 07,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X