Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
ஆரோக்கிய தண்டனை!சமீபத்தில், நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவரின் இரு குழந்தைகளும், 'ஜாகிங்' செய்வது போல ஒரே இடத்தில் குதித்துக் கொண்டிருக்க, அதை, கணக்கிட்டுக் கொண்டிருந்தார் நண்பர். விவரம் கேட்ட போது, 'பையன் ரேங்க் குறைஞ்சுட்டான்; அது தான் பனிஷ்மென்ட்...' என்றவர், 'மூணாம் வகுப்பு படிக்கிற என் மகன், ஐஞ்சாவது ரேங்கிற்குள் வரணும்ன்னும், ஆறாம் வகுப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
'சிறை வாழ்க்கை எப்படி இருந்தது?' என்று நிருபர்கள் கேட்ட போது, 'மிகவும் சுகமான அனுபவங்கள் நிறைந்த வாழ்க்கை அது. என் வாழ்நாளில் இப்படி ஒரு ஓய்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்ததில்லை. ஒரு நடிகன் கடைசி மூச்சு உள்ள வரை ஓடியாடிக் கொண்டு தான் இருப்பான். அவன் குடும்பத்தாரும் அவனை ஓய்வு பெற விட மாட்டார்கள். ஆனால், எனக்குச் சிறைத் தண்டனை தந்த நீதிபதியின் பேருதவியால் எனக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
தனியார் எப்.எம்., வானொலி ஒன்றின் அறிவிப்பாளர், தயாரிப்பாளர் தேர்வுக்கான நேர்முகம் ஒன்று, கடந்த வாரம் நடந்தது. தேர்வுக் குழுவில் என்னையும் ஒருவராகக் கலந்து கொள்ள அழைத்திருந்தனர்.எத்தனை எத்தனை, 'டேலண்டுகள்!'அனேகம் பேரிடம் திறமைகள் பொதிந்து கிடக்கின்றன; அதை வெளியே கொண்டு வர வழி தெரியாமல் தவிக்கின்றனர்.திண்டுக்கல்லை சொந்த ஊராகக் கொண்ட கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
எம்.சீதாலட்சுமி, கம்பம்: நல்ல கணவர் - மேற்படிப்பு... இரண்டில் ஒன்றை தேர்வு செய்தாக வேண்டிய நிலை. ஒரு பெண் எதைத் தேர்வு செய்வது நலம்?இரண்டாவதைத்தான்! கல்வி அறிவு, உயர் பதவியைப் பெற்றுத்தரும்; அது, வாழ்வை எதிர்கொள்ள தைரியத்தைக் கொடுக்கும். நல்ல பணி இருப்பதால், வரன்கள், 'க்யூ'வில் நிற்கும்! எஸ்.ஜார்ஜ் ஸ்டீபன், விருத்தாசலம்: சில அரசியல் பொது கூட்டங்கள் நடக்கும் போது, கல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
வாசலில் கிடந்த காலணிகள், வீட்டிற்கு விருந்தாளிகள் வந்திருப்பதை தெரிவித்தது. 'யாராக இருக்கும்...' என்ற யோசனையுடன் தாழ் போடாமல், சாத்தியிருந்த கதவை திறந்து, வீட்டிற்குள் நுழைந்தான் வினோத்.சோபாவில் அமர்ந்து, தொலைக்காட்சியில் கவனம் பதித்திருந்தவன், ஆள் அரவம் கேட்டு நிமிரவும், மின்சாரம் தாக்கியது போலானான் வினோத்.அவனையும் அறியாமல், ''பிரபு அண்ணா...'' என வாய் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
விஜய்யுடன் மோதும் விஷால்!விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர், தற்போது, விஷால் ரசிகர் மன்ற தலைவராகியிருக்கிறார். அத்துடன், 'விஜய் ரேஞ்சுக்கு, விஷாலை பெரிய நடிகராக்கிக் காட்டுகிறேன்...' என்று சவால் விட்டுள்ளார். விளைவு, புலி படத்தின் படப்பிடிப்பு முடிந்த அன்று, யூனிட்டில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு, விஜய் தங்க நாணயம் பரிசளித்தது போன்று, தன், பாயும்புலி படத்தின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
இப்போது தான் புத்தாண்டு பிறந்தது போல் இருக்கிறது. அதற்குள் பாதியை கடந்து விட்டோம். புது ஆண்டு பிறந்த போது, என்னென்னவோ தீர்மானம் செய்து, சபதமும் செய்தோம்.ஆனால், 'கடந்த மாதங்களில் என்ன சாதித்தோம்...' என்று நினைத்துப் பார்த்தால், சிலரால் தான் திருப்திப்பட்டுக் கொள்ள முடியும்.சாதித்த திருப்தியை வெளிப்படுத்தக் கூடியவர்கள் கூட, 'உடன் இருப்போரின் தொந்தரவால் தான், இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
'நீங்காத நினைவுகள்' நூலிலிருந்து: கவும் உணர்வு பூர்வமான சோகப்பாடல் அது!நடிகர் சிவாஜி கணேசன் பாடுவதாக வரும் அப்பாடலை வழக்கம் போல் டி.எம்.சவுந்தர்ராஜனைப் பாட வைக்காமல், வேறொரு பாடகரை பாட வைத்தார் எம்.எஸ்.விஸ்நாதன். அதை ஏற்றுக் கொண்டார் சிவாஜி. பாடல் காட்சி படமாக்கப்பட்ட பின், அதை திரையில் போட்டு பார்த்த போது, பாடகரின் குரல் மற்றும் சிவாஜியின் நடிப்பு இரண்டுமே நன்றாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
நேற்றின் நிழல்!மலர் சருகாக மாறுவதைஏற்றுக் கொள்ளும்எதார்த்தம் இல்லாமல்ஏன் புலம்புகிறாய்!ஆயுள் முழுவதும்வளமை வற்றாதஜீவநதி தான்வாழ்க்கை என்றுயார் சொன்னது?இன்பத்தைசில நிகழ்வுகள்அழைத்து வந்துஅறிமுகம் செய்வதைப் போலதுன்பத்தைசில முடிவுகள்விளைத்தெடுத்துசோகத்தை குவிக்கும்!காத்திருந்த கனவுகளைகலைத்து விட்டுநெஞ்சை காயப்படுத்திசில உறவுகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
அன்பு மிக்க சகோதரிக்கு,என் வயது, 66; எனக்கு ஒரே பையன். மகனும், மருமகளும், பேரனும், தோஹா நாட்டில் உள்ளனர்.என் கணவர் இறந்த பின் தான், பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தேன். விசா அனுப்பி, கூப்பிடுவான்; உடனே கிளம்பி போய், அவர்களுடன் சில மாதங்கள் இருந்து விட்டு வருவேன்.நாங்கள் நடுத்தர வர்க்கத்தினர். என் மருமகள் நன்கு படித்தவள்; பணக்காரி. சுதந்திரமாக வளர்ந்தவள். அவள் நல்ல பெண் தான்; ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதம் இறைவனுக்கு இல்லை. ஒவ்வொருவருக்கும் அவர் தன் அருளை உணர்த்துகிறார். அதை உணர்வோர் உயர்வு பெறுகின்றனர்; உணராதவர்களோ கடவுளை நிந்திக்கின்றனர்.பாண்டு மன்னர் இறந்த பின், பாண்டவர்களும், குந்தி தேவியும் அஸ்தினாபுரம் வந்தனர். அப்போது, நடந்த வரலாறு இது:அஸ்தினாபுர மாளிகையில், கவுரவர்களும், பாண்டவர்களும் ஒன்றாக வளர்ந்து வந்தனர். இந்நிலையில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
ஜூலை 24 கருடாழ்வார் திருநட்சத்திரம்காக்கும் கடவுளான திருமாலுக்கு, விஷ்ணு எனும் திருநாமம் உண்டு. விஷ்ணு என்றால், எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். இவருக்குரிய வாகனம் கருடன்; அதனால், இதை, தெய்வீகப் பறவை என்பர்.கந்தர்வர்கள் இருவர் தாங்கள் செய்த தவறின் காரணமாக, கஜேந்திரன் என்ற யானையாகவும், கூகு என்ற முதலையாகவும் பிறக்க சாபம் பெற்று, திரிகூடமலை பகுதியில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
''விஜி... எனக்கு இன்னும் காபி தரலயேமா...'' என, மெல்லிய குரலில் கேட்டார் கோபாலன்.''இப்பத்தானே மாமா சாப்டீங்க... அதுக்குள்ள மறந்துட்டீங்களா,'' என்றாள் விஜி.''ஸ்ரீதரா... என் கண்ணாடிய பாத்தியாப்பா... காலையில இருந்து தேடிட்டே இருக்கேன்; கிடைக்கவே இல்ல,''என்றார்.''எப்படிப்பா கிடைக்கும்... அதான், உங்க மூக்கு மேலயே இருக்கே...''''நந்து... நான் மாத்திரை போட்டேனா... எனக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு, சமீபத்தில் இந்தியா வந்த போது, அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் அபு சலீம் என்ற முன்னாள், 'மிஸ்டர் இந்தியா!' இவர், கேரளாவில் உள்ள வயநாட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். பணியில் இருக்கும் போதே, சினிமாவில் வில்லன் வேடத்தில் நடித்தார். இதன்பின், ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கவே, போலீஸ் வேலைக்கு முழுக்கு போட்டு, முழு நேர ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர், முகமது நிஷாம்; கோடீஸ்வரரான இவர், குடிபோதையில், தன் வீட்டு காவலாளியை அடித்து, காரை மோதவிட்டு, கொடூரமாக கொலை செய்ததற்காக, தற்போது சிறையில் உள்ளார்.இவர் மீது, 16 வழக்குகள் இருந்தாலும், பணத்தின் மூலம் அதிகாரிகளை கைக்குள் போட்டு, வழக்குகளிலிருந்து தப்பித்து விடுவர்.இவரிடம், 56 கோடி ரூபாய் மதிப்புள்ள, 16 வெளிநாட்டு ஆடம்பரக் கார்கள் உள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
படத்தில் இருப்பவர் பெயர் தேவிகா; மேதில் தேவிகா என்று அழைக்கப்படும் இவர், பரதநாட்டிய நடனக் கலைஞர். பாலக்காடு ராமநாதபுரத்தில், 'த்ரிபாதம்' என்ற நடன பள்ளி அமைத்து, நடன பயிற்சி அளித்து வரும் இவர், மலையாள நடிகர் முகேஷை திருமணம் செய்துள்ளார். நடிகை சரிதாவும், முகேஷும் விவாகரத்து பெற்ற பின், ஏழு வயது ஆண் குழந்தையின் தாயான தேவிகாவை மணந்துள்ளார் முகேஷ். கணவருடன் ஏற்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
லண்டனைச் சேர்ந்தவர், கரோல் ஹோல்லோக்; 49 வயது பெண்மணியான இவரின் வேலையே குழந்தைகளை பெற்றெடுப்பது தான். 12 லட்ச ரூபாய் கொடுத்தால் போதும், யாருடைய குழந்தையாக இருந்தாலும், வயிற்றில் சுமந்து, பெற்றுத் தந்து விடுவார்.இதுவரை, 13 குழந்தைகள் பெற்றெடுத்துள்ள இந்த வாடகை தாய், 'இதுபற்றி பலரும் என்னை குற்றம் சொன்னாலும், இதை தவறான செயலாக நான் நினைக்கவில்லை...' என்கிறார்.— ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரன், காரில் பயணிக்கும் போது, காரை அதிவேகமாக ஓட்டச் சொல்லி பயணம் செய்வார். ஓட்டுனர் எவ்வளவு தான் வேகமாக ஓட்டினாலும், 'இன்னும் வேகமாக ஓட்டு...' என்று கூறிக் கொண்டே இருப்பார். இதனால், கருணாகரன் கார் சாலையில் வருவதை கண்டாலே, தலைதெறிக்க ஓடுவர் மக்கள். அவருடைய இந்த அசுர வேக பயணம், அவ்வப்போது விபத்துக்களையும் ஏற்படுத்தியது உண்டு.ஒருமுறை, அவர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
சமீபத்தில், சீனாவில் புல்லட் ரயில் பணிப்பெண்களுக்கான தேர்வு நடந்தது. இப்பணிக்கு, 90 பேர் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், ஷான்தோங் ஜியா தோங் பல்கலைக்கழகத்தில், ஐந்து விதமான தேர்வுகளாக நடைபெற்ற இத்தேர்வில், 1,500 பெண்கள் பங்கேற்றனர்.இப்பணிக்கு, 166 -176 செ.மீ., உயரமும், 52-58 கிலோ எடையும் இருக்க வேண்டும். மேலும், பணிப்பெண்கள் இதயம், கண் பார்வை மற்றும் கேட்கும் திறன் சிறப்பாக இருக்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2015 IST
சமீபத்தில், மும்பையில், இந்திப்பட தயாரிப்பாளர் மது மான்டினாவுக்கும், பேஷன் டிசைனர் மசாபாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த மசாபா யார் தெரியுமா? அக்காலத்தில் வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் குழுவில், விவின் ரிச்சர்ட்ஸ் என்ற ஒரு ஆட்டக்காரர் இருந்தார் அல்லவா... அவருடைய மகள் தான் மசாபா! பழம்பெரும் இந்தி நடிகை நீனா குப்தா இவரது அம்மா; மணமகன் மதுமான்டினா, ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X