Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
ஜூன், 20 - மாங்கனி திருவிழாநம் ஒவ்வொருவருக்கும் பாட்டி உண்டு; ஆனால், இந்த உலகத்திற்கே ஒரு பாட்டி இருக்கிறார். அவர் தான் காரைக்கால் அம்மையார். இந்த உலகிற்கு தந்தையான சிவபெருமான், காரைக்கால் அம்மையாரை அம்மாவாக ஏற்றுக் கொண்டதால், அவரது பிள்ளைகளான நம் எல்லாருக்கும் அவள் பாட்டியாகிறாள்.இந்த பாட்டியின் வரலாறைக் கேளுங்கள்:தும்புரு என்ற தேவலோக இசைக்கலைஞரின் மகள் சுமதி; மிகச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
எங்கே போகிறோம் நாம்?ஒரு காலத்தில், பத்தாம் வகுப்பில், 215 மற்றும் பிளஸ் 2வில், 550 மதிப்பெண் எடுத்தாலே மகிழ்ச்சியுடன், ஊரெல்லாம் சாக்லெட் கொடுத்து மகிழ்வர். ஆனால், இன்றோ, 480 - 1,170 மதிப்பெண் எடுத்தும் தற்கொலை முடிவை எடுக்கின்றனரே மாணவர்கள்...மதிப்பெண் என்பது, மாணவர்களின் திறமைக்கு தரப்படுவது என்பதை தாண்டி, பெற்றோரின், கவுரவம் சார்ந்ததாக மாறிவிட்டதே இதற்கு காரணம்.இதைத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
திருச்சியில் ஒரு அவசர வேலை; முடித்து விட்டு, மாலையில் ஓட்டல் திரும்பும் போது, புது பஸ் ஸ்டாண்ட் வாசலில் வண்டியை நிறுத்தச் சொன்னார், லென்ஸ் மாமா. அங்கே, அவரது மலையாள நண்பர் ஒருவர் கடை வைத்திருக்கிறார்; அவரிடம் தான் வெண்குழல் வத்தி வாங்குவார். சிறிதுநேரம் ஊர்க் கதை பேசுவார்; மாமாவின் நீண்ட கால நண்பர் அவர். பஸ் ஸ்டாண்ட் திறந்த போதிலிருந்தே கடை வைத்திருக்கிறாராம்.'ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
ஏ.ஆனந்தகுமார், குமுளி: பகல் கொள்ளையாக பணம் பிடுங்கினாலும், ஆங்கில மீடியத்தை மக்கள் நாடக் காரணம் என்ன?போட்டி அதிகமாகிப் போன இக்காலத்தில், இந்தி படிக்கவும் வழி இல்லை. தமிழ் மட்டுமே படித்த தம் சந்ததியினருக்கு எதிர்காலம் இல்லை என உணர ஆரம்பித்துள்ளனர் பெற்றோர். தமிழ் மொழியிலேயே பிளஸ் 2 வரை முடித்தவர்களால், மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற ஆங்கிலத்தில் மட்டுமே உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
ஆங்காங்கே கிழிந்த அழுக்கேறிய சேலையும், எண்ணெய் கண்டு பல மாதங்களான கூந்தலுமாக, ஆடுகள் முன்னால் செல்ல, ஒரு கையில் தூக்கு வாளியும், மறு கையில் ஆடு விரட்டும் கோலுமாக, ஆடுகளை ஒழுங்குபடுத்தியவாறு சென்று கொண்டிருந்தாள் அம்பை. காலம், அவள் வாழ்க்கையை மட்டுமல்ல, வனப்பையும் கொள்ளையடித்திருந்தது. அவள் செல்வதையே பார்த்தபடி நின்றிருந்த நான், ''அம்பை...'' என்றேன் உரத்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
ஏ.ஆர்.ரஹ்மானின் முக்கியமான படம்!பிரேசில் கால்பந்து அணி வீரரான, பீலேயின் வாழ்க்கை வரலாற்று படமான, பீலே பெர்த் ஆப் த லெஜன்ட் என்ற படத்துக்கு, இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரான, சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாற்று கதையில் உருவாகும், சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், 'தற்போது, நான் பல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
எல்லாருக்கும், எல்லாமும் கிடைத்து விடாது; சிலரை பார்க்கும் போது, நம்மையறியாமல், 'இவர்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றனர்; தெய்வம் என்னைத் தான் படுத்துகிறது...' என்ற புலம்பல் வெளிப்படுகிறது.இதற்கெல்லாம் காரணம், நம் கர்ம வினையே!ஒரு சமயம், நாட்டில் கடுமையான பஞ்சம் நிலவியது. வேடன் ஒருவன், பசியால் வருந்தியபடி, தன் மனைவியுடன் காட்டில் அலைந்து திரிந்த போது, ஏராளமான தாமரை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.'சினிமா அற்புதமான கலை; நடிகை என்ற உயர்ந்த இடத்தில், மிக பெரிய மைல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
உறவெனும் ஒரு கை ஓசை! உறவென்னும் பந்தம்நம்மை இணைப்பதாகஇறுமாந்திருக்கும் மாந்தரே...கருவின் மூலம் வரும் உறவைதொப்புள் கொடியைஅறுப்பது போல் அறுத்துசெல்லும் பிள்ளைகளாநம் உறவு?பணமிருந்தால் வட்டமிட்டுகஷ்டத்தில் கணப்பொழுதில்மறையும் சுற்றமோநம் உறவு?பதவியில் இருக்கையில்பதிவிசாக சாமரம் வீசிபலவும் சாதித்துபின் பார்த்தும் பார்க்காமல்மறையும் மனிதரோநம் உறவு?கூடிக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான், 35 வயது பெண்; பிரபல மென்பொருள் நிறுவனத்தில், மேலாளராக பணி புரிகிறேன். திருமணமாகி, நாலரை வயதில் ஒரு மகன் உண்டு. என் கணவரும், மென்பொருள் நிறுவனத்தில், சேல்ஸ் மேனேஜராக உள்ளார். வரவிற்கேற்ப கடன்கள் உண்டு. என் மாமனார், மாமியாரிடம் குழந்தையை விட்டு விட்டு அலுவலகம் செல்கிறேன். 70 வயதான என் பெற்றோருக்கு நான், ஒரே பெண்.என் கணவருக்கு குடி மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
ஒரு பேச்சாளர், மேடையில் பேசிய பின், வீட்டிற்கு வந்து, தம் மனைவியிடம், 'இன்றைக்கு நான் நேரம் போனதே தெரியாமல் பேசினேன்...' என்று பெருமையடித்துக் கொண்டார்.கெட்டிக்கார மனைவியோ, 'உங்களுக்கு நேரம் போனது தெரியாமல் போயிருக்கும். பாவம்... கூட்டம் என்ன பாடு பட்டுச்சோ, தெரியலை...' என்றார்.பலரது உரையாடல்கள் கூட, இப்படி தான் அமைந்து விடுகின்றன. ஒரு பக்க சுவாரசியமாய்!உரையாடல் எனும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
ஆறு, குளம், ஏரிகளில் ஆக்கிரமித்து வரும் நீர்வாழ் தாவரம், ஆகாயத்தாமரை. இத்தாவரத்தின் வளர்ச்சியை கட்டுப் படுத்தவோ, அவ்வளவு சீக்கிரம் அழிக்கவோ முடியாது. தன் தடிமனான இலைகளால் தண்ணீரை அதிகம் உறிஞ்சி, வெகு சீக்கிரம், நீர் நிலைகளில் வறட்சியை ஏற்படுத்தி விடும்.மேலும், கோடை காலங்களில் ஏரி மற்றும் குளங்களின் நீர், வெகு சீக்கிரம் வெப்பமடைந்து, ஆவியாக மாறி வீணாவதற்கு, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
'கணையாழி' இதழுக்காக, கி.கஸ்தூரி ரங்கன் எம்.ஜி.ஆரை சந்தித்து, எழுதியது: வாகினி ஸ்டுடியோவின் ஏர் கண்டிஷன் அறை; சலூனில் இருப்பது போல சுழல் நாற்காலி. எம்.ஜி.ஆருக்கு, 'மேக் - அப்' நடந்தது. உள்ளே நுழைவோரை ஓரக்கண்ணால் பார்த்தார், எம்.ஜி.ஆர்.,'வந்துட்டீங்களா... ஒரு நிமிஷம் அப்படியே உக்காருங்க...''மேக் - அப்' மேன் சிரத்தையுடன், கவனமாக எம்.ஜி.ஆர்., முகத்தில், ஏதேதோ பூசினார். தலையில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், சினிமாத் துறையில் அடி எடுத்து வைத்து, 38 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டாலும். இதுவரை, 11 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். 'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும்' என்ற எண்ணம் எல்லாம், அவரிடம் இல்லை. 'ஒரு சில படங்களை இயக்கினாலும், நீண்ட காலத்துக்கு ரசிகர்களால் பேசப்படும் படமாக இருக்க வேண்டும்...' என்பதே, அவரது பாலிசி!கடந்த, 2009ல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
ஜப்பானில், 300க்கும் மேற்பட்ட பூனை கபேகள் உள்ளன. இந்த கபேக்கு வருபவர்கள், டீ குடித்தவாறு அங்குள்ள பூனைகளோடு விளையாடி மகிழலாம். நாம், குழந்தைகளை கிரீச்சில் விடுவது போன்று, தங்கள் பூனைகளை இதுபோன்ற கபேகளில் விட்டுவிட்டு, பின், வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, தன்னோடு எடுத்துச் செல்வர், ஜப்பானிய மக்கள்.சிலருக்கு பூனை வளர்க்க ஆசை இருந்தும், அது சாத்தியப் படாமல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
ஜெர்மனியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், நிறை மாதம் ஆகியும் வயிற்றில் சிசுவின் அசைவையே உணராததால், பெர்லின் மருத்துவமனையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம் பரிசோதனை செய்துள்ளார். அவரும், பல்வேறு சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்து, 'குழந்தை அசைவின்றி இருப்பதற்கு காரணம் தெரியவில்லை; ஆனால், சிசுவுக்கு உயிர் இருக்கிறது...' என்று கூறி, அனுப்பி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2016 IST
நம்முடைய தினசரி உணவில் பூண்டுக்கு தனி இடம் உண்டு. மிளகு, சீரகத்துடன் பூண்டு சேர்த்தால் தான் ரசம், 'கமகம'ன்னு மணம் வீசி ருசிக்கும். இது, வாதம், பித்தம் மற்றும் சிலேட்டுமம் எனச் சொல்லப்படும் கபத்தை நீக்கி, உடல் நலம் பெற உதவுகிறது. வாயுக்கோளாறுக்கு முழு வெள்ளைப் பூண்டை தீயில் சுட்டு, நன்கு வெந்ததும் சாப்பிட்டால், வந்த இடம் தெரியாமல் விலகிப் போகும்.உணவில் அடிக்கடி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X