Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
மனம் அலையக் கூடியது; ஒன்றிலேயே பற்றி இருப்பதில்லை. இப்படிப்பட்ட மனதை ஒருநிலைப்படுத்தி, பக்தி மூலம் பகவானை காணலாம். பூவின் பக்கம் வந்தால் தான் அதன் மணத்தை அறிய முடியும்; தூரத்தில் இருப்பவர்களுக்கு அதன் மணம் தெரியாது. அதே போல, இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்றாலும், பகவானை மறந்து, சம்சார சாகரத்தில் உழல்பவர்களால் அவனை அறிந்து கொள்ள முடிவதில்லை. அஞ்ஞானிக்கு பரமாத்மா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
செப்., 1 - விநாயகர் சதுர்த்தி!புதுக்கணக்கு எழுதும் போதோ, திருமண அழைப்பிதழ்கள் அச்சிடும் போதோ, கடிதம் எழுதும் போதோ, மளிகை சாமான் லிஸ்ட் போட்டாலும் கூட, பிள்ளையார் சுழியான, "உ' போட்டு துவங்குகிறோம். எதற்காக இந்த சுழியை இட வேண்டும்... இந்த ஒற்றை எழுத்துக்குள், அப்படி என்ன மகிமை ஒளிந்து கிடக்கிறது?"சுழி' என்றால், "வளைவு!' "வக்ரம்' என்றும் சொல்வர். பிள்ளையாரின் தும்பிக்கை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
தக்கார், தகவிலர்!சமீபத்தில், நான் வேலை செய்யும் மயானத்துக்கு, தகனம் செய்ய, கோடீஸ்வரர் ஒருவரின் சவம், வேனில் கொண்டு வரப்பட்டது. உடன் இறந்தவரின் இரண்டு மகன்களைத் தவிர, வேறு ஈ, காக்கா இல்லை. அதிலும் ஒரு மகன், வேனை விட்டுக் கீழே இறங்கவே இல்லை.இரண்டு நாட்களுக்கு முன், மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடிக்க, நூற்றுக்கணக்கானோர் சூழ, பிரமாண்டமான பல்லக்கில், ஒருவரின் சவம் கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
என் இனிய வாசகச் சொந்தங்களே... எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் நடந்த சம்பவம் இது; என் மனதை மிகவும் பாதித்த சம்பவம்.அந்த அழகிய கிராமத்தில், அக்கா, தங்கை இருவர். தங்கச்சியின் பெயர் தரணி - பெயர் மாற்றியுள்ளேன்; பிஞ்சிலேயே பழுத்த பழம். சின்ன வயசிலேயே, ரொம்ப பெரிய மனுஷி மாதிரி பேசுவாள்.கண்டிக்காத பெற்றோர், அவள் பேசுவதை மிகவும் பெருமையாக நினைத்தனர். எங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
சிறுநீர் குடிக்கும் பிரதமர் எனப் பெயர் எடுத்தவர் நம் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்... மிகவும் பிடிவாதம் கொண்டவராம் இவர். 1983ல், இவர், ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியை சமீபத்தில் படித்தேன்.பேட்டி இதோ—மொரார்ஜி: உயிரே போனாலும் நான் புலால் உணவைச் சாப்பிட மாட்டேன்; தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள மாட்டேன். நான் சென்ற எல்லா நாடுகளிலும் இவ்விஷயத்தில் எனக்கு விதி விலக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
*எஸ்.லட்சுமி, முத்தியால்பேட்டை: எனக்கு இரண்டு அன்பு தோழிகள். ஒரு தோழியிடம் நான் பேசினால், மற்றொரு தோழிக்கு பிடிப்பதில்லை. நான் எப்படி நடந்து கொள்வது?உங்களிடம் கூறிய அந்தரங்க ரகசியங்கள் எதையும், மற்ற தோழியிடம் நீங்கள் கூறி விடுவீர்களோ என்ற பயம் காரணமாக இவ்வாறு நடந்து கொள்ளலாம். அவ்வாறு இல்லை யெனில், "பொசசிவ்னஸ்' - ஈகோ ஆகிய பிரச்னைகள் காரணமாகவும் இருக்கலாம். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
இதுவரை: கவிதாவிடமிருந்து வந்த இ-மெயிலை படித்துக் கொண்டிருந்த மதுரிமாவுக்கு, லேசாக தலை வலிப்பது போல் இருக்கவே, காபி குடிக்க சமையலறைக்கு சென்றாள். அங்கு அவள் அம்மா பாத்திரம் கழுவி கொண்டிருப்பதைப் பார்த்து, வேலைக்காரி பற்றி விசாரித்தாள் மது. கணவன் - மனைவிக்குள் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பேச்சு வர, எல்லார் வாழ்விலும் இது தவிர்க்க முடியாததுதான் போலிருக்கு என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
பின்லாடன் கதை சினிமாவாகிறது!ஈராக்கில், அமெரிக்கா நடத்திய போரை மையமாக வைத்து, தி ஹார்ட் லாக்கர் என்ற படத்தை இயக்கிய கேத்ரின் பிக்லோ, மார்க்போல் என்ற அமெரிக்கர்கள், இப்போது மறைந்த பின்லாடனின் கதையை, கில் பின்லாடன் என்ற பெயரில் படமாக்குகின்றனர். இப்படத்தில், அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை, அல்-குவைதா தாக்கியது முதல், பின்லாடனை அமெரிக்கப் படை அழித்தது வரையிலான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் சுதா. அம்மா திலகத்துக்கு, காய்ச்சல் விட்டபாடில்லை. கிழிந்த பாயில், துவண்டு படுத்திருந்தாள். அதிக காய்ச்சலில், கண் திறக்க முடியாமல் கிடந்தாள்.நொய் கஞ்சி காய்ச்சி, வலுக்கட்டாயமாக, அரை டம்ளர் குடிக்க வைத்து, மாத்திரையை போட்டு படுக்க வைத்திருந்தாள் சுதா.அவளுக்கு நினைவு தெரிந்து, நோய் என்று அம்மா ஒருபோதும் படுத்ததில்லை. எப்போதாவது, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —எனக்கு வயது 20. நான் ஏழைக் குடும்பத்துப் பெண். எனக்கு ஒரு அக்கா; இரண்டு தங்கைகள் என, நாங்கள் நான்கு பேர். என் அக்காவை, அம்மாவின் தம்பி (தாய் மாமன்)க்கே திருமணம் செய்து வைத்தனர். அவளுக்கு, ஒரு குழந்தை பிறந்து, இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கும் சமயத்தில், அடுத்து, இவளுக்கு குழந்தை பிறந்து விட்டால், வீட்டு வேலை பார்ப்பதற்காகவும், உடல்நிலை சரியில்லாத என் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
கேன்வாஸ் துணியில் முத்தம் கொடுத்தே ஓவியம் வரைய முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளார் பிரபல பெண் ஓவியர், நாதலி ஐரிஷ் என்ற பெண்.அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த இந்த பெண், தன் உதடுகளில் சிவப்பு சாயத்தை (லிப்ஸ்டிக்) பூசி, பின்னர் அதை கேன்வாசில் பதித்தே அழகான ஓவியங்களை உருவாக்கி விடுகிறார். ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு முத்ததின் அழுத்தத்தை வேறு படுத்துகிறார். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
"சதிலீலாவதி' படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா. (எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கே., பாலையா ஆகியோர் துணை வேடங்களில் அறிமுகமான படம்) அவர் சொல்கிறார்:அப்போதெல்லாம், பின்னணிப் பாட்டு கிடையாது. நடிப்பவர்களே பாட வேண்டும்; நடிக்கும் போதே பாட வேண்டும். சதிலீலாவதிக்கு இசையமைப்பாளர்கள், சர்மா பிரதர்ஸ் என்பவர்கள். சதிலீலாவதியில் நானே தான் பாடினேன். பாடல்களைப் படமாக்குவது கடினமான காரியம், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
கண்ணுக்கெட்டும் உயரம் வரை, கட்டடங்களை கட்டி, உலக நாடுகளை பிரமிக்க வைப்பதில், வளைகுடா நாட்டுக்காரர்களை, யாராலும் மிஞ்ச முடியாது. சில ஆண்டுகளுக்கு முன், துபாயில் புர்ஜ் கலிஜியா என்ற, 828 மீட்டர் உயரமுள்ள, மிகப் பெரிய கட்டடத்தை கட்டி, அசத்தினர். உலகின் மிக உயரமான சொர்க்கம் என, இந்த கட்டடம் வர்ணிக்கப்படுகிறது.இப்போது, இதை மிஞ்சும் வகையில், மற்றுமொரு பிரமாண்டமான பாலைவன ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
பார்வை மாறினால் போதுமே!* வருத்தத்தைப் போக்கவழியா இல்லை...பிரச்னைகள்யாருக்கு இல்லை!* அவை —நிழலாய் தொடரும்நிதர்சனம்!* பயப்படுத்தும்பல்வேறு விஷயங்களைபட்டியலிட்டால்...பிரதான இடத்தைப்பிடிப்பது பிரச்னை!* பிரச்னைகள்வாழ்க்கைக்குவருத்தம் தருவனவல்ல...அர்த்தம் தருவன!* உப்பு —ஒரு துளி குறைந்தால் கூடஉணவு சுவைப்பதில்லை...பிரச்னை இல்லாவிட்டால்வாழ்வதில்பெருமை என்ன இருக்கிறது!* ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
திருச்சியிலிருந்து, 34வது கி.மீ., தூரத்தில் அமைந்திருக்கும் கிராமம் கோடைபுரம். இக்கிராமத்தில், 2,000 குடும்பங்கள் வசிக்கின்றன. அதில், 850 முஸ்லிம் குடும்பங்கள். கிராமத்தில், இரண்டு பள்ளிவாசல்கள் கட்டப்பட்டிருந்தன.கிராமத்தில், பத்து வருடங்களாக சொட்டு மழை இல்லை. பக்கத்து கிராமங்களில் பேய் மழை அடிக்கும் போது, இங்கு சாரல் கூட அடிக்காது. பத்து வருடங்களாக மழை இல்லாததால் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X