Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
பரமேஸ்வரனை, "முக்கண்ணப்பா' என்று ஒருவர் அழைத்தாராம். இதில், "அப்பா' என்ற சொல் குறிப்பிடத்தக்கது. அப்பாவுக்கு குழந்தைகளிடம் பரிவும், பாசமும் இருக்கும்.நாள் முழுவதும் ஓடியாடி வேலை செய்த பிள்ளையை, "கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளடா; ஓடி, ஆடியது போதும்...' என்கிறார் அப்பா. இதே பரமேஸ்வரன் தான், பிரளயத்தை உண்டாக்குகிறார். அப்போது, சகல ஜீவராசிகளும் ஒடுங்கிப் போய் ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
மே 19 - குமரகுருபரர் குருபூஜை!திருச்செந்தூர் குமரப் பெருமான் அருளால், உலகிற்கு கிடைத்த புண்ணிய புருஷர் குமரகுருபரர்.திருநெல்வேலி அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் வசித்த சண்முக சிகாமணி கவிராயர் - சிவகாமி சுந்தரி தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. திருச்செந்தூர் சென்று, சஷ்டி விரதம் அனுஷ்டித்தனர்; அதன் பின், அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனை, முருகன் பெயரால், ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
பலே.... பேஷ், "குமரி!' அண்மையில், உறவினர் இல்ல விசேஷத்திற்கு வெளியூர் சென்றுவிட்டு, நாகர்கோவிலுக்கு பஸ்சில் பயணித்தேன். கையில் சென்னையில் உள்ள, பிரபல ஜவுளிக்கடை ஒன்றின், கேரி பேக்கில் பழங்கள் வைத்திருந்தேன். அப்போது, "நாகர்கோவில் நகருக்குள் பிளாஸ்டிக் கவரை உபயோகிக்க கூடாது; மீறினால், கேரி பேக் நிறுவனமும், கையில் வைத்திருக்கும் நபரும், "ஸ்பாட் பைன்' கட்ட வேண்டும்...' ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
அதிவேக வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டில், மார்ச், 11ம் தேதி மற்றும் ஏப்ரல், 7ம் தேதி என சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக, அணு உலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு, 140 ஆண்டுகளுக்குப் பின், இதுபோன்ற சோக நிகழ்வு மீண்டும் நிகழ்ந்துள்ளது. இன்னமும் அங்கு ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
உள்ளங்கை நீளத்திற்கு பூனை இருக்குமா? பிறந்து இரண்டு ஆண்டுகள் ஆன, இப்படிப்பட்ட அதிசய பூனை ஒன்று உள்ளது.அமெரிக்காவில், டிரமான்ட் நகரில் வசிப்பவர் கால்நடை டாக்டர் டொன்னா சாஸ்மன். இவர், ஒரு நாள், ஒரு பண்ணைக்கு செல்லும் போது, இந்த அதிசய பூனையைப் பார்த்தார்; அவ ராலேயே நம்ப முடியவில்லை. அந்த பூனை, மிகவும் சிறியதாக இருந்தது. உள்ளங்கை அளவு கூட அது இல்லை. "இந்த குட்டி பூனை ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
"பிழையான தமிழைப் பார்க்கும் போதெல்லாம், எழுத்தாணியால் தன் தலையில் குத்திக் கொள்வாராம்... சாத்தனார் என்ற புலவர். அதனாலேயே, சீழ்பிடித்த தலையோடு இருந்த அவருக்கு, சீத்தலைச் சாத்தனார் என்பது காரணப் பெயராக ஆகியது!' என குப்பண்ணா சொல்லிவிட்டு, "விபரம் என்று படிக்காத மளிகைக்கடை கணக்கர் தான் எழுதுகிறார் என்றால், அதே மாதிரி பத்திரிகைகளிலும் விபரம் என்றே எழுதுவதைப் ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
*என்.முருகன், ஊட்டி: யாரிடம் பேசாமலிருப்பது நல்லது?வம்பர், துடுக்கர், புறம் பேசுவோர், கோள் மூட்டிகள்!*****ப.கனிஷ்க், பூந்தமல்லி: தீக்குளிக்கும் தொண்டன்...முட்டாள்... ஏதாவது ஒரு பிரச்னைக்காக, இதுவரை எந்த தலைவனாவது மண்ணெண்ணை டின்னையும், தீப்பெட்டியையும், கையில் எடுத்திருக்கிறானா எனப் பகுத்தறிந்து பார்க்கத் தெரியாத மூடன்!****த.பாஸ்கரன், பெரியகுளம்: உள் ஒன்று வைத்து புறமொன்று ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
இதுவரை: நரேன் வீட்டில்தான், தன் குழந்தை இருக்கிறது என்று தெரிந்த பின்னும், அந்த விஷயத்தை நரேனிடம் கூறாமல் மறைத்தாள் கவிதா. ஆண்டர்சனுடன் சேர்ந்து, குழந்தையை தேடலாம் என்று நரேன் யோசனை கூறியதையும் நிராகரித்தாள். சிட்னி விமான நிலையத்திலிருந்து, நரேனிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டாள் மதுரிமா; ஆனால், அது, "பிசி'யாக இருக்கவே, வீட்டு எண்ணுக்கு தொடர்பு கொண்டாள். ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
ஆங்கிலேயர்களின் நிறவெறித் திமிர், உலகம் அறிந்ததே. பொது இடங்களில், வெள்ளையர்களுக்கு தனி இடம்; மற்றவர்களுக்குத் தனி இடம். குற்றால அருவியில் குளிப்பதில், யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால், அந்த அருவியில் ஆங்கிலேயர்கள் குளிக்கும் போது, இந்த நாட்டினர் எவரும், அந்த பக்கமே செல்லக் கூடாது என, ஒரு அதிசய சட்டம் போட்டனர், வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில்!வெள்ளைக்காரர்கள் ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
பிரபு சாலமன் படத்தில் யானைகள்!மைனா பட டைரக்டர் பிரபு சாலமன், அடுத்து, யானைகளை வைத்து ஒரு படம் இயக்குகிறார். காட்டு யானைகளால், பொது மக்களுக்கு ஏற்படும் உயிரிழப்பு, பொருள் இழப்புகளை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில், அப்பிரச்னைக்கு நல்ல தீர்வையும் சொல்கிறார். இப்படத்தில், ஏராளமான யானைகளும் நடிக் கின்றன.— சினிமா பொன்னையா.அம்மா பெயரை காப்பாற்றுவாரா கார்த்திகா?"என் ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
""இங்கே பாருங்க மாமா... உங்க புள்ளை மாதிரி எல்லாம், என்னாலே வழவழா, கொழகொழன்னு பேச முடியாது. விழாவிலே தர்ற, ஐந்து லட்ச ரூபாயும் அப்படியே முழுசா வீடு வந்து சேரணும். "அங்கே தானம் பண்ணிட்டேன்; இங்கே இனாம் குடுத்திட்டேன்...'ன்னு இங்க வந்து நிக்க வேணாம்; வேற இடம் பார்த்துக்கிடலாம்!'' மூத்த மருமகள் பவானி, நிர்தாட்சண்யமாய் முடிவைச் சொல்லி விட்டாள்.""அண்ணி... அதுல எனக்கு ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
அன்புள்ள சகோதரிக்கு —என் வயது 57. எனக்கு, மூன்று திருமணங்கள். முதல் மனைவி இறந்து விட்டாள்; மறுமணம் புரிந்து கொண்டேன்; அவளும் இறந்து விட்டாள். மீண்டும், பலரின் வற்புறுத்தலால் மணம் புரிந்து கொண்டேன். மூன்றாவது மனைவி, ஏற்கனவே மணமாகி, கணவனை பிரிந்து, அதாவது, ஊர் பஞ்சாயத்து மூலம் விவாகரத்து பெற்று, வாழ்ந்து வந்தவர். அவருக்கு, 15 வயதில் மணமாகி, மூன்று மாதத்திற்கு பின், விவாகரத்து ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
ரயில்வே துறையின் உயர் அதிகாரியின் செல்ல நாயை, பிளாட்பாரத்திலேயே, மறந்து விட்டு விட்டு வந்ததால், அதை மீட்க, சூப்பர் பாஸ்ட் ரயிலை, அவசர நிலை பிரேக்கை பயன்படுத்தி நிறுத்தினார் டிரைவர். இந்த சம்பவம், சட்டீஸ்கர் மாநிலம் ராய்கார் ரயில் நிலையத்தில் நடந்தது. பூரி - குர்லா சூப்பர் பாஸ்ட் ரயிலில் இணைக்கப்பட்ட விசேஷ பெட்டியில், பிலாஸ்பூர் டிவிஷனல் ரயில்வே மானேஜர், ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
நினைத்தபடி வந்தாய்...* எனக்கானமன்னவனாக...புண்ணாக்கும்மணவாளனாக...* காதலானதில்கொடுத்துவைத்திருந்தேன்...கல்யாணமானதில்வெறுத்து...* காதலனாய்நீயோர்நயாகரா...கணவனாய்சஹாரா!* கொஞ்சக்கெஞ்சவில்லை...அஞ்சசெய்யாமல்இருக்கலாமே!* எப்போதுவருவாயெனஅப்போதிருப்பேன்...ஏன் வருகிறாயெனஇப்போது!* காதற் கற்கண்டுதிகட்டலாம்...காலங்களானதும்அகங்காரமானதேன்!* ஊடல்கள்,காதலை ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
நைட்டி அணிந்து, சமையற்கட்டு மேடையில் அமர்ந்திருந்தாள் இந்துமதி. சராசரி உயரத்துக்குப் பொருந்தாத நீள் கூந்தல், குறும்புக் கண்கள், கூர்ப்பான மூக்கு, சதா பேசும் பாசக்கார வாய்.கைலாசநாதன் - பூர்ணகலா தம்பதிக்கு, ஒரு மகன், ஒரு மகள். மகன் ஆனந்ததீர்த்தன்; மகள் சிவசங்கரி.ஆனந்ததீர்த்தனுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தனர். புதிதாக வந்த மருமகள் தான் இந்துமதி.கைலாசநாதன் ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
இந்தியாவில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு விட்டது; ஆனாலும், அரச வம்சங்கள் இன்னமும் உள்ளன. கோட்டைகள், அரண்மனைகள் என, ஏராளமான சொத்துக்கள் அரச வம்சத்திடம் உள்ளன. ஆட்சி அதிகாரத்தை அவர்கள் இழந்து விட்ட போதிலும், பரம்பரை பழக்க வழக்கங்களை அவர்கள் இன்னமும் விடவில்லை. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மன்னராக, 12 வயது சிறுவன் பத்மநாபசிங் என்பவர் பதவி ஏற்றுள்ளார். ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
டிராபிக் போலீசார் என்றாலே, வாகன ஓட்டிகளுக்கு நடுக்கம்தான். காரணம், வண்டியை மடக்கி, ஏதாவது காரணம் கூறி, பணம் வசூலித்து விடுவர். ஆனால், டிராபிக் போலீசார் எல்லாருமே அப்படிப்பட்டவர்கள் அல்ல; அவர்களில் நல்லவர்களும் உண்டு என நிரூபித்துள்ளனர் மும்பை நகரைச் சேர்நத இரண்டு போலீஸ்காரர்கள். மும்பை, ஒர்லி காவல் நிலையத்தில், டிராபிக் பிரிவில், சிந்தாமணி ஜாதவ், சுனில் பக்தாரே என்று ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
உக்ரைன் நாட்டில் ஒரு பெண் தன், இருபதாவது குழந்தையை பெற்று, சாதனை படைத்துள்ளார்.உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் ஒரு கிராமத்தில் வசிக்கும் அந்த பெண்ணின் பெயர், லியோனோரா நமினி; வயது 41. சமீபத்தில் இவருக்கு, இருபதாவது குழந்தை பிறந்தது. இதன் மூலம், இவருக்கு, பத்து ஆண், பத்து பெண் குழந்தைகள் உள்ளனர்.இவரது மூத்த மகன் பெயர் ஜோனாதன்; வயது இருபது. அவருக்கு திருமணம் ஆகி விட்டது. ..

பதிவு செய்த நாள் : மே 15,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X