Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
ஜூலை 4 - கூர்ம ஜெயந்தி!புராண காலங்களில், அரக்கர்கள், தேவர்களுக்கு துன்பம் செய்தது போல, தற்காலத்தில் மதுவெனும் அரக்கன், குடும்பங்கள் பலவற்றை துவம்சம் செய்து கொண்டிருக்கிறான். குடிகாரர்களால் இளைய சமுதாயம் ரொம்பவே கெட்டுப் போகிறது. ஒரு குடிகாரத் தந்தை, தாயை காரணமின்றி அடிக்கும்போது, அதைப் பார்க்கும் பிஞ்சு நெஞ்சங்கள் வெந்து போகின்றன.பெருமாள் கூர்ம அவதாரம் எடுத்தது ஏன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
எண்களை தமிழில் சொல்ல தெரியுமா?பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம், தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப் பட்டிருந்தது. எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன். உடனே அப்பெண், "1 2 3 4 5 6 7 8 9 0 என்ற எண்ணுக்கு முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0' என்றாள். "இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?' ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
பகவானிடம் நமக்கு பயம், பக்தி, விசுவாசம் ஆகியவை இருக்க வேண்டும். ஆனால், இறைவனிடம் பயம் எதற்கு? அவன் தான் பயத்தை போக்குகிறவனாயிற்றே? அவனிடம் நமக்கு என்ன பயம்? இந்த பயம் என்ற சொல்லுக்கு அவனை கண்டு நடுநடுங்கி பயப்பட வேண்டும் என்பது பொருளல்ல! அவனுக்கு நாம் ஏதாவது அபசாரம் செய்து விட்டோமோ, செய்து விடுவோமோ என்று பயப்பட வேண்டும்.ஒரு குருவிடம், சீடன் பய பக்தியுடன் நடந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
கடந்த, 1984ல் வெளியான,"ஸ்பிளாஷ்' என்ற ஹாலிவுட் திரைப் படத்தை பார்த்திருக்கிறீர்களா? அந்த படத்தில் கடல் கன்னி வேடத்தில், பிரபல நடிகை டெர்லி ஹன்னா நடித்திருப்பார். இடுப்புவரை பெண்ணின் உருவமும், இடுப்புக்கு கீழே மீனின் உருவமும் கொண்டது தான் கடல் கன்னி. இப்படத்தை பார்த்து அசந்து போனவர்களில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, ஹன்னா பிரேசர் என்ற பெண்ணும் ஒருவர். அப்போது சிறுமியாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
ஆஸ்திரேலியாவில் குடியேறிவிட்ட நண்பர் ஒருவரை வரவேற்க விமான நிலையம் கிளம்பினோம் நானும், லென்ஸ் மாமாவும்!அவரை வரவேற்க ஏகப்பட்ட முன்னேற்பாடுகள் செய்திருந்தேன். தெரிந்த, அறிந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், குடியேற்ற அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளிடமெல்லாம் சொல்லி வைத்து இருந்தேன்.அசிஸ்டன்ட் கமிஷனரான அந்த கஸ்டம்ஸ் அதிகாரி நெருங்கிய நண்பர்... அவர், என் காதை கடித்தார்... "ஏம்ப்பா... ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
** ஆர்.ராமலிங்கம், கோவை: "விடா முயற்சி தேவை' என பலமாகக் கூறி வருகிறீர்களே... என்ன முயன்றும், அக்கலை கைவர வில்லை... யாரையாவது பார்த்துக் கற்றுக் கொள்ள முடியுமா?முடியுமே! பிச்சைக்காரர்களை கவனியுங் கள்..."சில்லரை இல்லை போ... போ...' என எவ்வளவு விரட்டினாலும், காசு வாங் காமல் போகிறார்களா?****வி.வேளாங்கன்னி, குமுளி: பெண்களைக் கவர, இந்த ஆண்கள் படும் பாடென்ன... கவர்ந்த பின், எங்களை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
உதவி இயக்குனர்களுக்கு சலுகை அறிவிப்பு!சமீபத்தில் நடந்து முடிந்த, தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று, தலைவரான இயக்குனர் விக்ரமன், உதவி இயக்குனர்களுக்கு, நிறைய சலுகைகளை அறிவித்துள்ளார். முதல் அறிவிப்பாக, அவர்களின் சம்பளத்தை உயர்த்தியவர், அவர்களுக்கென்று, "5டி' கேமரா ஒன்றை, இயக்குனர் சங்கம் சார்பில் வாங்கப் போகிறார். அந்த கேமராவைக் கொண்டு, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
மீசையை, வீரத்தின் அடையாளமாக கூறுவது உண்டு. ஆனால், இந்தி சினிமாக்களில், தாடி, மீசை இல்லாத மொழு, மொழு முக ஹீரோக்கள் வந்தபின், மீசைக்கு இருந்த மதிப்பு குறைந்து விட்டது. ஒரு சில போலீஸ்காரர்கள் தான் இப்போது, பெரிய அளவிலான மீசை வைத்திருக்கின்றனர். அதுவும், குற்றவாளிகளை பயமுறுத்துவதற்காக.ஆனால், ராஜஸ்தானை சேர்ந்த, 47 வயதான ராம்சிங் என்பவர், மீசையை, தன் உயிரை விட மேலாக கருதி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
வாஜ்பாய் பதவி ஏற்ற பின், எம்.எஸ்.சுப்பு லட்சுமியை பார்க்க அவரது வீட்டிற்கு வருவதாக தகவல் கிடைத்தது. ஏற்கனவே, எம்.எஸ்.,சின் வீடு படு சுத்தமாக இருக்கும். தரையை பார்த்து தலை வாரலாம்; அத்தனை சுத்தம்.இருப்பினும், மேலும் சுத்தம் செய்ய, வீட்டில் உள்ளவர்கள் பிசியாக இருந்தனர். இதில், வீட்டில் வேலை செய்வோரும் அடங்குவர். அப்பொழுது எம்.எஸ்.,சின் புது டிரைவரும், வீட்டை சுத்தம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
டி.ஆர்.சுந்தரத்தின் திடீர் மறைவிற்கு பின், ஸ்டுடியோ தொழிலாளர்கள் ஒன்று கூடி, அடுத்து என்ன செய்வது என்று விவாதித்தனர்.டி.ஆர்.சுந்தரம் உயிரோடு இருந்த போது, ஸ்டுடியோ எப்படி நடந்தது. இப்போது, எப்படி நடக்கிறது என்பதை ஒப்பிட்டு, பலர் பேசினர்.இந்த நிலை நீடிக்கக்கூடாது என்பதில், உறுதியாக இருந்த அவர்கள், ஒருமனதாக தீர்மானித்து, ஒரு கோரிக்கையை மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
""என்னப்பா முருகா... காணாம போன, உன் அண்ணன் நாகராஜனைப் பத்தி ஏதாவது தகவல் உண்டா,'' என்றபடி துருப்பிடித்துக் கிடந்த, இரும்பு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார் மாரப்ப நாயக்கர்.""இல்ல நாயக்கரே... ஒரு வருஷத்துக்கு முன், ஒரு கடுதாசி வந்ததோட சரி... பம்பாய் பக்கம், ஏதோ ஒரு டூரிஸ்ட் கம்பெனியில் வேல பாக்கறதா எழுதியிருந்தாரு. அப்புறம் ஆளையும் காணோம், கடுதாசியையும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
இயற்கை, எத்தனையோ அற்புதங்களை உள்ளடக்கியுள்ளது. சுவிட்சர்லாந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலைக்கு பெயர் பெற்ற நாடு. ஆனால், அங்கும் ஒரு சில இடங்களில், வென்னீர் ஊற்றுகள் உள்ளன. பேட்ராக்ஸ் என்ற இடத்தில், ஏராளமான வென்னீர் ஊற்றுகள் உள்ளன. பேட்ராக்ஸிலிருந்து, 45 நிமிட நேரத்தில் தமினா கார்ஜ்ஜை என்ற இடத்தை அடையலாம். இங்கு, 300 ஆண்டுகளாக ஸ்பாக்கள் இயங்குகின்றன. முதல் ஸ்பா...1700ம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
அன்புள்ள அக்கா —நான் மிகவும் அழகாக இருப்பேன். கல்லூரியில் படிக்கும்போதே எனக்கு திருமணமாகி விட்டது. சில வீணான வதந்திகள் காரணமாக, முதல் நாளிலிருந்து, என் கணவருக்கு என் மீது சந்தேகம். என்னுடன் பேசவே மாட்டார். இரண்டு வருடங்கள் என் அப்பா வீட்டிலேயே இருந்தேன். பின், ஒரு வழியாக சமரசம் பேசி கணவர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். வந்தபின் தான் தெரிந்தது அவருக்கும், அவரது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
ஜெர்மன் கப்பல் கட்டும் நிறுவனமான லழ்சன் யோட்டஸ், "அசம்' என்ற மிகப் பெரிய ஆடம்பர கப்பல் ஒன்றை, உருவாக்கி உள்ளது. அரபு மொழியில், "அசம்' என்றால், உறுதி என்று பொருள். இதன் தயாரிப்புக்கு, நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. இதில், ஒரு ஆண்டு வடிவமைப்புக்கு மட்டுமே தேவைப்பட்டது. 590 அடி நீளமும், 12 டபுள் டக்கர் பஸ்களின் உயரமும் உள்ள, இக்கப்பலை தயாரிக்க நாலாயிரம் கோடி ரூபாய் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
காதலோடு வாழ்வோம்!* ஒரு மலர் விட்டுமறு மலர் தாவும்பட்டாம் பூச்சியாய்பறப்பதுஎன்ன மனம்?* கள்ளூறும் மலராய்கன்னி நீ இருக்ககாகித மலரைச்சூடுவதில்ஏது மணம்?* கங்கை நதியாய்காதலி நீ இருக்ககானல் நீரைதேடுவதில்என்ன சுகம்?* உனக்கான பாடல்வடித்து இருக்கஊருக்காக அதைப்பாடுவதில்என்ன பயன்?* உன்னிடம் கொடுக்கஎழுதிய கவிதையைவேறு பெண்ணிடம்படிக்க எண்ணுவதுஎன்ன மனம்?* உன்னோடு வாழமுடியாமல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
சங்கரபாண்டியனைப் பார்க்க, அவர் நண்பர் வந்திருந்தார்.""வா சக்தி,'' என அவரை வரவேற்று, சோபாவில் அமரச் செய்த சங்கரபாண்டியன், மனைவி பத்மாவதியிடம் காபி போடச் சொல்லி, நண்பனின் அருகில் அமர்ந்தார்.""சொல்லு சக்தி. ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கே, என்ன விஷயம்? எல்லாம் சவுக்கியம் தானே?''""எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டிருக்குப்பா. என் பையனுக்கு பொண்ணு பாத்துட்டு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X