Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
பெண் மீது பழி போடாதீர்கள்!தனிக்குடித்தனம் சென்ற என் நண்பனை, சமீபத்தில் சந்தித்த போது, 'என்ன மாப்ள... பெத்தவங்க, கூடப்பிறந்தவங்க தான் முக்கியம்; மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்ன்னு பேசுவ... இப்ப என்னடான்னா திடீர்ன்னு தனிக்குடித்தனம் போயிட்டே...' என்று நக்கலாகக் கேட்டேன்.அதற்கு அவன், 'இல்லடா மச்சான்... என் மனைவி எதைச் செய்தாலும் எங்கம்மா குற்றம் கண்டுபிடிச்சு, குறை ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.தன்னம்பிக்கை, சுயமரியாதை, பிறரை மதிக்கும் பண்பு, நம்பியவர்களுக்காக ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
கடுமையான வெயில் காரணமாக, பீச் மீட்டிங்குக்கோ, வெளியிடங்களுக்கோ எங்கும் செல்ல முடியவில்லை. அலுவலக நூலகத்திலேயே அடைந்து கிடந்ததில், பல்வேறு புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்ட சுவையான செய்திகள் மட்டுமே இந்த வாரம்...'பாரதிதாசன் கவிதைகள்' முதல் தொகுதியின் இரண்டாம் பதிப்பு ஈ.வெ.ரா.,வின், 'குடியரசு' பதிப்பாக, 1940 மற்றும் 1944ல் வெளியானது.மே 27, 1944ல், திருவாரூரில் நடைபெற்ற ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
கி.நேரு, நெய்வேலி: விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் நிலை மோசமானதற்கு யார் காரணம்?நாமும், நம் அரசும் தான் காரணம். விளையாட்டு வீரனுக்கு மூன்று வேளை சோறு வேண்டாம்... உடை மற்றும் பயிற்சி இல்லை, பயிற்சி பெற இடம், உபகரணம் இல்லை. இவை எல்லாவற்றையும் விட, ஊக்குவிக்க அவன் வீட்டினர் கூட தயார் இல்லை! ப.முத்துக்குமார், மேடவாக்கம்: 'தமிழா... இன உணர்வு கொள்' என்கின்றனரே... ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
வெளியில் கூறப்படாத சட்டமாக உள்ள இந்த ஆணாதிக்க சமூகத்தில், பெண்கள் படும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மதங்களும், பண்பாடு என்ற பெயரால் சமுதாய கட்டுப்பாடுகளும் மிக, மென்மையான வடிவத்தில் பெண்கள் மீது திணிக்கப்பட்டு, கடுமையான ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.இதனால், பாதிக்கப்படும் பெண்களின் மனக்குமுறல்களுக்கு, சில பெண்களே எதிராக செயல்படுவதையும் பார்க்கிறோம். மகள் ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
'அடிமை, பொண்டாட்டிதாசன், பொம்பளை, மதுரை' என்று, கீர்த்திவாசனுக்கு பல பெயர்கள் உண்டு.ஆனாலும், அதைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்பட்டதோ, கோபப்பட்டதோ இல்லை. மாறாக, புன்முறுவலோடு ஏற்றுக் கொள்வார்.ஐம்பது வயதை நெருங்கும் கீர்த்திவாசனுக்கு ஒரே மகன் ரகு; இப்போது தான் பி.இ., முடித்து, வேலையில் சேர்ந்திருக்கிறான்.அதற்குள் பெண்ணை பெற்றோர் பலர், அவரையும், அவர் மனைவி மீனாட்சியையும் ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
சென்னை, மண்ணடியில் உள்ள காஞ்சி சங்கராச்சாரியார் மடம் அருகில், பள்ளிவாசல் ஒன்று உள்ளது. ஒருமுறை மடத்தில் தங்கியிருந்தார் காஞ்சி மகாபெரியவர். வைகறை தொழுகையின் போது பள்ளிவாசலில் சொல்லப்படும் பாங்கு சத்தம், பெரியவரின் தூக்கத்திற்கு இடைஞ்சலாக இருக்குமோ என்று எண்ணிய பள்ளிவாசல் நிர்வாகிகள், மடத்தின் நிர்வாகிகளிடம் சென்று, 'அதிகாலை பாங்கு சத்தம் பெரியவருக்கு ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
மீண்டும் பல்ராம் நாயுடுவாக கமல்!சமீபத்தில், நடிகர் சங்க வளாகத்தில், தான் நடிக்கும் மூன்று படங்களுக்கான பூஜை போட்டார் கமல். அதில் ஒன்று, சபாஷ் நாயுடு என்ற காமெடி படம். ஏற்கனவே, தசாவதாரம் படத்தில், பல்ராம் நாயுடு வேடத்தில் நடித்தவர், மீண்டும் அதேபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து, 'படம் முழுக்க இக்கதாபாத்திரமே இடம் பெறுவதால், சிரிப்புக்கு, நூறு சதவீதம் ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
இரண்டு நாட்கள் கோவிலுக்கு போய் வந்து, 'பச்... சாமியாவது ஒண்ணாவது...' என்று சலித்துக் கொள்வது, ஏழெட்டு ஜோசியர்களை பார்த்து, 'ஜோசியமே பொய்...' என்று புலம்புவது, பொழுதை எல்லாம் வீணாகப் போக்கி, 'நமக்கெல்லாம் எங்கே நல்ல காலம் வரப் போகுது...' என்று, விரக்தியின் விளம்பில் நிற்பது மனிதர்களின் இயல்பு.சில வினாடிகள் கூட, கஷ்டத்தை தாங்கத் தயாராக இல்லாத நாம், நூறு ஆண்டுகளுக்கு ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 36; திருமணமாகி, 13 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர். கணவர் வயது, 43; அரசுத் துறையில் பணிபுரிகிறார். ஆரவாரமில்லாத அமைதியான நடுத்தரக் குடும்பம். நான், முதுகலைப் பட்டம் பெற்றவள்; ஆரம்பத்தில், அரசுத் தேர்வுகளுக்கு முயற்சித்தேன். பின், குடும்பம், குழந்தைகள் என்றான பின் ஆர்வம் குறைய, முழு நேர இல்லத்தரசியாகி, குடும்பம் தான் உலகம் என்றாகி ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
இவைகளும் குருவாகலாம்!பசிய இலைகள் பழுத்துப் போவதும்முதிர்ந்த இலைகள் உதிர்ந்து போவதும்புதிய தளிர்கள் முளைத்து வருவதும்இயற்கையின் நியதி என்பதைக் காட்டுவதால்மரம் கூட குருவாகலாம்!அழுக்கு துணிகளைச் சுமந்துஆற்றுக்கு போவதில் வருத்தமுமில்லைவெளுத்த துணிகளைச் சுமந்துவீட்டுக்கு வருவதால் மகிழ்ச்சியுமில்லைகடமையைச் செய்வதில் மட்டும்கவனம் காட்டுவதால்கழுதை கூட ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
மே, 20 நரசிம்மர் ஜெயந்திவலது காலை மடித்து அமர்ந்துள்ள தெய்வங்களுக்கு சக்தி அதிகம்; சில அம்மன் கோவில்களில், இந்த தரிசனத்தைக் காண முடியும். நரசிம்ம விக்ரகங்கள் பெரும்பாலும் இடது காலை மடித்து, அமர்ந்த நிலையில் காணப்படும். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோவிலில், வலது காலை மடித்து அமர்ந்து அருள்பாலிக்கிறார், நரசிம்மர்.நரசிம்மர் ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
''பொன்னுரங்கா... இதென்னப்பா திடீர்ன்னு இப்படி ஒரு முடிவு... அவன் முகத்துல முழிக்கவே கூடாதுன்னு இருந்த... இப்ப, அவனப் போயி பாக்கணும்ன்னு சொல்றியே... செத்துப் போன உன் தங்கச்சி புருஷன்கிறத தவிர, அவனுக்கு வேறென்ன யோக்கியத இருக்கு...'' திகைப்பும், குழப்பமுமாய் கேட்டார் வேலு செட்டியார்.பத்து ஆண்டுகளுக்கு முன், பள்ளிப் படிப்பு முடிந்ததும், செட்டியார் கடைக்கு, கணக்கு எழுதும் ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
கேரள மாநிலம், கோட்டயத்தை அடுத்த, சிங்கவனம் எனும் ஊரைச் சேர்ந்தவர் மரியக்குட்டி. இவர், சிறுவயதிலிருந்தே கன்னியாஸ்திரியாகி, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார். அதேபோன்று கன்னியாஸ்திரி ஆகி, கோட்டயம் மருத்துவ கல்லூரியில் படித்து, மகப்பேறு மருத்துவராக ஆனார். தற்போது, 63 வயதாகும் மரியக்குட்டி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசவத்தின் போது, ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
படத்தில் இருப்பவர் பெயர், வால்மீக் தாப்பர். இந்தி நடிகர், சசி கபூரின் மகள் சஞ்சனா கபூரின் கணவர். இவர், கடந்த, 40 ஆண்டுகளாக, பல்வேறு காடுகளில் அலைந்து, புலிகளை பற்றி ஆராய்ந்து, ஏராளமான புத்தகங்களை எழுதி உள்ளார். இதுபற்றி கூறும் போது, 'என் வாழ்நாளில் முக்கால் பகுதி காலத்தை, புலிகள் குறித்த ஆராய்ச்சிக்காக செலவிட்டுள்ளேன். இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்தியாவில், 40,000 ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் டாக்டராக பணியாற்றி வருபவர், ஜன் முகமது. 43 வயதாகும் இவரிடம், 'நூறு குழந்தை பெற்றால், உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்...' என, யாரோ கூறினராம். அதனால், அதையே, தன் வாழ்க்கையின் லட்சியமாக வைத்து, செயலில் இறங்கியுள்ளார், முகமது.மூன்று மனைவிகள் மூலம், இதுவரை, 35 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், 21 பெண் குழந்தைகள்; 14 ஆண் குழந்தைகள். நான்காவது, ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
அமெரிக்காவைச் சேர்ந்த, 'பீப்பிள்' என்ற பிரபல பத்திரிகை நிறுவனம், இணையம் மூலமாக நடத்திய கருத்துக் கணிப்பில், உலகின் மிக அழகான பெண் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார், ஹாலிவுட் நடிகை ஜெனீபர் அனிஸ்டன். அம்மணிக்கு, 42 வயதாகி விட்டது. ஆனாலும், தன் அழகிய தோற்றத்தாலும், நடிப்பாலும், ஹாலிவுட் ரசிகர்களை வசியம் செய்து வைத்துள்ளார்.இந்த பெருமை, ஜெனீபருக்கு, அத்தனை எளிதாக ..

பதிவு செய்த நாள் : மே 15,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X