Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
"சிந்தனை செய் மனமே' என்று ஒரு சொற்றொடருக்கு, ஏற்ப மனிதன் சதா காலமும் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறான். இந்த சிந்தனையிலிருந்து எண்ணங்கள், ஆசைகள் உண்டாகின்றன. அவைகளை நிறைவேற்ற, உறுப்புகள் அனைத்தும் உதவுகின்றன.இந்த சிந்தனைகளும், எண்ணங்களும் நல்லவையாக இருந்து விட்டால், தனக்கும், பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவை தீயவைகளாக இருந்து விட்டால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
செப்., 27 நரசிங்க முனையரையர் குருபூஜைதவறு செய்யாத மனிதர்களே பூமியில் இல்லை. இறைவன் கூட மனிதனாகப் பிறக்கும் போது, தர்மத்தைக் காப்பதற்காக, மனித இயல்புக்கேற்ப சில சமயங்களில் வாழ்க்கை நியதிகளை மீற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே நேரம், தவறு செய்தவர்களை ஒரேயடியாக வெறுத்து விட வேண்டும் என்ற அவசியமில்லை.நம்மில் பலர், சிலரால் ஏமாற்றப்பட்டிருக் கலாம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
பணம், பகட்டு, பந்தா! எனக்கு தெரிந்த பையன் ஒருவன், ஆறு ஆண்டுகளுக்கு முன், ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் கடையில், 2,500 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தான். நல்ல உழைப்பாளி. ஒரு ஆண்டு கழித்து, தெரிந்தவர்கள் மூலம், 5,500 ரூபாய் சம்பளத்தில், ஒரு நல்ல கம்பெனியில் சேர்ந்தான். ஓவர் டைம் எல்லாம் சேர்த்து, 6,500 ரூபாய் வந்தது. அவனுக்கு ஒரே சந்தோஷம். அப்போதே இரண்டு மொபைல் போன் வைத்திருந்தான்.சில ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
பெட்ரோல், டீசல், வாகனங்கள், கிரேன், சாட்டிலைட், கம்ப்யூட்டர் இல்லா அந்த நாட்களில், நம் ஆட்கள் எப்படி தஞ்சாவூர் கோபுரம் அமைத்தனர்? சீர்காழி, சிதம்பரம், மலைக் கோட்டை, மீனாட்சியம்மன் கோவில், விருத்தீஸ்வரர், வேளாங்கண்ணி, நாகூர் தர்கா என்கிற அத்தனை பிரமாண்டங்களும் எப்படி உருவாக்கப்பட்டன?இதைப் பற்றின பெருமையோ, பெருமிதமோ நமக்குண்டா? நம் முன்னோர்களின் சக்தியையும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
கல்வி அறிவு, பண பலம், பிறந்த வீட்டின் ஆதரவு, சுயசம்பாத்தியம் இல்லாத பெண்கள் தான், கணவரால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்; சந்தேகிக்கப்படுகின்றனர்; மனதாலும், உடலாலும் துன்பப்படுகின்றனர் என்ற பலருடைய கருத்து தவறானது.பண்புள்ள, வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த, படித்த பெண் ஒருவர், தன் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகம் என்ற நோயால், தான் அடைந்த, அனுபவித்த, அனுபவிக்கும் கொடுமையை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
** கே.மீனலோசினி, புதுப்பாளையம்: வரதட்சணையின் கோரப்பிடியில் இருந்து தப்பி, மனதுக்கு பிடித்த மணாளனுடன் வாழ நினைக்கும் ஒரு பெண்ணுக்கு, "ஓடு காலி' என்ற பட்டத்தை இந்த சமூகம் எளிதாக வழங்கி விடுகிறதே...மனதைப் புண்படுத்தும் செயல்தான் இது. இனிமேல், இதுபோன்ற வார்த்தையை பயன்படுத்தாமல், "மனதுக்கு பிடித்தவனுடன் வாழ சென்று விட்டாள்...' என்று இந்த சமூகம் கூறலாமே!****வி.ரமேஷ்குமார் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
உலகில், எத்தனை, எத்தனையோ, வித்தியாசமான சிறைச்சாலைகளை பார்த்திருப்போம், படித்திருப்போம். தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின் லா பாஜ் என்ற இடத்தில் உள்ள, சான் பெட்ரோ என்ற சிறைச்சாலை, உலகின் மற்ற சிறைச்சாலைகளை விட, மிகவும் வித்தியாசமானது. இங்கு, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு, தண்டனை பெற்ற, 1,500 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள மேன்ஷன்கள் போல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
வெளிநாட்டில் எல்லாம் மாணவர்கள், பகுதி நேரமாக வெளியில் பணி செய்து கொண்டே, கல்லூரியில் படிக்கின்றனர். மதுரையில் படித்துக் கொண்டே, அந்த படிப்பால், கம்ப்யூட்டர் மூலமே சம்பாதித்து, படிப்பை தொடர்கின்றனர் நான்கு மாணவர்கள்."படித்து முடித்து, நல்ல வேலை கிடைத்து சம்பாதிக்க வேண்டும்' என்று கனவு காணும் இளைஞர் களுக்கு மத்தியில், இவர்கள் வித்தியாசமானவர்கள். மதுரை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
வீட்டை விட்டு பிரிந்து இருப்பவர்கள், தனிமையில் வாடுவது வழக்கமானது தான். இந்த ஏக்கத்திலிருந்து விடுபடுவதற்கு, சில காலம் பிடிக்கும். அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வசிக்கும் மெலிண்டா சிமிட் என்ற பெண்ணுக்கும் இந்த பிரச்னை இருந்தது. பணி நிமித்தமாக, தான் வசித்த, கிராமத்தில் இருந்து, மற்றொரு பெரிய நகரத்துக்கு, இடம் பெயர வேண்டி இருந்தது.வீட்டை விட்டு பிரிந்து வந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
வீரபாண்டிய கட்டபொம்மு, நாயக்கர் (தெலுங்கு) வம்சத்தைச் சேர்ந்தவர். "தொட்டிய நாயக்கர்' எனப்படும் இவர்கள், "தொட்டி நாயக்கர்' என்றும் மருவி வழங்குவர். இன்றும் இவ்வினத்தார் சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை முதலிய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். துங்கபத்திரை நதிக்கரையில் இருந்த, "கம்பிலி' எனும் பகுதியிலிருந்து, இவர்கள் தமிழகம் வந்தமையால், கம்பல நாயக்கர் என்றும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
இடம் பெயரும் வடிவேலு! அரசியல் புயலில் சிக்கி சிதைந்து கிடக்கும் வைகைப் புயல் வடிவேலு, சென்னையில் விஜயகாந்த் வீட்டுக்கு அருகில் உள்ள, தன் வீட்டை மாற்ற முடிவு செய்துள்ளார். அதன் காரணமாக, வேறு பகுதியில், வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைப்படி, ஒரு புதிய வீடு கட்டியுள்ளார்.— சினிமா பொன்னையாவிதார்த் நடிக்கும் இன்னொரு, "மைனா'! "மைனா'வுக்கு பின், விதார்த் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
இருபத்தி ஆறு வயது வரை, எந்த வேலைக்கும் போகாமல், ஊர் சுற்றும் வேலையை மட்டுமே ஒழுங்காய் செய்து வந்த மகன் செல்வ கணபதியை பற்றிய கவலையிலேயே, கண்ணை மூடி விட்டார் ராமசுப்பையா.அவர் இறந்த பின், இருந்த காடு கரையை விற்றதில், கணபதியின் கையில், இருபது லட்சம் ரூபாய் மிஞ்சியது. அவனது ஒரே அக்காவான அரியலூர்க்காரி பங்கு கேட்க வந்து நின்றாள்."வேண்டாம்... அவன் ஏதாவது ஒரு தொழில் செய்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
நெப்போலியன் காலத்தில் நடந்த போர்களின் போது, பிரிட்டன் படைகளால், ஏராளமான பிரெஞ்” படையினர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், பிரிட்டனில் உள்ள சிறைகளில், பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்தனர். இவர்களில் சிலர், பொழுது போகாத நேரங்களில், சிறிய அளவிலான கப்பல் மாதிரிகளை செய்தனர். இந்த கப்பல்களை செய்வதற்காக, இவர்கள் பயன்படுத்திய பொருட்கள், ஆடு மற்றும் பன்றிகளின் எலும்புகள். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டித் தொடர்.பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவுபடுத்திய சிறந்த நூல்களின் சாராம்சங்களையும், ஒன்று சேர்த்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
அன்புள்ள சகோதரிக்கு — என் வயது 55, கணவர் வயது 65, எங்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரு குழந்தைகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து, 15 ஆண்டுகள் ஆகின்றன. பேரன் வயது 13, பேத்தி வயது 10. எங்கள் மகளின் வாழ்க்கை நல்லபடியாக அமைந்து விட்டது. மகன் பி.இ., முடித்து நல்ல வேலையில், வெளிநாட்டில் இருக்கிறான். எல்.கே.ஜி., முதல் பி.இ., வரை, பள்ளியில் முதல் மாணவன். நாங்கள், அவனை மிகவும் கஷ்டப்பட்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும், பிரிட்டனின் லண்டன் நகருக்கும் இடையேயான தூரம், 5,570 கி.மீ., இந்த தூரத்தை விமானத்தில் கடப் பதற்கு, ஏழில் இருந்து, எட்டு மணி நேரம் ஆகும். மோசமான வானிலை ஏற்பட்டால், கூடுதல் நேரம் பிடிக்கும். ஆனால், நியூயார்க்கில் இருந்து, ஒரு மணி நேரத்துக்குள் லண்டனுக்கு செல்லும் வகையில், அதி நவீன விமானம் ஒன்று தயாராகி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
சொல்லாமல் போகிறவர்கள்!* எந்த வைபவங்களுக்கும்பூக்களைதங்கள் பெயர் சொல்லிஅனுப்பி வைப்பதில்லைசெடிகளும், கொடிகளும்!* தன்னைபுண்ணியத் தீர்த்தமென்றுஅழைக்காதவரை நதி சுட்டெரிப்பதுமில்லை;அவரது நிலங்களைவறண்டு போக விடுவதுமில்லை!* யார் பாராட்ட வேண்டுமென்றுஎல்லாருக்காகவும்சுழன்று கொண்டிருக்கிறதுபூமி?* கல்வெட்டில் தன் பெயரைஎழுதி வைத்தவரை விட,எழுதாமல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
பத்திரிகை உலகில், இளம் செய்தியாளர்களுக்கான பயிற்சியின் போது, "மனிதனை, பாம்பு கடித்தால், அது செய்தியல்ல, மனிதன், பாம்பை கடித்து இறந்தால் அது தான் செய்தி!' என, வேடிக்கையாக குறிப்பிடுவதுண்டு. ஆனால், அதுவே நிஜமாகி, நேபாள நாட்டின் கிராமம் ஒன்றில், இந்த அதிசயம் நடந்துள்ளது.நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டில் இருந்து, 200 கி.மீ., தொலைவில் உள்ளது பிர்ராத் நகர். அதன் அருகே, பிக்ரம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
பிரிட்டனின் எசெக்ஸ் என்ற பகுதியில் வசிக்கும் சாஷா கென்னடி, 26 என்ற பெண்ணுக்கு, ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளது. இவரால், அரை மணி நேரம் கூட, தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது. வீட்டை விட்டு, வெளியில் எங்கு சென்றாலும், தன்னுடன், பெரிய தண்ணீர் பாட்டிலை கொண்டு செல்வார். தினமும், சராசரியாக, 25 லிட்டர் தண்ணீர் குடிக்கிறார். இரவு நேரத்திலும், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
""என்னாச்சு சுந்தரம்... எத்தனை முறை உங்கிட்ட சொல்லி இருக்கேன். கொஞ்சம் லாங்கா போறப்போ, வண்டியை கண்டிஷன்ல வச்சுக்கோன்னு... இப்போ எவ்வளவு அவஸ்தையா இருக்கு பாத்தியா?'' டை முடிச்சை லூசாக்கி, மேல் பொத்தானை கழட்டி, காற்று வாங்கிக் கொண்டான் மனோகர்.மணிக்கட்டை திருப்பிப் பார்த்தான், மணி பதினொன்று... இரண்டு மணிக்கு சைட்டில் இருந்தாக வேண்டும். சென்னைக்கும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X