Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி, மட்டுவார் குழலம்மை கோவிலில் தனியாகக் குடிகொண்டிருக்கும் உச்சிப்பிள்ளையாரைத் தரிசித்திருப்பீர்கள். மூன்றாம் எண்ணுக்கும், இந்த விநாயகருக்கும் ஒரு தொடர்புண்டு!இலங்கையில் இருந்து சீதையை மீட்டு, அயோத்தி திரும்பிய ராமபிரான், நன்றிக்கடனாக இலங்கை மன்னர் விபீஷணருக்கு, அயோத்தியில் இருந்த ஸ்ரீரங்கநாதர் விமானத்தை பரிசளித்தார். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
ரயில் டிக்கெட் வாங்கும் போது...ஒரு அவசர வேலை நிமித்தம், சமீபத்தில் கோவைக்கு சென்று, அன்று மாலையே அவசரமாக சென்னை திரும்ப வேண்டிய கட்டாயம். கோவை ரயில் நிலையத்தில், 'அன் ரிசர்வ்டு டிக்கெட்' வாங்க நின்ற கூட்டத்தை பார்க்க, மலைப்பாக இருந்தது; ரயிலை தவற விட்டு விடுவோமா என்ற பதற்றத்துடன் வரிசையில் நின்றேன்.அப்போது ஒருவர், என் அருகில் வந்து, 'டிக்கெட் எடுத்திருந்தும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
லென்ஸ் மாமாவும், குப்பண்ணாவும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்தேன்;குப்பண்ணா சொன்னார்... 'நம் பாடத் திட்ட முறை, காலங்காலமாக ஒரே மாதிரி தான் இருக்கிறது... என் கொள்ளுப் பேத்தி நேத்து தான் பாட புஸ்தகங்கள் வாங்கி வந்தா... அதப் புரட்டிப் பார்த்தேன்; அத பாத்தப்புறம் தான், கேள்விகள தான் அவங்க மாத்துறது இல்ல, பதிலையாவது மாணவர்கள் மாத்தி எழுதினா என்ன எனத் தோன்றியது...' ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
வி.ரகுநாதன், சென்னை: கேள்வி கேட்கும் வாசகர்களை என்றாவது நேரில் சந்தித்து, அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியதுண்டா?உண்டாவது... சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன்... சில நேரங்களில் நான் யார் என்று சொல்லிக் கொள்ளாமலேயே! * பி.மனோகர், காஞ்சிபுரம்: நான்கு பெண்கள் ஒன்று கூடினால், அவர்களால் ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒற்றுமையாக இருக்க முடியாது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
சூடிக்கொடுத்த சுடர்கொடியாளான ஆண்டாள், கோவில் கொண்டிக்கும் தொன்மையான நகரம், ஸ்ரீவில்லிபுத்துார். இவ்வூரின் பல பெருமைகளில், 142 ஆண்டுகள் பழமையான பென்னிங்டன் நுாலகமும் ஒன்று!கடந்த, 1875ல், திருநெல்வேலி கலெக்டராக இருந்தவர், பென்னிங்டன்; இவர், தம் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்துாருக்கு வருகை தந்தபோது, மக்கள், பொழுது போக்குவதற்கு, ஒரு நுாலகம் அமைத்தால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
அவன் நண்பர்கள் சிலர், தங்கள் அப்பாவை ஒரு ரோல் மாடலாக கருதுவர். ஒரு சிலர், அப்பா என்றால் தங்களுக்கு உயிர் என்பர். எங்க அப்பா எனக்காக எதையும் செய்வார் என்பவர்களும், நான் அப்பாவின் செல்லம் என பீத்திக் கொள்பவர்களும் அதில் அடங்கும். எங்க அப்பாவுக்கும், எனக்கும் எப்பவுமே ஏழர நாட்டு சனி என்று கூறி, ஒருவன் காலரை துாக்கி விட்டுக் கொண்டான். அப்பாவை, ஹிட்லராக பார்ப்பவர்களும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!முரளி நடித்த, மனுநீதி, வடிவேலு நடித்த, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர், நடிகர், தம்பி ராமைய்யா. இவர், தற்போது, தன் மகன் உமாபதி நாயகனாக நடித்து வரும், மணியார் குடும்பம் என்ற படத்தை இயக்கி, இசையமைத்து வருகிறார். இந்த படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக, கடந்த, ஐந்து மாதங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை தம்பி ராமைய்யா. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
சொல்லால் மட்டுமல்ல; மனதாலும் யாரையும் காயப்படுத்தாதவர், கபீர்தாசர். நெசவுத் தொழில் செய்த அவர், அதிலிருந்து கிடைக்கும் சொற்ப பணத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தார். ஒருநாள், துணி விற்கப் போனார், கபீர்தாசர். அப்போது ஓர் ஏழை, 'போர்த்திக் கொள்ள ஒரு துணி தாருங்கள்...' என, வேண்டினார். அவருக்குப் பாதி துணியைத் தந்தார் கபீர்தாசர். ஏழையோ, முழுவதுமாக கேட்க, விற்க கொண்டு வந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
வளர்ப்பு...மகள் பிறந்த நேரம் தான்மனை வாங்கினேன்வீடு வாங்கினேன்கார் வாங்கினேன்வியாபாரம் பெருகியது என்றுஎன்னை தரையில்கால் படாமல் தேவதை போல்செல்லமாக துாக்கிவளர்த்தீர்களே அப்பா!கேட்டதெல்லாம்வாங்கி தந்தீர்கள்...பொன்னும் மணியும் பூட்டிஅழகு பார்த்தீர்கள்... தினம் தினம்அறுசுவை விருந்தளித்தீர்கள்!நம்மை விட மேலானபணக்கார வீட்டில்மாப்பிள்ளை பார்த்துஊரெல்லாம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
அன்பு சகோதரிக்கு —என் வயது, 55; இரு மகன்களின் தாய்; கணவர் இறந்து விட்டார். மூத்தவன், மிகவும் பொறுமைசாலி; பொறுப்பானவனும் கூட! என் மீது பாசமாக இருப்பான். இளையவன், இவனுக்கு நேரெதிர். இருப்பினும், பாசத்தில் எந்த குறையும் சொல்ல முடியாது. படிப்பில் மூத்தவன் சுமார் என்றால், இளையவன் கெட்டிக்காரன்.எம்.பி.ஏ., படித்து, வெளிநாட்டில் வேலைக்கு சென்ற இளையவன், காதலித்து, திருமணம் செய்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழக நகராட்சி ஊழியர்கள் மாநாட்டில், அன்றைய முதல்வர் அண்ணாதுரை பேசியது, 'அறிஞர் அண்ணா' என்னும் நுாலிலிருந்து: எஸ்.எஸ்.எல்.சி., பரீட்சையில், அந்த ஆண்டு நான் தேறவில்லை. அந்த இடைக்காலத்தில் என்ன செய்வது என்று யோசித்தேன். அப்போது, காஞ்சிபுரம் நகர சபை தலைவர் சாம்பசிவம் செட்டியார், காஞ்சிபுரம், நகர சபையில் வரி வசூலிக்கிற பில் புத்தகங்களை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
எந்த ஊருக்கு போனலும், சீக்கிரமே எழுந்து ஊரை சுற்றிப் பார்க்க கிளம்பி விடுவது என் பழக்கம். காரணம், நிறைய இடங்களை பார்க்கலாம் என்பதுடன், நல்ல புகைப்படங்களும் எடுக்கலாம்.பாங்காக் போயிருந்த போதும், வழக்கம் போல் கிளம்பினேன். கொஞ்ச நேரத்தில் தாகசாந்தி செய்து கொள்வதற்காக, வழிபோக்கர் ஒருவரிடம் வாட்டர் பாட்டில் படம் போட்டு காட்டினேன். படம் கொஞ்சம் சப்பட்டையாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
இன்னும் சில வித்தியாசமான தயாரிப்பாளர்களும் உண்டு. அவர்கள் எங்கேயும் ஓடி ஒளிவதில்லை. அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருப்பர். ஆனால், கண்டும் காணாததுபோல போய் விடுவர். ஏதோ முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவரை வழியில் பார்ப்பதுபோல நடந்து கொள்வர்.இது, ஆச்சியின் திரைப்பட வாழ்வில் மட்டுமல்ல, அனைத்து நடிகர் - நடிகையரின் வாழ்விலும் அடிக்கடி நடக்கக் கூடியது தான்!ஒழுங்காக பணம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
ரீ-சார்ஜ் செய்து, பணத்தை நீட்டிய சந்திரன், கடைக்காரரை பார்த்து, தலையை சொறிந்தபடி நின்றான்.'சார்... பில் குடுத்திடுங்க சார்... அமவுண்ட் மட்டும், 500க்கு போட்ருங்க...' அவன் பல்லை காட்ட, கடைக்காரர் ஒரு மாதிரியாக பார்த்தபடி, பில்லை எழுதி நீட்டினார். 50 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்துட்டு, 500க்கு பில் கேட்டால், அவனுக்கு கடுப்பு வராமல் என்ன செய்யும்!அலுவலகத்தில் சந்திரனுக்கு வெளி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
விமானப்படையில், 15 ஆண்டுகள், விமானங்களை ஓட்டிய பின்னரே, ஏர் - இந்தியா விமானத்தில் பைலட் ஆகி இருக்கிறார், பிந்து செபாஸ்டின். 25 ஆண்டுகளாக, இவர், 10 ஆயிரம் மணி நேரம் விமானம் செலுத்தி, அசத்தியுள்ளார். பயணியரில் சிலர், விமானத்தில் ஏறும்போது, 'பைலட், ஒரு பெண் என்றதும், கதிகலங்குவதை கண்டிருக்கிறேன்...' என்கிறார் பிந்து. இவர்களில் சிலர், உடனே வீட்டுக்கு போன் செய்து, 'பைலட் ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X