Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
பெண் பார்க்க போகிறீர்களா...ஓர் ஆண்டுக்கு முன், என் நண்பனுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. திருமணத்திற்கு முதல் நாள் இரவு, தன் காதலனுடன், ஊரை விட்டு ஓடி விட்டாள் மணமகள். திருமணம் நின்று போன விரக்தியில், நொந்து நூலாகி, இன்று வரை, பெண் பார்க்க மறுத்து வருகிறான், நண்பன்.ஓடிப்போன அப்பெண்ணை, சமீபத்தில், ஒரு பொது இடத்தில், தற்செயலாக பார்த்துள்ளான், நண்பன். தனியாக வந்திருந்த அவளிடம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.பீம்சிங் தயாரித்த, பதிபக்தி படத்தின் கடைசி காட்சி ஒரு மலைக்குன்றின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
வானொலியில், முன்பு, 'இன்று ஒரு தகவல்' என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பானதைக் கேட்டிருப்பீர்கள்; வானொலியின் பயனுள்ள நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று!இந்நிகழ்ச்சி போன்று, எனக்கு மட்டும், 'இன்று ஒரு தகவல்' தந்தபடி இருந்தார், ஒரு பெண். அவர் யார் என்று இதுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.என், 'லேண்ட் லைன்' தொலைபேசியில் ரெக்கார்டிங் வசதி உண்டு. நான் இல்லாத நேரத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
ஆர்.ஜெயக்குமார், மணப்பாறை: எது, எதற்கு பொறுமை தேவை?வெற்றி கனிகளை பறிக்க, நல்ல முடிவுகளை பெற, சாதனைகளை படைக்க பொறுமை தேவை. 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்று கேள்விப்பட்டதில்லையா?கே.எல்.ரஞ்சித்குமார், சென்னை: இன்றைய வேலையை இன்றே முடிக்காமல், நாளைக்கு தள்ளிப் போடுகின்றனரே சிலர்...அந்த சிலர், ஒரு நாளும், ஒரு வேலையையும் முடிக்க மாட்டார்கள். முடிவெடுக்கத் தெரியாத, முடியாத, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
இந்த தலைப்பை பார்த்ததும், 'நீங்கள் என்ன மருத்துவரா அல்லது மருத்துவர்களுக்கு எதிராக வெளிவந்த, ரமணா படக் குழுவை சேர்ந்தவரா...' என்று, என்னைப் பற்றி உங்களுக்குள் ஒரு கேள்வி எழும்; நியாயம்!ஆனால், கண்ணெதிரே நடக்கும் சில சம்பவங்களை பார்க்கும் போது, சில நேரங்களில், மருத்துவ கத்திகளே, தீங்கிழைக்கும் கத்திகளாக ஆகிப் போகின்றன என்பதை, நன்கு உணர முடிகிறது.கஷ்டப்படும் என் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
சேலம் வேலுச்சாமி, தன் கட்டுரையில் எழுதியது: சென்ற நூற்றாண்டு கவிஞர்கள் மற்றும் அவர்கள் படைப்புகளிடம் எனக்கு பற்று அதிகம். பாவேந்தர் பாரதிதாசனின், 'இன்ப இரவு' நாடகம், சேலத்தில் நடைபெற்ற நேரம் அது! ஒருநாள், மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார், பாரதிதாசன். 'என் கவிதைகளை படித்திருக்கிறாயா?' என்று என்னிடம் கேட்டார். நான், அவர் கவிதைகளை கண்ணால் கூட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை... பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை... இரண்டல்லோ... இரண்டும் ஒன்றல்லோ... என, இரட்டை கிளவியையும், இரட்டை சகோதரர்களையும் ஒப்பிட்டு, வைரமுத்து எழுதிய பாடல் வரிகள், குண்டடத்தில் உள்ள, இரட்டை சகோதர்களின் வாழ்வில் ஒன்றிப்போகிறது.சமீபத்தில், அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங் ரேங்கிங் பட்டியல் வெளியானது; அதில், திருப்பூர் மாவட்டம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
அஜித் - விஜய் பாடல்களை விமர்சித்த கங்கை அமரன்!கரகாட்டக்காரன் உட்பட பல படங்களை இயக்கியவர், கங்கை அமரன். இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என, இவருக்கு பல முகம் உண்டு. தற்போது, தணிக்கை குழு அதிகாரியாக இருக்கும் கங்கை அமரன், அஜித்தின், வேதாளம் படத்தில் இடம் பெற்ற, 'ஆளுமா டோலுமா...' மற்றும் விஜயின், தெறி படத்தில் இடம் பெற்ற, 'ஜித்து ஜில்லாடி...' போன்ற பாடல்களை, கடுமையாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
அகங்காரம் கொண்ட பக்தியை விட, அன்புள்ளம் கொண்ட எளியவர்களின் பக்திக்கே இறைவன், இரங்கி அருள்வான்.குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், உபன்யாசம் செய்து கொண்டிருந்தார், அக்கோவில் அர்ச்சகர். அதை, ஏராளமானோர் கேட்டபடி இருக்க, சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்த பூந்தானம் என்ற பக்தர், அதைக் கேட்டு, அப்படியே மெய் மறந்து நின்றார். நிகழ்ச்சி முடிந்து வெளி வந்த அர்ச்சகர், பூந்தானத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
அன்புமிக்க சகோதரிக்கு —என் வயது, 70; சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். இளம் வயதில், வறுமையை உணர்ந்து, சுய முயற்சியால், முதுகலைப் பட்டம் பெற்று, அரசுப் பணியாற்றி, ஓய்வூதியராக இருக்கிறேன். எனக்கு அமைந்த மனைவி சிக்கனமும், நிர்வாக திறனும் பெற்றவள் என்பதால், சொந்த வீடு, நிலம் என அனைத்தும் பெற்று, பிறர் மதிக்கும் அளவுக்கு வாழ்ந்து வருகிறோம்.எனக்கு மூன்று பெண்கள்; ஒரு ஆண். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
ஜூலை, 10 ஆனி திருமஞ்சனம்சிவனின் அம்சமான நடராஜருக்கு, ஒரு ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மார்கழி, திருவாதிரை நட்சத்திரம், ஆனி மாத உத்திர நட்சத்திரம் ஆகிய நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடைபெறும். இதில், ஆனி உத்திர நாளில் நடக்கும் அபிஷேகத்தை, 'ஆனி திருமஞ்சனம்' என்பர். சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம் மற்றும் ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாத ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
''என் குடும்பம் உருப்படும்ன்னு எனக்கிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடுச்சு...'' என்று தன் வருத்தத்தை, வார்த்தைகளாக்கி கொட்டினார், கோசல்ராம்; ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவரான கோசல்ராமிற்கு, 70 வயது. இந்த வயதிற்கான சோர்வைக் காட்டிலும், தன் குடும்பத்தின் எதிர்காலம் குறித்த கவலையால் உண்டான சோர்வு தான் அவருக்கு அதிகம்.வீடு, அவருக்கு உலைக்கலனாக இருந்தது; ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
ஆடி அடங்கும் ஆன்மிகமடா!எல்.ஆர்.ஈஸ்வரி,'செல்லாத்தா' பாடாமல்எந்த அம்மனுக்கும் கிடைப்பதில்லைஆடிக் கூழ்!கறுப்புப் பணக்காரர்களின்கறை கழுவும் கரங்களால்களை கட்டுகிறதுஅன்னதானம்!ஊரைச் சுற்றி, மிரட்டி வசூலித்த,'ப்ளக்ஸ்' போர்டுகளில்அம்மனை விடஉயரமாய் உபயதாரர்கள்!ஆத்தாளை அலங்கரித்துவாசலில் வைத்துகலை நிகழ்ச்சியாகஅரை குறை அழகிகளின்மல... மல... மருதமல!நோயாளிகளையும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதுமையான யுக்திகளை கையாளுகிறது.சமையல், குளியல் அறை மற்றும் கழிப்பறையில் உள்ள பொருட்கள், மின் சாதனங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு முன், அந்த பொருட்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை, வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும்.குறிப்பாக, குளியல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்; இது, அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர விசுவாசிகள் செய்யும் சேட்டைக்கு, அளவு இல்லாமல் போய் விட்டது.ரஷ்யாவின், சிபிரியா மாகாணத்தில் உள்ள கிரஸ்னோயார்க்ஸ் என்ற நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், ரஷ்ய அதிபரின் தீவிர விசுவாசி. புடினை பெருமைப்படுத்தும் வகையில், அந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
முருங்கைக்காய் போன்றே, முருங்கை கீரையிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. வாரத்தில் இரு முறையாவது இதை உணவில் சேர்த்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் வலுப்பெறும். மேலும், உடல் சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை மற்றும் கண் நோய் போன்றவற்றை நீக்கும்; ரத்தம் சுத்தமாகும். முருங்கை கீரையில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், உடல் மெலிந்து இருப்போர், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X