Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
முருகனின் ஆறுபடை வீடுகளான, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் சோலைமலை போன்ற தலங்களை நாம் அறிவோம். ஆனால், விநாயகருக்கான ஆறுபடை வீடுகள் தெரியுமா?கடலூர் மாவட்டத்தில் உள்ள திருநாரையூர் - பொல்லாப்பிள்ளையார்; திருவண்ணாமலை - அல்லல் போக்கும் விநாயகர், விருத்தாச்சலம் - ஆழத்துப்பிள்ளையார், திருக்கடையூர் - கள்ளவாரண பிள்ளையார், மதுரை - சித்தி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
தீதும் நன்றும் பிறர் தர வாரா!என் நண்பனுக்கு, பெண் பார்த்து, திருமண நிச்சயதார்த்தத்திற்கு தேதியும் குறித்தாகி விட்டது. இந்நிலையில், திருமண வேலை விஷயமாக பைக்கில் சென்ற போது, ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் எடுத்துச் செல்லாததால், போலீசில் மாட்டி, அபராதம் கட்ட நேர்ந்தது. உடனே, அந்த பெண் ராசி தான் இதற்கு காரணம் என, முனகினான்.பின், வீட்டை சுத்தம் செய்ய முயன்ற போது, மாடி படியில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
'பம்பரக் கண்ணாலே... ஜிகு ஜிகு ஜிகு ஜியாலங்கடி ஜிய்யாலோ... ஹலோ மை டியர் ராமி...' என, சந்திரபாபு பாடிய பாடல்கள் என்றாலே, மற்ற பாடல்களில் இருந்து வேறுபட்டு, ஆங்கில வார்த்தைகள் கலந்து, மேற்கத்திய பாணியில், துள்ளல் இசை கலந்திருக்கும் என, தனி முத்திரை விழுந்திருந்த காலக்கட்டம் அது!கண்ணதாசன் தயாரித்த, கவலை இல்லாத மனிதன் என்ற படத்தின் பாடல் கம்போசிங்கின் போது, எம்.எஸ்.வி.,யிடம், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
'பட்டம் பெற்ற டாக்டர்கள் கிராமங்களுக்குச் சென்று குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளாவது பணியாற்ற வேண்டும்; அவர்களிடம் சேவை மனப்பான்மை வளர வேண்டும்...' என்றெல்லாம் பதவியில் இருப்பவர்கள் அவ்வப்போது அறிக்கை விடுவர்; மருத்துவ மாநாடுகள் மற்றும் பட்டமளிப்பு விழாக்களில் பேசுவர்.அதோடு நில்லாமல் கிராமங்களில் உள்ள, 'பிரைமரி ஹெல்த் சென்டரில்' இரண்டு ஆண்டுகள் வேலை செய்தால், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
* ஆ.ராகேஷ், திருப்பூர்: என் நண்பர் பட்டதாரி; 'மாதச் சம்பள வேலை வேண்டாம்; விவசாயத்தில் ஈடுபடப் போகிறேன்...' என்கிறார். அவர் முடிவு சரிதானா?சரிதான்; வரவேற்கிறேன்! எல்லா விவசாயிகளையும் போல செக்குமாடு மாதிரி செயல்படாமல், இயற்கை உரம், மருந்து என மாற்றி, பயிர் செய்தால், அதிக விளைச்சல் கிடைக்கும். இவ்வகை தானியங்களையும், காய், கனிகளையும் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க தயாராக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
செய்தித்தாளைப் படித்து முடித்ததும், குளிப்பதற்காக கிளம்பினார், அருணாசலம். அப்போது, மொபைல் போன் ஒலிக்க, எடுத்துப் பார்த்தார்; நண்பர், கதிரேசனிடமிருந்து அழைப்பு!''கதிரேசா... ஏதாவது அவசர விஷயமா... மணி, 11:00 ஆகப் போகுது... குளிச்சுட்டு வந்து பேசட்டுமா...'' என்றார்.'சரி' என்று அவர் கூறியதும், குளியல் அறைக்குள் நுழைந்தார், அருணாசலம். அருணாசலமும், கதிரேசனும் நண்பர்கள். தங்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
வேலு நாச்சியார் நாடகத்தை திரைப்படமாக்கும் வைகோ!பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர், வீரமங்கை வேலு நாச்சியார். அவரது பெயரில் தொடர்ந்து தமிழகத்தில் நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நாடகத்தை தன், 'கண்ணகி பிலிம்ஸ்' சார்பில், திரைப்படமாக தயாரிக்கப் போவதாக சொல்கிறார், ம.தி.மு.க., தலைவர் வைகோ. அதுபற்றி அவர் கூறும்போது, 'இந்நாடகத்தில் வேலு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
அசுர வீரர்களில் ஒருவன், வலன்; அளவற்ற சிறப்புகளையும், உயர்வையும் வேண்டி, சிவபெருமானை நோக்கி, கடும் தவம் செய்தான்.அவன் தவத்தில் மகிழ்ந்து, அவனுக்கு காட்சியளித்தார், சிவபெருமான். சிவபெருமான் திருவடிகளில் விழுந்து வணங்கிய வலன், தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டு, வரம் வேண்டினான்.அவன் வேண்டிய வரத்தை தந்து, அருளினார், சிவபெருமான்.வரம் பெற்ற அகந்தையில், மனிதர்களை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
என் மேஜையில் தேங்கியிருந்த பைல்களைப் பார்த்த என் நெருங்கிய நண்பர் ஒருவர், 'உன்னை நல்ல உழைப்பாளின்னுல்ல நினைச்சேன்; இப்படிக் கடைஞ்செடுத்த சோம்பேறியா இருக்கியே... இத கொஞ்சங்கூட எதிர்பார்க்கல...' என்று சவுக்கடி கொடுத்தார், பாருங்கள்... 'சுரீர்' என்றது.எப்போது இந்த மேஜையில் கை வைக்கப் போனாலும், அந்த நேரம் பார்த்து, தொலைபேசி அழைப்பு வரும்; எதிராளியோ, நீண்ட நேரம் பேசும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
அன்பு சகோதரிக்கு —என் வயது, 52; என்னுடன் சேர்த்து, என் பெற்றோருக்கு, ஏழு பெண்கள். நான், நான்காவது பெண். என் தந்தை, அரசு பணியில் கிளார்க்காக பணிபுரிந்தவர். என் மூன்று அக்காக்களுக்கும் கல்லூரி படிப்பு எட்டாக்கனியாகி விட்டது. நான் நன்றாக படித்ததால், 'ஸ்காலர்ஷிப்' கிடைத்து, எம்.ஏ., வரை படித்தேன். பின், நான் டியூஷன் எடுத்து, என் தங்கைகளை, டிகிரி படிக்க வைத்தேன்.அத்துடன், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
சுதந்திர போராட்ட வீரர்களை, ஆங்கிலேயர், தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருந்த செல்லூலர் ஜெயிலுக்குள் நுழைந்தோம். அப்போது, ஒரு எருமை கன்றும் நுழைந்தது என்று கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா... அதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன்... மைய கோபுரத்தில் இருந்து ஏழு பிரிவுகளாக, மூன்று மாடி, 690 கொட்டடிகளாக கட்டப்பட்ட இச்சிறைச்சாலை, தற்போது, நான்கு பிரிவுகளுடன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
பத்திரிகையாளர், பி.வி.கிரி எழுதிய, 'ராஜாஜி' எனும் நூலிலிருந்து: ராஜாஜிக்கு, அவரது பெற்றோர் வைத்த பெயர், ராஜகோபாலன்; திருமணமாகி, குடும்பத் தலைவரான பின், கோபாலாசாரி என்றழைக்கப்பட்டார். வழக்கறிஞராகி, சமூக மனிதரான பின், ராஜகோபாலாசாரியார் எனப்பட்டார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பின்னரோ, ஆசாரியார் என்று குறிப்பிடப்பட்டார். அரசியலில், ஆசாரியாரின் செல்வாக்கு ஓங்கத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
இருந்தால் கொடுங்கள்!அம்மாக்களே...மனதைப் புண்படுத்தாமல்அனைவரையும் அரவணைக்கதிகட்டாத அன்பைக் கொடுங்கள்!அப்பாக்களே...நல்ல மனிதத்துடன்தரணி போற்ற வாழஉயர்ந்த பண்பைக் கொடுங்கள்!ஆசிரியர்களே...உலகை ஜெயித்துதாய்நாட்டின் பேர் காக்கஅறிவுடன் அடக்கத்தைக் கொடுங்கள்!உறவினர்களே...மகிழ்ச்சி, துக்கம்எல்லாவற்றிலும் உடனிருக்கஅகலாத நம்பிக்கையைக் கொடுங்கள்!நண்பர்களே...வாழ்வின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
பணி இட மாறுதலில் வந்திருந்தான், முரளி. சுறுசுறுப்பாக இருந்ததுடன், சீனியர் பத்மநாபனிடம், நல்ல பேரை சம்பாதிக்க, பவ்யமாகவும் நடந்தான். அதைக் கவனித்த பத்மநாபன், 'இங்க பாருப்பா... நீ, உன் வேலைய கவனமாக செய்தாலே போதும்; அதுவே, எனக்கு கொடுக்கிற மரியாதை. மற்றபடி, முகஸ்துதி செய்வதோ, கூழைக் கும்பிடு போடுவதோ வேணாம்...' என்று, 'பட்'டென்று சொல்லி விட்டார்.ஆனாலும், மேலதிகாரி என்ற பந்தா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
உலகின் மிக அடர்த்தியான வனப்பகுதி, தென் அமெரிக்க நாடுகளில் உள்ள அமேசான். இங்கு, பல்வேறு வகையான தாவரம், பாம்பு, மீன் உட்பட, பல ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உள்ளன.கடந்த, இரண்டு ஆண்டுகளில் இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில், புதிதாக, 381 உயிரினங்கள் வாழ்வது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; இவற்றில் பெரும்பாலானவை, தாவரங்கள் மற்றும் மீன்கள்.ஒவ்வொரு ஆண்டும், இங்கு, பல புதிய உயிரினங்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
'அடேங்கப்பா, இவ்வளவு துட்டா...' என்று ஆச்சரியப்பட்டார், ஸ்லொவான் ஸ்டீபன்ஸ் என்ற, 24 வயது பெண். வட அமெரிக்காவில், பிளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த இவர், டென்னிஸ் விளையாட்டில், எட்டு மாதத்துக்கு முன், 957வது ரேங்கில் இருந்தார்; ஆனால், யு.எஸ்., ஓப்பன் போட்டியில், முதல் இடத்துக்கு வந்து, விளையாட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதற்காகன, பரிசு தொகை, 24 கோடி ரூபாய் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
நாட்டை பெருமைப்படுத்தும் வரலாற்று சின்னங்களில் தங்கள் பெயரை கிறுக்குவது சிலருக்கு வழக்கம். அத்தகைய, வரலாற்று சின்னமான சார்மினாரில், தன் பெயரை கிறுக்கியபோது, காவலாளிகளிடம் அகப்பட்டுக் கொண்டான், இந்த வாலிபன். 'இது பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்...' என்று கூறி, தோப்புக்கரணம் போடச் சொல்லி தண்டனை கொடுத்து விட்டனர். இந்த தண்டனையை பார்த்தாவது, மற்ற கிறுக்கன்களுக்கு புத்தி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
தற்சமயம், மனநிலை பாதிக்கப்பட்டு, கேரளாவில் உள்ள தலசேரி ரயில் நிலையத்துக்கு அருகில், ஒரு கடை திண்ணையில் காலத்தை ஓட்டுபவர், பிரியதர்ஷினி டீச்சர். பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய இவரை, 'பைத்திய டீச்சர்' என்றே அழைக்கின்றனர்.இவர், இளமையில், திருவனந்தபுரம் - மங்களூரூ வரை செல்லும் ரயில் ஓட்டுனரை காதலித்தார். தலசேரிக்கு ரயில் வரும்போதெல்லாம், அவரை சந்திக்க, ரயில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
கால் பாதங்களின் சுகாதாரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர், ஜப்பானியர். இதனாலேயே, ஒருவரது பாதம், எந்த அளவுக்கு சுகாதாரமாக உள்ளது என்பதை கண்டுபிடிக்க, 'ரோபோ' வடிவிலான, நாயைக் கண்டுபிடித்துள்ளது, ஒரு ஜப்பானிய நிறுவனம். இந்த நாய், ஒருவரது பாதம் அல்லது அவர் பயன்படுத்திய, 'சாக்ஸ்' ஆகியவற்றை நுகர்ந்து அதில் நல்ல வாசனை வந்தால், வாலை ஆட்டும்; மோசமான வாசனை வந்தால், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X