Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
ஆடு மேய்த்து படிக்கும் இளைஞர்!கிராமத்தில் இருக்கும் என் நண்பரை சந்திக்க, அவரது வீட்டுற்கு சென்றிருந்தேன். மூன்று ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே, அவரது ஓட்டு வீடு அமைந்திருந்தது. ஆடு, மாடு மற்றும் விவசாயம் என, அருமையான வாழ்க்கை வாழ்ந்து வருவதை கண்டு வியந்து, 'உன் பையன் இப்போ என்ன செய்றான்?' என்று கேட்டேன். வெளியே எட்டி பார்த்தவாறு, 'அதோ... அங்க ஆடு மேய்ச்சிட்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
ஜூன் 28 முதல், தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்ப தேவரின் நூற்றாண்டு துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —பிறை நிலவு, மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. சித்திரை மாதத்தின் முதல் முகூர்த்தமோ என்னவோ, கடல் அலைகளின் பேரிரைச்சல்!அதிகாலையில், கடற்கரையில் நடைபயிற்சி செய்யும் பழக்கம் உள்ளவர் தேவர். தேவியின் திருமுகம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
அன்று அலுவலகத்துக்கு, பிரபல இதயநோய் அறுவை சிகிச்சை நிபுணரான, டாக்டர் அர்த்தநாரி வந்திருந்தார். என் கையால், காபி வாங்கி குடிப்பதில் அவருக்கு அலாதிபிரியம்; சர்க்கரை, சூடு எல்லாம் சரியான பக்குவத்தில் கொடுப்பேன் என்று கூறுவார்.அப்போது, திண்ணைப் பகுதிக்கு மேட்டர் கொடுக்க வந்த நடுத்தெரு நாராயணன், தன் பக்கத்து வீட்டுக்காரர், தனக்கு சொந்தமான இடத்தில் ஓரடி நிலத்தை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
சி.எட்வீன்ராஜ், மாடம்பாக்கம்: தங்கள் பிரச்னைகளையே எப்போதும் பெரிதுபடுத்திப் பேசுவோரைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?அவர்கள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் சொல்கிறேன்... ரொம்ப கொஞ்சமாக மனநோய் உள்ளவர்கள் இவர்கள்! சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லும் பழக்கமும், அடுத்தவர் பேசும்போது, பொறுமையாக கேட்காமல், குறுக்கே பேசும் சுபாவமும் இவர்களிடம் இருக்கும். இந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
'நாத்தனாரா... ஆள் வைத்து அடி; சகோதரனா... கூலிப்படை வைத்துக் கொல்!'நம், 'டிவி' சீரியல்கள் நமக்கு இப்படி சொல்லிக் கொடுக்கின்றன. இதற்கு, திரைப்படங்கள் மற்றும் வானொலிகள் எவ்வளவோ பரவாயில்லை.இன்றைய கல்வித் தளங்களோ, பண்பாட்டை எங்கே சொல்லித் தருகின்றன! சொந்தக் காலில் நில், உயர்ந்த சம்பளம், பெரிய பதவி இவை தாம் வாழ்நாள் லட்சியங்கள் என்றும், காசு, துட்டு, மணி என்ற புதுப்பாடங்களை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
கோலாலம்பூரிலிருந்து அதிகாலை, 4:30 மணிக்கு வந்த அழைப்பு, அன்றைய தினத்தின் கடுமையான வேலைச் சுமையை சொல்லாமல் சொல்லி விட்டது. தூக்கத்திற்காக கெஞ்சிய கண்களை உதாசீனப்படுத்தி குளியலறைக்குள் நுழைந்தாள் நிவிதா.பிரிஞ்சி ரைஸ், வானவில் ராய்த்தா என்று யோசித்து, இரவு தூங்குவதற்கு முன் நறுக்கி வைத்த காய்களை ஒரு தடவை பரிதாபத்துடன் பார்த்து, பின், கஞ்சி தயாரிக்க ஆரம்பித்தாள். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
விருதை குறி வைக்கும் தனுஷ்!வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த, ஆடுகளம் படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் தனுஷ். அதிலிருந்து விருதுகளை நோக்கியே அவரது கதை தேர்வு இருந்து வந்த நிலையில், தற்போது, மீண்டும் அதே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்கும், வடசென்னை படம், அவருக்கு, மறுபடியும் விருதை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
ஆக., 14 ஆடி அமாவாசைதர்ம சாஸ்தாவே, ஐயப்பனாக மனித அவதாரம் எடுத்தார். முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போல், ஐயப்பனுக்கும், பாபநாசம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம் போன்ற படை வீடுகள் உள்ளன. இதில், நாம், சபரிமலைக்கே முக்கியத்துவம் தந்தாலும், இந்த படை வீடுகளில் முதலாவதாக விளங்குவது பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
அன்புள்ள அம்மா —என் வயது 27; என் கணவரின் வயதும், 27. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சமீபத்தில் தான், எங்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் ஆன புதிதில், என் கணவரின் பாக்கெட்டில், ஒரு கடிதம் பார்த்தேன். அதில், என் கணவரின் பெயர் போட்டு, 'நீயும் தப்பு செய்யல; நானும் செய்யல. சாமி தான் தப்பு செய்துடுச்சு. நான் உனக்கு வேணாம்; உங்க வீட்ல பாக்குற பொண்னை, கல்யாணம் செய்துக்க. உன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
தன் சுயசரிதை நூலான, 'அக்னி சிறகுகள்' நூலிலிருந்து அப்துல் கலாம் எழுதியது:கடந்த, 1981ல் குடியரசு தினம், ஒரு சந்தோஷ ஆச்சரியத்தை அள்ளிக் கொண்டு வந்தது. உள்துறை அமைச்சகம், எனக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்திருப்பதாக டில்லியிலிருந்து தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தனர். அதையடுத்து, எனக்கு தொலைபேசியில் வந்த முக்கியமான விஷயம், பேராசிரியர் தவனின் வாழ்த்துச் செய்தி தான். என் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
காலத்தை வென்ற கலாம்!மலர்களுக்கு சிரிப்பைத் தந்தாய்மாணவர்களுக்கு கனவு தந்தாய்குழந்தைகட்கு அன்பைத் தந்தாய்இளைஞருக்கு எழுச்சி தந்தாய்மதம் மொழி இனம் கடந்துமக்களை நேசித்தாய்!தலைமுறை தாண்டிமனிதர்(ம்) வாழ யோசித்தாய்அக்னிச்சிறகுகளை அனைவருக்கும்அணிவித்தாய்!உனக்கென எதையும் எண்ணாமல்விண்ணையும் மண்ணையும்உயிராய் கருதினாய்அதனால்தானோ என்னவோஉனதுடல் மண்ணுக்குஉயிர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
''உங்க சம்பளத்துக்கு, எந்த வங்கிக்கு போனாலும், அதிகபட்சம் எட்டு லட்சம் ரூபா வரை தான் லோன் கிடைக்கும். ஆனா, வீடு கட்ட குறைஞ்சது, 15 லட்சம் ரூபாயாகும்,'' என்றார் பில்டர்.''பதினைஞ்சு லட்சமா...'' என்றான் யோசனையுடன் அரவிந்தன்.''பில்டிங் மெட்டீரியல் எல்லாம், ஏகத்துக்கு விலையேறிப் போச்சு. ஆள் கூலியும் எகிறிடுச்சு. கட்டுமானம் ஆரம்பிச்சு முடியற நேரம் இன்னும் கொஞ்சம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
கேரளாவில் உள்ள, 'வயனாடு லக்கிடி ஓரியன்டல்' கல்லூரியில் ஓட்டல் மானேஜ்மென்ட் படிக்கும், கேட்டரிங் மாணவர்கள், 12 பேர், கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடிக்கும் முயற்சியாக, நீளமான புட்டு தயாரித்து சாதனை படைத்துள்ளனர். இந்த மெகா புட்டு தயாரிக்க, 31.87 கிலோ அரிசி மற்றும் தேங்காய் பயன்படுத்தப்பட்டது. இந்த புட்டின் நீளம், 18.2 அடி!— ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
டைட்டானிக் படத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் பேரபிமானத்தை பெற்றவர், அப்படத்தில், 'ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த கேத் வின்ஸ்லெட்! இப்போதும் அவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், முன் போல், ரசிகர்களிடம் போதிய வரவேற்பு இல்லை.இந்த இடைப்பட்ட காலத்தில், இரு கணவர்களை விவாகரத்து செய்து, தற்போது, மூன்றாவது கணவருடன் குடித்தனம் நடத்தி வரும் கேத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
அமெரிக்காவின் அலபாமா நகரைச் சேர்ந்த, ரென் லு யு என்ற, 29 வயது இளைஞருக்கு, தோழிகள் என்றால் அத்தனை பிரியம். அழகழகான தோழிப் பெண்களுடன் ஊர் சுற்றுவது தான், இவரின் பொழுதுபோக்கு. ஆனால், எந்த பெண்ணுடனும், ஆறு மாதத்துக்கு மேல் நட்பை தொடர மாட்டார். இதனால், இப்போது, ஊர் சுற்றுவதற்கு தகுந்த தோழிகள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்.தனக்கு பொருத்தமான தோழிகளை ஏற்பாடு செய்து தருவோருக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
அமெரிக்காவைச் சேர்ந்த, 'மெட்டல் இங்க்' என்ற பொம்மை தயாரிப்பு நிறுவனத்தால், 1959ல், தயாரிக்கப்பட்ட,'பார்பி டால்' என்ற பொம்மை, தற்போது உலகம் முழுவதும் பிரபலம். இந்த பொம்மைகள் மீது, ரஷ்யாவைச் சேர்ந்த, டாடினா டுஜொவ்லா என்ற, 28, வயது பெண்ணுக்கு இளம் வயதிலேயே கொள்ளை ஆசை.நாளுக்கு நாள் இந்த ஆசை அதிகரிக்கவே, அவரே, 'பார்பி' பொம்மையாக மாறி விட்டார். தன் உடை மற்றும் சிகை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X