Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
ஜூன் 24 - வாசவி ஜெயந்திபுராணங்களில், வாசவி என்ற பாத்திரம் இரண்டு இடங்களில் வருகிறது. இவளை வியாசரின் தாய், பராசர முனிவரின் துணைவி என்றும், தேவேந்திரனின் மனைவி இந்திராணி என்றும், பழைய நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. மகாபாரதத்தில், சத்தியவதி, மச்சகந்தி என்று அழைக்கப்பட்ட இவள், பிதுர்லோகத்தில் வசித்தவள். யோக சித்தி உடையவள். உலகிலுள்ள அனைத்து பிதுர்களும் (மறைந்த முன்னோர்) ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
அரசு அதிகாரி என்றாலே லஞ்சம் வாங்குவதுதானோ!என் நண்பர் ஒருவர், அரசு பணியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். தன் பதவி காலத்தில், அலுவலகத்திற்கு தணிக்கைக்கு வரும் மேலதிகாரிகளை, "குளிப்பாட்ட' வேண்டிய கடமையும் (?), நிர்பந்தமும், உடன் பணியாற்றுவோரின் தொல்லைகளுக்கு பயந்தும், லஞ்சம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி, வேறு வழி இல்லாமல் குறைந்த அளவில் லஞ்சமும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
படத்திலுள்ளவர் பெயர் ப்ரெயின் பெர்க். இவருக்கு, சீட்டுக் கட்டுக்களை வைத்து பணம் பார்ப்பது தான் தொழில். நீங்கள் நினைப்பது போல், மூணு சீட்டு, மங்காத்தா போன்ற விளையாட்டுகளை விளையாடி, பணம் சம்பாதிப்பது அல்ல. மாறாக, சீட்டுக்கட்டுகளின் சீட்டுகளை கொண்டு, புகழ் பெற்ற கட்டடங்களின் மாதிரியை உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார். 39 வயதாகும் இவர், இதில் பல சாதனைகளை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
திருச்சியில் ஒரு அவசர வேலை; முடித்து விட்டு, மாலையில் ஓட்டல் திரும்பும் போது, புது பஸ் ஸ்டாண்ட் வாசலில் வண்டியை நிறுத்தச் சொன்னார் லென்ஸ் மாமா. அங்கே, அவரது நண்பர் மலையாளத்துக்காரர்; கடை வைத்து இருக்கிறார். அவரிடம் தான் வெண்குழல் வத்தி வாங்குவார்; சிறிது நேரம் ஊர்க்கதை பேசுவார்; மாமாவின் நீண்ட கால நண்பர் அவர். பஸ் ஸ்டாண்ட் திறந்த போதிலிருந்தே அவர் கடை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
* கே.தர்மலிங்கம், ஆரப்பாளையம்: அண்ணாதுரை மறைவுக்குப் பின், நெடுஞ்செழியன் தலைமை ஏற்று இருந்தால், இப்போது திராவிடக் கட்சிகளின் நிலைமை எப்படி இருந்திருக்கும்?அந்த, நல்ல காரியம் நடக்காமல் போய் விட்டதே... இந்நேரம், திராவிட கட்சிகள் இருந்த இடத்தில், புல் என்ன மரமே முளைக்க வைத்திருப்பார்!*****ஆர்.லட்சுமிபிரியா, கொடைக்கானல்: உழைக்க மறுப்பவர்களை என்ன செய்யலாம்?சுட்டுத் தள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
நெய்யின் சுகந்த மணம், மெதுவாக சமையலறையிலிருந்து வெளிவந்து, வீடு முழுவதும் பரவியது. அன்னபூரணி நெற்றியில் துளிர்த்த வியர்வையை, கைத்துண்டால் துடைத்தபடி, ஹாலில் வந்து அமர்ந்தாள்.""என்ன பூரணி, பட்சணம் எல்லாம் தடபுடலா இருக்கு... வேலையை முடிச்சுட்டியா, இன்னும் ஏதாவது செய்யப் போறியா?''""எல்லாம் முடிஞ்ச மாதிரிதான்ங்க. இன்னும் தேன்குழல் மட்டும்தான் செய்ய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
அன்புள்ள ஆன்ட்டி —இருபத்திரண்டு வயது பெண் நான். திருமணமாகி மூன்று வருடங்களாகி விட்டன. நான் திருமணத்திற்கு முன் என் உறவினர் ஒருவரை உயிருக்குயிராய் நேசித்தேன். அவரும் என் மேல் உயிராய் இருந்தார். விஷயம் தெரிந்ததும், என் வீட்டினர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். என் கணவர் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார். ஆனால், என்னால் என் காதலரை மறக்கவே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
இத்தாலியில் டஸ்கேன் என்ற இடத்தில், "சமிசேனோ கேசல் வீடுகள்' என குறிப்பிடப்படும் அரண்மனை உள்ளது. அன்றைய அரசனால் கட்டப்பட்ட இந்த அரண்மனையின், அறைகள் அனைத்தும், அபாரமான அலங்காரத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ளன. மயில் தோகையின் வடிவம் போல அமைக்கப் பட்டிருப்பதால், அதை மயில் அறைகள் என்று அழைக்கின்றனர்.ஒவ்வொரு அறையின் வேலைப்பாடுகளும், வண்ணங்களும், தரை அலங்காரமும் பார்ப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டு டி.ஆர்.சுந்தரம் அமரராகி விட்டார், மேக்கப்பைக் கூடக் கலைக்காமல், டப்பிங் பேசிக் கொண்டிருந்த மனோரமாவுக்கு, இந்த செய்தி எட்டி, "ஓ' ...வென்று அவர் அலறிய பின் தான், மற்றவர்களுக்கே விஷயம் தெரிந்தது. ஸ்டுடியோவின் அஸ்திவாரத்தையே தாங்கிக் கொண்டு இருந்த ஒரு தூண் சாய்ந்து விட்டது என்றால்... முதலில் யாரும் நம்பவே இல்லை. ஏனெனில், தனக்கு உடல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் யாக யக்ஞங்களால், தேவர்கள் திருப்தியடைகின்றனர். எப்படி? இங்கு அக்னியில் போடப்படும் அவிஸ், அமிர்தமாகி அவர்களை அடைகிறது. பதிலுக்கு அவர்கள் மழையைக் கொடுக்கின்றனர். இப்படி பரஸ்பரம் உதவி நடக்கிறது.ஒரு சமயம், மனிதர்களுக்கு எவ்வித ஆசையும் இல்லாமல் இருந்தது. ஆசை இருந்தால் தானே அது நிறைவேற ஏதாவது செய்ய வேண்டும்! ஆசை இல்லாமையால் அவர்கள் எந்த யாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
தாய்லாந்தின், கஞ்சன்பாரி பகுதியில், "வாட்பா வாங்காதபா' என்ற புத்தர் கோவில் உள்ளது. இதை புலிக் கோவில் என்றும் சொல்கின்றனர்.கடந்த 1994ல் அமைக்கப்பட்ட இக்கோவிலில், பிரார்த்தனை நிமித்தம் ஒரு புலிக் குட்டி விடப்பட்டது. ஆனால், அது இறந்து போனது. அதன்பின், பலர் அன்பளிப்பாக புலிக்குட்டியை வழங்க ஆரம்பித்தனர். இன்று, இந்த கோவிலில் நூறு புலிகள் உள்ளன. கோவில் நிர்வாகமே லாவோஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
அமீர்கானுக்கு சம்பளம் 88கோடி ரூபாய்!சமீபகாலமாய் விளம்பர படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர், பாலிவுட் நடிகர் - நடிகைகள். குறிப்பாக, ஷாரூக் கான், சல்மான்கான், அமீர் கான், பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப், கஜோல் என விளம்பர ஆர்வலர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒரு கட்டுமான நிறுவனம், 10 கோடி ரூபாய்க்கு கரீனா கபூரையும், மிகப்பெரிய பிராண்டு நிறுவனம், ஒன்று 88 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
"என்டர் தி டிராகன்' படம் வெளிவந்து சக்கைக் போடு போட்ட போது, கராத்தே - குங்பூ போன்ற, தற்காப்புக்கலை பற்றி பரவலாக பேசப்பட்டது. அப்போது, இளைஞர்கள் பெருமளவில் தற்காப்பு வித்தையை கற்க முன் வந்தனர். "என்டர் தி டிராகன்' படத்தில், புரூஸ்லீ செய்த சண்டைக் காட்சிகளை கண்டு, அனைவரும் வியப்படைந்தனர். அவருக்கு, இந்த அற்புத வித்தைகள் கற்று கொடுத்த குரு யார் என்று, தேடிக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
வாழ்க்கை நாடகம்!* நாடகம் நடக்கிறதுஇயக்குனர் யாரென்று தெரியாமலே!* முகத்திற்கு முன்னேபணக்கட்டுகள்...பிடித்திட ஓடிக்கொண்டேஇருக்கிறேன்!* என் தோளின் மீதுஒருவன் அமர்ந்துஎன் முன்னே பணத்தைகட்டி தொங்கவிட்டுவேடிக்கை பார்க்கிறான்என்பதை அறியாமலே!* பொருளே பிரதானமானபொருளாதார உலகில்உறவுகளோ விலை பொருளாய்!* தகனம் கூட தனமில்லையேல்தாழ்வாரத்தில்உடல் அழுகும்!* சேர்த்து வைத்தபணம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது. இன்னும் நான்கு நாட்களில் மதிவதனிக்கு திருமணம்; உறவினர் வர தொடங்கினர். அனைவரும் சந்தோஷமாய் பேசி, சிரித்து, மணப்பெண்ணை கிண்டலடித்து என, நேரம் சென்று கொண்டிருந்தது. ஆனாலும், தன்னுடைய அம்மாவின் முகத்தில் கொஞ்சம் கூட சந்தோஷம் இல்லை என்பதை கவனித்த மதிவதனி, துணுக்குற்றாள். என்னவாக இருக்கும் என்று குழம்பியவள், அம்மாவிடமே கேட்டுவிடலாம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X