Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
நாம் பகவானை அடைய வேண்டுமானால், பல ஜென்மாக்களில், பகவானை வழிபட்டு பக்தி செய்திருக்க வேண்டும். ஒரே ஜென்மாவில் இது சாத்தியமில்லை. பகவான், மேல் தட்டில் நின்று கொண்டு, கைகளை நீட்டி, நம்மை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறான். நாம் தாம் ஒவ்வொரு படியாக ஏறி, அவனை அடைய வேண்டும். அப்படி ஏறி, கடைசி படிக்கு போய் விட்டால், அவன், தன் கைகளை நீட்டி, நம்மை அழைத்துக் கொள்வான். இது தான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
ஜூலை 3 - வியாச பூஜை!"வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே...' என்கிறது ஒரு ஸ்லோகம். வியாசர் தான் விஷ்ணு, விஷ்ணு தான் வியாசர் என்பது இதன் பொருள். தர்மத்தின் பெருமையை நிலைநாட்ட, விஷ்ணு, கிருஷ்ணராக பூமியில் அவதரித்தார். அவரே, வியாசராகவும் இருந்து, அந்தக் காவியத்தை திறம்பட எழுதினார்.வேதவியாசர் என்பது, ஒரு தனி நபரின் பெயரல்ல. ஒரு பதவியின் பெயர். பி.எம்., சி.எம்., ராஜா, ராணி என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
டைட்டோ டைட் ஜாக்கெட்!நான், ஒரு லேடீஸ் டெய்லர். பேஷன் என்கிற பெயரில், இந்த பெண்கள் அடிக்கிற கூத்திருக்கிறதே... சொல்லி மாளாது. சில பெண்கள் ஜாக்கெட் அளவு கொடுப்பர். கர்ணன் கவசக் குண்டலத்துடன் பிறந்த மாதிரி, இவர்களுக்கு ஜாக்கெட் உடம்போடு உடம்பாக ஒட்டியிருக்க வேண்டும். ஜாக்கெட் கழற்றும் போது, இவர்கள் படும்பாடு இருக்கிறதே... சொல்லி மாளது. பாம்பு, தோலை உரிப்பது போல் உரிப்பர். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
"பணமிருந்தால் போதும்... உலகில் எதையும், யாரையும் விலைக்கு வாங்கி விடலாம்! என்ன... ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விலை! இதைத் தான், "பணம் என்றாலும், பிணமும் வாயைப் பிளக்கும்' என்றனர்...' என்று பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார், "பீச்' நண்பர் ஒருவர்.அவர், ஒரு லாரி அதிபர்; 45 லாரிகளின் சொந்தக்காரர். சென்னை துறைமுகத்தில் வந்திறங்கும் சல்பரை, பல்வேறு இடங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
*ஆர்.புஷ்பராஜ், ஒட்டன்சத்திரம்: இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள், சிறிய ஜெட் விமானங்களை வாடகைக்கு விடுகின்றனவாமே... வாடகை எவ்வளவு இருக்கும்?ஒரு மணி நேரம் பறக்கும் செலவில் ஒரு, "நானோ' கார் வாங்கி விடலாம். அதாவது, ஆறு சீட் உள்ள குட்டி விமானத்தில் பயணிக்க, ஒரு மணி நேரத்திற்கு, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய். குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் வாடகைக்கு எடுக்க வேண்டும். இது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
அமெரிக்காவின் அரிஜோனாவைச் சேர்ந்த பெண் சுசன்னே இமான். வயது: 33. இவருக்கு ஒரு வித்தியாசமான, விபரீதமான ஆசை. உலகின் மிகப் பெரிய, "குண்டு மணப்பெண்' என்ற பெருமை, தனக்கு கிடைக்க வேண்டும் என்பது தான், அந்த ஆசை. அதற்காக, இப்போது அவர், மெல்லிடை கொண்ட பெண்ணாக இருப்பார் என, கற்பனை செய்து விட வேண்டாம். தற்போது அவரது <உடல் எடை, 245 கிலோ. திருமணத்தன்று, தன் எடையை, குறைந்தது, 310 கிலோ அளவுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
பர்கர்கிங், மேக்டொனால்ட், சப் என்று ரெஸ்டாரென்ட்களின் பெயர்கள் வேண்டுமானால் வெவ்வேறாய் இருக்கலாம். உணவு வகைகளும் விதவிதமாய் பெயரிடப்பட்டிருக்கலாம். சுற்றிவளைத்து எல்லாமே, "பன்.' பன்னுக்குள் பலவாறாக மடித்து, திணித்து அல்லது திணித்து, மடித்து - கொஞ்சம் சாலட், கொஞ்சம் சீஸ், மாட்டுக்கறி, பன்றிக்கறி... என ஒரே அமர்க்களம்!பிரேக்பாஸ்ட், லஞ்ச், டின்னர் எல்லாமே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
சீனாவின் செங்டு நகரத்தில், சமீபத்தில் ஒரு வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டது. போட்டி என்ன தெரியுமா? கார்களின் கண்ணாடி மீது, உள்ளங்கை போல் வரையப் பட்டுள்ள இடத்தில், போட்டியாளர்கள் தொடர்ச்சியாக, தங்கள் கையை வைத்திருக்க வேண்டும். யார், அதிக நேரம், கையை வைத்திருக்கின்றனரோ, அவர்களுக்கு பி.எம்.டபிள்யூ., கார், பரிசளிக்கப்படும். போட்டிக்கான விதிமுறைகள் கடுமையானவை. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர், மறைந்த க.ராசாராம் சொல்கிறார்: முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் என் நண்பர். பார்லிமென்ட்டில், ஒரே வரிசையில் அமர்ந்திருந்த காரணத்தால், அவருடன் எனக்கும் நட்பு வலுப்பெற்றது. இந்திய விடுதலைக்குப் பின், அரசியல் நிர்ணய சபையில், அவர் உறுப்பினராக இருந்த நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள், முஸ்லிம் சமுதாயத்திற்கு, வடமாநிலத்தினரால் இழைக்கப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
எதிர்பார்ப்பில், "தேன் கூடு' உலகத் தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம், "தேன்கூடு.' ஈழத்தமிழ் காதல் கதையில், இப்படம் உருவாகியிருந்தாலும், இதில் ஈழத் தமிழர்களின் கதையினையும் முழுசாக அலசியிருப்பதாக கூறுகின்றனர். இப் படத்தை சமீபத்தில், இயக்குனர் மணிரத்னம், ஒரு பிரத்யேக காட்சி பார்த்துள்ளார்.— சினிமா பொன்னையா.ஜி.வி.பிரகாஷ் இந்திப்பட வேட்டை!தற்போது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
""யாரு, யாருக்குடா அண்ணன்... போடா வெளில... இனிமேல் இதுமாதிரி அண்ணன், தம்பின்னு உறவு சொல்லிக்கிட்டு இங்கே வந்தே, நடக்கறதே வேற. வெளில போ...'' என்று, கோபமான குரலில் கத்தினான் அசோகன்.இவ்வளவு மோசமான எதிர்ப்பை எதிர்பார்த்திராத கணேஷ், வெல வெலத்துப் போனான்."போனதும் சிறிது எதிர்ப்பு இருக்கும். பிறகு சரியாகிப் போய் விடும்...' என்று எண்ணித்தான், புறப்பட்டு வந்தான் கணேஷ்.ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
அன்புள்ள அம்மா — கல்யாணமாகி, 10 வருடமாக ஒல்லியாக இருக்கும் ஒரு பெண், போதுமான அளவு தாம்பத்ய உறவு இல்லாததால் தான், குண்டாகி விடுகிறாள் என்று டாக்டர் சொல்கிறார்; இது சரியா?இனி, என் குடும்ப விஷயம்: என் வயது 35. என் கணவர் வயது 40. 15 வயதில் ஒரு பெண் குழந்தை. இருவர் குடும்பமும், மிக ஆச்சாரமான குடும்பம் தான். என் கணவர், வைதீகம். நாலாயிரம்திவ்ய பிரபந்தத்தை கரைத்து குடித்தவர். கோவில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
அரச குடும்பத் தினர்கள் மட்டுமே அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட பாரீசின் மயானத்திற்குள், முதல் முறையாக, 1937ல், சாதாரண குடும்பத்தை சேர்ந்த, 27 வயது பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்ய இடம் ஒதுக்கியதற்கான காரணம், இறந்த பெண்ணிற்கு இருந்த புகழும், அவர் மேற்கொண்டிருந்த தியாக வாழ்க்கையும்தான். அவரது இறுதி யாத்திரையின் போது வந்த கூட்டம், இதுவரை அங்கு அடக்கம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில புதுமை விரும்பி விஞ்ஞானிகள், போதை தரும் ஒயினில் தயாரான உடையை வடிவமைத்துள்ளனர். பெரிய கொப்பரையில், போதை தரும் ஒயினை ஊற்றி, அதில், "அசேடாபாக்டர்' என்ற பாக்டீரியாவை கலக்கின்றனர். இதையடுத்து, அந்த ஒயின், நுரை ததும்பிய கெட்டியான திரவமாக மாறி விடுகிறது. இந்த திரவத்தை மேலும் பக்குவப்படுத்தி, மேலும், சில ரசாயனப் பொருட்களை சேர்த்து, மென்மையான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
காதலே!* சல்லடையாய் தேடிசலித்து விட்டேன்கண்ணுக்கெட்டும் தூரம்வரை காணவில்லை...* பேருந்தில்தயங்கித் தயங்கிபேசுவார்களே...* நிழற்குடையின் கீழ்கால் வலிக்கநிற்பார்களே...* செடிகளுக்குள்தங்களைமறைத்து கொள்வார்களே...* பூங்காப் புல்வெளியில் அமர்ந்தபடிஅரட்டையடிப்பார்களே...* உருகி உருகிகாதலித்தவர் எல்லாம்எங்கே போனார்கள்?* ஓ! யாருக்கும்காத்திருக்க நேரமில்லை.காக்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
உங்கள் வீட்டில், படிக்கும் பிள்ளைகள் இருந்தால், அவர்கள் மூலம் அதிகபட்சம் இரண்டு ரப்பர்கள் தேடி எடுக்கலாம், பழசை தூக்கி எறியாதவர்களாக இருந்தால், கூடுதலாக நான்கு ரப்பர்கள் கிடைக்கலாம். ஆனால், சென்னையைச் சேர்ந்த, ஆசியமரிலியா, மூவாயிரத்து ஐநூறு ரப்பர்களை சேகரித்து வைத்துள்ளார். இதில், ஒரு ரப்பர் போல இன்னோரு ரப்பர் இல்லை என்பதுதான் விசேஷம். இப்போது பல் டாக்டராக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினான் ராஜேந்திரன். வந்ததும் வராததுமாய், ""கனகா... கனகா... காபி கொண்டா...'' என்று சொல்லிவிட்டு, பாத்ரூம் சென்றான். முகம் கழுவி, வேறு உடை மாற்றியவன் கூடத்தில் வந்து அமர்ந்தான்.எப்போதும் அலுவலகத்தில், வேலை வேலை என்று இருக்கும் ராஜேந்திரன், இன்று சீக்கிரமாக வந்து இருப்பது கண்டு அதிசயமாய் பார்த்தாள் கனகா.""இந்தாங்க...'' காபி டம்ளரை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X