Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
பரமபத சோபபான கட்டத்தில், ஒரு நீளமான பாம்பு படம் போட்டிருக்கும். அதன் தலை, மேல் கட்டத்தின் கடைசியிலும், வால், கீழேயுள்ள முதல் கட்டத்திலும் இருக்கும். இந்தப் பாம்பின் பெயர் நகுஷன். இவன் ஒரு ரிஷி. ஆயிரம் அசுவமேத யாகங்கள் செய்து, இந்திரலோக பதவியைப் பெற்றவன். இவனுக்கு, இந்திரனின் மனைவி இந்திராணியை அடைய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதனால், இந்திரலோக பதவியை பெறப்போகிறோம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
நவ.,8 - கந்தசஷ்டிமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இத்தலம், கடலோரத்தில், அலைகள் வீச அமைந்துள்ளதால், 'அலைவா' என்ற பெயரும், இதற்கு உண்டு. முருகப்பெருமான், சூரர்களை வென்று, வாகை சூடிய இடம் இது. இவரது திருவடிகளை, படகிற்கு சமமாக சொல்வர். அதனால் தான், கடற்கரையிலுள்ள செந்தில் முருகனின் திருவடிகளை வணங்கி, வழிபட, பிறவிப் பெருங்கடலை கடக்கலாம் என்ற, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
கட்சி சண்டையில் மாடுகள் வேண்டாமே!விவசாயத்திற்கும், வண்டி இழுக்கவும் உதவும் மாடுகளின் கொம்பில், சிலர் கட்சிக் கொடிகளின் வண்ணத்தைப் பூசுவதோடு, கட்சி கொடியையும் பறக்க விடுகின்றனர். சமீபத்தில், எங்கள் ஊருக்கு அருகில், இரு கட்சிக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் போது, கட்சி சாயம் பூசியிருந்த, ஒரு மாட்டை வெட்டிக் கொன்று விட்டனர். அரசியல் தகராறைக் காரணம் காட்டி, ஒரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
ஒரு மாவட்டத்திற்கு, கண்காணிப்பாளராக இருந்தோமா, சட்டம் ஒழுங்கு, குற்றங்களை பார்த்தோமா என்றுதான், பெரும்பாலான, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இருக்கின்றனர். இதில், சிலர் விதிவிலக்கு. அவர்களில் ஒருவர்தான், காளிராஜ் மகேஷ்குமார் ஐ.பி.எஸ்., திருவாரூர் மாவட்ட, காவல் துறை கண்காணிப்பாளர்.இவர், வாரமலர் இதழில், இடம் பெற காரணம், கான்ஸ்டபிள்களும், தன்னைப் போல, ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வர வேண்டும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
'பி.எம்.ஜெ., - பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல்' - உலகின் பல நாட்டு மருத்துவர்களின் சாதனைகள், கீதை, குரான், பைபிளில் காணப்படும் மருத்துவ குறிப்புகள், மருத்துவத் துறையின் புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், மருத்துவர்கள் சந்தித்த சவால்கள், அவற்றை எதிர்கொண்டு ஜெயித்த முறை என, மருத்துவர்களுக்கு தேவையான அனைத்தும், இந்த இதழில் இருக்கும்.அதில், குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சர்வே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
ம.கருப்பசாமி, திருப்பூர்: நீண்ட நாள் வேலை இல்லாமல் இருந்த எனக்கு, பொறுப்பான வேலை வாங்கி தந்து, பெண்ணையும் திருமணம் செய்து தர தயாராக உள்ளனர் பெண் வீட்டில். இதனால், என் தன்மானம் இழக்குமா? அதற்கு நான் உடன்படலாமா?வாய்ப்புகள் உமது வீடு தேடி வந்து, கதவைத் தட்டாது. இதுவரை, வேலையில்லாமல் பட்ட அவதியையும், தன்மான இழப்பையும் எண்ணிப் பாருங்கள்; மனதில் வேறு கேள்வியே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
பகல் 12:00 மணிக்கு, டவுனுக்குள் நுழைந்தது அந்த பஸ்; எல்லாரும் இறங்கினர். ஊர்க்காரர்களுடன், சோமனும் வந்திருந்தான். அவர்களுக்கு, புற நகரில், வீட்டு மனை ஒன்றை, பார்க்க வேண்டி இருந்தது.'சோமா... நீயும் வாயேன்... சும்மாதானே இருக்கே. வந்து இடத்தைப் பார்த்து, உன் அபிப்ராயத்தையும் சொல்லேன்...' என்று, சோமனை அழைத்திருந்தனர். 'சும்மாதானே இருக்கே' என்ற வார்த்தை, சோமனை சுட்டது. என்றாலும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
சென்னையில், போலீசாரின் பிடியில் சிக்காமல், புதுச்சேரிக்கு தப்பிச் சென்றார் பாரதியார். புதுவையில் இருந்தபடியே, மீண்டும், 'இந்தியா' பத்திரிகையை துவக்கினார். இப்போது போல், அந்தக் காலத்தில், பத்திரிகைகள், விற்பனைக்காக, கடைகளுக்கு வராது. சந்தா செலுத்துவோருக்கு மட்டுமே, தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.இன்றுள்ளது போல், அக்காலத்தில், எல்லா ஊர்களிலும், தபால் ஆபீஸ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
சிவகார்த்திகேயன் சம்பளம் ஐந்து கோடி!எதிர்நீச்சல் படத்துக்கு முன், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்த சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பின், ஐந்து கோடி கேட்கிறார். 'ரொம்ப அதிகமா இருக்கே...' என்று, ஓரிரு கோடியை குறைக்கச் சொல்லும் படாதிபதிகளிடம், 'இந்த மாதிரி பேரம் பேசும் நபர்களை கண்டாலே, எனக்கு பிடிக்கிறதே இல்லை...' என்று கூறி, முகத்தை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
தெருவையே ரணகளம் செய்து, பெய்யும் மழைநீர் வீணாக கடலை அடைவதும், எட்டு மாத கர்ப்பிணியான ராகினி, வார்த்துப் போட்ட கனத்த தோசையும், மதியத்திற்கு, அவள் சமைத்துக் கொடுக்கும் லெமன் ரைஸ் என்று, எதுவுமே மாறாது என்று தான் அவனுக்குத் தோன்றியது. கசந்த புன்னகையுடன், ஆபிஸ் பேருந்தில் ஏறிய, ஐந்தாவது நிமிடம், நிலைமையே மாறி விட்டது.முதல் சீட்டை, யாருக்கும் கொடுக்காமல், எப்போதும் தானே, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
அன்புள்ள அக்காவுக்கு வணக்கம்.என் வயது 44. நான், ஒரு அரசு அலுவலகத்தில், கை நிறைய சம்பளம் பெறுபவள். எனக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகின்றன. வளர்ந்த பிள்ளைகள் உள்ளனர். இவ்வளவு வருட தாம்பத்தியத்தில், என் கணவரை, நான் இப்பொழுது தான் புரிந்து கொள்ள முடிந்தது. எனக்காக வாழ்வது போன்றும், என் சொல் மீறாதவர் போலவும் நடித்துள்ளார் என்பதை, அறிந்து கொண்டேன்.என் கணவர் பற்றிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
மனதால்....அன்புத் தாயே!மரணத்தின் கதை கேளாய்...என்திரும(ர)ணக் கதை கேளாய்!வாயைக் கட்டி,வயிற்றைக் கட்டி,உதிரம் சிந்திஉழைத்த உழைப்பெல்லாம்விழலுக்கு இறைத்தநீராகி விட்டதம்மா!ஐந்து காசு பெறாதவனுடன்அட்சதை தூவிஅனுப்பி வைத்தாய் என்னைஅவன்ஆண்பிள்ளை என்றதனால்...அரை லட்சம்சம்பாதித்தும்,அடிமை வாழ்வுவாழ்கிறேன் என்பதைநீ அறிவாயோ?மீண்டு வர வழியில்லைமீட்டெடுக்க யாருமில்லைமீளா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
கொடைக்கானல் மலையில், அந்தக் கார், சீரான வேகத்தில், இறங்கிக் கொண்டிருந்தது. சுற்றிலும் தெரிந்த, பசுமை படர்ந்த மலைத்தொடர்களை ரசித்தபடி, பயணம் செய்து கொண்டிருந்த ராகவன், டிரைவரிடம்... ''சுப்பு... வண்டியை, ஒரு ஓரத்தில், ஓரங்கட்டி நிறுத்துப்பா. பாத்ரூம் போய்ட்டு போகலாம்,'' என்றார்.கொடைக்கானல் பள்ளி ஒன்றில், ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மகளை பார்த்துவிட்டு, சேலத்துக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
புல்லாங்குழல் மேதை, பண்டிட் அரி பிரசாத் சவுரசியா, சமீபத்தில், குருவாயூர் கோவிலில் புல்லாங்குழல் கச்சேரி நடத்தினார். அங்கு, திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து, 'நான் அற்புதமாக புல்லாங்குழல் வாசிக்கிறேன் என்கின்றனர். இந்த புல்லாங்குழலை தயாரித்த சிவதாசன், இங்கு இருக்கிறார். அவர் மேடைக்கு வரவும்...' என்ற பண்டிட், அவரை மேடைக்கழைத்து, சிவதாசனின் கைவண்ணத்தை பாராட்டி, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
கொச்சி, மட்டாஞ்சேரிக்கு, ஒரு தனி சிறப்பு இருக்கிறது. இங்கு, யூத இன மக்கள் வாழ்கின்றனர். கி.மு., 605ல், பெர்ஷிய மன்னரால் நாடு கடத்தப்பட்ட, பத்து, யூத குடும்பத்தினர், கேரளா கொடுங்கல்லூரில் குடியேறினர். பின், பாபிலோன் மற்றும் ஜெருசலேமில் இருந்தும், பல யூத குடும்பங்கள், கேரளாவில் குடியேறினர். இவர்கள், அப்போது, அப்பகுதியை ஆண்டு வந்த, மன்னரின் விருந்தினர்களாக போற்றப்பட்டனர். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர், ராமாயண நாடகங்களை ஆராய்ச்சி செய்து, டாக்டர் பட்டம் பெற்று இருக்கிறார். கோட்டயம் வடவாதூர் பாதிரியார் பயிற்சி பள்ளியில், ஆசிரியராக இருக்கிறார் பாதர் தாமஸ் பாறைக்கல். இவர், டாக்டர் பட்டம் பெற, மகாத்மா காந்தி யுனிவர்சிட்டியில் சேர்ந்தார். ஆராய்ச்சிக்காக இவர் தேர்ந்தெடுத்தது, ராமாயண நாடகங்கள், பாதிரியார் பயிற்சி பள்ளி மாணவர்கள் பைபிளுடன், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
கடந்த, 30 ஆண்டுகளாக பாடிக் கொண்டிருக்கும், பாடகி சித்ராவின், ஐம்பதாவது, பிறந்த நாளை, மேடை போட்டு, விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று, அவருடைய ரசிகர்கள் விரும்பிய போது, அதற்கு மறுத்து விட்டார் சித்ரா. தன், ஒரே மகள் நந்தனா மறைந்ததில் இருந்து, ஆடம்பர விழாக்களை விரும்பாத சித்ரா, ஒரு டிரஸ்ட் நிறுவி, 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, அதன் மூலம், ஏழை எளியவர்களுக்கு, உதவ முடிவு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
ஹாலிவுட்டின் பிரபல நடிகை, லிண்ட்சே லோகன். இவரின் தந்தைக்கு, இரண்டு மனைவி. மூத்த மனைவிக்கு பிறந்தவர் தான், லிண்ட்சே. இரண்டாவது மனைவிக்கு, ஆஷ்லி என்ற மகள் உண்டு. இந்த ஆஷ்லிக்கு, 25 வயதாகிறது. இவருக்கு, இளம் வயதில், தன் அக்கா எப்படி தோற்றமளித்தாரோ, அதேபோல் நாமும் தோற்றமளிக்க வேண்டும் என்ற, விசித்திர ஆசை ஏற்பட்டது. உடனடியாக, தன் முகத்தில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
சிறந்த கலைஞர்கள் பலர், வாழும் நாட்களில், வறுமையில் வாடுவதையும், மறைவுக்கு பின், போற்றப்படுவதையும், நாம் பார்த்து இருக்கிறோம். மறைந்த சிற்பி, ராம் கிங்கர் பெஜ் வாழ்க்கையும், இப்படி தான். கடந்த, 1906ல் வங்காளம், பாங்குறா கிராமத்தில் பிறந்த இவர், சிறு வயதில் இருந்தே, சிற்பியாக ஆசைப்பட்டார். அதன்படி, சாந்தி நிகேதனில், சிற்பக் கலை பயிற்சி பெற்றார். தான் வடித்த சிற்பங்களின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
கேரள, மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பழமள்ளுரை, சமோசா தேசம் என்று அழைக்கின்றனர். இந்த ஏரியாவுக்குள் சென்றால், எங்கும், சமோசா வாசனையைத் தான் உணர முடியும். இங்குள்ள, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில், சமோசா தயாரித்து விற்கப்படுகின்றன. அதிகாலை, 2:00 மணி முதல், இங்கு, அடுப்புகள் எரியத் துவங்கும். முப்பது ஆண்டுகளுக்கு முன், குஞ்சு அகமது என்பவர், முதல் முதலாக, சமோசா தயாரிப்பில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X