Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
முந்தைய பிறவிகளில் செய்த புண்ணியத்தை, 'பூர்வ புண்ணியம்' என்பர். பூர்வ புண்ணியம் இருந்தால், எத்தகைய ஆபத்து மற்றும் பிரச்னைகளில் இருந்தும் மீண்டு விடலாம். நமக்கு பூர்வ புண்ணியம் இருக்கிறதா என்பதை அறிய, ஓர் எளிய வழி இருக்கிறது. அது, திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலுக்குள் இருக்கும், அசலேஸ்வரர் (அறநெறியப்பர்) கோவிலைப் பார்த்திருந்தால், உங்களுக்கு பூர்வ புண்ணியம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
குன்றக்குடி அடிகளார், தம், 'மண்ணும், மனிதர்களும்' நுாலில் சொல்கிறார்: மகா சன்னிதானம், நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துவதில் ஆர்வம் காட்டுவார்; ஆனால், சிரிக்க மாட்டார். அன்று ஒரு வேடிக்கை... அப்போது, 'பண்டாரக் கட்டு' எனும் பகுதியில் சுப்பையா முதலியார் என்பவர் வேலை செய்தார். நல்லவர்; மாடு போல உழைப்பார். புத்தியை அதிகமாக பயன்படுத்த மாட்டார்; சொன்னபடி செய்வார்.மகா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
வேலைக்கு போகும் பெண்ணா...ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் தோழிகளான நாங்கள் ஐந்து பேரும் விட்டுக் கொடுத்து, பிரச்னைகளை பகிர்ந்து, ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்போம்.அத்துடன், குடும்பம் மற்றும் அலுவலக டென்ஷன் எல்லாவற்றையும் விடுத்து, எங்களுக்கே எங்களுக்காக ஒரு நாளை ஒதுக்கிக் கொள்வோம். எப்படி என்கிறீர்களா... ஆறு மாதத்திற்கு ஒருமுறை, ஒரு நாள் லீவு போட்டு, எங்களில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
நண்பர் ஒருவருக்கு ஏழெட்டு அக்கா, தங்கைகள்... அவர்கள் அனைவருக்கும் மணமுடித்து தலை நிமிரும் போது, இவருக்கு தலை நரை கண்டு விட்டது. ஆசாமி, அரசாங்க பணியில் இருப்பதால், அவரது வயதைப் பொருட்படுத்தாது, நன்கு படித்த பெண்ணை மணம் செய்து கொடுத்தனர்.அடுத்த ஆண்டே பெண் குழந்தை பெற்றார்... காலக்கிரமத்தில் பள்ளியிலும் சேர்த்தார். தன் மகளை அவரே பள்ளியிலும் விட்டு, மீண்டும் அழைத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
அ.நாராயணன், கடலுார்: மனைவிக்கு உதவியாக, வீட்டு வேலைகள் செய்தால், நாளடைவில் கணவனை மதிக்க மாட்டாள் மனைவி என்கிறானே என் நண்பன்...தான், சோம்பேறியாய் சுற்றி திரிவதற்கும், உங்களையும் தன்னைப் போல் மாற்றி விடவும், உங்கள் நண்பர் போடும் திட்டத்தின் வெளிப்பாடே அந்த, 'ஸ்டேட்மென்ட்!' நான் அறிந்த வரை மனைவிக்கு உதவியாக இருக்கும் கணவரை, மதிக்கின்றனரே தவிர, மிதிக்கவில்லை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
''சாமி குத்தம் ஆகிடப் போவுதுப்பா...'' என்று வருத்தத்துடன் சொன்ன மகளைப் பார்த்து, உள்ளுக்குள் சிரித்து கொண்டார், மாடசாமி. ஜீன்ஸ் பேன்ட்டும், டீ ஷர்ட்டுமாக தன் குழந்தைக்கு நேர்த்திக்கடன் முடிக்க, அமெரிக்காவில் இருந்து கிராமத்திற்கு வந்திருந்த தன் மகளின் மனதிலும், இந்த மண்ணின் பண்பாட்டு பதிவுகள் ஒட்டிக் கொண்டிருப்பதை நினைத்தபோது, அவருக்கு ஆறுதலாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
கமலின் இளமை கூட்டணி!கடந்த, 22 ஆண்டுகளுக்கு முன், கமல் நடித்த, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. அந்த படத்தையும், இயக்குனர் ஷங்கரே இயக்குகிறார். மேலும், இந்தியன் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். இரண்டாம் பாகத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். அதேபோல், முதல் பாகத்திற்கு, வைரமுத்து பாடல்கள் எழுதினார். இரண்டாம் பாகத்திற்கு, தாமரை பாடல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் விமானம் இறங்கியதும், ஒன்றரை மணி நேரம் தாமதமோ என, ரொம்ப புத்திசாலி போல விமான பணிப்பெண்ணிடம் கேட்க, அவரோ, 'நீங்கள் பாங்காக்கிற்கு புதியவரா...' எனக் கேட்டு, 'உங்க ஊருக்கும், எங்க ஊருக்கும் ஒன்றரை மணி நேரம் வித்தியாசம்; உங்க ஊரில் மணி, 10:00 என்றால், இங்கு, மணி, 11:30 ஆகும். எனவே, ஊர் திரும்பும் வரை கடிகாரத்தை சரி செய்து கொள்ளுங்கள்...' ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
அன்புள்ள சகோதரிக்கு —நான், 48 வயது பெண்; காதல் திருமணம் செய்து கொண்டேன். ஒரு மகனும், மகளும் உள்ளனர். என் கணவர், செல்வந்தர் வீட்டுப் பிள்ளை. சொந்தமாக தொழில் செய்து வந்தார்; திடீரென்று தொழிலில் நஷ்டம் வரவே, மனம் உடைந்து, மரணமடைந்தார்.கணவர், என் பெயரில் வங்கியில் போட்டிருந்த சேமிப்பு பணத்திலிருந்து, மகனையும், மகளையும் படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தேன்.பெற்றோர், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
மனம் எதில் ஆழமாக பதிகிறதோ, அதுதான் செயலாகப் பரிணமிக்கிறது. அதனால் தான், 'நினைப்பவர் மனம் கோவிலாக் கொள்பவன்' என்று இறைவனை புகழ்கின்றன, திருமுறைகள். காஞ்சி மன்னர் மித்திரத்துவஜன், தீவிரமான சிவ பக்தர். ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் சிறிது துாரத்தில் உள்ள திருத்தலத்திற்குச் சென்று, பிரதோஷ வழிபாட்டை முடித்துத் திரும்புவார்.ஒரு சமயம், பிரதோஷ வழிபாட்டிற்காக காட்டுப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
அகங்காரம், ஆணவம், நியாயமற்ற செயல், மனித நேயமற்ற நடத்தை போன்ற இன்னபிற குற்றச் செயல்களை கொண்டிருந்தால், அவர்களால் நிச்சயமாக வெற்றிப் பாதையில் பயணிக்கவே முடியாது.இது, திரை உலகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து தொழிலுக்குமே பொருந்தும்.கதாநாயகி நடிகையர் சிலர், உடன் நடிக்கும் துணை நடிகையரை, அலட்சியமாக பார்க்கும் போக்கு அப்போது காணப்பட்டது. மேலும், நகைச்சுவை நடிகை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
உடலை பராமரிப்பதற்கு, சிறந்த வழிமுறை, நல்லெண்ணெய் குளியல்!இப்போது, நமக்கு எளிதாக வருகிற உடல் தொந்தரவுகளைப் போல், நம் முன்னோருக்கு வரவில்லை. அதற்கு காரணம், அன்றைய வாழ்க்கை முறை; அதில், நல்லெண்ணெய் குளியலும் அடக்கம். வாத, பித்த, கப தோஷங்கள் உடலில் சரியான அளவில் இருக்க வைப்பதற்கு உதவுகிறது, எண்ணெய் குளியல். அத்துடன், சூட்டை சமமான நிலையில் வைத்து. உடலின் உள் உறுப்புகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
கவலைகள் நிலையானதல்ல!கன்னத்தில் கை வைத்துகவிழ்ந்து கிடப்பதால்கவலைகள் என்றும்கல்லறை ஏறுவதில்லை!கவலையைப் போக்ககண்ணீர் வடிப்பதுமகிழ்ச்சிக்கானமார்க்கம் அல்ல!கவலைகள்காயத்துக்கு மருந்தல்லஅவைகள் விருத்தி செய்யும்விஷக்கிருமிகள்!கவலைகள்சுதந்திர காற்றைசுவாசிக்க விடாமல்இதயத்தை இறுக்கும்சுருக்கு கயிறுகள்!உள்ளத்தை உல்லாசமாகஉலவ விடாமல்உடைத்தெடுக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
கல்யாண மண்டபத்தில், பட்டுப்புடவை பளபளக்க, பெண்கள் ஆங்காங்கு நின்று சிரித்து பேசிக் கொண்டிருக்க, ''இன்னும் கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை அழைப்பு ஆரம்பமாக போகுது; எல்லாரும் கோவிலுக்கு போகலாம்...'' என்றார், முதியவர் ஒருவர். அச்சமயம், மண்டபத்தில் கார் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கும் அக்காவை பார்த்து பரபரப்புடன் வந்தாள் வசந்தி.''வா அக்கா... பிரதீப் படிப்பை வச்சு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
குஜராத் மாநிலத்தில், 'லிட்டில் ரான் ஆப் கச்' என்ற ஊரை, 'கழுதையூர்' என்றே கூறலாம். காரணம், ஆசியாவிலேயே இங்கு தான், அதிக கழுதைகள் வசிக்கின்றன. எங்கு பார்த்தாலும், ஏராளமான கழுதைகள் நடமாடுகின்றன. குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்திலிருந்து, 120 கி.மீ., பயணம் செய்தால், கழுதையூரை சென்றடையலாம். பாலைவன பிரதேசமான இங்கு காணப்படும் கழுதைகளை, உள்ளூர் மக்கள், 'கோர் கார்' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
மத்திய பிரதேசத்தில் உள்ளது, கஜுராஹோ, 'காமசூத்திர' கோவில்கள். கி.பி., 10ம் நுாற்றாண்டில், சந்தேலகர் ராஜ  வம்சத்தாரால் இக்கோவில்கள் கட்டப் பட்டன. 6 சதுர கிலோ மீட்டரில், 20 கோவில்கள் உள்ளன. ஆரம்ப காலத்தில், 20 சதுர கிலோ மீட்டரில், 85 கோவில்கள் இருந்தன. இங்குள்ள சிலைகள் அனைத்தும் உடல் உறவின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக நிறுவப்பட்டதால், இதை, ஆபாசம் என்று யாரும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், டெவோன் என்ற பகுதியில், வில்லாண்ட் என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் நிலப்பகுதி, ஒவ்வொரு ஆண்டும், 2 செ.மீ., அளவு உயர்வதாக கண்டுபிடித்துள்ளனர், புவியியல் வல்லுனர்கள்.நான்கு ஆண்டுகளாக, இந்த பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் வரைபடத்திலும், இந்த கிராமம் அமைந்துள்ள, 2 கி.மீ., சுற்றளவு பகுதி மட்டும் அங்குள்ள மற்ற பகுதிகளை விட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
காதல் வியாதி, எந்த வயதில் வேண்டுமானாலும் வந்து தொலைக்கும் போலிருக்கிறது. அமெரிக்காவின், டென்னிசி என்ற பகுதியில் வசிக்கும், அல்மெதா என்ற, 72 வயது பாட்டிக்கு வந்த காதல் தான், இப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.இந்த பாட்டியின் கணவர், சில ஆண்டுகளுக்கு முன், இறந்து விட்டார். இவருக்கு, பேரன், பேத்திகள் பலர் உள்ளனர். ஓர் ஆண்டுக்கு முன், ஒரு நிகழ்ச்சியில், கேரி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
கேரள மாநிலம், கோழிக்கோடு அருகில் உள்ள உள்ளேரி என்ற ஊரைச் சேர்ந்தவர், நரேந்திரன்; இவரது ஒரே பொழுது போக்கு, இமயமலை ஏறுவது தான். கடந்த, 40 ஆண்டுகளில், 400 முறை இமயமலை ஏறியுள்ளார். 22 வயதில் துவங்கிய இந்த இமய மலைப் பயணம், இப்போதும் தொடர்கிறது. இதில், 18 முறை கைலாசத்தை சுற்றி வந்துள்ளார். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்து, அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் தலைநகரான தோகா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
பத்து பரம்பரைக்கு சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகள் மத்தியில், கேரளாவில், ஆலப்புழா மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி இளைஞர்கள், ஏழைகளின் பசி தீர்த்து வருகின்றனர். ஆலப்புழா மாவட்டத்தில், ஏழைகள் அதிகம் வாழும் கடலோர கிராமமான பாதிராப்பள்ளியில்,'ஜனகீய பக் ஷணசாலா'வில் தினமும், 700க்கும் மேற்பட்டோருக்கு தரமான உணவளிக்கின்றனர். பணம் உள்ளவர், சாப்பிட்ட பின் காசு கொடுக்கலாம்; ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X