Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011 IST
ஜூன் 13 - வைகாசி விசாகம்!"முருகு' என்ற சொல்லுக்கு, அழகு என்று பொருள். பத்மாசுரன் எனும் அரக்கனால் அவதிப்பட்ட தேவர்கள், சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டனர். அவனை அழிக்க, சிவன் தன் நெற்றிக் கண்ணில் இருந்து, ஆறு பொறிகளை உருவாக்கினார்; அந்தப் பொறிகள், ஆறு குழந்தைகள் ஆயின. அவர்களை வளர்க்க கார்த்திகை பெண் களை நியமித்தார். பின், பார்வதிதேவி குழந்தைகளை ஒன்று சேர்க்க, ஆறு முகம் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011 IST
மாணவியரே ஏன் இப்படி?வெளி மாவட்டத்தை சேர்ந்த நண்பர் ஒருவரின் மகள், சென்னை மத்திய பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, ஐ.டி., கம்பெனியில், வேலை பார்த்து வருகிறாள். சென்ற வாரம் நண்பரை சந்தித்த போது, வேறு ஹாஸ்டல் பார்க்க சொன்னார்.விவரம் கேட்ட போது, உடம்பெல்லாம் வெலவெலத்து போனது. நண்பரின் மகள், வேலை முடிந்த களைப்பில் தூங்கலாம் என்றிருக்கும் போது, (ஒரு அறையில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011 IST
ஹாய் வாசகர்களே..."பட்டாம்பூச்சி'க்கு இத்தனை, "ரெஸ்பான்ஸ்' இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இந்த வாரம், எங்கள் ஊர்க்காரி மாதங்கி - பெயர் மாற்றியுள்ளேன்; அவளைப் பற்றி சொல்லப் போறேன்...இவள், பெற்றோருக்கு ஒரே பெண். அதனால், இவள் நினைத்ததெல்லாம் பெற்றோர் செய்து கொடுப்பர் என்றுதானே நினைக்கிறீங்க... அதுதான் இல்லை. தாயார் சரியான கஞ்சம்; பணத்தை சேர்த்து, சேர்த்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011 IST
அன்று ஒரு தொலைபேசி அழைப்பு — அழைத்தவர் ஒரு டாக்டர்! குரல் பதட்டமாக இருந்தது; சொல்ல விரும்பிய விஷயத்தை அவரால் கோர்வையாகச் சொல்ல முடியவில்லை!ஐந்து நிமிடங்களுக்கு ஏதேதோ கூறினார்; ஒன்றும் புரியவில்லை... பேசி முடிக்கட்டும் என, நானும் காத்திருந்தேன். ஒரு கட்டத்தில் வார்த்தைகள் வெளிவராமல் திக்க ஆரம்பித்ததும், "டாக்டர்... உங்க, "பேசிக் ப்ராப்ளம்' என்ன என்பதை நாலு வரியில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011 IST
*எம்.குருசாமி, திருவள்ளூர்: நடைமுறையில் இருக்கும் சீர்திருத்த எழுத்தை பயன்படுத்தாமல், பழைய முறையிலேயே எழுதுவதால் தவறு இல்லையே...தவறு இல்லைதான்... நீஙகள் எழுதுவது இளைய தலை முறைக்கு புரியாது போகும்; பரவாயில்லையா? இப்போது, +2 படிக்கும் மாணவனுக்கு, பழைய எழுத்தின் பரிச்சயமே இருக்காது - சோதனை செய்து பாருங்களேன்.****வி.அரவிந்த், சென்னை: எல்லா மாவட்டங்களிலும், எல்லாத் துறை களிலும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011 IST
இதுவரை: தான் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிக்காக, நரேன், மதுரிமா, கவிதா ஆகியோருக்கு இடையே குழப்பத்தையும், பலவித சந்தேகங் களையும் ஏற்படுத்தினான் கவிதாவின் மாஜி கணவன் ஆண்டர்சன். கொஞ்ச நாட்களுக் காவது நரேனை விட்டு பிரிந்திருந்து, அவன் மனதில் இடம் பிடித்திருப்பது, தானா அல்லது கவிதாவா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விபரீத எண்ணம் மதுரிமாவிற்கு தோன்றியது. அதற்கேற்றாற் போல், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011 IST
சீனாவில் நாய்களின் உடலில், மைக்ரோசிப் பொருத்தும் பணி துவங்கியுள்ளது.நவீன உலகில், "மைக்ரோசிப்' இல்லாத பொருட்களே இல்லை. கம்ப்யூட்டரின் மூளை போன்ற இந்த மைக்ரோசிப்கள் மூலம், எல்லா தகவல்களையும் பெற்று விடலாம்.இப்போது, செல்லப் பிராணிகளின் உடலிலும் இந்த மைக்ரோசிப்களை பொருத்தும் பணி துவங்கி விட்டது. கம்யூனிச நாடான சீனா, இப்போது முதலாளித்துவ நாடுகளுக்கு இணையாக வேகமாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011 IST
குறும் படங்கள் இயக்கும் பாண்டியராஜன்!மகன் பிருத்வியை வைத்து, படம் இயக்கப் போவதாக சொன்ன பாண்டியராஜன், அந்த முயற்சியை கிடப்பில் போட்டு விட்டார்; மாறாக, குறும் படங்கள் இயக்கி வருகிறார். குழந்தைகள் விழாவுக்காக, மகன் என்ற படமும், போலியோ நோய் ஒழிப்புப் பற்றி - இரு துளிகள், உடல் உறுப்பு தானம் பற்றி - அழகு, சமூக விழிப்புணர்வுக்காக - ஹெல்ப் போன்ற குறும் படங்களை இயக்கியுள்ளார். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011 IST
வர்ம சிகிச்சை நிபுணர், எஸ்.ராஜாமணி பேட்டி!சென்னை கத்திப்பாரா ஜங்ஷனில், பாரதத்தின் சிற்பி, முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உருவச் சிலை திறக்கப்பட்டது. அந்த சரித்திரப் புகழ் பெற்ற நிகழ்ச்சியில் பங்கு கொண்டு, தன் தாத்தாவின் உருவச் சிலையை திறந்து வைக்க, ராஜிவ், டில்லியிலிருந்து வந்திருந்தார். எம்.ஜி.ஆர்., மீது, மிகுந்த பாசமும், மரியாதையும் எப்போதும் வைத்திருந்தார் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011 IST
அன்புள்ள சகோதரிக்கு —இரண்டு, மூன்று வருடமாய், யாரிடமும் சொல்லக் கூடாத என் குடும்ப ரகசியங்களை, உங்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு, தகுந்த ஆலோசனை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.என் வயது 47. என் மனைவி, என்னை விட, ஐந்து மாதம் பெரியவள். எங்களுக்கு, 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். திருமணமான வேகத்தில் பிறந்தவர்கள். உறவில் நாட்டமில்லாமல், என் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011 IST
டில்லி பார்லிமென்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில், பகத்சிங்கும், அவரது தோழர்கள், முப்பது பேரும் கைது செய்யப்பட்டனர். இது, "லாகூர் சதி வழக்கு' எனப்பட்டது.லாகூர் சதி வழக்கில், வங்காளத்தைச் சேர்ந்த ஜாதின் தாஸ், ஒரு குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார்; இவர், சுபாஷ் சந்திர போசுக்கு வேண்டப்பட்டவர்.லாகூர் சிறையில், குற்றவாளிகள் மிகவும் சித்திரவதைக்கு ஆளாயினர். தீவிர ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011 IST
தர்மம் தலை காக்கும் என்பது வழக்கு. தர்மத்தின் வழி சற்று சிரமமானதாக இருக்கலாம்; ஆனால், அதுவே முடிவில் சுகத்தை அளிக்கக் கூடியதாக அமைந்துவிடும். அதனால், முதலில் காணப்படும் அசவுகர்யத்தையோ, துன்பத்தையோ கண்டு பயந்து, தர்மத்தை விட்டு விட வேண்டாம். தர்மம் என்ன சொல்கிறதோ, அதன்படி நடக்க வேண்டும். அதர்மம் என்பது ஆரம்பத்தில் சுகம் போலத் தெரியும்; ஆனால், அது கடைசியில் துன்பத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011 IST
முத்திரை* நீ வாழ்ந்து மறைந்து விட்டாய்...அதற்கான அடையாளமெங்கே?நீரோடு ஓடுகிற கசடுகள்...அதுவும், நீயும் ஒன்றா?* பிறந்தோம் உழைத்தோம்,உண்டோம் பிழைத்தோம்,வாழவில்லை மறைந்தோம்...உந்தன் முத்திரை எங்கே?* ஊருக்குள்ளாவது உன்னைப் பற்றிதெரியுமா? யாராவது உன்னைப் பற்றிநினைத்துப் பார்ப்பரா?நீ வைத்து விட்டு போனதென்ன?* ஆடினாய், ஓடினாய், மார்தட்டினாய்...மீசைக்கு நெய் போட்டாயே...இப்போது உன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011 IST
ஆள் அரவமற்ற அமைதியான சாலை. இரண்டு பக்கமும் பசுமையாய் மரங்கள். அதில் அமர்ந்து, ஆனந்த கீதம் பாடும் பறவைகள். சற்று தொலைவிலிருந்த சர்ச்சிலிருந்து மணியோசை கேட்டது.புத்தம் புது பழுப்பு நிற ஹுண்டாய் கார் ஒன்று, ஐஸ்கட்டியில் நழுவும் நுங்கை போல, அந்த சாலையில் வழுக்கியபடி சென்று, சர்ச் இருந்த இடத்திற்குள் நுழைந்தது.அந்த காரிலிருந்து இறங்கினான் ஜான். அவன் உடையிலும், பகட்டிலும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011 IST
எப்போதும் புன்னகையுடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஒரே இடத்தில், நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து சிரித்தால் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்ச்சி, குரேஷிய நாட்டின் தலைநகர் சாகர்ப் நகரில், மே மாதம் நடந்தது. நகரின் மையப் பகுதியில் கூடிய, 768 பேர், ஒரே நேரத்தில் சிரித்தனர். அவர்கள் மனித தலை போல் வட்டமாக நின்று, சிரித்தபடி போஸ் கொடுத்தனர். உயரமான கட்டடத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X