Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
ஜூன் 14, ஆனி பிரம்மோற்சவம் ஆரம்பம்குறுநில மன்னன் ஒருவன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, நாட்டு மக்களின் நிலத்தைப் பறித்தான். அதனால், நியாயம் கேட்டு பேரரசரிடம் சென்றனர் மக்கள். அவர், குறுநில மன்னிடம் விசாரித்த போது, 'அது தன் நிலமே...' என வாதாடினான் மன்னன். பேரரசரும் அதை நம்பி விட்டார். திக்கற்றவருக்கு தெய்வமே துணை என, அவ்வூரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று, 'உண்மையை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
பிக்னிக்கும், சமூக சேவையும்!சமீபத்தில், மாநகராட்சி பூங்காவிற்கு, என் குழந்தைகளுடன் சென்றேன். பூங்கா நுழைவாயிலில், நோட்டீஸ் போர்டில், 'சேவை நோக்கமாக, பூங்காவை தூய்மைப்படுத்திய அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு நன்றி!' என்று எழுதப்பட்டிருந்தது.இதுபற்றி பூங்கா ஊழியர் ஒருவரிடம் விசாரித்த போது, 'ஒருநாள் அருகிலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியைகள் இருவர் எங்களிடம் வந்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
அன்று மாலை, சென்னை, மயிலாப்பூர் லஸ்சில் உள்ள பிளாட்பார பழைய புத்தகக் கடைக்கு சென்று, இன்ட்ரஸ்டிங்கான புத்தகம் ஏதாவது கிடைக்கிறதா என்று துழாவிக் கொண்டிருந்தேன்.'பாழி' என்ற நாவல் கிடைத்தது; எழுதியவர் கோணங்கி. இந்த புத்தகம் வெளிவந்த போது, 'ஆஹா... ஓஹோ...' என, புத்தகத்தை புகழ்ந்து தள்ளினார் நண்பர் ஒருவர். 'வெறும், 1,000 பிரதிகள் அச்சடிக்க, ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
எஸ்.மணிகண்டன், சிதம்பரம்: என் நண்பனுக்கு நல்லவனாக இருக்க என்ன செய்ய வேண்டும்?அவருக்கு கடன் கொடுக்காதீர்கள்; அவரிடம் இருந்தும் கடன் வாங்காதீர்கள்!கு.வடிவேல், குன்றத்தூர்: எந்த முடிவையும் என்னால் விரைந்து எடுக்க முடியவில்லையே...பரவாயில்லை... கவலைப்படாதீர்கள்! வேகமான முடிவுகள் சில நேரங்களில் தீங்கையே விளைவிக்கும்; வேகமாக முடிவெடுப்பதை விட, விவேகமாக முடிவெடுப்பதே நன்மை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
எங்கள் நட்பு வட்டத்தில், எதற்கும் இசைந்து வராத ஒருவர் உண்டு. எங்களில் பலருக்கும் இவர் பெயரைக் கேட்டாலே நெஞ்சில் பாகற்காய் சாறு ஊறுவது போல் இருக்கும். இந்நிலையில், பலர் அறிய, விரும்பத்தகாத முறையில் பேசி விட்டார்.உடனே, சிலர், 'இனி, இவரை நம் வட்டத்தில் இணைத்துக் கொள்ளக்கூடாது; வெட்டி விட வேண்டும்...' என்றனர்.'இது என்ன அரசியல் கட்சியா... அவரை நீக்குவதற்கு! என்ன பேசறீங்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
''நேத்தைக்கே வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன்; வாங்கிட்டு வரல. இன்னிக்காவது மறக்காம வாங்கிட்டு வாங்க...'' என, உத்தரவு போட்டாள் மனைவி.''என்னான்னு தெரியல; நேத்தைக்கு அண்ணாச்சி கடை மூடியிருந்தது; அதான் வாங்க முடியல. இன்னிக்கு மறக்காம வாங்கிட்டு வரேன்...'' என்றேன்.சாயங்காலம் அலுவலகத்திலிருந்து திரும்பும்போது, அண்ணாச்சி கடைக்குள் நுழைந்தேன். கிட்டத்தட்ட, 25 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
கமல் வைத்த சஸ்பென்ஸ்!கமலுடன் பல படங்களில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராைஜ தற்சமயம், தூங்காவனம் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார் கமல். அத்துடன், மற்றொரு கன்னட நடிகரான கிஷோரையும் இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இவர்கள் இருவருமே வில்லன் நடிகர்கள் என்பதால், படத்தில் யார் பிரதான வில்லன் என்பது சஸ்பென்சாகியிருக்கிறது. ஆனால், இதுபற்றி கமலை கேட்டால், 'இது, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு படத்தில், ராதாவுக்கு ஜமீன்தார் வேடம்; ராமண்ணா இயக்குனர். ராதாவுக்கு தர வேண்டிய பாக்கி, 20,000 ரூபாயை தராமல் இழுத்தடித்தனர்.'அண்ணே... இவங்க பண விஷயத்துல குழப்பம் செய்ற மாதிரி தெரியுது...' என்றார் கஜபதி.'அப்படியா... சரி பாத்துக்கலாம்...' என்றார் ராதா.மறுநாள், ராதா செட்டுக்கு வரவில்லை என்று தெரிந்ததும், வீட்டுக்கு ஆள் அனுப்பினர். 'உடம்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
'அசுரர்கள், தேவர்கள் இவர்களில் நீங்கள் யார்?' என்ற கேள்வி எழுந்தால், நம் பதில், தேவர்கள் என்பதாக தான் இருக்கும். ஆனால், உண்மையில் நாம் யார் என்பதை, இக்கதையை படித்த பின், முடிவிற்கு வாருங்கள்.சஹஸ்ர கவசன் எனும் அசுரன், இறைவனை நோக்கி கடுந்தவம் செய்து, வரம் பெற்றான். ஆயிரம் கவசங்களைக் கொண்ட அவன், 'என் ஒரு கவசத்தை எவன் உடைக்கிறானோ அவன் இறக்க வேண்டும்; கடைசி கவசமான ஆயிரமாவது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
காலமறிந்து செயல்படு!காலம் கடிவாளமில்லாத குதிரைநாம் நினைத்தால்அதற்கு கடிவாளமிட்டுஅடக்க முடியும்!காலத்தை கண்ணாடியாக்கிதன் முகத்தைப்பார்ப்பவனால் மட்டுமேதுன்பக்கடலிலிருந்துகரைசேர முடிகிறது!காலத்தை பயன்படுத்துவோரால்மட்டுமேமகத்தான காரியங்களைசாதிக்க முடிகிறது!காலம் யானை தான்...அதையடக்கும் அங்குசம்நம்மிடமே உள்ளது!தன்னை மதியாதவரைகாலம்மிதித்துவிட்டுப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
அன்புள்ள அம்மா —என் வயது 43; மனைவியின் வயது 39. எங்கள் திருமணம் இரு குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணம். தனியார் நிறுவனத்தில் கேஷியராக பணிபுரிகிறேன். எங்களுக்கு திருமணமாகி, 12 ஆண்டுகள் ஆகின்றன. நான் புது நிறம்; மனைவி கறுப்பு. என் உடன் பிறந்தோர் மூன்று பெண், இரு ஆண்; என் மனைவியின் உடன் பிறந்தோர் இரு தம்பிகள் மட்டுமே!எனக்கு பெண் பார்க்கும் போது, என் தரப்பில் நான் என் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
திருப்பூரில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு சென்றிருந்தார் ராமையா. நாதஸ்வர ஓசை, மந்திர கோஷங்கள், சளசளவென்ற பேச்சு சத்தம் இவற்றுக்கிடையே திருமணம் முடிந்தது. காலில் விழுந்த ஜோடியின் தலையில், அட்சதையை தூவி, ஆசி வழங்கி, மொய் அளித்து, விருந்து உண்ட பின், வெற்றிலையை எடுத்து, பதமாக காம்பை கிள்ளி சுண்ணாம்பு தடவி, பாக்குடன் வாயில் வைத்து மென்றபடி மெல்ல திருமண ஹாலுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
கொச்சியில் உள்ள காக்கனாட்டு அரசு சுடுகாட்டில், பிணங்களை எரிக்கும் தொழில் செய்து வருகிறார் சலீனா. கடந்த, எட்டு ஆண்டுகளாக, இத்தொழிலைச் செய்து வரும் இவர், ஒரு பிணத்தை எரிக்க, 1,500 ரூபாய் வசூலிக்கிறார். இதில், 400 ரூபாய் கார்ப்பரேஷனுக்கும், மீதி பணத்தில் பிணங்களை எரிக்க தேவையான விறகு போன்ற பொருட்களை வாங்கிய பின், சொற்பப் பணம் தான் கிடைக்கும் என்பவர், மாதம், 25 உடல்களை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
நடிகையை போன்று காட்சியளிக்கும் இவர், நடிகை அல்ல. எலிசபத் சூசன் கோசி என்ற விளையாட்டு வீராங்கனை. சமீபத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டில், துப்பாக்கி சுடும் போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்களைப் பெற்று, பெருமை சேர்த்துள்ளார். துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்வது எளிதான காரியம் அல்ல; லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டும். போட்டிக்காக எலிசபத் பயன்படுத்திய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
ஈரான் நடிகை, கோல்ஷிபித் பர்ஹானி, வயது, 31. சமீபத்தில் இவரது தந்தையும், பிரபல இயக்குனருமான பெஹ்சாதுக்கு, 'அவளுடைய அழகிய மார்பகங்களை அறுத்து, தட்டில் வைத்து, உன் முன் வைப்பேன்...' என்று ஒரு மிரட்டல் போன் வந்தது.பிரான்ஸ் நாட்டில் வெளிவரும், 'எகோயிஸ்ட்' என்ற பத்திரிகையின் அட்டையில், பர்ஹானியின் நிர்வாண படம் வெளிவந்தது தான், இந்த மிரட்டலுக்கு காரணம். பயங்கரவாதிகளின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
காதில் பூச்சுற்றும் வகையிலான ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு ஹாலிவுட்டில் இன்னும் கிராக்கி உள்ளது. இதுவரை, ஷான் கானரி, ரோஜர் மூர், பியர்ஸ் பிராஸ்னன் உள்ளிட்ட ஆறு கதாநாயகர்கள் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.தற்போது, டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கிறார். இவர், நான்கு படங்களில் நடித்து விட்டதால், 'ஆளை மாற்றுங்கப்பா...' என, ஹாலிவுட் ரசிகர்கள் குரல் கொடுக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X