Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
ஜூன் 11 - வைகாசி விசாகம்வைகாசி மாதம், விசாக நட்சத்திரத்தில், சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பிழம்பாய், முருகப்பெருமான் அவதரித்தார். 'வி' என்றால், வெற்றி. சாகம் என்றால், ஆடு. ஆடு வாகனத்தை உடையவனாக இருந்து, பின், இந்திரனிடமிருந்து மயிலை வாகனமாகப் பெற்றவர் முருகன். ஒரு சமயம், பத்மாசுரன் உள்ளிட்ட அசுரர்களின் கொடுமைக்கு, தேவர்கள் ஆளாயினர். அவர்கள் சிவனிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
மேலதிகாரிகளே... மரியாதையை காப்பாற்றி கொள்ளுங்கள்!என் கணவர், மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று இறந்து விட்டார். அவர், அரசு பணியில் இருந்ததால், அவருக்குப்பின், அந்த வேலை எனக்குக் கிடைத்தது. இளம் விதவையான நான், மற்றவர் மனதில் சலனம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, என் உடை, அலங்கார விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன். என் செக் ஷன் சூப்பர்வைசர் ஒரு, 'ஜொள்' பார்ட்டி. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
சென்னை நகர மக்களின், குடிநீர் தேவைக்காக, முதன் முதலில் கட்டப்பட்டது, பூண்டி நீர்தேக்கம். இது, அப்போது, 65 லட்சம் ரூபாய் செலவில், கட்டப்பட்டது. ஜூன் 2014ல், 70வது ஆண்டை நிறைவு செய்கிறது.பூண்டியில் நீர்தேக்கம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை, 1900ம் ஆண்டே எழுந்தாலும், அது, செயலாக்கம் பெற்றது, தீரர் சத்தியமூர்த்தி முயற்சியால் தான்.கடந்த, 1939ல் சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவியது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றும், 'நண்பி' ஒருவரை, சமீபத்தில் சந்தித்தேன். பரீட்சைகள் பல எழுதி, இளம் வயதிலேயே உயர் அதிகாரியானவர் அவர். மிகவும் நேர்மையானவர்; சுறுசுறுப்பானவர்; வாடிக்கையாளர்களே நம் முதலாளி என்ற எண்ணம் கொண்டு, அவர்களுக்கு சேவை செய்வதையே கடமையாகக் கொண்டவர்.அவர் கூறினார்: ஜெர்மன் நாட்டுக்கு, 'விசா' வழங்குவதில், புதிய நடைமுறை ஒன்றை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
எம்.பிரசன்னகுமார், தல்லாகுளம்: கொலை, கொள்ளையால் பாதிக்கப்பட்டவர்கள், 'இழந்தது இழந்தாச்சு... ஆளை விடுங்க...' என, போலீசிடம் கெஞ்சிக் கூத்தாடும் நிலைமைக்கு வந்து விடுகின்றனரே...உண்மைதான். மக்களின் தோழனாக, அவனுக்கும், அவன் உடமைக்கும் காவலனாக இருக்க வேண்டியவர்களை, நேர்மாறாக செயல்படும் கலாசாரத்தை வளர்த்து விட்டவர்கள் அரசியல் வாதிகள். எந்தக் குற்றமும் செய்யாமல், பெல், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
இன்ஸ்பெக்டர் குமார் அவசரமாக, ஸ்டேஷனுக்குள் நுழைந்தவன், ''முருகேசன்...'' என்று, சத்தமாக கூப்பிட்டான்.''எஸ் சார்.''''நான் இல்லாதப்ப யாராவது வந்தாங்களா?''''ஆமா சார்; நம்ப தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தக்காரர்ன்னு சொல்லி, ஒருத்தர் வந்தாரு. நீங்க இல்லன்னதும் ஏதோ போன் போட்டாரு; அப்பறம் போய்ட்டாரு சார்.''''அந்தாளு, வெட்டுக்கிளிய பாத்தானா?''''இல்ல சார்; ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
விடுதலைப் போராட்ட வீரர், சிறந்த பேச்சாளர், 'தமிழ்ப் பண்ணை' என்ற பதிப்பக உரிமையாளர், காமராஜரின் அருந்தொண்டர், சிவாஜி கணேசன் ரசிகர்மன்ற மாநிலத் தலைவர் என்றெல்லாம் இருந்து, பிரபலம் பெற்றவர் மறைந்த சின்ன அண்ணாமலை. அவர் எழுதுகிறார்:வங்காள கவர்னராக ராஜாஜி, 1947ல் பதவி ஏற்ற போது, நாங்கள் மே.வங்க தலைநகரான கல்கத்தாவுக்கு சென்றிருந்தோம். ராஜாஜியின் விருந்தினராகத் தங்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
லாரன்ஸ் தயாரித்த மோடி ஆல்பம்!சில ஆண்டுகளுக்கு முன், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, வீடியோ ஆல்பம் ஒன்றை வெளியிட்டார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதைத்தொடர்ந்து, சமீபத்தில் மோடி பிரதமரானதை அடுத்து, 'மீண்டும் ஒரு சுதந்திரம்' என்ற பெயரில், அவரை புகழ்ந்து, ஒரு வீடியோ ஆல்பம் வெளியிட்டுள்ளார். செருப்பு தைத்தவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனது போல், சாதாரண டீ வியாபாரி ஒருவர், ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
குற்றால டூரைப் பொறுத்தவரை, மற்ற எல்லா விஷயங்களையும் திட்டமிட்டு செய்து விடலாம். ஆனால், அருவிகளில் தண்ணீர் விழுவது, எந்த திட்டமிடலுக்கும் உட்படாதது. அது முழுக்க முழுக்க இயற்கையின் கையில் தான் உள்ளது.அருவிகளில் தண்ணீர் விழுகிறது என்று, பத்திரிகைகளில் வரும் படங்களைப் பார்த்து, பயணத்தை திட்டமிட்டு போய் சேரும் போது, தண்ணீர் வரத்து குறைந்தோ அல்லது நின்றோ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
அன்புள்ள அம்மா —நான் 38 வயது பெண். எட்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். எனக்கு, 2002ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 35 பவுன் நகையும், 25 ஆயிரம் ரூபாய் வரதட்சணையும், 2 லட்ச ரூபாய்க்கு, சீர்வரிசையும் கொடுத்தனர். என் கணவர், அவர் தம்பி, மாமனார், மாமியார் ஆகியோர் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தோம். இரு நாத்தனார்களுக்கு எனக்கு முன்பே திருமணம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
விடுதிக்கு திரும்பிய பின், மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருந்தது. அது, ஆர்.எம்.வீரப்பன் வந்து விட்டார் என்பது தான்!இரவு மீண்டும் படப்பிடிப்பு நடந்தது. நானும், மஞ்சுளாவும் எதிரிகளிடமிருந்து தப்பிச் செல்வது போன்ற காட்சி, படமாக்கப்பட்டது. மிட்சுபிஷி அரங்கில், அந்தக் காட்சியை படமாக்கினோம். மின் ஒளியினால், மின்னல், பூகம்பம் போன்றவைகளை அமைத்திருந்தனர். ஒரு இடத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
வரும்வரை!என்கவிதைகளின்கருப்பொருள் ஆனவனே...என்வாழ்வின் ஜீவன்நீ தானே!உச்சி முகர்ந்து,உள்ளம் மகிழ்ந்து,உன்னுள் நான் கலந்து...என்னுள் நீ கரைந்து...இனிதே கூடி,இன்பமாய் வாழஏங்குகிறேன்நீதவிர்க்கிறாய்...நான் தவிக்கிறேன்!காலன் வரும் வரை காத்திருப்பேன்அதுவரை...கவிதையில்உன்னுடன்வாழ்ந்திருப்பேன்!— ஆர்.பானு, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
மழைக்காலத்தில் கடற்கரையின் அழகு கூடியிருப்பதாக நினைத்தான் ராம். இதற்கு காரணம், நண்பர்களின் அருகாமை என்று, உடனே தோன்றியது.நண்பர்கள் அத்தனை பேரும், பள்ளி, கல்லூரி, கிரிக்கெட் என்று வாழ்க்கையை, கூடவே இருந்து அழகாக்கியவர்கள். ஊட்டிக்கும், கோவாவுக்கும் பிரத்யேக எழில் சேர்த்தவர்கள். ஒரகடம் ப்ளாண்ட்டில், அவன் இன்ஜினியராக இருக்கிற, கார் கம்பெனியின் பிரமாண்டம் பார்த்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
பிரிட்டனைச் சேர்ந்த, அமலியா என்ற, மூன்று வயது பெண் குழந்தைக்கு, வித விதமான, ஷூக்களை சேகரிப்பது என்ற வித்தியாசமான ஆசை ஏற்பட்டுள்ளது. துவக்கத்தில், தன் தாயாரின் ஷூக்களை அணிந்து பார்த்த அமலியாவுக்கு, பின், அதிகமான ஷூக்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு விட்டது. இதனால், தனக்கு கிடைக்கும், 'பாக்கெட் மணி' முழுவதையும், ஷூக்கள் வாங்குவதற்கே பயன்படுத்துகிறாள். அதேபோல், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
புத்தரிடம் சென்று ஒரு தாய், 'தெய்வமே, என் ஒரே மகன் இறந்து விட்டான். இனி நான் வாழ வேண்டுமா? இதோ அவனுடைய சாம்பல்...' என்று, மகனின் அஸ்தியை காட்டி அழுதாள். உடனே, புத்தர், அவள் கையில் ஒரு, லேப் -டாப்பைத் தந்து, 'விளம்பரமே வராத ஏதாவது ஒரு சேனலை, இதில் வரவழை. உன் பிள்ளை உயிர்த்தெழுவான்...'என்றார்.— பாக்கியம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவ பல்கலையில், நரம்பு உயிரியல் துறை நிபுணராக பணியாற்றுபவர், மார்கரேட் லிவிங்ஸ்டன். இவரும், இவரின் குழுவைச் சேர்ந்தவர்களும், குரங்குகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் வித்தியாசமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். இதற்காக, மூன்று குரங்குகளை தேர்வு செய்து, கடந்த சில மாதங்களாக, அவற்றுக்கு, கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவை குறித்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X