Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
பொறுப்பான மாணவி!உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். நான் அங்கு சென்றபோது, உறவினரின் மகள், புதிதாக தைக்கப்பட்ட சட்டைகளுக்கு, காஜா எடுத்து, பட்டன் கட்டிக் கொண்டிருந்தாள்.அதை கவனித்த நான், அவளிடம், 'என்னம்மா... இந்த ஆண்டு, நீ பதினோராம் வகுப்பு தானே... ஸ்கூலுக்கு போறீல்ல...' எனக் கேட்டேன்.அதற்கு அவள், 'ம்... போறேன் மாமா... ஸ்கூலுக்கு போயிட்டு வந்து, வீட்டுப் பாடமெல்லாம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
ஊட்டியில் நடந்த படப்பிடிப்பின் போது, விபத்து ஏற்பட்டு, கை ஒடிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் மனோரமா. இந்நிலையில், தேவர் பிலிம்ஸில் உள்ளவர்களுக்கு அந்த படத்தை முடிக்க வேண்டும் என்ற நெருக்கடி. பேசாமல் மனோரமாவை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க செய்து, படத்தை முடித்து விடலாம் என்ற யோசனையை அங்குள்ள பலரும் முன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
அந்த நண்பர், டாக்டருக்கு படித்தவர்; ஆனால், பிராக்டீஸ் செய்யாதவர்... கர்நாடக மாநிலம் மணிப்பாலில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் லட்சம், லட்சமாக செலவு செய்து படித்தவர். குடும்பத் தொழில் கோடிகளில் கொட்டிக் கொண்டிருக்க, அதை கவனிக்க ஆளில்லை என்று டாக்டர் தொழிலை விட்டவர்.நண்பர்களைக் காணும் ஆர்வம் அவருக்கு அவ்வப்போது ஏற்பட்டு விடும்; அதுவும், இரவு, 10:00 மணிக்கு மேல் நண்பர்களை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
ஆர்.நவீன், சிதம்பரம்: அந்துமணியார், 'வாட்ச்' கட்டுவதில்லையே... ஏன்?'ஓ.சி'யில் கிடைத்த, 'சிட்டிசன்' வாட்ச் ஒன்று, சிறுவயதில் இரண்டு நாள் கட்டிப் பார்த்தேன். ஏதோ அன்னியப் பொருள் இடது கையை உறுத்திக் கொண்டே இருப்பது போன்ற தர்மசங்கட உணர்வு, அந்த இரண்டு நாட்களும் இருந்ததால் தொடர்வதில்லை! கடிகாரம் இல்லாமலேயே கிட்டதட்ட சரியான நேரத்தை உள்ளுணர்வு சொல்லிவிடும் எனக்கு! ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
அதிகாலை ஐந்து மணி- முகத்தைக் கழுவி, துடைத்த துண்டை தோளில் போட்டபடி, பழைய சைக்கிளை வெளியே எடுத்தான் ரத்தினம். கட்டடம் கட்டும் மேஸ்திரி அவன். சத்தம் கேட்டு விழித்துக்கொண்டாள், அழகேஸ்வரி.''யோவ்... நாழி வளத்தாம சீக்கிரம் போயிட்டு வா... வேல நிறைய கிடக்கு,'' பதிலுக்குத் தலையை அசைத்தபடி மெதுவாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். 10 நிமிடத்தில் மெயின் ரோட்டிலிருக்கும் அரச ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
22 வருடங்களுக்கு பின், பிரபு - மோகன்லால்!கடந்த, 1996ல், பிரியதர்ஷன் இயக்கிய, காலா பாணி என்ற மலையாள படத்தில், பிரபு மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த படம் தான் தமிழில், சிறைச்சாலை என்ற பெயரில் வெளியானது. அதையடுத்து தற்போது, பிரியதர்ஷன் இயக்கும், மரக்கார் அரபி கடலின்டே சிம்ஹம் என்ற மலையாள சரித்திர படத்தில், 22 ஆண்டுக்கு பின் மீண்டும் பிரபு, மோகன்லால் இணைந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
புகழ் - இதை  விரும்பாதவர்களே இல்லை. அதேசமயம், நம் காது பட அடுத்தவர்களை புகழ்ந்து விட்டால், அந்த புகழ்ச்சி, நமக்கு பிடிக்காமல் போய் விடுகிறது. இப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒன்று தேவலோகத்தில் நடந்தது. விளைவு?இந்திர சபை. இந்திரன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, தேவர்கள் பலரும் அவரவர் ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். அப்போது, இந்திரன், பூவுலகில் உள்ள அரசர்களில் ஒருவரை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
'சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து: கவியரசர் கண்ணதாசனுக்கு, ஒரு விழா எடுத்தனர். அதற்கு, காமராஜர் வந்து சிறப்பித்தார். அப்போது, காமராஜர் காலை தொட்டு வணங்கினார் கண்ணதாசன். அதைப் பார்த்த ஒரு சிலர், காலில் விழுந்ததை தவறு என, பேசினர். அதற்கு கண்ணதாசன், 'காமராஜரின் கால்கள், தேசத்துக்காக, சத்தியாகிரகம் செய்யப் போன கால்கள். சிறைச் சாலையில் பல்லாண்டு உலாவிய கால்கள், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
அன்பு சகோதரிக்கு —நான், 55 வயது பெண்மணி. என் கணவர் இறந்து விட்டார். எனக்கு ஒரே மகன். கல்லுாரியில் படித்து, சொந்தமாக கம்ப்யூட்டர் சென்டர் வைத்துள்ளான். கல்லுாரியில் படிக்கும் போது, ஒரு பெண், என் மகனுடன் நட்புடன் பழகி வந்தாள். வீட்டுக்கும் அடிக்கடி வருவாள். ஏதாவது விசேஷ தினம் வந்தால், என் வீட்டுக்கு வந்து விடுவாள். அவளுக்கு அம்மா மட்டும் தான். திருமணமான ஒரு அக்கா, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
நாற்பது ஆண்டுகளாக, பத்திரிகை உலகில், ஓவியராக வலம் வரும் ஓவியர் அரஸ், தான் கற்ற வித்தை அனைத்தையும், கற்றுத்தரும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் கொண்டவர், திருநாவுக்கரசு என்ற அரஸ். பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது, ஒரு மாலை பத்திரிகையில் வந்த, 'ஓவியர் தேவை' விளம்பரத்தை பார்த்து, வேலை கேட்டுச் சென்றார்.இவரைப் போல நிறைய பேர் வேலை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
பெண்ணின் பெருந்துயர்!உறக்கத்தில் ஆழ்ந்திருந்தயசோதரையை தவிக்க விட்டுநள்ளிரவில் ஓடிஞானம் பெற்றான் புத்தன்!எவரோ சொன்ன அவச்சொல்லுக்காய்சீதையை நெருப்பில் இறக்கிதன்னைதுாய்மைப்படுத்திக் கொண்டான் ராமன்!இந்திரனின் பொய் கூவலுக்கு ஏமாந்துநடு இரவில் குளிக்கப்போன கவுதம முனிஅகலிகையை கல்லாய் சபித்துகவுரவம் காத்துக் கொண்டான்!தனித்து இயங்கிதன்னை விடவும்உயர்ந்து விடக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
நுாறு டிகிரி வெயிலிலும், 100 வயதை நெருங்கும் நம் மூதாதையர்கள், இன்றும் கடின வேலை பார்த்தபடி தெம்பாக தான் இருக்கின்றனர். ஆனால், இக்காலதலைமுறையினர் சிறிது துாரம் வெயிலில் சென்று வந்தாலே சோர்ந்து விடுகின்றனர். இதற்கு காரணம், மாறி வரும் நம் உணவு முறை.வெயில் காலத்தில், சமய சஞ்சீவினியாக முன்னோர் நமக்கு காட்டிவிட்டு போன ஒரு மகத்தான உணவு தான் பழைய சோறு. இதை, நேயன், பழங்கஞ்சி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
எல்லா உயிர்களிலும் தெய்வம் இருக்கிறது என்றனர் நம் முன்னோர். இதன் அடிப்படையில் பாம்புகளுக்கும், பல்லிகளுக்கும் கூட கோவில்களில் சன்னிதி அமைத்துள்ளனர். காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள ஒரு உத்தரத்தில் பல்லிகளுக்கு சிற்பம் உள்ளது. தங்கம், வெள்ளி கவசம் பொறித்த இந்த பல்லிகளைத் தரிசித்தால், பாவம் நீங்கும் என்பது ஐதீகம்.சரஸ்வதியின் துணை இல்லாமல் யாகம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
டீச்சர் ஜெயந்தி, நீல நிற காட்டன் புடவையில் வேலைக்கு கிளம்பினாள். அவள் பதவி உயர்வால், முதுகலை ஆசிரியராக பணியாற்றுவதால், முதல் முறையாக பிளஸ் 2 கணக்குப் பாட தேர்வு தாள்களை திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்டிருந்தாள்.அந்த சென்டரை அடைந்ததும், முதலில் மீட்டிங் என கூறி, நிறைய அறிவுரைகள் தரப்பட்டன. ஜெயந்தியும், கவனமாக கேட்டுக் கொண்டாள். அருகில் உள்ள சக ஆசிரியை, ''திருத்தறது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
பிரிட்டன் நாட்டு பெண்களிடம், ஒரு விசித்திரமான நடைமுறை உண்டு. அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், எந்த மாதிரி தோற்றமளிக்கின்றனரோ, அதேபோல், தாங்களும் தோன்ற வேண்டும் என, விரும்புவர். மறைந்த இளவரசி டயானாவின் ஸ்டைலை, ஏராளமான பெண்கள் பின்பற்றினர்.இப்போது, இளவரசர் ஹாரியின் மனைவியும், ஹாலிவுட் நடிகையுமான, மெகன் மார்க்கெல் அணியும் உடைகள், அவரது ஹேர்ஸ்டைல், வளையல் மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
கடந்த, 2017ல், சீனாவில், 67வது உலக அழகிப் போட்டி நடைபெற்றதும், நம் இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர், உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்த விஷயம் தான்!மனுஷி சில்லர் ஏற்கனவே, 'மிஸ் இந்தியா' பட்டத்தை வென்றவர் என்றாலும், உலக அழகி பட்டம் இவருக்கு கிடைத்ததற்கு, இறுதிச் சுற்றில், இவர் கூறிய பதில் தான் காரணமாம்.'உலகிலேயே அதிக சம்பளம் வழங்கப்படும் பணி எது...' என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
படத்தில் இருக்கும் இக்குழந்தையை, பணத்துக்காக, அதன் தாயிடமிருந்து ஐந்து மாதங்கள் பிரித்து வைத்த கொடுமை காபான் நாட்டில் நடந்துள்ளது.மத்திய ஆப்ரிக்காவில் உள்ள நாடு, காபான். இந்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சோனியா ஓகோம் என்ற பெண்ணுக்கு, குழந்தை பிறந்தது. குழந்தை பலவீனமாக இருந்ததால், 35 நாட்கள் இன்குபேட்டரில் வைத்திருந்து, பின், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
மோனலிசா ஓவியத்தை அனைவரும் பார்த்திருப்போம்... ஆனால், நிர்வாண நிலையில் இருக்கும் மோனலிசா ஓவியத்தை பார்த்திருக்கிறீர்களா...பாரிஸ் நகரத்தில் உள்ள, 'லோவ்ரீ' என்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியம், கரியால் வரையப் பட்டுள்ளது.இது, மோனலிசா ஓவியமாக இருக்கக் கூடும் என்று கருதும், பிரான்ஸ் நாட்டு ஓவிய வல்லுநர்கள்,'உயர் தரமுள்ள இந்த ஓவியம், டாவின்சியின் காலமான, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X