Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
கண்ணா நீ எங்கே?கோகுலக் கண்ணா நீ நரகாசுரனைவதம் செய்து விட்டதாய்தீபாவளி கொண்டாடுகிறோம் நாங்கள்!உன்னால் வதம் செய்யப்பட வேண்டியநரகாசுரர்களோ இன்னும் நிறைய... மரங்களை, வனங்களை பிறர் மனங்களை கொன்றவர்கள்!ஜாதி, மதஅரசியல் கொலையாளர்கள்பெண்களுக்கு எதிரான வன்கொடுமையாளர்கள்...தெய்வம் நீஅசுரனைக் கொன்றாய்இங்கே...மிருகங்களைப் போல்மனிதனை மனிதனேவேட்டையாடுகிறான்!பணத்தை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
அரசியல்வாதிகளே உஷார்!இந்த ஆண்டு, எங்கள் கிராமத்தில், இளைஞர்கள் சார்பாக, சுதந்திர தினவிழா கொண்டாட முடிவு செய்தோம். அதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்ட போது, அப்பகுதியில் உள்ள ஒரு அரசியல் பிரபலத்தை வைத்து, தேசியக் கொடியை ஏற்றலாம் என, ஆலோசனை கூறினர், சிலர். அதை, பெரும்பாலான இளைஞர்கள் எதிர்த்து, 'அரசியல்வாதின்னாலே அயோக்கியர்கள் என்றாகி விட்டது. அதிலும், நீங்க குறிப்பிடும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
சந்திரபாபுவை பிரிந்து லண்டன் சென்ற அவர் மனைவி ஷீலா, சில மாதங்களுக்கு பின், சந்திரபாபுவுக்கு எழுதிய கடிதம்...டியர் பாபு, உங்களைப் பிரிந்து, மாதங்கள் பல ஓடி விட்டன; பிரிவின் துயரை நானும் உணர்கிறேன். ஆனாலும், மீண்டும் ஒன்று சேர முடியாத பிரிவாயிற்றே இது!நான், ஒரு பெண்; எத்தனை காலத்துக்கு, என் தாய், என்னுடன் இருப்பாள்... பெண்ணான நான், தனித்து வாழ்வது சுலபம் இல்லயே... அதனால், என் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
ஆபீஸ் வேலையாக சேலம் போகச் சொன்னார், பொறுப்பாசிரியர்; லென்ஸ் மாமாவும் ஒட்டிக் கொண்டார்.சேலத்தில் பெரியசாமி அண்ணாச்சிக்கு, 'பேக்டரி' உண்டு; அவரிடம் சேலம் போகும் விஷயத்தைக் கூறியதும், 'நீங்க போங்க; நான், ஏற்காடு எக்ஸ்பிரஸைப் பிடிச்சு பின்னாலயே வாறேன்...' என்றார்.கிளம்ப வேண்டிய நாளில், 'இதோ, அதோ...' என, வேலை இழுத்துக் கொண்டே போய், ஒரு வழியாக மதியம் மூன்று மணிக்கு வண்டியை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
* மூ.நாகூர், காஞ்சிபுரம்: ஜப்பான் மற்றும் சிங்கப்பூரின் இமாலய முன்னேற்றத்துக்கு காரணம் என்ன?நம்மூர் ஜனங்களைப் போல அரசியல் வெறித்தனம் அவர்களிடம் இல்லை; உழைப்பை மறந்து, போஸ்டர் ஒட்டுவதிலும், கொடி கட்டுவதிலும், 'கட் - அவுட்' வைப்பதிலும் தம் நேரத்தை வீணாக்குவது இல்லை; அரசியல் ஊர்வலம், கூட்டங்களில் கலந்து, 'வாழ்க, ஒழிக' கோஷம் எழுப்பி தம்மையும், தம் நாட்டையும் ஒழித்துக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள குறுக்கலான சந்து அது... தொடர்ச்சியாக கட்டப்பட்டுள்ள ஐந்து வீடுகளில், கடைசி இரண்டாவது வீட்டில், பெற்றோருடன் வசித்து வந்தான், விஸ்வம். அவனது பெற்றோர், கிராமத்தில் விவசாயக் கூலியாக, அரை வயிறு சாப்பாடுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருந்த போதும், பொறுப்புடன் படித்து, நல்ல மதிப்பெண் பெற்று, பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான், விஸ்வம்.மகன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
காமராஜர் சிறுவனாக இருந்த போது, தெருவில் யானை போனால் போதும், அவருக்கு உற்சாகம் பிறந்து விடும். யானையின் பின், வெகு தூரம் போவார். காங்கிரஸ் இயக்கத்தில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்ட சமயம் அது... ஒருநாள், தன் நண்பர் தங்கப்பனுடன் சேர்ந்து பிரசாரம் கேட்டு விட்டு, அதிகாலை, ரயிலில் விருதுநகருக்கு வந்து, ஓட்டலில், காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அம்மன் கோவில் மைதானத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
மீண்டும், பாகுபலி!பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து, ஒரே படமாக மீண்டும் வெளியிட இருக்கிறார், ராஜமவுலி. அதற்காக, தற்போது, தேவையற்ற காட்சிகளை, 'எடிட்' செய்து வருகிறார். அடுத்தபடியாக, பாகுபலிக்கு இணையாக பிரமாண்ட பட்ஜெட்டில், மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.— சினிமா பொன்னையாவிமலுக்கு உற்சாகம் கொடுத்த, களவாணி - 2!பசங்க, களவாணி மற்றும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
'இந்த உடையில் ரொம்ப நல்லா இருக்காளே...' என்று, தன் மனைவியைப் பற்றி நினைக்கிறான், கணவன். ஆனால், அதை மனைவியிடம் சொல்கிறானா என்பது தான் பெரிய கேள்வி. சொல்லியிருந்தால் பூரித்துப் போயிருப்பாள், இல்லத்தரசியின் குறையை மட்டுமே சொல்ல வேண்டும் என்ற கொள்கை வைத்திருக்கின்றனர், பல கணவர்கள்.தனக்கு வண்டி ஓட்டியவரைப் பற்றி, 'சூப்பர் டிரைவர்... பயமுறுத்தாம ஓட்டினதோட, சரியான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
யாருக்கு, யார் மீது, எப்போது பகை வரும் என்பது, யாருக்கும் தெரியாது. சிறு பகையை நாமே சமாளித்து விடலாம். பெரும் பகையோ, தெய்வ அருளில்லாமல் விலகாது. இதை விளக்கும் கதை இது:கவுரவர்களும், பாண்டவர்களும் ஒன்றாக அரண்மனையில் வசித்த காலம் அது... சிறு வயதிலேயே, பீமனுடைய தோற்றமும், ஆற்றலும் துரியோதனனுக்கு பயத்தை உண்டாக்கியது. அதை, மேலும் அதிகரிப்பது போல், ஒருநாள், துரியோதனனும், அவன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
பாதாம் குல்கந்து கத்லி!தேவையான பொருட்கள்:பாதாம் பருப்பு - 2 கப்சர்க்கரை - 1 .5 கப்குல்கந்து மற்றும் தண்ணீர் - தலா 1 கப்நெய் - 2 தேக்கரண்டிசெய்முறை: பாதாம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, பின், தோலுரித்து, விழுதாக அரைக்கவும். சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து, உருட்டும் பதத்தில் பாகு தயாரிக்கவும். அதில், அரைத்த விழுதை சேர்த்து, நெய் ஊற்றி, சுருள வதக்கவும். நெய் தடவிய தட்டில் பாதி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
பண்டிகைகளிலேயே அதிக செலவு வைப்பது, தீபாவளி தான். புத்தாடை, புதுமணத் தம்பதியருக்கு நகை, இனிப்பு மற்றும் காரம் என, ஏகத்துக்கு செலவாகும். இதற்கு தேவை பணம். அதனால் தான், வடமாநிலங்களில் இவ்விழாவை, தன்தேராஸ் என்ற பெயரில், பண விழாவாக கொண்டாடு கின்றனர். 'தன்தேராஸ்' என்றால், செல்வம்; தீபாவளிக்கு முன் வரும் திரயோதசியான பிரதோஷத்தன்று, தன்தேராஸ் பண்டிகையைக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
நான், 28 வயது பெண்; திருமணமாகி, இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. நானும், என் கணவரும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறோம். என் கணவரோடு உடன் பிறந்தோர், இரு அண்ணன்கள். எல்லாரும் கூட்டு குடும்பமாக இருக்கின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக, சிறிது தொலைவில், நாங்கள் தனியாக ப்ளாட்டில் வாடகைக்கு குடியிருக்கிறோம்.வேலைக்கு செல்லும் போது, குழந்தையை மாமியார் வீட்டில் விட்டு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
விடிந்தால் தீபாவளி; கையில், மொபைல் போனுடன், ஆழ்ந்த, 'ஸ்லீப்'பில் இருந்த தாண்டவராயனை, அதிரடியாக எழுப்பினாள், மனைவி அலமேலு...''உங்களுக்கென்ன பெரிய, 'ஸ்லீப்பர் செல்'லுன்னு நெனைப்பா... கையில செல்லை பிடிச்சு, குறட்டை விட்டு தூங்கினுக்கிறீங்க... ராத்திரி, பிரேக்கிங் நியூஸ்ல, அந்த ரிசாட்காரங்களுக்கு ஒரு ஆளு குறையுதுன்னு சொன்னாங்கல்ல... பொழைக்கத் தெரிஞ்ச ஜன்மமாயிருந்தா, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
தீபாவளி பண்டிகைக்கு முன், மகாளய பட்ச காலத்தில், நம் முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம், பூமிக்கு வரும் நம் முன்னோர், நம் வழிபாடுகளை ஏற்று, மனத்திருப்தியுடன் மேலுலகம் திரும்புவது, தீபாவளி அமாவாசையன்று தான். இருட்டில் அவர்களுக்கு பாதை தெளிவாக தெரிய வேண்டும் என்பதால், தீபாவளிக்கு முதல் நாள் இரவு, யம தீபம் ஏற்ற வேண்டும். பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றி, வீட்டு மொட்டை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
* சர்க்கரைப் பாகு காய்ச்சும் போது, சில துளிகள் எலுமிச்சை சாறு விட்டால், பாகு முறுகாமல் இருக்கும்.* கடலை மாவை நெய் விட்டு லேசாக வறுத்து, பின், மைசூர் பாகு செய்தால், மணம் தூக்கலாக இருக்கும். நெய்யில், கடலை மாவை குழைத்து, சர்க்கரை பாகில் விட்டால், வாயில் கரையும் அளவுக்கு, பதமாக இருக்கும்.* இரண்டு பங்கு பாசி பருப்பு, ஒரு பங்கு கடலைப் பருப்பு என்ற விதத்தில் அரைத்து செய்தால், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
ஐ.எஸ்.ஐ., உரிமம் பெற்ற, தரமான பட்டாசுகளை பார்த்து வாங்க வேண்டும். மேலும், பட்டாசு வெடிக்கும் போது, பட்டாசு பெட்டியை மூடி வைப்பது அவசியம்.* பட்டாசு வெடிக்கும் போது, காலில் செருப்பும், கெட்டியான காட்டன் உடையும் அணிந்திருப்பதுடன், அருகில், வாகனங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். * குழந்தைகள், கம்பி மத்தாப்பு மற்றும் புஸ்வாணம் கொளுத்தும் போது, வாழைமட்டையை கைப்பிடியாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
பாற்கடலில் அமுதம் கடைந்த போது, அவதரித்தவள், லட்சுமி. ஆமையாக கடலுக்குள் மூழ்கியிருந்த திருமாலை, திருமணம் செய்ய விரும்பினாள்; ஆனால், லட்சுமியை அடைய விரும்பி, அசுரர்கள் அவளைத் துரத்த, எள் தோட்டத்திற்குள் ஓடி மறைந்தாள். அவள் ஓடியதால், எள் செடிகளில் இருந்து வெளிப்பட்ட எண்ணெயுடன், கலந்து விட்டாள், லட்சுமி. அதனால், அசுரர்களால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
கடந்த, 1997ல் வெளியான, டைட்டானிக் என்ற ஆங்கில திரைப்படத்தில் காதல் ஜோடிகளாக நடித்த, லியானோர்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட்டை யாரும் மறந்திருக்க முடியாது.இவர்கள், சினிமா காதல் ஜோடிகள் தான் என்றாலும், உண்மையான காதல் ஜோடிகள் என்றே நினைத்தனர், படத்தை பார்த்தோர்.இப்போது, டிகாப்ரியோவுக்கு, 42 வயது; கேத் வின்ஸ்லெட்டுக்கு, 41 வயதாகிறது. இருவரும், தங்களுக்கென தனித் தனி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
போக்குவரத்து நிறைந்த சாலைகளில், பயணம் செய்வதற்காகவே, லண்டனைச் சேர்ந்த, பெஞ்சமின் நோல்ஸ் என்பவர், 'பெடல் மி' என்ற டாக்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். 'ஆன் லைனில்' தொடர்பு கொண்டால், அங்கு வந்து அவர்களை அழைத்துச் செல்கிறார். இந்த நீளமான பைக்கில் ஓட்டுனர் தவிர்த்து, இருவர் பயணிக்கலாம். குழந்தைகள் என்றால், ஐந்து பேர் செல்லலாம்.— ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X