Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
பணம்... பணம்! இதற்காகவே பாடு படுகின்றனர் மக்கள். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, நகர்புறங்களுக்கு வந்து விடுகின்றனர் கிராமவாசிகள். எப்படியாவது பணம் சேர்த்து, குடும்பத்துக்கு கொடுத்து விட வேண்டும் என்று விரும்பு கின்றனர். இதற்காக, தன் உயிரை விடவும் தயாராகி விடுவதுண்டு. ஒருவர் விமானத்தில் பயணம் செய்கிறார்... "விமானம் விபத்துக்குள்ளானால், அது உங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
ஜூன் 30- கோவர்த்தன விரதம்!இயற்கை சீற்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் உலகம் அடைகிற நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. சமீபத்தில் தமிழகத்தையும் பூகம்பம் பயமுறுத்தி சென்று விட்டது. இதுவே சற்று அதிகமாக இருந்திருந்தால், நம் நிலையை சொல்லவே முடியாது! தெய்வ சிந்தனை குறைந்து போனது. அநியாயம் அதிகரித்தது கண்டு, பொறுமையின் சிகரமான பூமாதேவியே பொறுக்க மாட்டாமல், தன் வேதனையை வெளிப்படுத்தி விடுகிறாள். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
ஜிம்னாஸ்டிக் பெண்கள்!என் மனைவியின் தோழிக்கு, 43 வயதிருக்கும். நாலரை அடி உயரம் இருப்பார். அவருக்கு, தான் தொந்தியும், தொப்பையுமாய் இருக்கிறோம் என்கிற தாழ்வு மனப்பான்மை உண்டு. யாரோ ஐடியா கொடுக்க, அவர் தினம் இருவேளை, ஜிம்முக்கு போய் வந்திருக்கிறார். ஆறு மாதங்களுக்கு பின், அவரை நான் பார்க்க நேர்ந்தது. இரு கைகளும் கரளை கரளையாய், மார்பு பகுதி அகன்று பிரிந்து, சரத்குமார் போல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
பணமும், பதவியும் சொகுசை தரலாம். ஆனால், நிம்மதியை தர முடியாது என்பர். இது பற்றி யாரும் அதிகமாய் சிந்திப்பதில்லை. பட்டு மெத்தையில், "ஏசி'யில், விலை உயர்ந்த உடை, உடல் முழுக்க நகைகள், எதிரே எல்.இ.டி., "டிவி' கையருகே ருசியான உணவு வகைகள் மற்ற வஸ்துக்களுடன் படுக்கைக்கு போகலாம்.எல்லாமிருந்தும் தூக்கம் வரவில்லை... தூங்க முடியவில்லை என்றால், இவற்றால் என்ன பயன்? தரையில் படுப்பவன், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
அந்தப் பெண், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர், கல்லூரியில் பணியாற்றுகிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த போது, என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்து போன் செய்தார். வரச் சொன்னேன்.தன் தந்தையுடன் வந்தார். பரஸ்பர அறிமுகம், நல விசாரிப்புகளுக்குப் பின், தன் தந்தையிடம், "அப்பா... நான் கொஞ்சம் தனியாகப் பேசணும்... நீங்க வெளியே வெயிட் பண்றீங்களா?' எனக் கேட்கவும், "ஏதோ காதல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
** எல். ராஜி, திண்டுகல்: எண்ணங்கள் இருந்தும் எழுத முடிவதில்லையே... ஏன்?முயற்சி வேண்டும்... பேப்பர், பேனா எடுத்து, உங்களது எண்ணங்களை அதில் கொட்டுங்கள்; நல்ல பயிற்சி கிடைக்கும். எழுதியதை படிக்கும் போது, ஆரம்பத்தில், அபத்தமாக இருக்கும், கோர்வை இராது; முன்னுக்குப் பின் முரணாக இருக்கும்... கவலைப்படக் கூடாது... தொடர்ந்து எழுதுங்கள்... தேறி விடலாம்; வாழ்த்துக்கள்!****கே.பிரகாசம், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்களிலேயே, மிகவும் வயதான பெண் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜப்பானைச் சேர்ந்த தமேய் வடானபி.இவர் சிகரத்தின் உச்சியை தொட்ட போது, இவரது வயது 73 ஆண்டு, 180 நாட்களும்.சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவரான தமேய், சிறுவயது முதலே கடுமையான உழைப்பாளி.அதிகாலை எழுந்து, அப்பாவுடன் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும், ஆண்களுக்கு நிகரான வேலைகளை அசராமல் முடித்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
வரப்போகிறது ஜனாதிபதி தேர்தல், யாரை ஜனாதிபதி ஆக்குவது என்று, அகில இந்திய கட்சிகளுக்குள், "நீயா, நானா?'பெரு நகரங்களில், சில பெரும் புள்ளிகள், "ஜெயித்து விடுவோம் என்று தான் நம்பியிருந்தேன். கடைசியிலே கறுப்புப் பந்து போட்டு விட்டனர்...' என்று வருத்தப்படுவதை யாராவது கேட்டிருக்கலாம். காஸ்மாபாலிட்டன் கிளப், ரேஸ் கிளப் போன்ற சங்கத்தில், அவர் உறுப்பினராக முயன்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
சீனா, பழமையும், புதுமையும் கலந்த ஒரு இரும்புத் திரை நாடு. கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் மட்டுமல்லாமல், பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பெரு நகரங்களில் கூட, புராதன காலத்து வீடுகள் அதிகம் இருந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டி, பீஜிங் நகரத்தின் அடையாளத்தையே அடியோடு மாற்றி விட்டது."ஒலிம்பிக் போட்டிக்காக, <உலகம் முழுவதும் இருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
தங்கர்பச்சான் படத்தில் சாந்தனு!சில முன்னணி ஹீரோக்களிடம் பல ஆண்டுகளாக கால்ஷீட் கேட்டு வந்தார் தங்கர்பச்சான். ஆனால், ஒருவர் கூட அவர் படத்தில் நடிக்க முன் வரவில்லை. அதனால், "மார்க்கெட்டே இல்லாத ஒரு நடிகரை வைத்து படம் இயக்கி ஜெயித்துக் காட்டுவேன்...' என்று, "அம்மாவின் கைபேசி' என்ற தன் புதிய படத்துக்கு சாந்தனுவை, "புக்' செய்துள்ளார் தங்கர்பச்சான். இப்படத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
அதிகாலை 3.00 மணி.ஒருவரும் எழுந்திருக்கவில்லை. ஏன் கமலமும் எழுந்திருக்கவில்லை. அந்த வீதியே, இருளில் மூழ்கி இருந்தது. ஆனால், ராகவன் மட்டும் எழுந்து விட்டான்.கடிகாரம், மணி 3.00 என காட்டியது.அவசர அவசரமாய் கண்ணை துடைத்துக் கொண்டு, தன் மகனை எழுப்பினான்.""டேய்... ஸ்ரீதர் எழுந்திருடா. மணி மூணாகுது.''""இருங்கப்பா... இன்னும் கொஞ்ச நேரம். மூணு தானே ஆகுது,'' திரும்பிப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
சீனமக்கள் விரும்பி உண்ணும் இறைச்சி வகைகளில், பன்றி இறைச்சிக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தாண்டில் மட்டும், 15 லட்சம் டன் எடையுள்ள பன்றி இறைச்சியை இறக்குமதி செய்ய, சீன அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவில் தொழிற்சாலைகள் அதிகரித்து விட்டதால், பன்றிகளை வளர்ப்பதற்கு தகுந்த சூழல் இல்லை என்றும், அதனால் தான், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாகவும் பேச்சு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு—என் வயது 28. எனக்கு திருமணமாகி, எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு, ஒரு மகன் உள்ளான். என் தங்கைக்கு திருமணமாகி, நான்கு வருடமாகிறது. என் தங்கைக்கும், ஒரு மகன் உள்ளான். என் கணவர் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தினசரி வசூ<லுக்கு போயிருந்த சமயத்தில், என் மொபைல் எண்ணுக்கு என் தங்கை கணவர், வேறு யாரோ போல் பேசி, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.பணி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
"தபால்காரரே, எனக்கு ஏதாச்சும் கடுதாசி வந்திருக்கா...' என கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களில் கூட, ஒரு காலத்தில் தபால்காரரை எதிர்நோக்கிக் காத்திருந்து கேட்பதும், வீடுகள் தோறும் தபாலை போட்டு விட்டு, "சார் போஸ்ட்' என குரல் கொடுக்கும் தபால்காரரையும், தற்போது காண்பது அரிதாக உள்ளது.தற்போது, முதியோர்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகை மற்றும் மொபைல் போன் பில்களை மட்டுமே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
உலகின் மிகப் பெரிய பொதுக் கழிப்பறை, ஜப்பானின் இச்சிகாரா என்ற நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் மையப் பகுதியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் அருகே இக்கழிப்பறை உள்ளது. இதை, கழிப்பறை என ஒற்றை வார்த்தையில் கூறி விட முடியாது. 200 ச.மீ., பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கழிப்பறையைச் சுற்றி, ஒரு பூந்தோட்டமே உருவாக்கப்பட்டுள்ளது. அழகான மரங்கள், கண்ணை கவரும் பூக்கள் என, ஏராளமான பணத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
இதயத்திலிருந்தவனே!* நானுனைமறுத்தவள் தான்மறந்தவளல்ல...* சந்தர்ப்பங்கள்உன்னைசந்திக்க வைத்தது!* விருப்பமாகக்காதலானேன்...விதி வசத்தால்காயப்படுத்தினேன்!* மறக்காதிருக்கிறோம்...நானுன் ஞாபகங்களை,நீயென்துரோகங்களை...* காதற் தூண்டிலில்மீன் நீ...கல்யாணத் தூண்டிலில்நான்!* ஓராயிரம் இரவாய்நானழுகிறேன்...நீ அன்றழுதஓரழுகைக்காய்!* மன்னிப்பாயெனநான் கேட்க முடியாது... மாறிக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
மதியம் ஒரு மணிக்கு, தர்க்காவில் நமாசை முடித்து விட்டு, வெளியே வரும்போது, தூரத்தில் வந்த சுப்ரமணியத்தை பார்த்தார் காதர்பாய்."அது சுப்ரமணியம் சார் தானா...' என்று, காதர்பாய் தீர்மானிப்பதற்குள், அவர், டூ வீலரில், இவரை தாண்டிப் போக, காதர்பாய் அவசரமாய் தன் சைக்கிளை எடுத்து, பின் தொடர்ந்தார்; ஆனால், துரத்திப் பிடிக்க முடியவில்லை.சைக்கிளின் வேகத்தைக் குறைத்துக் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X