Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
நல்லவர்களின் வார்த்தைக்கு தெய்வமே செவிசாய்க்கும் என்பதற்கு உதாரணமான கதை இது:வட மதுரையில், அரிவியாசர் எனும் பக்தர் வாழ்ந்து வந்தார். அன்பையும், அகிம்சையையும் போதிக்கும் அவரின் மனமும், நாவும் எப்போதும் நாராயண நாமத்தையே உச்சரிக்கும். ஒரு சமயம், அரிவியாசருக்கு, பூரி ஜகந்நாதம் சென்று, பகவானை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அதன்படி, வட மதுரையிலிருந்து, ஜகந்நாதம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
இப்படியும் ஒரு மகன்!வழக்கமாக செல்லும் உணவு விடுதிக்கு சென்றிருந்தேன். வயது முதிர்ந்த, இயலாத நிலையில் உள்ள தன் தந்தையை அங்கு அழைத்து வந்திருந்தான், அவரது மகன். அவர், பலவீனமாக இருந்ததால், அவர் சாப்பிடும் போது, உணவு பதார்த்தங்கள், அவரது சட்டை, வேட்டி மற்றும் தரை மீது விழுந்தது. பக்கத்தில் சாப்பிடுவோர், இதைப் பார்த்து, முகத்தை சுழித்து, அவரது மகனை முறைத்தனர். ஆனால், மகனோ, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
'குற்றாலத்தில் சீசன் ஆரம்பமாகி விட்டது; அருவிகளில் நீர் கொட்டுகிறது... சாரல் பிரமாதம்...' என, கேள்விப்பட்டு, 'மாமா... ஜூன் முதல் வாரம் பள்ளிக் கூடங்கள் திறந்து விடும்; குற்றாலத்தில் கூட்டம் இருக்காது; நாலு நாள் டேரா போடலாமா?' எனக் கேட்டேன்.அவர், 'சரி' என்று சொல்ல, 'ரெகுலர் ரீடிங்' புத்தகங்களைத் தவிர்த்து, நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் என, எடுத்து வைத்திருந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
* டி.முகமது, துலுக்கபட்டி: உலகில், குற்றவாளி,- மிகக் கொடிய குற்றவாளி என எவர், எவரை வகை பிரிக்கின்றனர்?பொய் சாட்சி சொல்கிறவன் குற்றவாளி; நீதி தேவதையின் முன், பொய் சாட்சி சொல்ல அனுமதிப்பவன் மிகக் கொடிய குற்றவாளி. இவன், சகல துன்பங்களையும் அனுபவித்து பின், 'போய் சேர்வான்!'து.மதுசூதனன், நெய்வேலி: பெண்களின் தன்னம்பிக்கைக்கும், தலைக்கனத்திற்கும் உள்ள இடைவெளியின் அளவு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர்.ஜன., 17, 1917-2017.காலையில், வழக்கத்தை விட, சற்று தாமதமாகவே எழுந்தேன். அருகில், என் அண்ணன் மற்றும் எல்லாருடைய படுக்கையும், சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. படுக்கைக்கு அருகில், தாடையில் கை வைத்து, முகட்டை பார்த்தபடி, சலனமற்ற நிலையில் உட்கார்ந்திருந்தார், என் அண்ணன். நான் எழுந்து உட்கார்ந்ததும், என்னை திரும்பி பார்த்தவர், 'நான், கேசவ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
சென்னை, விருகம்பாக்கம், நடேசன் பூங்காவிற்கு அதிகாலையில் சென்றால், சைக்கிளில் ஒருவர், பூங்காவைச் சுற்றி வருவதை காணலாம். கம்பீரமான தோற்றத்துடன் காணப்படும் அவரது பெயர், நமசிவாயம்; வயது, 84. கடந்த, 59 ஆண்டுகளாக, சைக்கிளை தவிர, வேறு எந்த வாகனத்தையும் ஓட்டாதவர்.பி.காம்., முடித்த கையோடு, பல்வேறு ஊர்களில், வேலை கிடைத்த போதும், தன் தாயை, அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
100 கோடி பட்ஜெட்டில் இணைந்த சிரஞ்சீவி!தமிழில், விஜய் நடித்த, கத்தி படத்தின், தெலுங்கு ரீ - மேக்கில் நடித்த சிரஞ்சீவி, தற்போது, உயாலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடிக்கிறார். சுதந்திர போராட்ட வீரரின் கதையில் உருவாகும் இப்படத்தை, தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளில், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறார், சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான, ராம் சரண்.— சினிமா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
அன்புள்ள அம்மா —சிறுவயதிலே என் தங்கைக்கு திருமணம் செய்து வைத்து விட்டோம். தற்போது, அவளுக்கு, 30 வயதாகிறது. 10 மற்றும் 13 வயதில் பெண், ஆண் என இரு குழந்தைகள் உள்ளனர். அவளும், அவளுடைய கணவனும் திருமணமான நாளிலிருந்து, இன்றுவரை சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர்; அவளுக்கு வாழ்க்கையில் நிம்மதியே இல்லை.இந்நிலையில், அவள் பணிபுரியும் இடத்தில், அவளை விட, மூன்று வயது இளையவனிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
ஜூன் 7 - வைகாசி விசாகம்வைகாசி விசாக நட்சத்திரத்தன்று முருக பெருமான் அவதரித்ததால், அம்மாதத்திற்கும், அந்நட்சத்திரத்திற்கும் பெருமை ஏற்பட்டது.வைகாசி மாத பவுர்ணமியன்று, சந்திரன், தன் முழு ஆற்றலுடன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், இம்மாதத்திற்கு, சமஸ்கிருதத்தில், 'வைசாகம்' என்றும், தமிழில், 'வைகாசி' என்றும் பெயர் வந்தது. இந்த பவுர்ணமி நன்னாளையே, வைகாசி விசாகம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
தனிமனித ஒழுக்கம்!நிதி நீச்சலடிப்பதால்நீதி நின்றுதவிக்குது!அதிகார வர்க்கம்எதையும்செய்ய துணிவதால்அமைதிஅல்லல்படுகிறது!இங்கேபழக்க வழக்கங்கள்பாழாய் போனதால்தனிமனித ஒழுக்கத்தின்தாலி அறுபடுகிறது!காலில் விழுந்தால் தானேகாரியமாகிறதுஇதில் மனிதநேயம்எங்கே வாழ்கிறது?இங்கேநீதி நெறிகளைபித்தலாட்டமாக பார்ப்பதால்தனிமனித ஒழுக்கம்தவிடு பொடியாகிறது!காந்தி தேசம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
கிழக்கு பதிப்பகம் வெளியீடான, 'சிரிப்பு டாக்டர்' நூலிலிருந்து: சென்னை மாகாண சிறு சேமிப்புத் திட்டத்தின் அதிகாரி, ஒரு கூட்டம் நடத்தினார். அதில், சிறப்புரை ஆற்றிய என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு கதை சொன்னார். அது: ஒரு ஓட்டலுக்கு வந்த பயணி, தான் ஊருக்கு போகும் போது வாங்கிக் கொள்வதாக கூறி, நூறு ரூபாய் நோட்டை கேஷியரிடம் கொடுத்தார். சிறிது நேரத்தில், மளிகைப் பாக்கியை கேட்டு வந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
பிறர் சொல்லும் முடிவுகளை ஏற்று, அதன்படி செயல்படுவோரை மூன்று ரகங்களாக பிரிக்கலாம்...முதலாமவர், 'கேக் க்ரீம்' மீது வைக்கப்படுகிற, செர்ரி பழம் போன்றவர்கள். அதாவது, பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வர். அடுத்த ரகத்தினர், மரக்கதவில் பொருத்தப்படுகிற, தாழ்ப்பாள் போன்றவர்; போட்டு, முடுக்கி அழுத்தினால் மட்டுமே மனதில் பதித்துக் கொள்வர்.அடுத்தவர்கள், தங்கத்தில் பதிக்கிற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
'வாத்தியார் உத்தியோகத்தில், 'அதை சாதிச்சேன்; இதை சாதிச்சேன்'னு தம்பட்டமடிக்க என்ன இருக்குது... 'அவன், என்கிட்ட படிச்சான்; இவன் முளைக்கும் போதே, பகாசூரனாக விளங்க போறான்னு எனக்கு தெரியும்...' இப்படி அசட்டு பெருமை வேண்டுமானால் பேசிக்கலாம்...' என்று அடிக்கடி அலுத்துக் கொள்வார், வாத்தியார், கல்யாணம்.வேண்டாததை கழித்து, குப்பையில் கொட்டுவது போன்றதுதான், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
இளஞ்சிவப்பு மற்றும் கோதுமை நிறத்தில், அல்வாவை சுவைத்தவர்களுக்கு, வித்தியாசமான விருந்து, கீழக்கரை துதல் அல்வா!கருப்பு நிறத்தில், 'ப்ளாக் பாரஸ்ட்' கேக் போல இருக்கும் இதை, பேச்சு வழக்கில், 'தொதல் அல்வா' என்கின்றனர்.இதன் பூர்வீகம் இலங்கை; அங்கு, இதற்கு, 'சீனிக்கழி' என்று பெயர். வணிகத்திற்காக அங்கு சென்ற இவ்வூர்காரர்களின் மூலமாக, இங்கே அறிமுகம் ஆனது.தேங்காய்ப்பாலை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
எங்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவரின் மகன், அருகில் உள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கிறான்.பள்ளியில், புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்ன வாசல் மற்றும் குடுமியான் மலைக்கு கல்வி சுற்றுலா செல்ல, ஏற்பாடு செய்திருந்தனர். அதன்பொருட்டு, மாணவர்கள் செல்லவிருக்கும் இடத்தின் வரலாற்று தகவல்கள், சிறப்புகள், பஸ் ரூட் உள்ளிட்ட, பயண அட்டவணையை, இரண்டு பக்கம் தயார் செய்து, மாணவ, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
'பதிமூன்று அல்லது 14 வயது குழந்தைகள் வெளியே சென்று, இரவு தாமதமாக வந்தால், கதவை திறக்க மாட்டோம்; நீ கோபித்து, நண்பர்கள் வீட்டுக்கு போனால், அப்படியே, மறுநாளும் அங்கேயே சென்று விடு...' என்று சொல்லுங்கள்; நீண்ட நாட்கள், நண்பர்களின் வீடுகளில் இருக்க முடியாது என்பது, அவர்களுக்கும் தெரியும். 'வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்...' என்று, 'சென்டிமென்ட்'டாக குழந்தைகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X