Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
ஜூன் 21 - கலிக்காமர் குருபூஜைஇந்த உலகிலேயே கோபப்படாதவர் யார் என்றால், கடவுள் மட்டும் தான். அவரை துதித்தாலும், நிந்தித்தாலும் கோபப்படுவதில்லை. அவரிடம், அதைத் கொடு, இதைக் கொடு என, பக்தர்கள் கோரிக்கை வைத்தாலும், கோபப்படாமல், யாருக்கு என்ன தர வேண்டுமோ அதைத் தந்து கொண்டிருக்கிறார்.இப்படித்தான் ஒருமுறை, சிவனைச் சந்தித்தார் சுந்தரர். சுந்தரருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது; ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
சபலிஸ்ட்களே...என் தோழியின் கணவர் சபல புத்திக்காரர். தோழி சுமாரான அழகி என்பதால், அவளிடம் மற்ற பெண்களின் அங்க அழகுகளை வர்ணித்து, 'நீயும் இருக்கிறாயே...' என்பார். தோழி இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.சில நாட்களுக்கு முன், தோழியின் தங்கை, (அவளும் மணமானவள்) திருமண விழா ஒன்றிற்காக வந்தவர், அக்கா வீட்டில் தங்கியிருக்கிறார். அவளிடம் தோழியின் கணவர், 'உன் அக்காவை விட, நீ அழகாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
முப்பதாயிரம் பல்புகளை கொண்டு அமைக்கப் பட்டிருந்த, 'ஸ்விஸ் பெவிலிய'னில் படம் எடுக்க ஏற்பாடாகி இருந்தது. நானும், சந்திரக்கலாவும் அதனுள் நுழைந்தோம். நாங்கள் சென்ற பாதை, எங்களுக்குப் புதியது. சுற்றினோம்... சுற்றினோம்... ஏறத்தாழ, ஒரு மணி நேரம் சுற்றி சுற்றி நடந்தோம். சுவிஸ் அரங்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வழியில் யாரையாவது கேட்டால், அவர்கள் சரியாகத்தான் பாதை சொல்வர். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
ஜோதிடம் என்ற பெயரில், ஏமாற்றுவோரை என்றாவது ஒரு பிடி பிடித்து, உலுக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் ஆசை. அதற்கான வாய்ப்பு, சமீபத்தில் கிட்டியது. இம்மாதத்தின் முதல் வாரத்தில், லென்ஸ் மாமாவும், நானும் சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் ரோடில் உள்ள நண்பர் ஒருவரின் அலுவலகத்துக்கு சென்றோம்.டிரைவர் சீட்டிலிருந்து மாமா இறங்கும் போது, ஒரு ரூபாய் நாணயம் அளவில் குங்குமப் பொட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
எம்.கணபதி, காஞ்சிபுரம்: நடைமுறையில் இருக்கும் சீர்திருத்த எழுத்தை பயன்படுத்தாமல், பழைய முறையிலேயே எழுதுவதால், தவறு இல்லையே...தவறு இல்லைதான்; நீங்கள் எழுதுவது இளைய தலைமுறைக்கு புரியாது போகும் பரவாயில்லையா? இப்போது, ப்ளஸ் 2 படிக்கும் மாணவனுக்கு, பழைய எழுத்தின் பரிச்சயமே இருக்காது; சோதனை செய்து பாருங்களேன்! வி.மாணிக்கவல்லி, ரெட்டியார்பாளையம்: எங்கள் பக்கத்து வீட்டில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
அன்புள்ள அம்மாவுக்கு,என் வயது, 33; கணவர் வயது, 42. எனக்கு, 18 வயதில் திருமணம் நடந்தது. எங்கள் திருமணம் முடிந்து, 15 ஆண்டுகள் ஆகி விட்டன. 12 வயதில், ஒரு ஆண் குழந்தையும், ஐந்து வயதில், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். திருமணமான, 10 ஆண்டுகள் மிகவும் சந்தோஷமாக, எல்லாரும் பொறாமைப்படும்படி வாழ்ந்தோம். என் கணவர் மிகவும் நல்லவர்; எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். டீ, காபி கூட, கடையில் குடிக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
மனிதர்கள், அறிவில் சிறந்தவர்களாக, அனைத்து வேதங்களையும் கற்றுணர்ந்தவர்களாக, முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும், பிறவி என்று ஒன்று எடுத்து விட்டால், அதன் கர்மங்களிலிருந்தும், மாயைகளிலிருந்தும் விடுபடவே முடியாது. இது குறித்து, தேவி பாகவதம் எனும் நூலில், மகா விஷ்ணுவே, நாரதருக்கு, ஞான உபதேசம் செய்துள்ள சம்பவம் ஒன்று...மகாவிஷ்ணுவை தரிசிப்பதற்காக, பாற்கடலுக்குச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
பேராசிரியர் க.ப.அறவாணன் சொல்கிறார்: ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட ஐரோப்பியர்கள், இந்தியாவுக்கு வந்ததன் நோக்கம் வியாபாரத்துக்காக அல்ல. நாடு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான். அதற்கு பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.கி.பி.,1498ல் கேரளாவில், கோழிக்கோடு என்ற இடத்தை வந்தடைந்த வாஸ் கோடகாமா, ஒரு வியாபாரி அல்ல; அவன் ஒரு கப்பல் படை கேப்டன். அவனை அனுப்பியது வியாபாரக் கம்பெனி அல்ல; ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
வடிவேலுவை கோர்ட்டுக்கு இழுக்கும் சிங்கமுத்து! தெனாலிராமன் படம் தோற்று விட்டதால், மீண்டும் வடிவேலுவை ஹீரோவாக வைத்து, படமெடுக்க யாரும் முன் வரவில்லை. அதனால், சொந்த படமெடுத்தாலும் கையை கடித்து விடுமோ என்று, கைகளை பிசைந்து கொண்டு நிற்கும் வடிவேலு, மீண்டும் காமெடி கோதாவில் இறங்குகிறார். இந்நிலையில், அவரையும், சிங்கமுத்துவையும் மீண்டும் காமெடி கூட்டணியில் இணைக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
காற்று வாங்க, தண்ணீரில் நிற்க, அலைகளுக்கு நடுவே புகுந்து விளையாட, நீச்சலடிக்க போன்றவற்றுக்கு தானே நாம் கடற்கரைக்கு செல்வோம். ஆனால், டச்சு நாட்டு கடற்பகுதியில் உள்ள காரபியன் தீவுகளில் ஒன்றான செயின்ட் மார்டென் என்ற கடற்கரையை ஒட்டிய பகுதிவாழ் மக்கள், தாழ்வாக பறக்கும் விமானத்தின் கீழ் நிற்கவே விரும்புகின்றனர்.செயின்ட் மார்டென் தீவை ஒட்டி, ஜூலியானா சர்வதேச விமான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
குற்றால அருவிகளில், எவ்வளவு கூட்டம் இருந்தாலும், நம் வாசகர்கள் குளிப்பதற்கு, போலீசார் மிகுந்த உதவி செய்வர். குளித்து கொண்டிருக்கும் பொதுமக்களும், 'வாங்க வாங்க வாசகர்களே...' என்று, அன்போடு வரவேற்று, வாசகர்கள் நன்கு குளிப்பதற்கு, வழிவகை செய்வர்.இருந்தாலும் சில, 'குடி' மகன்கள், 'இது எங்க பாட்டன் வீட்டு அருவியாக்கும்; எங்களுக்கு மட்டுமே சொந்தம்...' என்பது போல, அருவியை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
கவனமாய் இருப்போம்!வழிநெடுகிலும் வாகனங்கள் பயணங்களில் கவனமாய் இருப்போம்!வார்த்தைகள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றனபேசுவதில் கவனமாய் இருப்போம்!சிந்தனையே செயலை முடிவு செய்கிறது எண்ணங்களில் கவனமாய் இருப்போம்!எழுத்துகள் எப்போதும் ஆதாரம்கையெழுத்தில் கவனமாய் இருப்போம்!சாதிக்க குணங்களே சந்தர்ப்பம் தருகின்றனநடத்தையில் கவனமாய் இருப்போம்!வறுமையில் பணத்தின் அருமை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
''டேய் பிருத்வி... இப்பத்தான், சச்சின் பேட்டை சுழட்டி, 'கிரவுண்ட்'குள்ள வந்த மாதிரி இருக்கு, அவர் ரிட்டயர்மென்ட்டை என்னால, தாங்கிக்கவே முடியலடா,'' என்று, கண்ணாடியை கழட்டியபடி, ராகவன் சொன்னபோது, அவர் நிஜமாகவே, அழுவது போல் தோன்றியது.''தாத்தா... சும்மா ஓவரா பீல் செய்யாதீங்க. சச்சின் என்ன உங்க காலமா... நீங்க பிராட்மேன் காலத்து ஆளு... சும்மா சீன் காட்டிட்டு,'' என்றவன், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
கட்டிலில் அமர்ந்திருந்த தாத்தா என்னை கூப்பிட்டு கொண்டே இருந்தார். அவர் பனியனைக் கழற்ற, என் உதவி தேவை. 'இப்ப ஏன் தாத்தா பனியனை கழற்றணும்... ' என்றேன். 'பட்டணத்துப் பயலே... நீ பார்க்கணும்டா என் பாடியை. இந்த வயசிலும், என் உடம்பு எப்படி இருக்கு பார்...' என்றார். அது சரி, கழற்றிக் காட்ட ஒருத்தர் வேண்டியிருக்கே!— பாக்கியம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
அரசியல்வாதிகளில் பெரும்பாலோருக்கு, புத்தகம் படிக்கும் பழக்கம், குறைவு. அதுவும், சொந்த பணத்தில், புத்தகம் வாங்கி படிப்போர் மிகக் குறைவு. ஆனால், மத்திய அரசில் அமைச்சராக இருந்த கே.பி.உன்னிகிருஷ்ணன், பணம் கொடுத்து தான், புத்தகம் வாங்கி படிப்பார். இப்படி வாங்கிப் படித்த புத்தகங்கள், 20 ஆயிரத்துக்கும் மேல், இவரிடம் உள்ளன. இவர், டில்லி வாசம் முடித்து, கோழிக்கோடு திருவண்ணூரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
அமெரிக்காவைச் சேர்ந்தவர், கிறிஸ்டா மெக்கென்னா; தற்போது, இவருக்கு, 60 வயதாகிறது. 1970களில், அமெரிக்காவில், இவர், மிகப் பிரபலம். புகழ் பெற்ற, 'பிளேபாய்' பத்திரிகைக்கு, கவர்ச்சியாக போஸ் கொடுத்து, அன்றைய இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர். அதேபோல், உடலை, வில்லாக வளைத்து, உடற்பயிற்சி செய்வதிலும் கெட்டிக்காரர். இத்தனை பெருமை இருந்தும் என்ன பயன்? இப்போது, அமெரிக்க வீதிகளில், பிச்சை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
படத்தில் காணும், இந்த மூன்று பெண்களின் பெயர்கள், டோல், 30; கிடன், 27; மற்றும் யங் 34. அமெரிக்காவின் மசேசூட்ஸ் மாகாணத்தை சேர்ந்த, இந்த மூன்று பேருமே, ஓரினச்சேர்க்கை காதலிகள். மூன்று பேரும், ஒருவரை ஒருவர் திருமணம் செய்துள்ளனர். இவர்கள் மூன்று பேருக்குமே, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. இந்த ஆசையை, மனதுக்குள் பூட்டி வைக்காமல், நடைமுறைப்படுத்தி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X