Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
தார்மீக விஷயங்களையும், தெய்வீக, வேதாந்த விஷயங்களையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முதலில் சிரத்தையும், பிறகு பொறுமையும் இருக்க வேண்டும். "இதெல்லாம் நமக்கு வேண்டாம்பா...' என்று சிலர் சொல்லலாம். பின்னே எதுதான் வேண்டும்? எது வாழ்க்கைக்கு உதவக் கூடியது? எது அறிவை வளர்ப்பது? எது மன நிம்மதியை அளிக்கக் கூடியது? மற்ற விஷய சுகங்களெல்லாம் மன சஞ்சலத்தை உண்டு பண்ணக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
அக்., 8 - நவராத்திரி ஆரம்பம்!  பெண் பாவம் மட்டுமல்ல, அவர்களது கோபமும் பொல்லாத விளைவுகளை ஏற்படுத்தும். எந்த ஒரு வீட்டில் பெண்களுக்கு மதிப்பளிக்கப்படவில்லையோ, அங்குள்ளவர்கள் பல ஜென்மங்கள் எடுத்து, நரகத்தையே அடைவர். எனவே, பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், நம் முன்னோர் சில திருநாட்களையும், விரதங்களையும் உருவாக்கினர். அதன் மூலம் பெண்களுக்கு ஆன்மிக அறிவு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
திருமண பந்தியில் உட்கார வேண்டிய இடம்!அதிகாலை முகூர்த்த திருமணத்திற்கு சென்றேன். காலையிலேயே எழுந்ததால், பசி காதை அடைத்தது. மணப்பெண்ணின் கல்லூரி தோழிகள் கூட்டத்துடன் சென்று பந்தியில் அமர்ந்தேன். எல்லாருமே ஸ்டைல், "மிசி'கள். பரிமாறுபவன் எது கொண்டு வந்தாலும், "லிட்டில் போதும்... வேண்டாம்... ஒரே ஒரு இட்லி போதும்...' என்றனர். இதனால், அவர்களுடன் அமர்ந்திருந்த எனக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
பெண்கள், தங்களை அலங்கரித்துக் கொள்ள எந்த வலியையும் பொறுத்துக் கொள்வர் போலிருக்கு. மூக்கில் துவாரம் போட்டு மூக்குத்தி, காதில் துவாரம் போட்டு கம்மல் என  அலங்கரித்துக் கொள்வது வழக்கம்தான். இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் ஒரு அழகி, தன் முகம் முழுவதும் குத்தி வித, விதமான நகைகளை மாட்டியுள்ளார்.பிரபலமான இந்த அழகியின் பெயர் பெட் பர்ன்ஸ்; புகழ் பெற்ற பாடகி. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
நாகை மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணபுரம் என்ற சிறிய கிராமத்தில் ஒரு வேலை. முதல் நாள் இரவே நாகப்பட்டணத்தில் உள்ள, "சீ ஹார்ஸ்' என்ற ஓட்டலில் தங்கினோம்.ரூமை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என முடிவெடுத்து, உடன் எடுத்துச் சென்று இருந்த சினிமா வசனகர்த்தா ஆரூர் தாஸ் எழுதிய புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்...புத்தகத்தின் சில பகுதிகள் இதோ...தேவர் பிலிம்சின், "பெண் தெய்வம்' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
* வி.ரிஷி, சென்னை:  அவதியுற்று, அரசு மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு தலை விரித்தாடுகிறது லஞ்சம்... இந்நிலை என்று மாறும்? மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?நம் ஜனநாயக அமைப்பில் வேலைகள் வேகமாக, ஒழுங்காக, சாதகமாக நடைபெற லஞ்சம் என்பது அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச சம்பளமாகி விட்டது. நமக்கு முழுமையாக இதில் விருப்பம் இல்லை என்றாலும், வேறு வழியில்லாமலாகி விட்டது! அமெரிக்கா போன்ற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
அந்த முன் மாலை நேரத்தில், ஏரிக்கரையில் மிதமான வெளிச்சமும், தென்றலாக காற்றும் வீசியது. வானத்தில் மேகங்கள் வெள்ளி ஓடைகளாய் காட்சி அளித்தன. சுற்றிலும் மரகதப் பச்சைக் கம்பளம் விரித்தது போல் வயல்கள். தொலைவில் குன்றும், குன்றின் மேல் கோவிலும், ஓவியமாய் காட்சியளித்தது.""வெளிகரம்ன்னு அங்கே உள்ள ஊருக்கு பேர். அந்த கோவில் முருகர் கோவில். டவுன் ஸ்கூலில் படிக்கும்போது, அந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
திருமலை திருப்பதியில் வருடம் முழுவதும் விழாக்காலம்தான். என்றாலும் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் பிரம்மோற்சவம்தான் பெரிய விழா. இந்த பிரம்மோற்சவ விழா எப்போதும் வருடத்திற்கு ஒரு முறைதான் வரும். இந்த வருடம், இரண்டு முறை வந்துள்ளது. முதல் பிரம்மோற்சவம் சமீபத்தில் முடிந்த நிலையில்,இதோ இரண்டாவது பிரம்மோற்சவத்திற்கு திருமலை தயாராகி வருகிறது.நடந்து முடிந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
திண்ணையில் அமர்ந்து, குப்பண்ணாவுடன் பேசிக் கொண்டிருந்த போது, அவரிடம் கேட்டேன்: "ஏன் குப்பண்ணா... இந்த, "கஜினி முகமது, கஜினி முகமது'ன்னு அடிக்கடி சொல்றாங்க! பள்ளிக்கூட சரித்திர புத்தகத்திலே கூட, அவன் பெயரைப் படிச்ச ஞாபகம். நம்ம பழைய பாரத நாட்டுக்குள் அடிக்கடி அவன் படையெடுத்து வந்து, கொள்ளையடித்து விட்டு, ஓடிப் போய் விடுவானாமே... அதைத் தவிர, அவனைப் பற்றி ஒண்ணும் விவரம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
சட்டம் ஒரு இருட்டறை ! விஜயகாந்தை வைத்து 28 வருடங்களுக்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய படம்,  "சட்டம் ஒரு இருட்டறை!' இப்படத்தை  மீண்டும் தமிழில் தயாரிக்கிறார் அவர். என்றாலும், இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப கதையிலும், காட்சியமைப்பிலும் நவீனப்படுத்த திட்டமிட்டுள்ள எஸ்.ஏ.சந்திரசேகரன், விரைவில் பட வேலைகளை துவங்க உள்ளார்."7 ஆம் அறிவு' படத்தை, கி.மு., 600ல் நடக்கிற கதையாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
அந்த டெம்போ டிராவலர் வேனில் இருந்த எல்லாரும் பதட்டமாக இருந்தனர். டிரைவரின் கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தன. டிரைவருக்குப் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த வாசுவின் முகம் வியர்த்திருந்தது. யாரும் எதுவும் பேசவில்லை.பின்னால் உட்கார்ந்திருந்த வாசுவின் மனைவி, மவுனத்தைக் கலைத்தாள்.""ஏங்க... அந்த பையனோட அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க.''வாசு திரும்பிப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது 40. என் குடும்பம் ஏழ்மையான குடும்பம்; என் கணவர் குடும்பம் சுமாரான குடும்பம். நான் படிக்காதவள்; அவர் படித்தவர். மூன்றாண்டுகள் என்னை காதலித்து, காத்திருந்து, திருமணம் செய்து கொண்டார்."நம் திருமணம், என் அண்ணன், தம்பிகளுக்கு தெரிய வந்தால், அவர்களும் என்னை போல் காதல் திருமணம் செய்து, கவுரவத்தை குலைத்து விடுவர்...' எனக் கூறியதால், என் வீட்டு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
கடந்த 200 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் பீர் திருவிழா பற்றி கேள்விப்பட்டிருக் கிறீர்களா?உலகில் உள்ள எல்லா வகை பீர்களையும் ருசிக்க விரும்புபவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளலாம். இந்த விழா, ஜெர்மனி நாட்டில் முனீச் நகரில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது."அக்டோபர் விழா' என்ற பெயரில் நடக்கும் இந்த விழா, உண்மையில் செப்டம்பர் மாதம் துவங்கி விடும். 17 நாட்கள் நகரம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
* தொழுநோயாளியின்நமச்சலைப் போல்மறுபடியும்,மறுபடியும்...உன் நினைவுகள்...* ஊர் உறங்கிய பிறகும்,நீ உறங்கியிருப்பாயாஎன்ற நினைப்பில் நான்!* நிலா, நிலா ஓடி வாஎன்று என்தாய் எனக்குஅறிமுகப்படுத்தியநிலவிற்கும்,நீ எனக்கு அறிமுகமான பிறகு,வரும் நிலவிற்கும்நிறைய வேற்றுமைகளைஉணர்கிறேன்!* காரிருளைகாணும் போதெல்லாம்விளக்கேற்ற வேண்டும்என்ற எண்ணம் மடிந்து...உன் செந்நிற முதுகில்கார் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
""முளைச்சு மூணு எலை விடலை... அதுக்குள்ளே இந்தப் பேச்சு பேசுறீயா... ஏண்டா, பாட்டியை போய், யாருன்னு கேட்டா... வில்லேஜ்லருந்து அழைச்சுட்டு வந்துருக்கிற சர்வன்ட்டுன்னு சொல்ற? என்ன தைரியம்டா உனக்கு?'' மாலினி ஆவேசமாக கத்தியவாறே முரளியின் முடியை பிடித்து இழுத்து, முதுகில் இரண்டு சாத்து சாத்தினாள்.அப்படியும் ஆத்திரம் அடங்க மாட்டாமல், ""என்ன துணிச்சல்டா உனக்கு? அம்மாவைப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
குடி, குடியைக் கெடுக்கும்; ஆனால், அரசைக் காப்பாற்றும்!"நிறைய குடிங்க... அதிகமாக புகை பிடியுங்க...' இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரஷ்ய நிதி அமைச்சர் அலெக்சி குட்ரின். "மிக அதிகமாக குடித்து, அதிகமாக புகை பிடித்தால் மதுபான விற்பனை, சிகரெட் விற்பனை அதிகமாகும். அதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் அதிகமாகும். அந்த வருமானத்தின் மூலம் சமூக சேவை பணிகளில் அரசு வேகமாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X