Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
மனிதனின் புத்தியை கெடுப்பவை ஆசை தான். ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்ற மூன்றும் தேவையான அளவு இருந்து விட்டால், அவன் நிம்மதியாக வாழலாம். பதவி, பணம், பொருள் என்று சேர்க்க ஆரம்பித்து விட்டால், அவைகள் இவனைப் பிடித்து ஆட்டிக் கொண்டே இருக்கும். ஒரு ஏழை உழவன் இருந்தான். தான் ஒரு ஏழை என்ற எண்ணமே இல்லாமல், காடுகளில் போய் அங்கு கிடைக்கும் காய், கனி, கிழங்குகளை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
செப்.28 - நவராத்திரி ஆரம்பம்!சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோரின் ஒட்டு மொத்த சக்தியை, அன்னை பராசக்தி என்கிறோம். அவளே, வித்யா சக்தியாக இருந்து கல்வியைத் தருகிறாள். தனதான்யம் தரும் லட்சுமியாக அருள் செய்கிறாள். துர்க்கை, பார்வதி ஆகிய பெயர் கொண்ட ஆற்றல் நாயகியாக திகழ்கிறாள். எனவே தான், நவராத்திரி காலத்தின் முதல் மூன்று நாட்கள் சரஸ்வதி, அடுத்து லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
வேற இடம் கிடைக்கலையா?பிளஸ் 2 முடித்த என் மகனின் கலந்தாய்வுக்காக, சென்னைக்கு வந்திருந்தோம். இரண்டு நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலையில், சென்னையிலுள்ள, "ஷாப்பிங் மால்'களைச் சுற்றிப் பார்த்தோம்.ஷாப்பிங் மால்களில் உலவிக் கொண்டிருந்த மாடர்ன் யுவதி களை, என் மகன் ஒரு மாதிரியாக வெறித்து, வெறித்துப் பார்க்க ஆரம்பித்தான். வயசுக் கோளாறு காரணமாக, பெண் பிள்ளை களை, "சைட்' ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
இதுவரையில் பட்டாம்பூச்சிகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்த நான், இன்று, "குட்டி பட்டாம்பூச்சிகள்' பற்றி சொல்லப் போகிறேன்... அதாங்க, இந்த காலத்து குழந்தைகளைத் தான் சொல்கிறேன்.அய்யோ... அய்யோ... அய்யோ... என்ன சாமர்த்தியம்.... எத்தனை அறிவு... உஷார் என, எப்படித்தான் பிறக்கும் போதே இவ்வளவு சாமர்த்தியம் வந்து விடுகிறதோ, தெரியவில்லை.நாம் எல்லாம் பிறக்கும் போது, பாவம் போல கண்ணை மூடி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
மதுரை செல்ல வேண்டிய அவசியம்... மதியம், 1:40 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்... எல்லாரும் விமானத்தில் அமர்ந்தாகி விட்டது... என் பக்கத்து இருக்கையில் குப்பண்ணா...நேரம், 1:50 ஆகியது... 2:00 ஆகியது... விமானம் கிளம்பும் வழியைக் காணோம்... மொத்த பயண நேரமே, 45 நிமிடங்கள் தான்; தாமதத்திலேயே, 20 நிமிடங்கள் கடந்து விட்டது...சும்மா உட்கார்ந்திருந்த குப்பண்ணா, "சீனா போயிட்டு வந்தியே... அங்கே வசிக்கும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
*வி.சக்கரவர்த்தி, மேட்டுப்பாளையம்: நம் நாட்டுக் குழந்தைகளிடையே - "எக்ஸ்ட்ரா ரீடிங்' - புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எப்படி உள்ளது?இந்தியாவில், 7 முதல் 18 வயதுடையோரில், 33 சதவீதம் பேரிடம் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது. இதுவே, சீனாவில், 77 சதவீதமாக உள்ளது. நம்மிடையே படிப்பறிவு கம்மிதான்.****வி.பாலகிருஷ்ணன், தேவகோட்டை: அமெரிக்கர்களின் ஆர்வம் இப்போது எதன் மீது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான் ஒரு ஏழ்மையான பெண். நான் காதலித்து திருமணம் செய்து, எங்களுக்கு, ஏழு வருடம் மிகவும் நன்றாகவே ஓடியது. ஆனால், இந்த இரண்டு மாத காலமாக என் கணவர், வேறு ஒரு பெண், அதுவும் திருமணமாகி, இரண்டு குழந்தைக்கு அம்மாவான பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். அவள் கணவர் வெளியூரில் வேலை செய்கிறார். அவள் கணவர் ஊரில் இல்லாத போது, என் கணவருடன் சேர்ந்து, தாம்பத்யம் வைத்துக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
இந்திரா பிரியதர்ஷிணி என்ற இந்திரா காந்தி, நவம்பர் 11, 1917ல் பிறந்தார். ஜவகர்லால் நேருவுக்கும், கமலா நேருவுக்கும் மணமாகி ஓராண்டுதான் ஆகியிருந்தது அப்போது.மூன்று வயதான, இந்திராவின் ஒரே விளையாட்டு, மேஜை மீது ஏறி நின்று, வீட்டு வேலைக்காரர்களின் மத்தியில் பிரசங்கம் செய்வது. 12வது வயதில், ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அரசியல் தொண்டர்களுக்கு அவ்வப்போது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
திப்பு சுல்தானாக கமல்ஹாசன்!பதினெட்டாம் நூற்றாண்டில், மைசூர் மன்னராக திகழ்ந்தவர் திப்பு சுல்தான். சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட இவரது வாழ்க்கையை மையப்படுத்தி, தமிழ், மலையாளத்தில் தயாராகும் படத்தில், கமல் நாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில், திப்புவும் உன்னியாச்சயும் என்று பெயர் வைத்துள்ள இப்படத்துக்கு, திப்பு சுல்தான் என்று தமிழில் பெயர் வைக்க திட்டமிட்டுள்ளனர். — ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
காரின் முன் இருக்கையிலிருந்து, ரெஜினா மனோன்மணி இறங்கியதுமே, சுற்றுப்புறச் சூழலில் தட்பவெப்ப நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. முகத்தில் பாதி மறைக்கிறபடி குளிர்க் கண்ணாடி அணிந்திருந்தாள்; ஆனால், இடுப்பெலும்பின் உட்சரிவுக் கோணம் தெரிகிற அளவுக்கு வெகு கீழே இறங்கியிருக்கும்படியான, அபாய தாழ்ச்சி ஜீன்ஸ். தொப்புளுடன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும்படியான, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
அக்., 1 சிவாஜி பிறந்த நாள்!சிவாஜியுடன் நீண்ட காலம் நெருங்கிப் பழகியவரும், சிவாஜி நடித்த கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்திரி, ராஜா, சந்திப்பு உள்பட, 14 வெற்றிப் படங்களை இயக்கியவருமான, இயக்குனர் சி.வி.ராஜேந்திரன், நடிகர் திலகம் பற்றிய சுவையான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:இயக்குனர் சி.வி.ஸ்ரீதர் என்னுடைய சொந்த அண்ணன். ஸ்ரீதர் போன்ற மிகச் சிறந்த டைரக்டரிடம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
புதுச்சேரியில் வசிப்பவர் கே.வெங்கட்ராமன்; தொழிலதிபர். இங்கிலாந்து நாட்டில் படித்த இவர், உலகின் பல்வேறு நாடுகளையும் சுற்றி வந்தவர். தமது, சமீபத்திய, தென் அமெரிக்க நாடுகளின் சுற்றுப்பயண அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்..."ஹலோ வெங்கட்... தென் அமெரிக்க நாடுகளுக்கு, டூர் போகலாம்ன்னு இருக்கேன். நீயும் வாயேன்; எல்லாமே அருமையான டூர் ஸ்பாட்ஸ்...' என்று, என் நெருக்கமான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
நீ என் லட்சியம்...* யாசகன் போலகையேந்தி நிற்கிறேன்...அதற்காகவேனும் என்னை சம்மதி!* புரியாத தரை நிலவாய்வீசத் தெரியாத தென்றலாய்பூக்களுக்கு இடம் கொடாத பூமியாய்நீ வலம் வருகையில்விக்கித்து அழுகிறேன்...உன் மீதான அன்பைதாங்க முடியாமல்...* என் பிரியத்தை இறக்கி வைக்கபரந்து விரிந்த ஒரு உள்ளம் தேவைகண்ட இதயத்திலெல்லாம் போட்டு வைக்கஎன் காதல் ஒன்றும்சூப்பி எறியப்பட்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
"எப்படி இந்த விஷயத்தைக் கணவனிடம் சொல்லப் போகிறோம்...' என்று, திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி.காவல் துறையில், இடமாற்ற உத்தரவு வாங்குவது, அவ்வளவு சுலபம் இல்லை; அதற்கு, பல லட்ச ரூபாய் செலவாகும் என்று அவளுக்கு தெரியும். மதுரையில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பணிபுரியும் அவள் கணவன், கை நிறைய சம்பளமும், பை நிறைய, "கிம்பளமும்' வாங்குபவன். எத்தனை லட்ச ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X