Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
கடவுள் நம் வாழ்வில் எத்தனையோ சந்தோஷங்களைக் கொடுத்திருப்பார்; அப்போதெல்லாம், மகிழ்ச்சியின் உன்மத்தில், 'நான்' எனும் அகங்காரத்துடன், கடவுளை மறந்து விடுவர். ஆனால், சிறு துன்பம் வந்து விட்டால், 'கடவுளுக்கு கண்ணில்லை...' என்று நிந்திப்பதுடன், அவர் இருப்பையே சந்தேகிப்பர்.இத்தகையோருக்கு மத்தியில், தனக்கு ஏற்பட்ட கடுமையான உடல் நோவுக்கு மத்தியிலும், கண நேரம் கூட கடவுளின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
ஆக., 17 - கிருஷ்ண ஜெயந்திகுழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை சேட்டைகள் செய்வது இயற்கை. கண்ணன் செய்யாத சேட்டையா... அவன் வீடு புகுந்து வெண்ணெய் திருடினான்; உரலில் கட்டிப்போட்டால் அதையும் இழுத்துக் கொண்டே போவான். தன்னுடைய இந்த சேட்டைகளின் மூலம், மிகப் பெரிய வாழ்வியல் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்துகிறான் பரந்தாமன்.வெண்ணெய் என்பது நம் மனம்; அதை, உலக வாழ்வு என்ற பானைக்குள் போட்டு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
அட... நாங்களும் ராசியானவங்கதாம்மா!தனியார் நிறுவனத்தில் பணி புரியும், விவாகரத்தான பெண் நான்; என்னுடன் பணிபுரியும் பெண்களில் சிலர், பல நேரங்களில் சகஜமாக பழகினாலும், முக்கிய நிகழ்வுகளில் என்னை தவிர்க்க நினைக்கின்றனர். குறிப்பாக திருமணம், வீடு பால் காய்ச்சுதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை என்னிடம் சொல்லவே தயங்குகின்றனர்.என் நேரடி உயர் அதிகாரியின் வீட்டில் நடந்த விசேஷம் கூட, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
பசுமை நினைவுகளின் பயணம், 2002ல் இருந்து திடீரென்று, 2014க்கு தாவி விட்டதே காரணம் என்ன என்று யோசிக்கும் வாசகர்களே... அந்த பயணத்தில் எவ்வித மாற்றமுமில்லை; அது தென்றலாய் வீசியபடி, வற்றாத அருவியாய் கொட்டிக் கொண்டிருக்கும்.இது ஒரு இடைச்செருகல்தான்; இந்த விஷயங்களை இப்போது சொன்னால் நன்றாக இருக்குமே என்று எண்ணியதன் காரணமாகவே, 2014ல் நடந்த குற்றால டூர் விஷயங்களை சில வாரங்கள் சொல்லி, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
சென்னை திரை அரங்கம் ஒன்றிற்கு படம் பார்க்க என்னை அழைத்துச் சென்றிருந்தார் லென்ஸ் மாமா. மிக நீண்ட ஆண்டுகளுக்கு பின், படம் பார்க்க திரையரங்குக்கு சென்றேன். அது மதிய காட்சி; விடுமுறை தினம் கூட அல்ல. ஆனால், எக்கச்சக்கமான கல்லூரி காளையர், கன்னியர்!படத்தின் பிரமாண்டத்தில் நான் பிரமித்து இருக்க, ஏதோ ஒரு பாடல் காட்சி திரையில் ஓட ஆரம்பித்த உடனே, முன் வரிசைகளில் அமர்ந்திருந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
ஜி.சாந்தமூர்த்தி, கூசாலிபட்டி: படித்த இளைஞர் ஒருவர், கட்டட வேலைக்கு செல்கிறாரே...கெட்டிக்காரர்; பிழைக்கத் தெரிந்தவர். கவர்னர் வேலை கிடைக்கும் என காத்திருந்து, தண்டச் சோறு சாப்பிடாமல், தினமும், 500 ரூபாய்க்கு குறையாமல் சம்பாதிக்கிறாரே... பாராட்டத் தான் வேண்டும்! பி.ரகு, பெண்ணாடம்: சமீபத்தில் படித்த விரசமில்லாத, 'ஏ' ஜோக் ஒன்று சொல்லுங்களேன்...மக்கள் தொகை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மேற்கு மாம்பலம் வெறிச்சோடி கிடந்தது. மக்கள் அனைவரும் அவரவர் வீட்டு தொலைக்காட்சியின் முன் குழுமியிருந்தனர். கையிலிருந்த ரிமோட்டால் சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்த மரகதமணி, அரசு அலுவலகம் ஒன்றில் கண்காணிப்பாளராக பணி புரிகிறார். அப்பாவின் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்க முயற்சித்தான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
உ.வே.சாமிநாதய்யர், 'நான் கண்டதும் கேட்டதும்...' நூலிலிருந்து: மிதிலைப்பட்டி என்னும் ஊரை நான், எந்தக் காலத்திலும் மறக்க முடியாது; மணிமேகலையின் முகவுரையில், 'இவற்றுள் மிகப் பழமையானதும், பரிசோதனைக்கு இன்றியமையாததாக இருந்ததும், மற்றப் பிரதிகளில் குறைந்தும், பிறழ்ந்தும், திரிந்தும் போன பாகங்களையெல்லாம் ஒழுங்குப்படச் செய்ததும், கோப்புச் சிதைந்து அழகு கெட்டு, மாசு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
கதை எழுதும் ஏ.ஆர். ரஹ்மான்!இந்தியில் ஒரு படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், அதைத் தொடர்ந்து, தமிழில் இரண்டு படங்களை தயாரிக்கிறார். இதுபற்றி, அவர் விடுத்துள்ள செய்தியில், 'வாழ்க்கை தந்த அனுபவங்களாலும், சந்தித்த மனிதர்களாலும் எனக்குள் பல கதைகள் உருவாகியுள்ளன; அதில் ஒரு கதையை தான், இப்போது இந்தியில் தயாரிக்கிறேன். அதேபோல், தமிழில் தயாரிக்கவிருக்கும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது 21; இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். ஒரு தங்கை இருக்கிறாள்; என் குடும்பம், ஒரு காலத்தில் வசதியாய் வாழ்ந்து, தற்போது வறுமையில் வாடி கொண்டிருக்கிற ஏழைக் குடும்பம். என் அம்மா மிகவும் பொறுமைசாலி; என் தந்தை, 20 பேருக்கு வேலை கொடுத்தவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், மன உளைச்சலுக்கு ஆளாகி, கவலையை மறக்க, மது அருந்த துவங்கியவர், இன்று குடிக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
'எங்கே போட்டுருப்பான்...' என, செடி, கொடிகளுக்கு நடுவிலும், பூச்சு வேலைக்காக வாங்கி குவித்திருக்கும் மணல் குவியல் மற்றும் வாயிற்கதவு ஓரமாக வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளுக்கிடையில் என, எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்து களைத்து விட்டார் ராமதுரை. எங்கேயும் செய்தித் தாளைக் காணவில்லை.பொதுவாக பேப்பர் பையன் வீசியெறியும் செய்தித்தாள், படிக்கட்டு மற்றும் அதை சார்ந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
தேடல்!நம் மனக்குளத்தின்அறுபடாத வேர்களேதேடலின் முகவரி!தேடலின் பயணம்எங்கு அற்றுப் போகிறதோஅங்கு வாழ்வின் பயணம்முற்றுப் புள்ளியாய்தன்னை முடித்துக் கொள்கிறது!அறிவியலாய்ஆன்மிகமாய்அன்பின் ஊற்றாய்அறிவின் தாகமாய்தேடல்களின் கரங்கள்நீளுகின்றன!மானுடப் பரிணாமம்இயற்கையின் தேடலினால்இன்னுயிர் பெற்றுஇயங்கிக் கொண்டிருக்கிறது!மனித மனங்களும்புதுப்புது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
அந்த மாடு, இப்படி திடீரென்று வந்து முட்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை கோபிசந்த்.அவர் காலையில் கீரைக் கட்டுகளுடன் வரும்போதே, தெருக் கடைசியில் கட்டப்பட்டிருக்கும் மாடு, எப்படியோ அவர் வரவை உணர்ந்து எழுந்து நிற்கும். மாட்டின் உரிமையாளர் அதை கட்டிப் போட்டிருப்பதால், சாணத்தின் மேலேயே உட்கார வேண்டிய நிலமை; அதன் பின்புறத்தில் சாணம் ஒட்டி, அதன் இயற்கை வெண்மை நிறத்தை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
'வடகறி படத்தில், நான்கு நிமிட நடனத்துக்கு, ஒரு கோடி ரூபாய் வாங்கினேன்...' என, பெருமைப்படுகிறார் நடிகை சன்னி லியோன். கனடா சினிமாத்துறையில் புளூ பிலிமில் நடித்தது பற்றி பெருமைப்படும் இவர், 'கனடாவில் கிடைத்த வருமானத்தை விட அதிகமாக, இந்தி படங்களில் தலைகாட்டும் போது கிடைக்கிறது...' என்கிறார். இவரை தமிழில் நாயகியாக்கி ஒரு கலக்கு கலக்க, பல தயாரிப்பாளர்களும் களமிறங்கி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், எண்ணெய் குளியல் செய்வர். முகத்தில் மஞ்சள் பூசி, நெற்றியில் பெரிய குங்குமம் இட்டு, ஈரம் உலராத முடியை விரித்துப் போட்டு, மொற மொற புடவையுடன் அவர்களைப் பார்ப்பதே புண்ணியம். இப்போது அத்தகைய காட்சிகள் குறைந்து, தலைமுடியை, 'கண்ணகி பிராண்டாக' எல்லா நாளிலுமே வைத்துக்கொண்டு நடக்கும் பெண்களைத்தான் பார்க்க முடிகிறது. பொட்டும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
கேரளா மாநிலம், திரிச்சூர் புன்னயூரில் வசிப்பவர், கய்யா டீச்சர் என்ற, 101 வயது மூதாட்டி. இவர், இஸ்லாமிய பெண்கள் சமுதாயத்திற்கே பெருமை சேர்த்தவர். இஸ்லாமிய பெண்கள் பள்ளி செல்ல அனுமதிக்காத காலகட்டத்தில், சமுதாயத்தினரின் எதிர்ப்பையும் மீறி, பள்ளி சென்று படித்து, உத்தியோகம் பார்த்தவர் இவர்.சிறுமி கய்யாவுக்கு படிப்பு மீது இருந்த ஆர்வம் கண்டு, அவருடைய தந்தை மகளை படிக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
அமெரிக்காவில், அழுத்தமான நிறத்தில் ஆடை அணிவது தற்போது பேஷனாக உள்ளது. வயது வித்தியாசமில்லாமல், காதலர்கள் இதுபோன்ற மெல்லிய ஆடைகளை அணிந்து, உடல் உறுப்புகள் வெளியே தெரியும்படி, தெருக்களில் சுற்றி திரிவதை அங்கு பார்க்கலாம். இந்த காதல் ஜோடிகள் யாரை பற்றியும் கவலைப்படாமல், தெருக்களில் அணைத்து திரிவதை, பாதசாரிகள் பலர் பார்த்து ரசிக்கின்றனர். நம்மூரிலும் இந்த பேஷன் வந்து, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X