Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
கட்டட தொழிலாளியிடம் கற்ற பாடம்!எங்கள் வீட்டு மாடியில் வீடு கட்டினோம். கட்டட தொழிலாளர்களோடு, இளம் வயது சித்தாள் ஒருவள் இருந்தாள். அவளிடம் பேச்சு கொடுத்ததில், எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும், மேலும் படிக்க வசதியின்மை மற்றும் குடும்ப பொறுப்பு வந்து விட்டதால், வேலைக்குப் போகும் நிலை வந்து விட்டதாக கூறிய போது, அவள் மீது இரக்கம் ஏற்பட்டது. அவளுக்கு என்னாலான உதவியை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
சபாஷ் மீனா படத்திற்காக, சிவாஜியிடம் பேசினர். கதையை கேட்ட சிவாஜி, கதாநாயகன் பாத்திரத்துக்கு இணையாக, படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரத்திற்கு, 'சந்திரபாபுவை போட்டா, ரொம்ப நல்லா வரும்...' என்று, சொன்னார்.தன் அலுவலகத்துக்கு சென்றபின், சந்திரபாபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய இயக்குனர், ப.நீலகண்டன், அவரை சந்திக்க வருவதாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
கொங்கு நாட்டு வாசகி ஒருவர் எழுதிய கடிதம் இது; கணவனின் அன்பு கிடைக்காத பெண், எப்படி திசை மாறி செல்ல தூண்டப்படுகிறாள் என்பது குறித்து எழுதியுள்ளார். அத்துடன், தன்னைப் போல மற்ற பெண்களும் துன்பம் அடையக் கூடாது என்ற எண்ணத்தில், தன் கடிதத்தை வெளியிடும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.அன்பு நண்பர் அந்துமணி அவர்களுக்கு,உங்கள் அபிமான வாசகி மற்றும் ரசிகை, வணக்கத்துடன் எழுதுவது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
* எஸ்.தங்கமுடிராஜ், கோவை: அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே கொள்கையாக எதை கருதுகிறீர்கள்?உங்களுக்கே தெரியாதா என்ன... சந்தர்ப்பவாதம்... ‚ இதுதான், இன்று அனைத்து கட்சிகளின் கொள்கை! எம்.மாதவன், கடலூர்: அதிர்ஷ்டம் என்கின்றனரே... அப்படின்னா என்னங்க?உழைக்கத் தயங்கும், - மறுக்கும், சோம்பேறிகள், தம் முன்னேறாமைக்கு காரணமாக காட்டும் பொருளற்ற வார்த்தை தான் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
ஞாயிற்றுக்கிழமை இப்படி அதிரிபுதிரியாய் விடியுமென்று அன்பழகனும், அன்னபூரணியும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அதுவும், வீட்டில், அண்ணனும், அண்ணியும் வந்து தங்கி இருக்கையில்! 'ஆறு மாதமா எவ்வளவு பதவிசா குடும்பம் நடத்தினாள்... மாமா, மாமி என்ற பேச்சிற்கு மறுவார்த்தை இல்லை. மரியாதையில் குறைவில்லை. அப்படிப்பட்டவள், இன்று ஏன் இப்படி பேசினாள்... வீட்டிற்கு வந்தவள மருமகளாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, 'கொம்பு வைத்த சிங்கமடா...' என்ற ஆல்பத்தை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்திய ஜி.வி.பிரகாஷ், பின், ஹைட்ரோ கார்பன் திட்டம் சம்பந்தமான போராட்டத்திலும் கலந்து கொண்டார். தற்போது, விழுப்புரம் அருகே தைலாபுரத்தில் உள்ள அரசு பள்ளிக்கு, கழிப்பறை கட்டி கொடுத்துள்ளார். இதேபோன்று, அதிரடியாக சில சேவைகளை செய்வதில் ஆர்வமாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
மனிதர்கள், தங்களுக்குள் பேதம் கற்பிப்பது பெரும் பாவம் என, ஞான நூல்கள் கூறினாலும், அத்தவறை செய்வதில் இருந்து வெளிவருவது இல்லை.பன்னாசனன் எனும் வேதியருக்கு, திரணாசனன் எனும் மகன் இருந்தான். சிறு வயதில் இருந்தே, ஞான நூல்களை கற்பதில் ஆர்வம் கொண்டு, வேதங்கள் அனைத்தையும் கற்றான். அவனது குரு, 'சீடனே... வேதங்களை எல்லாம் கற்ற நீ, சிவத்தல யாத்திரை செல்...' என்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
'இரவு 9.00 மணிக்கு ரயில் என்றால் 8.00 மணிக்கே ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும்...' என்பார், என் சித்தப்பா. 'இவ்வளவு சீக்கிரம் போய் என்ன செய்றது சித்தப்பா...' என்கிற கேள்விகளுக்கெல்லாம் பெரிய சமாதானம் இராது.இத்தனைக்கும், போக்குவரத்து நெரிசல் இல்லாத காலம் அது. ஏதோ 144 தடைச்சட்டம் அமலில் இருப்பதுபோல், சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கும். அப்படிப்பட்ட காலத்தில், ஒரு மணி நேரம் முன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
அன்பு சகோதரிக்கு -என் வயது, 65; அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவன். இரு மகன்கள் உள்ளனர். மூத்தவன், அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிகிறான்; இளையவன், வியாபாரம் செய்கிறான். இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர். திருமணமானதிலிருந்து, என் மகனுடன் அடிக்கடி சண்டையிட்டு, எட்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறாள், மூத்த மருமகள்.இடையில், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
ஆஞ்சநேயரை, பஞ்சமுகங்களுடன் பார்த்திருப்போம்; ஆனால், அவரை, ஒரே முகம், பத்து கை, மூன்று கண் கொண்டவராகப் பார்க்க, நாகப்பட்டினம் மாவட்டம், அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோவிலுக்கு வாருங்கள்!இலங்கையில், ராவணனுடன் யுத்தம் முடிந்து, அயோத்தி திரும்பும் வழியில், பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கினார், ராமர். அப்போது அங்கே வந்த நாரதர், 'ராமா... இலங்கையில் யுத்தம் இன்னும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
எல்லாம் பிறர்க்காகவே!மலர்கள் பரப்பும்நறுமணம்மயக்க வைக்கின்றனஆனாலும்மணம் முழுவதும்சோலைகளுக்கு சொந்தமில்லை!சுவை தரும் கனிகள்நாவிற்கு விருந்தளிக்கின்றனஆனாலும் கனிகள் முழுவதும்மரங்களுக்கு சொந்தமில்லை!நிலத்தில் விளையும்தானியங்கள் பசி போக்குகிறதுஆனாலும்அவை நிலத்திற்கு சொந்தமில்லை!குளத்தில் நிறையும்மழைநீர் தாகம் தீர்க்கிறதுஆனாலும்நிறைகின்றநீர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
'கல்கியின் நகைச்சுவை' நூலிலிருந்து: நம் தெய்வங்களுள், ரங்கநாதர் என்றால், எனக்கு கொஞ்சம் பயம் தான். 'பகவானே... நீங்கள் இருக்கிற இடத்திலேயே என்றென்றைக்கும் இருந்து, அருள் புரியுங்கள்...' என்று பிரார்த்திப்பேன்.ஏனென்றால், பகவான் ஒருநாள் தம் படுக்கையை சுருட்டி, நம் வீட்டுக்கு வந்து, படுக்க இடம் கேட்பாரானால் ஆபத்தாகப் போய்விடும். அவருடைய படுக்கையைப் பார்த்ததும், வீட்டை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
இரவின் ஆழ்ந்த அமைதியில், 'டிங்'கென, ஒலித்த, 'வாட்ஸ் -அப்' சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள், நீரஜா. படுக்கையருகில் இருந்த மேஜையிலிருந்து மொபைலை எடுத்துப் பார்த்த போது, இரண்டு, 'மெசேஜ்கள்' பச்சை வட்டத்தில் ஒளிர்ந்தது. 'வாட்ஸ் - அப்' மீது விரலை அழுத்தினாள்; விக்ரம் தான் அனுப்பியிருந்தான். 'இவன் எதற்கு இந்த இரவு நேரத்தில், 'மெசேஜ்' அனுப்புகிறான்...' என்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
சரஸ்வதியை கலைமகள், சாரதாதேவி, பாரதி, ஹம்சவாஹினி, வானீஸ்வரி மற்றும் புத்திதாத்ரீ என்று பல பெயர்களில் வழிபடுவர். சரஸ்வதி தேவியின் கைகளில் தவழும் வீணைக்கு, 'கச்சபீ' என்று பெயர். இந்த கச்சபீ வீணை, சிவபெருமானால் பிரம்மனுக்கு அளிக்கப்பட்டது; அதை, தன் தேவியான சரஸ்வதிக்கு அளித்தார் பிரம்மன். அந்த வீணையை தான், தன் கரங்களில் ஏந்தியுள்ளாள், சரஸ்வதி. பொதுவாக, சரஸ்வதிக்கு நான்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
சுவாமி படங்களுக்கு சந்தனம், குங்குமம் வைக்கும் போது, கை விரலால் தொட்டு வைப்பதை விட, புதிய காட்டன் பட்ஸ் இரண்டு எடுத்து, அவற்றை சந்தனம் மற்றும் குங்குமத்தில் தோய்த்து, பின் பொட்டு வைத்தால், அழகாகவும், சிறியதாகவும் வைக்க முடியும். சந்தனமும், குங்குமமும் ஒன்றாக கலந்து விடாமலும் இருக்கும்! நவராத்திரி கொலு முடிந்ததும், இனி, அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்வோம் என நினைத்து, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X