Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2013 IST
புராணங்களெல்லாம் கட்டுக்கதை என்போர் உண்டு. அவர்களது அறிவுக்கு, அப்படி தோன்றலாம். அவை, உண்மையில் நடந்த சம்பவங்களா, கட்டுக்கதையா என்பது முக்கியமல்ல. அதில் காணப்படும், வாழ்வியலுக்கு தேவையான நீதி கருத்துகள் தான் முக்கியம். மனிதனின் நல்வாழ்வுக்கும், மன ஒருமைபாட்டிற்கும், ஆன்ம பலத்திற்கும் புராணங்கள் துணை செய்கின்றன.பிரகலாதனை பாடசாலையில் சேர்த்தனர். "இரண்யாய நம' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2013 IST
நவ., 2 - தீபாவளிநீதிக்குப்பின் பாசம் என்ற, உயர்ந்த நீதியை, தீபாவளி திருநாள் நமக்கு போதிக்கிறது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும், தவறு செய்தால், தண்டனை நிச்சயம் என்பதை எடுத்துக்காட்டும் விழா தான், தீபாவளி. தேவர்களுக்கு இடையூறு செய்த இரண்யாட்சன் என்ற அசுரன், பாதாள லோகத்தில், ஒளிந்து கொண்டான். அவனைக் கொல்ல, பெருமாள் வராக அவதாரமெடுத்து, பூமிக்குள் சென்றார். அப்போது, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2013 IST
பெண்ணுக்கு பெண்ணே எதிரியா?சமீபத்தில், என் நண்பர், தன் பெண்ணிற்கு, பி.காம்., படித்து முடித்தவுடன் வேலை கிடைத்து விட்டது என்று, சந்தோஷத்துடன், அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். சில நாட்களுக்கு முன், அவரது வீட்டிற்கு செல்ல நேர்ந்தது. நண்பர் மிகவும் சோகமாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், மனதை அதிர வைத்தது.நண்பரின் மகள், முதல் வகுப்பிலிருந்து கல்லூரி வரை, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2013 IST
வருடத்திற்கு, ஒரு முறை மட்டும் நடைபெறும் குற்றால டூர், ஒரே ஒரு வருடம் மட்டும், இரண்டு முறை நடைபெற்றது. அது, கடந்த, 92-ம் வருடம் என்றும், இரண்டாவது முறை நடைபெற்ற குற்றால டூரில், வாசகர்கள் அந்துமணியை அடையாளம் கண்டு, சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றும், அந்த வாய்ப்பு என்ன ஆனது என்பதை, இந்த வாரம் எழுதுவதாக சொல்லியிருந்தேன்.அதற்கு முன், "92-ம் வருடத்தின் முதல் டூரில், நடந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2013 IST
டாக்டர் முன் அமர்ந்திருந்தார் லென்ஸ் மாமா; உடன் நான்!"உங்க ரொட்டீன் என்ன?' - இது டாக்டர்."காலையில ஆபீஸ், மாலையில் வீடு!'டாக்டரிடமும், வக்கீலிடமும் உண்மையைச் சொல்லி விட வேண்டுமல்லவா... மறைத்தார் மாமா.நான் சொன்னேன்: டாக்டர்... காலையில் ஏ.சி., காரில் ஆபீஸ் போவார்; ஆபீஸ் ரூம் ஏ.சி., வீட்டில் ஏ.சி., ஆபீஸ் ரூமை அவர் அடைய, மாடிப்படி ஏறுவது ஒன்று தான் அவரின் உடற்பயிற்சி. போட்டோ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2013 IST
*ம.ராஜாமணி, கோவை: வாழ்வில் வெற்றி பெற தேவை, பட்டறிவா, படிப்பறிவா?இரண்டாவது ஓரளவக்கு உதவும்; முதலாவது ரொம்ப முக்கியம். ஏற்கனவே, பட்டறிவு பெற்றவர்களிடம், அதைப் பெற்றுக் கொள்வது லாபகரமானது!****டி.சுகுமாறன், பசுமலை: ஆண்களை விட, படிப்பில் வேகமாக, பெண்கள் முன்னேறி வருவதன் பின் விளைவு, எப்படி இருக்கும்?வாங்கிக் கொண்டு இருக்கும் ஆண்கள், கொடுக்க வேண்டி இருக்கும் வரதட்சணை!***** ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2013 IST
இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில், மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ஊமைக்குயில், (மலையாளம்) மற்றும் உன் கண்ணில் நீர் வழிந்தால் போன்ற படங்களில், நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பாலு நல்ல நண்பர். சினிமாவில் புது ட்ரெண்டை அறிமுகப்படுத்தியவர். ஒரு சமயம், பாலுவிடம் பேசும் போது, சிவாஜி பற்றிய, பேச்சு வந்தது. அப்போது அவர், "நான் சிவாஜியின் ரசிகன், சிவாஜியின் பல படங்களை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2013 IST
அண்ணாதுரை, புற்றுநோய்க்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பி, நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் இருந்த போது, அவரை சந்தித்தேன். ஓய்வெடுத்துக் கொள்ளும்படி சொன்னேன். ஓய்வெடுத்துக் கொள்ளும் யோசனையை கைவிட்டு விட்டதாக தெரிவித்தார். அதற்கு, அவர் சொன்ன காரணம், என்னைத் திடுக்கிடச் செய்தது."என்னுடைய கட்சி, நான் விரும்பியதற்கு முன்பே ஆட்சிக்கு வந்துவிட்டது. நான், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2013 IST
அமிதாப் பச்சன் படத்தில் இளையராஜா!தமிழில், ஓநாயும், ஆட்டுக்குட்டியும் படத்தை அடுத்து, பிரகாஷ்ராஜ் இயக்கும், உன் சமையல் அறையில் உட்பட, சில படங்களுக்கு, இசையமைக்கும் இளையராஜா, அனுஷ்கா நடிக்கும், ராணி ருத்ரம்மா தேவி படத்திற்கு, தற்போது, இசையமைத்து வருகிறார். இதையடுத்து, இந்தியில், அமிதாப் பச்சன் - ஷாருக்கான் இணையும் படத்திற்கு, இளையராஜா இசையமைத்து வருகிறார். இதற்கு முன், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2013 IST
அன்று, ஆடி வெள்ளிக் கிழமை. குளித்து முடித்து, கூந்தலின் நுனியை முடிச்சிட்டு, மல்லிகை சரத்தில், துளியூண்டு கிள்ளி, முடிச்சில் செருகினாள் ராசாத்தி அக்கா. பேரன் விக்னேஷை, பள்ளிக்கு அனுப்பி விட்டு, பக்கத்தி லிருக்கும் மாரியம்மன் கோவில் திண்ணையை, பசுஞ்சாண மிட்டு மெழுகி, இரண்டு இழை கோலம் போட்டு, நிமிர்ந்த போது, மணி ஏழே முக்கால். திருப்பூரை விட்டு, சற்று தள்ளி இருக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2013 IST
அன்புள்ள அக்காவிற்கு—என் வயது 38. திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியும் எனக்கு குழந்தை இல்லை. என் குடும்பத்தில், இரு அண்ணன், ஒரு தங்கை என, மொத்தம் நான்கு பேர். என் தங்கையின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகள் குறித்து தங்களிடம் ஆலோசனை கேட்கிறேன்.என் தங்கையின் வயது 32. ஆனால், பார்ப்பதற்கு 17 வயது போல் காணப்படுவாள். அவளுக்கு திருமணமாகி பத்து ஆண்டு ஆகியும் குழந்தை இல்லை. அவள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2013 IST
தீபாவளிக்கு அங்கும், இங்கும் பரிசுப் பொருட்கள் பரிமாற்றம் நிறைய நடக்கும். ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை வித்தியாசமானதாக கொடுத்து, அசத்த வேண்டும் என்று நினைப்பர். அவர்களுக்காக, இதோ சில டிப்ஸ்...முதலில், யார் யாருக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று, ஒரு பட்டியல் தயார் செய்து கொள்ளுங்கள்.பின், அவர்களுக்கு, என்னென்ன பரிசு கொடுத்தால், நன்றாக இருக்கும் என, குறித்துக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2013 IST
தீபஒளி ஏற்றிடுவோம்!* கங்கா ஸ்நானம் செய்துபுத்தாடை உடுத்திபலகாரங்களை உண்டுபட்டாசு வெடித்தலேதீபாவளி நன்னாள் எனும்நினைப்பை கொளுத்துவோம்!* ஒலியால் செவிக்கும்ஒளியால் விழிக்கும்பாதிப்புண்டாக்கும்பட்டாசுகளை வெடிப்பதால்கரியாவது காசு மட்டுமல்ல...வளி மண்டலமும் தான்!* ஓசோன் ஓட்டையாலும், "குளோபல் வார்மிங்'காலும்,கொதிக்கும் வெப்பத்தில்கந்தகப்புகை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2013 IST
ஒரு குடும்பம்; ஒரு வாரிசு என்பது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது தான் என்றாலும், சில விஷயங்களில், இதுவே, பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடுகிறது.தான் பட்ட கஷ்டம், தன் மகனோ, மகளோ படக்கூடாது என்ற எண்ணம், பல பெற்றோரிடையே உண்டு. இப்போதெல்லாம், ப்ளஸ்டூக்கு வந்தவுடனேயே பிள்ளைகளும், எல்லாமே நமக்குத்தான் என்று, உணர்ந்து விடுகின்றனர்.சிவராமன், தன் மகன் பிரபுவை உட்கார வைத்து, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2013 IST
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர், அன்னெல் சைமென். 31 வயது பெண்ணான இவரை, அவரது பக்கத்து வீடுகளில் வசிப்போர், சற்று மிரட்சியுடன் பார்க்கின்றனர். நாய், பூனை, கிளி, முயல் போன்றவற்றை, செல்லப் பிராணியாக வளர்ப்பது வழக்கமானது தான். ஆனால், இந்த பெண், 120 கிலோ எடையுள்ள, ஒரு சிங்கத்தை, செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். இந்த சிங்கமும், இவருடன், செல்லமாக விளையாடுகிறது. இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2013 IST
அமெரிக்காவில், மிகவும் பிரபலமான , "டிவி' நடிகை, கர்ட்னி ஸ்டட்டன். "பிக்பாஸ்' உள்ளிட்ட, ஏராளமான, "டிவி' நிகழ்ச்சிகளில், இவர் பங்கேற்றுள்ளார். சமீபத்தில், லண்டன் சென்று, நீண்ட நாட்கள் அங்கு தங்கியிருந்த கர்ட்னி, சில நாட்களுக்கு முன், அமெரிக்கா திரும்பினார். இந்த இடைவெளியில், ஆளே, சுத்தமாக மாறிப் போய் விட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள, சர் ரெஸ்டாரெண்ட் என்ற ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X