Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
சபாஷ், மாணவியரே!என் மகள் படிக்கும் கல்லூரியில், முதலாம் ஆண்டு நிறைவு விழாவை, 'காலேஜ் டே' என்ற பெயரில் கொண்டாடினர், மாணவியர். விழாவில், வகுப்பறை மற்றும் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு சிறு பரிசு அளித்து, கவுரவித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதுபோலவே, வாட்ச்மேன் மற்றும் கல்லூரி எதிரே, தினசரி சாலையை கடக்க உதவும், டிராபிக் கான்ஸ்டபிள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
ரத்தக்கண்ணீர் படத்தில் ஒருவர் ஓடிவந்து, மாடிப்படி ஏறும் சந்திரபாபுவிடம், 'நம்ம மோகனுக்கு குஷ்டம்...' என்பார். உடனே, முகத்தில் அதிர்ச்சி காட்டி, அலறி, பத்தாவது மாடிப்படியில் இருந்து அப்படியே கீழே குதித்தார், சந்திரபாபு.இதை எதிர்பார்க்காத இயக்குனர்கள், கிருஷ்ணன் - பஞ்சு மற்றும் கேமராமேன் அதிர்ச்சியாகி, 'என்ன பாபு சார்... இப்படி செய்யப்போறேன்னு சொல்லவே இல்லயே... நீங்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
உடுமலை, சமராயப்பேட்டையில் இருந்து வாசகர் செல்லமுத்து சுவையான சம்பவம் ஒன்றை எழுதியுள்ளார். இதோ: என் கல்லூரி பேராசிரியர் பாடம் நடத்தும் போது, குறிப்பிட்ட நிகழ்ச்சி இது:பல ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்தார், ஆங்கிலேயர் ஒருவர். இதற்காகவே, சாதாரண ஓட்டல்களில் தங்கியும், ரயில்களில் மூன்றாம் வகுப்பிலும் பயணம் செய்தார்.சுற்றுப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
* பி. மூர்த்தி, புதுப்பாளையம்: அமைதி இழந்து தவிக்கிறது என் மனம்... யாரிடம் ஆலோசனை கேட்டால் மன அமைதி திரும்பும்?மன அமைதி வேண்டி, அவரவரே தவித்துக் கொண்டிருக்கும் காலமிது; எனவே, யாரிடம் சென்று ஆலோசனை கேட்டாலும் பயன் இல்லை. உங்களைத் தவிர, உங்களுக்கு மன அமைதியைத் தர ஆள் கிடையாது! நிதானமாக யோசியுங்கள்... மன அமைதி இழந்ததற்கான காரணம் புலப்படும். அவற்றை களையுங்கள்; ஓடி வரும் மன அமைதி! ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
அலுவலகத்திற்கு வந்ததும், தன் இருக்கையில் அமர்ந்து, கம்ப்யூட்டரை, 'ஆன்' செய்து, ஏதாவது இ - மெயில் வந்துள்ளதா என்று பார்த்தார், ராம்பிரகாஷ். வந்த சில லெட்டர்களில், முதல் செய்தி அவரை சூடாக்கியது.'இந்த ஜி.எம்.,முக்கு பெரிய இவன்னு நினைப்பு... இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்துடுறேன்...' என்று நினைத்தபடியே, சிஸ்டத்தை, 'ஆப்' செய்து, ஜி.எம்., அறைக்கு சென்றார்.''எஸ்...'' அர்த்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
அரசியல் கோதாவில் ரோஜா - வாணி விஸ்வநாத்!ஆந்திராவிலுள்ள, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்று, நகரி தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருக்கும் நடிகை ரோஜா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அதனால், ரோஜாவுக்கு எதிராக ஒரு நடிகையை கட்சியில் இறக்க, அஞ்சலியை அழைத்தார் சந்திரபாபு நாயுடு; சினிமாவில் பிசியாக இருப்பதால், அவர் தயங்கவே, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
'எறும்பு ஊர கல்லும் தேயும்' என்பர். பக்தியில் நம் மனம் தோயத்தோய எல்லாவிதமான துயரங்களில் இருந்தும் விடுபடுவோம்.முன்னொரு காலத்தில், கோவன்புதூர் என்று அழைக்கப்பட்ட கோயம்புத்தூருக்கு அருகில், வேலப்ப கவுண்டர் - ஆண்டாளம்மை தம்பதியர் வாழ்ந்து வந்தனர். குழந்தைச் செல்வம் இன்மையால், அருகில் உள்ள ரத்தினக்குன்றில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானிடம் முறையிட்டு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
'நீ(ங்க) எந்தப் பக்கம் திரும்புறேன்னே தெரியல; இப்ப மேல வந்து இடிச்சுட்டு, நியாயம் வேற பேசறீயாக்கும்... ஒண்ணு கையைக் காட்டணும் இல்ல... 'இன்டிகேட்டர்' போடணும். ரெண்டும் இல்ல. குரலை உசத்தினா நீ செய்தது சரின்னு ஆயிடுமா...' இத்தகைய வாக்குவாதங்களை சாலைகளில் நீங்கள் கேட்டிருக்கலாம்!ஓட்டுபவரின் நோக்கம் என்ன... முந்துகிறோமா, முந்த அனுமதிக்கிறோமா என்பதை ஏதோ ஒரு முறையில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
அன்பு சகோதரிக்கு - என் வயது, 45; இல்லத்தரசி. என் கணவர் வயது, 50; கார் கம்பெனி ஒன்றில், உயரதிகாரியாக பணிபுரிகிறார். எங்களுக்கு ஒரே மகள். வயது, 18; கல்லூரியில் படிக்கிறாள். அழகும், அறிவும் நிறைந்த அவளிடம் ஒரே ஒரு குறை உள்ளது. அது, எதற்கெடுத்தாலும் பொய் பேசுவது. அதுமட்டுமல்லாமல், சின்ன விஷயத்தை கூட, தன் கற்பனையை சேர்த்து பெரிதாக, 'பில்டப்' செய்து கூறுவாள். உதாரணத்துக்கு, அவள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
ஆண்கள் நான்கு முழம் அல்லது எட்டு முழம் வேட்டி கட்டுவது வழக்கம்; பெண்கள் கூட அந்தக்காலத்தில், 16 முழம் சேலை தான் கட்டினர். ஆனால், மூன்று முழம் வேட்டி ஒன்றையும், 30 முழ வேட்டி ஒன்றையும் கட்டும் சிவனைக் காண, புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டும்.இரண்டாம் சுந்தர பாண்டியன் எழுப்பிய இக்கோவிலில், பிரமாண்டமான ஆவுடையாருடன் கூடிய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
சபதம் எடுப்போம்!பொய்க்காத பருவமழைபொய்த்துப் போனதுமரங்களை வெட்டிச்சாய்த்தமனிதமற்ற மனிதர்களின்பொய்யான வாழ்வால் தான்!அடிக்கடி பூகம்பமாய்பூமி பொங்குவதெல்லாம்அன்பில்லாமல் அதன் இதயம் வரைஆயுதங்களால் தோண்டுவதால் தான்!ஏரிகளும் குளங்களும்மனிதர்களின் குடியிருப்புக்குள்நுழைவதெல்லாம்தங்களின் குடியிருப்பைமனிதர் பறித்துக் கொண்டதவிப்பில் தான்!அடிக்கடி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
மறைந்த கவிஞர் வாலி ஒரு கட்டுரையில் எழுதியது: எம்.ஜி.ஆர்., நடித்த, அரச கட்டளை படத்தில், நான் பாட்டு எழுத வேண்டிய ஒரு காட்சியை, விளக்கினார், இயக்குனர் கே.சங்கர். சர்வாதிகாரி ஆட்சி நடத்தும் ஒரு மன்னன், மக்களை கொத்தடிமையாக்கி, அவர்களை, தன் விருப்பத்திற்கு ஏற்ப, இயங்க வைக்கிறான்.தன் குழுவினருடன் ஆடி, மக்களை மகிழ்விக்கும் ஒரு நடன மாதுவால், தன்மான உணர்வு பெறுகின்றனர், மக்கள். இதை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
திண்ணையில் கால் நீட்டி அமர்ந்திருந்த ஆச்சியின் பக்கத்தில் வந்து, ''வள்ளியம்மை ஆச்சி எப்படி இருக்கீக...'' என்று கேட்டு, ஆச்சியை கட்டிக் கொண்ட கண்ணாத்தாளை பார்த்ததும், ஆனந்தத்தில் கண்ணீர் வந்தது வள்ளியம்மைக்கு!பளபளத்த கட்டம் போட்ட சுங்கிடி சேலையும், கழுத்தில் ஜொலித்த சிவப்பு கல் அட்டிகையுமாய், இந்த வயசிலும், அம்சமாய் இருந்தாள், வள்ளியம்மை ஆச்சி.கண்ணாத்தா போட்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப், ஜொள்ளுப் பார்ட்டி என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். சமீபத்தில், பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்த டிரம்ப், அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பங்கேற்றார்.இந்த விருந்திற்கு வந்திருந்த, மக்ரோனின் மனைவி, பிரிஜ்ஜிட் மக்ரோனை பார்த்து, ஆச்சரியத்தில் வாய் பிளந்த டிரம்ப், மக்ரோனிடம், 'இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வசந்த காலம் எனும் விழாவை கொண்டாடுவர்.விழாவின் போது, ஏதாவது வித்தியாசமான முயற்சிகளில் ஈடு படுவர். இந்தாண்டு நடந்த கொண்டாட்டத்தின்போது, பிரசல்ஸ் நகரில், 10 ஆயிரம் முட்டைகளாலான பிரமாண்ட ஆம்லெட் தயார் செய்யப்பட்டது. இதில், கிலோ கணக்கில் வெங்காயம் மற்றும் இறைச்சி சேர்க்கப்பட்டன. 20க்கும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
ஜப்பானில், மருத்துவமனை மற்றும் வங்கிகளில் ரோபோக்களிடம் சில பணிகளை ஒப்படைத்துள்ள நிலையில், தற்போது, மனிதர்களின் இறுதி சடங்கை செய்வதற்கும் ரோபோவை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.ஜப்பானில், பெரும்பாலா னோர் புத்த மதத்தை பின்பற்று பவர்கள். இங்கு, இறப்புக்கு பின், செய்யப்படும் இறுதி சடங்கிற்கு பல்வேறு சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.இச்சடங்கு செய்யும் புத்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில், குற்றங்கள் நடப்பது, அரிதாகி, கைதிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. இங்குள்ள பல சிறைகள், கைதிகளே இல்லாததால், வெறிச்சோடி கிடக்கின்றன.சில சிறைகள், வணிக வளாகங்களாகவும், பொழுதுபோக்கு மையங்களாகவும் மாறி விட்டன. அருகில் உள்ள மற்ற ஐரோப்பிய நாடுகளான, பெல்ஜியம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள கைதிகளை அடைப்பதற்காக, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X