Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010 IST
நாட்டில், பல இடங்களில் புண்ணிய காரியங்களும் நடைபெறுகின்றன; பாவ காரியங்களும் நடைபெறுகின்றன. இவை இரண்டும் இருக்கத்தான் செய்கின்றன. கோவில், குளம் ஏற்படுத்தி, வழிபாடு செய்கின்றனர். இதெல்லாம் புண்ணியத்தை அளிப்பவை. அதேபோல், பாவத்தை சேர்க்கும் காரியங்களும் நடைபெறுகின்றன. பிறர் பொருளை அபகரிப்பது, துரோகம் செய்வது, ஜீவன்களைக் கொல்வது போன்றவை பாவ காரியங்கள்.இவைகளெல்லாமே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010 IST
நவ., 11 -  கந்தசஷ்டி!எதிரிகளை மன்னிக்கும் மனப்பக்குவம் யாருக்கு இருக்கிறதோ, அவரே உலகில் உயர்ந்தவர் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடக்கிறது. காஷ்யபர் என்ற முனிவருக்கு இரண்டு மனைவிகள். ஒரு மனைவி தேவர்களையும், இன்னொரு மனைவி அசுரர்களையும் பெற்றாள். தேவ குழந்தைகளின் தலைவனாக தேவேந்திரனும், அசுரக் குழந்தைகளின் தலைவனாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010 IST
இளைஞர்கள் இப்படித்தான்!என் ஆறு மாதக் குழந்தையுடன், ரயிலில் பயணித்துக் கொண்டி ருந்தேன். எனக்கு எதிர் சீட்டில் நான்கு இளைஞர்கள் பயணித்தனர். வழிசலான பார்வை, அசட்டு சிரிப்பு, ஒரு மாதிரியான பேச்சு என, நால்வருமே அக்மார்க் ஜொள்ளர்களாக இருந்தனர். என்னையும், என் அருகிலிருந்த நடுத்தர வயது பெண்ணையும், "சைட்' அடித்ததோடு, ஸ்டேஷனில் ரயில் நிற்கும் போதெல்லாம் பிளாட்பாரத்தில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010 IST
ஜிங் குவாங் என்ற சமவெளி, லாவோஸ் நாட்டில் உள்ளது. இது, ஜார்ஸ் சமவெளி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மணற்பாறை, கருங்கல் மற்றும் சுண்ணாம்பால் செய்யப்பட்ட விசித்திரமான,  தொன்மையான ஜாடிகள் ஆயிரக் கணக்கில் காணப்படுகின்றன. இவை கற் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. புதிர் நிறைந்த கவர்ச்சியான இந்த ஜாடிகள் தொல்லியலாளர்களையும், விஞ் ஞானிகளையும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010 IST
சென்னையிலிருந்து ஒரு வாசகர், தன் மகளுக்கு வரன் பார்த்த அனுபவம் பற்றி எழுதிய கடிதத்தைப் படியுங்களேன்...அன்புள்ள அந்துமணிக்கு வணக்கம். நான் தங்களுடைய வாசகன். நான் ஒரு தேசிய வங்கியில் வேலை பார்த்து, ஓய்வு பெற்றவன். வருமான வரித்துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் என் மனைவி. எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் தான். என் மகளுக்குத் திருமணம் செய்ய வரன் பார்த்துக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010 IST
** ஆர்.ராதா, தேனி: இந்த வரதட்சணைக் கொடுமை எப்போது ஒழியும்? பெண்கள் வரதட்சணை கேட்கும் காலம் என்று வரும்?அடுத்த 20 ஆண்டுகளில் ஒழியும் அறிகுறிகள் தென்படுகின்றன. ஒவ்வொரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும், ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. "ஸ்கேனிங்' என்ற நவீன விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து, பெண் என்றால் அதன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010 IST
(டி.வி.ஆர்., நினைவு  சிறுகதை போட்டியில்  ஆறுதல் பரிசு  பெற்ற சிறுகதை - 1 )நெடுஞ்செழியன்சொந்த ஊர்: சிதம்பரம். "வளர்தொழில்' இதழில் 13 ஆண்டு  பணியாற்றியவர். இவரது கவிதைகள், பல இதழ்களில் வெளியாகியுள்ளன.  இரு நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளது. முதல் சிறுகதை இது. சிதம்பரத்தில் நூல் விற்பனையகம் ஒன்றை நடத்தியவாறே, கடலூர் மாவட்டத்திற்காக சிற்றிதழ் ஒன்றையும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010 IST
நவாப் ராஜமாணிக்கம் என்பவர், அந்தக் காலத்தில் கொடிகட்டிப் பறந்த நாடக நடிகர். சொந்தமாக நாடகக் கம்பெனி வைத்து, தமிழகம் முழுவதும் நாடகங்கள் நடத்தி வந்தார். இவர், ஒருமுறை தன் நாடகத்தைக் கும்பகோணத்தில் நடத்திக் கொண்டிருந்தார். அதே நாட்களில், எம்.ஆர்.ராதாவும் கும்பகோணத்தில் தன் நாடகத்தை நடத்தி வந்தார்.நவாப் ராஜமாணிக்கத்தினுடையது புராண-பக்தி நாடகங்கள்! ராதாவுடையதோ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010 IST
விஜய்யை இயக்கும் பிரமாண்ட இயக்குனர்!"த்ரீ இடியட்ஸ்' படத்தை மூன்று ஹீரோக்களை வைத்து இயக்கப் போவதாக சொன்ன டைரக்டர் ஷங்கர், அந்த முயற்சியை தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மாறாக, விஜய்யை வைத்து, முதன் முதலாக ஒரு பிரமாண்ட படத்தை இயக்க அவர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. "வேலாயுதம்' படப்பிடிப்பு முடிந்ததும், ஷங்கருக்கு கால்ஷீட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010 IST
""கொரங்குல இருந்து மனுசன் உருவானதாச் சொல்றாங்க. நீ ஏன்டா ஆஞ்சி... இன்னும் கொரங்காவே இருக்கற?'' என்று கேட்டான் கதிரேசன்.சங்கிலியால் கட்டப்பட்டு, அவனுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்த அவனது குரங்கு, தன் உட்குழிந்த கோலிக் குண்டு கண்களால், அவனையே ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. வாய் பேச முடியாவிட்டாலும், அதற்கு, அவன் பேசுவது புரியும். மனிதர்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010 IST
அன்பு அம்மா — நான் வசதியான குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு இரண்டு சகோதரர்கள்; ஒரு சகோதரி. நான் கல்லூரியில் படித்துக் கொண்டி ருந்தபோது, என் தகப்பனார் இறந்து விட்டார். என் தாயார், தனக்கு உடல்நிலை சரியில்லை என காரணம் காட்டி, படுக்கையிலேயே இருப்பார். என் 24வது வயதில், நிறைய செலவு செய்து, ஒரு டாக்டருக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர்.திருமணம் நடந்த சில நாட்களில், அவர் ஆண்மை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010 IST
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, புரூனே நாட்டின் சுல்தான், ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. எண்ணெய் வளமிக்க நாடான புரூனே, 1967ல் தனி நாடானது. அதன் சுல்தானாக (மன்னராக) ஹசனன் போக்கியா முயுசுதீன் வாதுலா இருந்து வருகிறார்.எண்ணெய் வளத்தால் கொழிக்கும் அந்நாட்டு சுல் தானின் வருமானத்திற்கு, அளவே இல்லாமல் போய் விட்டது. ஒரு வினாடிக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010 IST
கேட்டை யாரோ தட்டுகிற சப்தம் கேட்டது.வேணுகோபால், "டிவி' ஒலியைக் குறைத்தான். எழுந்து, ஜன்னல் திரையை விலக்கி, தெருவைப் பார்த்தான்.வெளியில் முருகானந்தம். முகம் மலர்ந்த வேணுகோபால், திரையை மூடிவிட்டு, வாசல் கதவைத் திறந்தான். சாவி கொண்டு போய் கேட்டை திறந்து, ""வா... வா...'' என்று வரவேற்றான்.""சவுக்கியம் தானே...'' என்றபடி, உள்ளே வந்தான் முருகானந்தம்.அவன் உள்ளே வந்ததும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010 IST
* பிரபஞ்சத்தில்கருப்புப் பள்ளங்கள்பல சூரியன்களைவிழுங்கி ஏப்பம் விடுவதைவிஞ்ஞானிகள் காட்டுகின்றனர்!* மனித உள்ளங்களை தான்இன்னும்எட்டிக்கூட பார்க்க முடியவில்லை...உள்ளே விழுந்தசித்தர்கள், ஞானிகள்இன்னும் திரும்பவில்லை!* உள்ளமும், உதடுகளும்இணைந்தால்...உலகம் நம்மை தேடிவருமாம்!* கைநீட்டிகடன் கேட்கும் போதுபொய்யான வாய் பேசுகிறது...கொடுத்ததைதிருப்பிக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010 IST
* மியான்மரில் வெள்ளை யானை!மியான்மர் நாட்டில் (பர்மா) சமீபத்தில் வெள்ளை யானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராகைன் மாநிலத்தில் மங்க்டோ என்ற ஊரின் அருகே உள்ள அடர்ந்த காட்டில் சுற்றித்திரிந்த வெள்ளை யானையை, வன அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 18 வயதான அந்த யானை, ஏழு அடி உயரம் கொண்டது. "வெள்ளை யானை வலிமையின் சின்னம். எந்த நாட்டில் வெள்ளை யானை உள்ளதோ, அந்த நாடு செழிப்பாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X