Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
'பேஸ்புக்'கில் இருக்கும் பெண்களா நீங்கள்?பெரிய நிறுவனத்தில், உயர்ந்த பதவியில் இருக்கும் என் தோழி, 'பேஸ்புக்'கில் அக்கவுன்ட் வைத்திருக்கிறாள். ஆனால், அவளது, 'ப்ரொபைல்'லில் படித்த இடம், பிறந்த ஊர் போன்ற எந்த விவரமும் இருக்காது. பல்கலைக்கழகத்தின் பெயர் மட்டும் தான் இருக்கும். அவளுடைய புகைப்படமும் இருக்காது.'சாதாரணமா இருக்கிறவங்க கூட எல்லா விவரமும் போடுறாங்க; நீ ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —வேணு கானம் படத்தின் அவுட்டோர் ஷூட்டிங்! என்.சி.வசந்தகோகிலம், வி.வி.சடகோபன் மற்றும் எம்.வி.மணி போன்றோர் நடித்துக் கொண்டு இருந்தனர். ஓர் ஓரமாக சின்னப்பா தேவரும், அவரது அண்ணன் சுப்பையாவும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
ஊராட்சி செயலராக பணிபுரியும் வாசகி ஒருவர் எழுதிய கடிதம் இது: அந்துமணி அவர்களுக்கு, மார்ச் 8, 2015 வாரமலர் இதழில் பா.கே.ப., படித்தேன். அதில், எங்கள் துறையை பற்றியும், என்னைப் போன்ற அரசு ஊழியர்களின் பிரச்னைகள் பற்றியும் எழுதியிருந்தீர்கள். மனதுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. ஆனால், நீங்கள் எழுதியிருந்தது அதில், நூற்றுக்கு, 10 சதவீதம் தான் என்பது என் கருத்து. மத்திய, மாநில அரசின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
வி.கே.தர்மலிங்கம், புதுப்பேட்டை: இந்தியாவில், எந்த நகரத்தில் வீட்டு வாடகை அதிகம்?மும்பையில் தான்! இந்நகரில் வசிக்கும், 'அப்பர் மிடில் கிளாஸ்' மக்களின் வருமானத்தில், 40 சதவீதம் வாடகைக்கே சென்று விடுகிறது. 'காஸ்ட் ஆப் லிவ்விங்' இங்கு அதிகம். ஐதராபாத்தை விட, 60 சதவீதம் மும்பையில் செலவு அதிகம்!எம்.சந்தியா, துடியலூர்: யாரை திருத்த முடியாது என்று நினைக்கிறீர்கள்?மூடர்களை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
ஒரு பெட்ரோல், 'பங்க்'கில், நானும், என் உறவினரும் கணக்கு வைத்திருந்தோம். பெட்ரோல் போடும் போதெல்லாம், அவர்கள் நீட்டும் பில்லில் கையெழுத்து இடவேண்டும்; மாத முடிவில் பில் வரும்.இது சாத்தியப்பட காரணம், பெட்ரோல் பங்க் உரிமையாளர், என் கல்லூரி நண்பர்; என் அறிமுகத்தில் தான், என் உறவினருக்கும் அங்கு கணக்கு துவங்கப்பட்டது.ஆனால், உறவினரோ, 'அது சரியில்ல; இது சரியில்ல...' என, ஏதேதோ ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
''பால் கேனை வண்டியில ஏத்தணும்; எங்கடி உன் மவன்,'' என்று, தன் மனைவி தனலட்சுமியிடம் குரல் கொடுத்தான் கோவிந்தன்.''காலேஜ் அப்ளிகேஷன் வாங்கணும்ன்னு, இப்பத் தான் டவுனுக்கு கிளம்பி போனான்,'' என்று கூறி விட்டு, உள்ளே சென்றாள்.''டேய் வேலு... ஒரு கை பிடி.'' தன் நண்பன் வேலுவின் உதவியோடு, அந்த, 40 லிட்டர் பால் கேனை, டெம்போவில் ஏற்றினான் கோவிந்தன்.''மொத்தம் எத்தனை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
செப்.,17, விநாயகர் சதுர்த்திநம் வழிபாட்டில் எத்தனையோ தெய்வங்கள் இருப்பினும், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை முதலில் வழிபடுவது விநாயகரைத் தான். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்லும் வழியெல்லாம் நமக்கு துணையாக இருப்பவரும் இவரே! ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி என்று, எல்லா இடங்களிலும் இவருடைய அருளாட்சி நடக்கிறது.இவரை வழிபடுவது மிகவும் எளிது; யாரும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஆல்பம் தயாரிக்கும் சச்சின் டெண்டுல்கர்! ஏற்கனவே, உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு, 'தீம்' இசை அமைத்துக் கொடுத்தவர், ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில், தற்போது, உலக அளவில் உள்ள விளையாட்டு வீரர்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஆல்பத்துக்கு இசையமைக்கிறார். இந்த ஆல்பத்தை தயாரிப்பவர், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். சமீபத்தில், விளையாட்டுப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
புண்ணியம் செய்வாருக்கு பூவுண்டு; நீருண்டு. அண்ணல் அது கண்டு அருள்புரியா நிற்கும் என்பார் திருமூலர். இறைவனுக்கு நாம் மலர்களையும், அருகம்புல், வில்வம், துளசி, வன்னி மற்றும் மந்தார இலைகளை சாற்றுகிறோம். இவ்வாறு இறைவனுக்கு சாற்றப்படும் இலைகளில், அருகம்புல்லின் மகிமையை கூறும் கதை இது:கணபதி வழிபாட்டை முடித்து எழுந்தார் கவுன்டின்ய முனிவர். அவர் மனைவியான ஆசிரியை (இது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
மெய்ப்பட முடியும்!புதைந்தே கிடக்கும்புதையல் அல்லஇங்கே பூமியை பிளந்துமுளைத்தெழும் விதைகளேமேலானவை!அஸ்திவாரத்தோடுநின்று போனதுமாளிகையே ஆனாலும்கூரை வேய்ந்தகுடில்களில் தான்வாசம் செய்ய முடியும்!உறங்குவதுஎரிமலையே ஆனாலும்எரியும் குச்சிகளில் தான்குளிர் காய முடியும்!மணலாய் படுத்திருப்பதுமறுகரை தெரியாதமகாநதியானாலும்நகர்ந்து வரும்சிற்றோடைகளேதாகம் தணிக்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
உ.வே.சாமிநாதய்யர் எழுதிய, 'என் சரித்திரம்' நூலிலிருந்து: ஒரு நல்ல நாளில், சென்னைக்கு புறப்பட்டு சென்றேன். சென்னையில், இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கியிருந்தேன். ஒவ்வொரு நாளும் தம் கோச் வண்டியில் என்னை அழைத்துக்கொண்டு புறப்படுவார் ராமசாமி முதலியார். பிரசிடென்சி கல்லூரி மற்றும் காஸ்மொபாலிடன் கிளப் முதலிய இடங்களுக்கு சென்று, அங்குள்ளவர்களும், வருபவர்களுமாகிய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 30; திருமணமாகி, நான்கு ஆண்டுகளாகிறது. இரு மகன்கள்; என் கணவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், அவர் மீது எனக்கு ஒரே ஒரு கோபம் உள்ளது. திருமணத்திற்கு முன், அவர் ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். அதை, அவர் என்னிடம் சொல்லவில்லை; திருமணம் ஆன ஒரே வாரத்தில் நானே கண்டுபிடித்தேன். இதை அவரே சொல்லியிருந்தால், அவர் மீது சந்தேகப்பட்டு இருக்க மாட்டேன்.அவர் அரசு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
''ஜானகி...ஏ.... ஜானகி... கூப்பிடறது கேட்கலயா...'' கோபத்துடன் சத்தம் போட்டு கத்தினார், 75 வயதான சுந்தரேசன். வீட்டில், அவரும், அவருடைய மனைவி ஜானகி மட்டும்தான் இருந்தனர். ஜானகிக்கு அவரை விட ஒன்றிரண்டு வயது தான் குறைவு என்றாலும், அவள் தான் அவருக்கு, பி.ஏ., சமையல்காரி, நர்ஸ் என எல்லாமும்!அடுப்படியில் இருந்த ஜானகிக்கு, அவர் கூப்பாடு அரைகுறையாகத் தான் காதில் விழுந்தது. கையை அவசரமாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன?விநாயகர், 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாகவும், அதன் வடிவமாகவும் திகழ்கிறார். 'ஓம்' எனும் பிரணவ மந்திரம், அகரம், உகரம், மகரம் எனும் மூன்று எழுத்துகளால் ஆனது. அவற்றுள், 'அ' படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மாவையும், 'உ' காத்தல் தொழிலுக்குரிய விஷ்ணுவையும், 'ம' அழித்தல் தொழிலுக்குரிய சிவனையும் குறிக்கும். இவை மூன்றிற்கும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகியும், நடிகையுமான, மடோன்னாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. மடோன்னா என்ற ஒற்றைச் சொல்லுக்கு, 1990களில் இளைய சமுதாயமே கிறுக்கு பிடித்து அலைந்தது எல்லாம் கடந்த காலம். தன் உடைகளுக்காகவே, பல லட்சங்களை செலவிடுவார் மடோன்னா. ஆனால், அவரின், 18 வயது மகள் லூர்ட்ஸ் லியோன், அநியாயத்துக்கு சிக்கனத்தை கடைப்பிடிக்கிறார்.சமீபத்தில், நியூயார்க்கில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
படத்தில் இருப்பவரைப் பார்க்கும் போது, அதிகபட்சமாக, 50வயது இருக்கலாம் என்று தானே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், இவருக்கு, 95 வயது. துருக்கியைச் சேர்ந்த இவரின் பெயர் காசிம் குர்புஜ்; இவரது இளமையின் ரகசியம் யோகா பயிற்சி தான். 40வது வயதில் இருந்தே, தினமும், நான்கு மணி நேரம், கடுமையான யோகா பயிற்சி செய்து வருவதாக கூறும் இவர், 'யோகா பயிற்சியுடன், முறையான உணவு சாப்பிட்டால் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X