Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும், அதைத் தாங்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான், கூர்ம அவதார தத்துவம். திருமாலின் தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரம் இது. ஆனி மாதம் தேய்பிறை துவாதசியன்று, கூர்ம ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.கூர்ம அவதார காலமான, கிருதயுகத்தில், தர்மம் தழைத்தோங்கி இருந்தாலும், அசுர குணங்களும் நிறைந்திருந்தன. நற்குணமும், பக்தியும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
இப்படி பிரித்தாளுகின்றனரே...முன்பெல்லாம், மாப்பிள்ளை வீட்டார் கேள்வி மேல் கேள்வி கேட்டு, பெண் வீட்டாரை பாடாய் படுத்துவர்; இப்போதோ, நிலைமை தலைகீழ். மணப்பெண் கிடைப்பது அரிதாகி விட்ட நிலையில், பெண் வீட்டார் செய்யும் சில அலம்பல்கள், மிகவும் வேதனை தருவதாய் உள்ளது.சமீபத்தில், உறவினர் மகனுக்கு பெண் பார்க்கும் படலத்தில் கலந்து கொண்டேன். அப்போது, பெண்ணின் பெற்றோர், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
அன்று, வழக்கமாக நண்பர்கள் கூடும் இடத்திற்கு, முன் கூட்டியே சென்று விட்டோம் நானும், லென்ஸ் மாமாவும்!குறிப்பிட்ட நேரமாகாததால் நண்பர்களின் கார், பைக் எதையுமே காணோம். ஆனால், எங்களது பகுதியைத் தாண்டி, தூரத்தில், ஒரு கார் நின்றிருந்தது.கார் முழுவதும் அடிபட்ட தடங்களும், கோடுகளும் இருக்கவே, அது அறிமுகம் உள்ள அன்பரின் கார் தான் என்பதை புரிந்து கொண்டேன். அந்த அன்பர், அரசு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
* ஜெ.ரமேஷ், திருவான்மியூர்: தொழிலாளர்களை நிர்வகிப்பதில் தகுதி பெற, எந்தெந்த புத்தகங்களைப் படிக்கலாம்?எந்த புத்தகத்தையுமே படிக்கத் தேவையில்லை. 'கடுகடுப்பை கைவிட்டு, இன்முகம் காட்டுங்கள் போதும்; தொழிலாளர்களின் இதயத்தில் இடம் பிடித்துவிடலாம்...' என்று கூறுகிறார், இந்தியாவின் தலைசிறந்த நிர்வாகிகளில் ஒருவர். முயன்று பாருங்களேன்! கே.டி.ராதாகிருஷ்ணன், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
காயத்திரியால் எதுவுமே செய்ய முடியவில்லை. எதிர்மறையான எண்ணங்கள், மனதில் அதிகரித்து, பய உணர்வை கூட்டியது; நூறு கிராம் இதயத்துள், நூறு டன் கனத்தை உணர்ந்தாள்.விடுதியின் மாடி சுவரில், கைகளை ஊன்றி, இயந்திரத்தனமாய் இயங்கும் நகரத்து மனிதர்களை, வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள். 'இவர்களில், யாரேனும், பெற்றோர், உடன்பிறந்தோரை, கூடப் படித்த தோழிகளை, ஆடி, ஓடி விளையாண்ட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
சிலர், நம்மை நோக்கி வீசிய வார்த்தைகளை, இப்போது நினைத்தாலும், நெஞ்சில் மறுபடி ரணம் புறப்படுகிறது. 'அவர் - அவள் அப்படி பேசியதில் என்ன நியாயம் இருக்கிறது...''நான் செய்யாத தவறுக்கு, அப்படி பேசி விட்டாரே... அவர், என் மீது காட்டிய கடுமையில் சற்றும் நியாயமில்லை; எப்பேற்பட்ட சுடு சொற்கள். நான் செய்தது தவறாகவே இருக்கட்டும்; அதற்காக, இப்படியா பேசுவது... அதுவும், அத்தனை பேர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
ராஜமவுலி படத்தில், ரன்வீர் சிங்!திரைக்கு வந்த பத்தே நாட்களில், ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த, பாகுபலி - 2 படத்தை இயக்கிய, ராஜமவுலி, அடுத்தபடியாக, இந்தி நடிகர், ரன்வீர் சிங்கை வைத்து, ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளார். ரன்வீர் சிங் நடித்த சில படங்கள், தன்னை அதிகம் பாதித்ததாக சொல்லும், ராஜமவுலி, அவரை வைத்து இயக்கும் படத்தை, இந்திய கலாசாரம் சம்பந்தப்பட்ட ஒரு கதையில் இயக்கப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.நாடகத்தில், உத்திரன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த போது, 'பாம்பு... பாம்பு...' என்று அலறியபடி அர்ச்சுனன் மீது விழ, என் நடிப்பை ரசித்தனர், மக்கள். 'பையன் பரவாயில்லையே...' என்று பாராட்டினர், சக நடிகர்கள்.ஆனால், உண்மையில், என்ன நடந்தது தெரியுமா...பாலகிருஷ்ணன் என்ற பையன், எனக்கு உடைகள் அணிவித்து, உதவி செய்தான் என்று சொன்னேன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
அன்பு மகளே —என்னை விட, வயதில் சிறியவளாக இருப்பாய் என நினைத்து, மகள் என்று அழைக்கிறேன்; என் வயது, 64. என் உறவினரின், 90 வயது பாட்டி, ஆறு மாதம் படுத்த படுக்கையாகி, முதுகில் புண் வந்து, மிகவும் வேதனையை அனுபவித்து, இறந்தார். அவரது அக்காவோ, 15 ஆண்டுகள் படுக்கையில் கிடந்து, கடந்து ஆறு மாதங்களாக பேச்சு மற்றும் அசைவு இன்றி, கால்களில் புண்ணாகி, 95 வயதில் இறந்தார்.இதையெல்லாம் பார்த்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
'எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே...' என்பது ஆன்றோரின் வாக்கு மட்டுமல்ல; அவர்களின் வாழ்க்கையும் கூட!உத்தரகண்ட் மாநிலத்தில், பத்ரிநாத் எனும் இடத்திலுள்ள புகழ்பெற்ற பதரிகாசிரமத்தில், பூர்ணவித்து என்ற முனிவர், தன் மனைவி பத்திரதத்தையுடன் வாழ்ந்து வந்தார். குறையேதும் இல்லாத அவர்களது வாழ்வில், குழந்தை யில்லா குறை மட்டும், மனதை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
மனிதநேயம் என்ன செய்கிறதுமனிதநேயமேநம் செயல்பாடுகளைநல் வழிப்படுத்துகிறது!மனிதநேயமேநம் துன்பங்களைமறக்கச் செய்கிறது!மனிதநேயமேநம் போராட்டங்களைநிறுத்தி வைக்கிறது!மனிதநேயமேநம் தவறுகளைமன்னிக்கச் செய்கிறது!மனிதநேயமேநம் கனவுகளைநனவாக்கச் செய்கிறது!மனிதநேயமேநம் எண்ணங்களைமேன்மைப்படுத்துகிறது!மனிதநேயமேநம் வன்முறைகளுக்குசமாதி கட்டுகிறது!மனிதநேயமேபிரிந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
பல தனியார் பள்ளிகள், கோடி கோடியாக கொட்டிக் கொடுக்க, தயாராக இருந்தாலும் கிடைக்காத, பள்ளிகளுக்கான, ஐ.எஸ்.ஓ., தர சான்றிதழ், நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் என்ற மீனவ கிராமத்து, அரசு பள்ளிக்கு கிடைத்துள்ளது, மொத்த தமிழகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.ஒருபுறம் ஆறு, மற்றொருபுறம் கடல் என இயற்கை அழகுடன் திகழும் இக்கிராமத்தில், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
மறைந்த முதல்வர், ஜெயலலிதா ஒரு பேட்டியில் சொன்னது: கண்ணன் என் காதலன் படப்பிடிப்பின் போது, ஒருநாள் காலை, படப்பிடிப்பு முடிந்து, காரில் ஏறப் போன எம்.ஜி.ஆர்., 'மத்தியானம் என்ன காட்சி எடுக்கப் போறீங்க?' என்று இயக்குனரிடம் கேட்டார். 'ஜெயலலிதா மாடிப்படியில் சக்கர நாற்காலியில் இருந்து உருண்டு விழும் காட்சி...' என்றார், இயக்குனர்.உடனே, காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர்., 'அதை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
பார்த்தசாரதியின் இமையோரத்தில், கண்ணீர் கசிந்தபடி இருந்தது. முந்திய நாள் இரவில், தன் உணர்வின்றி சிறுநீர் கழித்து விட, அதன் துர்நாற்றத்தில் முகத்தை சுருக்கி, 'சே... ஒரே நாத்தம்; என்னிக்கு தான் இந்த எழவிலேர்ந்து, விடுதலை கிடைக்குமோ, அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்...' என்று, மகன் வாசு புலம்பியதைக் கேட்டதன் விளைவே அந்தக் கண்ணீர்த் துளிகள்! கொஞ்ச நாளாய், அவருக்கு காது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன், ஏப்.,17, 1955ல் ரத்த குழாய் வெடித்து, தன், 76வது வயதில் மரணமடைந்தார். அவரது உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது, 'அவர் மூளையின் ஒரு பகுதியை, பாதுகாத்து வைத்தால், பிற்காலத்தில், அது, அரிய பொக்கிஷமாக இருக்கும்...' என்று நினைத்த மருத்துவர், தாமஸ் ஹார்வே, ஐன்ஸ்டீன் மகன், ஹான்ஸ் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் அனுமதி பெற்றார்.தற்போது, அந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
நடிகர் கலாபவன் மணி மறைந்து, ஒரு ஆண்டாகிறது. அவரது ஒரே மகளான ஸ்ரீ லட்சுமி, தந்தையை பற்றி கூறும் போது, 'நான் படித்து, டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார், என் அப்பா. அவர் என்னிடம், 'நீ டாக்டரானால், உனக்கு மருத்துவமனை கட்டி தருவேன்; அம்மருத்துவமனையில், ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்...' என்பார்.'அவர், ஏழ்மையில் வாழ்ந்தவர் என்பதால், யார் பசித்திருந்தாலும் சகிக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
படத்திலுள்ள, இந்த பறவையின் பெயர், சுக்கர் பாட்ரிஜு; அழிந்து வரும் உயிரின பட்டியலில் இடம் பெற்றுள்ள இப்பறவை ஒன்றின் விலை, 25 ஆயிரம் ரூபாய். இதை வாங்கவோ, விற்கவோ மற்றும் வீட்டில் வளர்க்கவோ கூடாது என்கிறது, சட்டம்.பாகிஸ்தான் நாட்டு தேசிய பறவையான இதை, சிறிய கூண்டில் அடைத்தால், உடனே, சத்தம் எழுப்பி, தலையை அங்குமிங்கும் மோதி, தற்கொலை செய்து கொள்ளும். சமீபத்தில், கொச்சியை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
கேரளா மாநிலம், ஆலப்புழா, சேர்த்தலாவை சேர்ந்த தொழிலதிபர், விஜய் குமார் பிள்ளை; இவர், ஆறு கோடி ரூபாயில், 'பென்ட்லி பென்ட்யக்' என்றரக காரை வாங்கியுள்ளார். இதன் பதிவுக்கு மட்டும்,1.07 கோடி ரூபாயும், காருக்கு, சிறப்பு எண் பெற, கூடுதலாக ஒரு லட்சம் ரூபாயும் செலவுசெய்துள்ளார். இதன் இன்ஷூரன்ஸ் பிரிமீயம் தொகை, 4.14 லட்சம் ரூபாய். 5950 சி.சி., திறன் கொண்ட இக்கார், 2,508 கிலோ எடை கொண்டது; நான்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X