Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
கண்ணை மறைத்த பூ ஆசை!என் உறவினர் பெண்மணி ஒருவர், பூக்கள் மீது, பைத்தியமாக இருப்பார். ஒரு நாள் கூட, கொண்டையில் பூ இல்லாமல் இருக்க மாட்டார். 'காஞ்ச பூவாச்சும் என் கொண்டையில் இருக்கணும்...' என, பீற்றிக் கொள்வார். மகனுக்கு திருமணம் முடிந்து, மருமகள் வந்த பின்பும், அவரது இந்தக் குணம் மாறவில்லை.இந்நிலையில், நோய்வாய்ப்பட்டிருந்த அவரது கணவர் திடீரென இறக்க, பூ வைக்க முடியாமல், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
கடந்த, 1955ல், சவுபாக்கியவதி என்ற படத்தை கே.எம்.நாகண்ணா தயாரிக்க, நாவலாசிரியர் ஜம்பா சந்திரசேகர ராவ் இயக்கத்தில் ஜெமினியின் ஜோடியாக நடித்திருந்தார், சாவித்திரி. உரையாடல், ஏ.எல்.நாராயணன்; அவருக்கு உதவியாக ஆரூர்தாஸ் இருந்தார்.அப்போது மிகவும் பிரபலமாகியிருந்த எழுத்தாளர் நாராயணன், சவுபாக்கியவதி படப்பிடிப்பிற்கு சரியாக வர முடியாதபடி, பல படங்களுக்கு எழுதி வந்தார். இதனால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
அன்று, லென்ஸ் மாமா ஊரில் இல்லை; மாலை நேரம் கடற்கரை செல்ல, 'கம்பெனி' இல்லாததால், மேற்கு மாம்பலம் செல்ல பஸ் ஏறினேன். அங்கே உள்ள ஒரு மடத்தில், கற்றுத் தேர்ந்த பலர், தினமும் உபன்யாசங்கள் செய்கின்றனர்.குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்தில் இறங்கி, இரண்டு ரூபாய்க்கு கடலை வாங்கி கொறித்தபடியே உபன்யாச மண்டபத்தை அடைந்தேன்.அங்கே, பெரியவர் ஒருவர் கதை சொல்லியபடி இருந்தார். எக்கச்சக்கமான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
ச.மரியஅருள்தாஸ், திண்டிவனம்: தற்பெருமை ஒரு மனிதனிடம் எப்போது உண்டாகிறது?நிறைகுடமாக இல்லாதவன், தற்பெருமைக்காரனாக இருப்பான். இது, அவன் மடையனானதற்கு அடுத்த நாள், அழிவிற்கு முந்தைய நாளில் உண்டாகிறது! கா.வரலட்சுமி, வேடசந்தூர்: என் தோழி ஒருத்தி எப்போதும், 'லொட லொட'வென பேசுகிறாளே...இப்படி லொட லொடக்கும் நாக்கு, எப்போதும் சிக்கலில் கொண்டு போய் சேர்த்து விடும். கால, பலம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
பந்த பாசங்களை, வேஷங்கள், மோசங்கள் என்போர் கவனிக்க!பந்தம் என்றால், உறவு; ஆனால், அது, ஒற்றைச் சொல் அல்ல. சொல்லும் போதே பாசம் என்பதையும் சேர்த்து, பந்த பாசம் என்று சொல்வதே மரபு!உறவு என்பதே பாசத்துடன் இணைந்த ஒன்று தான். என் உடன்பிறந்தோரில் அக்கா, தம்பி, தங்கை உண்டு; அண்ணன் இல்லை. இதனால், 'அண்ணன் இல்லையே...' என்ற ஏக்கமும், 'நமக்கு அண்ணன் என்கிற கொடுப்பினை இல்லையே...' என்றும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
'தினமல்லிகை' பத்திரிகை அலுவலகம் -வாகன நிறுத்துமிடத்தில், தன் பழைய மொபெட்டை நிறுத்தி, ஸ்டாண்டிட்டு, பின் சக்கரத்தில் செயின் கோர்த்து பூட்டிய சீனிவாசனுக்கு, வயது, 30; உயரம், 5 அடி; தலைக்கேசத்தை, 'சம்மர் கிராப்' செய்து, நடிகர் சுருளிராஜன் போன்று மீசை வைத்திருந்தான். கிராமியக் கண்கள்; நீலநிற சட்டையும், அதே நிற கால்சட்டையுமாக சீருடை அணிந்திருந்தான்.சட்டைப் பையில், ஹைதர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
ஐ.நா., சபையில், ஏ.ஆர்.ரஹ்மான்!கர்நாடக இசையை, உலகம் முழுக்க பரப்பியவர்களில், குறிப்பிடத்தக்கவர், எம்.எஸ்.சுப்புலட்சுமி; இவர், ஐ.நா., சபையிலும் பாடியவர். இந்நிலையில், அவரது, 100வது பிறந்தநாள் விழா, ஆகஸ்ட் மாதம், 15ம் தேதி ஐ.நா., சபையில், கொண்டாடப்பட இருக்கிறது. இவ்விழாவில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதில், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்களே, முழுக்க முழுக்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
காலத்தை வென்றவர்கள், சித்தர்கள். காய சித்தி கண்ட இத்தகைய சித்தர்களில் ஒருவர், ஓர் வீட்டு வாசலில், பிட்சை கேட்டு நின்றிருந்தார். வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த பெண், 'மன்னியுங்கள் சுவாமி... கீரை மசியல் தயாராகிறது; சிறிது நேரத்தில் சமையல் வேலை முடிந்து விடும். தாங்கள் எங்கள் இல்லத்தில் உண்டு, எங்களுக்கு ஆசி கூறி, அருள வேண்டும்...' என, வேண்டினாள்.ஒப்புதலாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
ஆரம்பம்!* ஆசிரியர் அடித்தால்மனம் உடைந்துவிஷம் குடிக்கிறான்ஒரு மாணவன்...* கல்லூரி போகுமுன்னேகாதல் வலையில் வீழ்ந்துதூக்குக் கயிற்றைதேடுகிறாள் ஒரு மாணவி!* கள்ளக்காதல் வெளியில்தெரிந்தவுடன் மானம் காக்ககடலில் குதிக்கிறதுஒரு ஜோடி!* மேலதிகாரி கொடுமையைஎதிர்க்கத் துணிவின்றிரயில் முன் பாய்ந்துஉயிரை விடுகிறார்ஒரு நேர்மையான அதிகாரி!* கட்சித் தலைவர்களுக்குதண்டனை என்றால் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
ஜூலை, 20, வியாசர் பூஜைவியாசர் என்றதும், நம் நினைவுக்கு வருவது, மகாபாரதம். இந்நூலை இயற்றியவரின் பெயரே வியாசர் என, நம்மில் பலர் எண்ணுகிறோம். அது பெயரல்ல; பதவி. வியாசரின் இயற்பெயர், கிருஷ்ணதுவைபாயனர்; இதற்கு, இருண்ட தீவில் பிறந்தவர் என்று பொருள். 'கிருஷ்ண' என்றால் கறுப்பு; 'கறுமை நிறம் கொண்டவர்' என்றும் பொருள் கொள்ளலாம்.வியாசர் பதவியில், பல மகான்கள் இருந்துள்ளனர். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
அன்புள்ள அம்மா —எனக்கும், என் கணவருக்கும் இடையே, 10 வயது வித்தியாசம். எங்களுக்கு திருமணமாகி, 18 ஆண்டுகள் ஆகின்றன. கல்லூரி செல்லும் வயதில், இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். முதல், 10 - 12 ஆண்டுகள், மிகவும் கோபக்காரராக இருந்தார், என் கணவர். இப்போது, நான் வேலைக்கு செல்வதால், சுமுகமாக செல்கிறது, வாழ்க்கை. கூட்டு குடும்பம் தான் என்றாலும், என் மாமியாருக்கும், தன் பையன் என்றால், நடுக்கம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
நகரின் அழகை, வேடிக்கை பார்த்தபடி சென்று கொண்டிருந்தான், பிரபு.அவன் பேன்ட் பாக்கெட்டில், 4,000 ருபாய் இருந்தது. கை விட்டு, பணத்தை தொட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டான். எதையோ சாதித்த மாதிரி, 'த்ரில் லிங்' உணர்வு அவனுள்! 'சபாஷ்' என்று தன்னைத்தானே மனதுக்குள் பாராட்டினான்.'முதலில், ஓட்டலில் மூக்கு முட்ட சாப்பாடு; அப்புறம், சினிமா, புதுசா ரெண்டு, 'செட்' டிரஸ். எல்லாத்தையும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் வாழ்க்கை வரலாறு நூலான, 'கடல் தாமரை'யில், தி.முத்துகிருஷ்ணன் எழுதியது:'எனக்கு ஒரு ஆசை உண்டு. தினமலர் நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் ஒரு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்; அவருக்கு, நான் மாலை அணிவித்து, மகிழ வேண்டும். அவர், என்னை, 'வாழ்க...' என்று, வாயார வாழ்த்த வேண்டும்...' என்று எம்.ஜி.ஆர்., போற்றி புகழ்ந்து பேசிய, தினமலர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
பிரபல பாலிவுட் நடிகர் ஓம்புரி, ஆடு புலியாட்டம் என்ற மலையாள படத்தில் நடிப்பதற்காக, கேரளா வந்திருந்தார். இவருக்கு ஆடம்பர ஓட்டலில் அறை ஒதுக்கிய தயாரிப்பாளர், மற்ற முன்னணி நடிகர்களுக்கு, குறைந்த வாடகையில் அறைகள் ஒதுக்கினார். மறுநாள் காலையில், இயக்குனர் அறைக் கதவை தட்டினார், ஓம்பூரி. 'வசதி போதாது...' என, புகார் கூற வந்திருப்பதாக நினைத்து, மிரண்டு போனார், இயக்குனர். ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
மலையாளத்தில், 'கறுப்பினழகு...' என்றாலும், தமிழில், 'கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...' என்று பாடினாலும், மக்கள் மனதில், கறுப்பு நிறத்தின் மேல் ஒரு வெறுப்பு இருக்கத்தான் செய்கிறது.'படித்தவர்கள் அதிகம் வாழும் கேரளாவை, 'கடவுளின் சொந்த நாடு' என்று அழைத்தாலும், இங்கும், கறுப்பு நிறம் மீது, வெறுப்பு இருக்கிறது...' என்கிறார், பெரும்பாவூரை சேர்ந்த பி.எஸ்.ஜெயா என்ற பெண் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
இன்றும் சமஸ்கிருதம் பேசும் மக்கள் வாழும் கிராமம் இருக்கிறது என்றால், ஆச்சரியம் தானே! கர்நாடகாவில், துங்கா நதியின் இரு புறங்களிலும், மாத்தூர் மற்றும் ஹொசஹள்ளி என்று இரு கிராமங்கள் உள்ளன. இங்கு பரவலாக சமஸ்கிருதம் பேசப்பட்டாலும், சங்கேதி என்ற மொழியும் பேசுகின்றனர்; தமிழ் மற்றும் கன்னடம் கலந்த மொழி தான் சங்கேதி. இங்குள்ள சிறுவர்கள், ஆர்வத்துடன் வேதங்களை பயில்கின்றனர். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், மூளை நரம்புகள் வலுப்பெறும். இக்கீரை, இருமல், தொண்டைக்கட்டை நீக்குவதுடன், பல் ஈறுகளை வலுப்படுத்தும். காச நோய்க்கு சிறந்த மருந்து.வல்லாரை கீரை, சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் மிளகு சேர்த்து சட்னியாக்கி, தொடர்ந்து, 48 நாட்கள் சாப்பிட்டால், மூளை சோர்வு நீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கும்.இக்கீரையுடன், சம ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
தமிழகத்தை சேர்ந்தவர், கேரளாவில், கொச்சி மாவட்ட ஆட்சியாளரான ராஜமாணிக்கம்; இவர் மனைவி நிஷாந்தினி, திரிச்சூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டன்டாக உள்ளார். படிக்கும் காலத்தில் காதல் திருமணம் புரிந்த இத்தம்பதியினர், தங்களுடைய சமூக சேவையின் மூலம், கேரள மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். அதனால், ஊடகங்களும் இவர்களை பெரிதளவில் பாராட்டுகின்றன. இன்ஜினியரிங் படிப்பில், தங்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
லண்டன் மக்களை, காலையில் எழுப்பி வந்த, 'பிக் பென்' கடிகாரம், பராமரிப்பு பணி காரணமாக, வரும், 2017 முதல், மூன்று ஆண்டுகளுக்கு ஒலிக்காது. இக்கடிகாரத்தின் பராமரிப்பு பணிக்காக, 285 கோடி ரூபாய் செலவு செய்ய முடிவெடுத்துள்ள அந்நாட்டு அரசு, 'வழக்கமாக இயங்காவிட்டாலும், மிக முக்கியமான நிகழ்ச்சிகளின் போது, மணி ஒலிக்கும்...' என்று அறிவித்துள்ளது.கடந்த, 1856ல் இருந்து, 'பிக் பென்' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
கடந்த, 1800ல் மதுவை ஒழிக்க, வித்தியாசமான கொள்கையை பின்பற்றினர், இங்கிலாந்து பெண்கள். 'மது குடித்து வரும், கணவன் தன்னை முத்தமிடக்கூடாது...' என்பது தான் அது! ஆனால், அந்தப் போராட்டம் வெற்றி பெறவில்லை. 'முத்தமிடாமல் கூட இருந்து விடுவேன்; ஆனால், மது அருந்தாமல், இருக்க மாட்டேன்...' என்று கூறும் கணவன்மார்கள் இன்றும் இருக்கத்தானே செய்கின்றனர்!— ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
சாமியார்களில் பல ரகங்களை பார்த்துள்ளோம். ஆனால், 'செல்பி' சாமியாரை பார்த்துள்ளீர்களா? 'செல்பி பாபா 'என்று அழைக்கப்படும் இந்த சாமியார், ஆசி வழங்குவதோ, ஆருடம் சொல்வதோ இல்லை. சுற்றுலா பயணிகளுடன், 'செல்பி' எடுக்க, போஸ் கொடுப்பார். அதுவும் இலவசமாக அல்ல; பணம் வாங்கிக் கொண்டு! இமய மலையில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும், 'செல்பி' பாபா, சுற்றுலா சீசனில், லட்சக்கணக்கில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X