Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
எத்தனையோ கோவில்களுக்கு சென்று, சன்னிதியின் முன் நின்று, மூலவரை தரிசித்திருப்பீர்கள்... கர்ப்பக் கிரகத்தில் உள்ள சிலை, உங்கள் உயரத்துக்கோ அல்லது அதை விட உயரமாகவோ, குட்டையாகவோ இருக்கும். தரையில் அமர்ந்து அதை வணங்கும் போது, உயரமான சிலை என்றால், நீங்கள் அமர்ந்திருக்கும் மட்டத்திலிருந்து உயரமாகவும், சிறிய சிலை என்றால், உங்கள் மட்டத்துக்கோ அல்லது அதை விடக் குறைவாகவோ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
தனிமையில் தவிக்க விடாதீர்கள்! கடந்த, தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன், பக்கத்து வீட்டு பெரியவர், என்னை காண வந்தார். நான், அவரை வரவேற்று பேசுகையில், 'எனக்கு ஒரு உதவி செய்வீங்களா தம்பீ...' என கேட்க, 'சொல்லுங்க...' என்றேன். 'இந்த வருஷ தீபாவளிக்கு, நீங்க உங்க குடும்பத்தோடு எங்க வீட்டுக்கு வந்து, கங்கா ஸ்நானம் செய்து, லட்சுமிய கும்பிட்டு, புத்தாடை உடுத்தி, பட்டாசு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
திரைப்படங்களில் நடிக்கத் துவங்கிய காலத்தில் இருந்தே, தன் குடும்பத்தினருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை, சந்திரபாபு. புகழ் பெற்று விளங்கிய சமயத்தில் கூட, அவரது வீட்டில் சினிமாக்காரர்களைத் தான் பார்க்க முடியுமே தவிர, குடும்பத்தினரைக் காண முடியாது. சில காலம் பெற்றோரைத் தன்னுடன் வைத்திருந்தார். ஆனால், அவர்களையும் ஒரு நாள், கோபத்தில், வீட்டை விட்டு வெளியே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
சென்னைக்கு முதன் முறையாக வரும் வெளியூர் அன்பர்கள், இங்குள்ள மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்பது பற்றியும், இங்குள்ள திருட்டு கும்பல், பிக்-பாக்கெட் பேர்வழிகளிடம் ஏமாறாமல் தப்புவது எப்படி என்பது பற்றியும், அனுபவப்பட்ட வாசக, வாசகியர், இ.உ.இ., பகுதியில் எழுதுவதுண்டு. நானும் அவ்வப்போது, பா.கே.ப., பகுதியில் எழுதி இருக்கிறேன்.சமீபத்தில் கேள்விப்பட்ட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
ஜி.ராஜேஸ்வரி, சிவகங்கை: கல்லூரியில் படிக்கும் என் மகள், ஆண் நண்பர்களுடன் பழகுவது மிகவும் பயமாக உள்ளது. என் பயத்தை அவளிடம் எப்படி கூறுவது?இக்காலப் பெண்களுக்கு ஆண்களுடன் பழகும் எல்லை நன்றாகவே தெரியும். பொத்திப் பொத்தி வளர்ப்பதால் தைரியமற்றவர்களாக போவதுடன், எதிர்காலத்தில் ஊரை, உலகத்தை, கொடுமைக்கார புருஷன் வாய்த்தால் அவனை எதிர்கொள்ளத் தெரியாதவர்களாக, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
விழாக்கோலம் பூண்டிருந்தது, சிவதாணுவின் வீடு. 'தாத்தா...' என, ஓடி வந்த பேரன் ராம், சிவதாணுவின் மடியில் ஏறி உட்கார்ந்தான். ''ராம்... மெதுவாக ஓடி வரணும்; இப்பப் பாரு மூச்சு வாங்குதில்ல... சரி, எதுக்கு இப்ப ஓடி வந்தே?'' என்று கேட்டார், சிவதாணு. ''வெளிநாட்டுலருந்து, சித்தப்பா இன்னைக்கு வர்றாராமே...''''ஆமா... உனக்கு எப்படி தெரியும்...'' ''பாட்டி சொன்னாங்க... சித்தப்பா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
ரோபோக்களின் காதல் கதையில், 2.0!சிவாஜி மற்றும் எந்திரன் படங்களை தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில், ரஜினி மூன்றாவது முறையாக நடித்துள்ள படம், 2.0. தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, அனிமேஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படம் குறித்து இயக்குனர், ஷங்கர் கூறுகையில், 'எந்திரன் படத்தில், பெண்ணின் மீது ஒரு மிஷினுக்கு ஏற்பட்ட காதலை படமாக்கினேன்; ஆனால், 2.0 படத்தில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
எந்தத் துறையாக இருந்தாலும், முயற்சி செய்யாதவர் முன்னேற முடியாது. முயற்சி செய்பவர்களுக்கே தெய்வம் கூட உதவும். தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகள், அவர் பாடும் போது வெளிப்படும் ராகங்களின் சிறப்பு என, அனைத்தையும் உணர்ந்த அடியார் ஒருவர், அய்யம்பேட்டையில் இருந்து, தினமும் திருவையாறு வந்து, தியாகராஜரின் வீட்டு வெளிப்புறமாக ஒதுங்கி நின்றபடி, அவரது கீர்த்தனைகளை கேட்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
நம் சிக்கனம் கண்டு சிரிக்கின்றனரா... சிரித்துவிட்டுப் போகட்டும்; பரவாயில்லை. அவ்வாறு சிரிக்கிறவர்கள், நம் இருப்புகள் காலியானால், முன் வந்து உதவுவார்களா என்ன... முன்பு, 'சினிமா கெய்டு' அன்பு என்று, ஒரு பத்திரிகையாளர் இருந்தார். இன்லண்ட் லெட்டரில், ஒரு பாதி மட்டும் எழுதப்பட்ட கடிதம் இவருக்கு வந்தால், மறு பாதியை கிழித்து வைத்து, குறிப்புகள் எழுத ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 29; கணவரின் வயது, 31. தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிகிறார், என் கணவர். திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. திருமணமான அடுத்த ஆண்டே கருவுற்றேன். கருவுற்ற நான்காவது மாதம், வெளியூரில் இருக்கும், என் அம்மா வீட்டுக்கு சென்றேன். அங்கு சென்றதும், எதிர்பாராத விதமாக, 'அபார்ஷன்' ஆகி விட்டது.ஊருக்கு புறப்படும்போதே, என் மாமியார், 'போக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
டிச., 1969ல், 'தீபம்' இலக்கிய இதழில், இயக்குனர், கே.பாலசந்தர், நாடகம் பற்றி எழுதியுள்ள கட்டுரையிலிருந்து: நாடகம் ஒரு இன்பத் தொல்லை; எழுதும் ஆசிரியர், நடிக்கும் நடிகர் மற்றும் நடத்தும் தயாரிப்பாளர் என, எல்லாருக்குமே தான்.பெரும் தொல்லைகளையும், தொந்தரவுகளையும் சுமந்து மேடை ஏற்றப்படும் நாடகம், அரங்கேற்றத்தன்று நமக்கு தருவதோ பேரின்பம்; அந்த உணர்ச்சியை எழுத, வர்ணிக்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
கேட்டுவிட்டுப்போகட்டும்!சிறு விதை துளிர்த்ததற்குத்தானாகுதுாகலிக்கிறாய் என்றுகேட்டு விட்டுப் போகட்டும்...இதுநாள் வரைபாலைவனமாய் கிடந்ததைஅறியாதவர்கள்!சிறு புன்னகையை உருவாக்கத்தானாபிரயத்தனப்படுகிறாய் என்றுகேட்டு விட்டுப் போகட்டும்...இதுநாள் வரைஇறுகிக் கிடந்த உதடுகளைஅறியாதவர்கள்!சிறு விளக்கின் சுடரைஏற்றி வைத்ததற்குத்தானாஆர்ப்பாட்டம் செய்கிறாய் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
மெர்சல் திரைப்படத்தில், ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம் வாங்கி, வைத்தியம் பார்க்கும் டாக்டராக நடித்திருப்பார், நடிகர் விஜய். அதனால், அவரது கேரக்டர், 'ஐந்து ரூபாய் டாக்டர்' என்றே அழைக்கப்படும்.இக்காலத்தில், உண்மையில் அப்படி ஒரு டாக்டர் இருக்க முடியுமா என்ற கேள்விக்கு, பதிலாக விளங்குகிறார், டாக்டர் ஜெயச்சந்திரன்.வடசென்னை, பழைய வண்ணாரப் பேட்டை, வெங்கடாசலம் தெருவில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
கல்யாணம் செய்து கொடுத்திருந்த மகள் வாணியை, ஆடிக்கு அழைத்து வந்திருந்தாள், ஜெயா.மகளை, நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்ததில், ஜெயாவுக்கு பெரிய நிம்மதி.சம்பந்தி, திருச்சியில் இருக்க, இளைய மகன், பெங்களூரில், சாப்ட்வேர் இன்ஜினியராகவும், பெரியவன், சென்னையில், எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்ய, நல்ல வசதியான குடும்பம்.அந்த வீட்டில், தன் மகள் வாணியை, இரண்டாவது மருமகளாக, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
கேரள மாநிலம் கண்ணுார், தில்லாங்கேரியை சேர்ந்தவர், ராஜகோபாலன்; காந்திஜியின் பக்தரான இவர், 21 வயதில், சம்பல் காடுகளுக்கு போனார். அக்காலத்தில், சம்பல் கொள்ளையர் என்றாலே, பயந்து நடுங்குவர், மக்கள். அங்கு சென்ற ராஜகோபாலனை, மரத்தில் கட்டி வைத்து அடித்தும், பல்வேறு கொடுமைகளும் புரிந்தனர், கொள்ளையர். அக்கொடுமைகளை எல்லாம் சகித்து, பூலான்தேவி உட்பட நுாற்றுக்கணக்கான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
'இடது கை பழக்கமுடைய குழந்தைகளை, வலக்கை பழக்கத்துக்கு மாற்ற முயன்றால், அது, உடல் நலத்தையே கெடுக்கும்; இதனால் குழந்தைக்கு திக்குவாய் பிரச்னை ஏற்படலாம்...' என்கின்றனர், மருத்துவர்கள்.உலகில் உள்ள பல பிரபலங்கள், இடது கை பழக்கமுடையவர்கள்; உதாரணமாக, கிரீஸ் மன்னன், மாவீரன் அலெக்சாண்டர்; பிரான்ஸ் நாட்டு மன்னனான, நெப்போலியன்; ரோமானிய பேரரசரான ஜூலியஸ் சீசர்; நம் தேசப்பிதா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
மூளையை உபயோகித்து, சற்று மாற்றி யோசித்தால் லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம் என்பதை, நிரூபித்து காட்டியுள்ளார், கனடா நாட்டைச் சேர்ந்த, 32 வயது இளம் பெண், ஜெசிகா.இலவம் பஞ்சு போன்ற, தன் மென்மையான பாதங்களை வித்தியாசமான கோணங்களில், புகைப்படம் எடுத்து, 'அழகான பாதங்களை பார்க்க வேண்டுமா; சிறிதளவு சந்தா செலுத்துங்கள்...' என்ற அறிவிப்புடன், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
கடந்த, 1925ல் மஹாராஷ்டிரா மாநிலம், கராட் என்ற இடத்தில் பிறந்தவர், கே.டி. யாதவ்; சிறந்த மல்யுத்த வீரரான இவர், 1952ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், குஸ்தி பிரிவில் கலந்து கொள்வதற்காக, கூட்டுறவு வங்கியில் இருந்து, மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கினார். பின், போட்டியில், மூன்றாவது இடத்தைப் பெற்று, வெங்கலப் பதக்கத்துடன், இந்தியா திரும்பினார்.இன்று போல், அன்று விளம்பரங்களோ, செய்திகளோ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில், சமீபத்தில், அழகான பறவை ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. இந்த ஏலத்தில், பெரும் செல்வந்தர்கள் எட்டு பேர் கலந்துகொண்டனர்.மூன்று லட்சம் ரியால் தொகைக்கு ஆரம்பமான ஏலம், ஏழு லட்சம் ரியாலில் முடிவடைந்தது. அதாவது, 1.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. 'வாஹ்ஷ்' இனத்தை சேர்ந்த இப்பறவையை அழகுபடுத்துவதற்கான ஆபரணங்கள் மற்றும் தலைக் கவசத்தின் விலை ஐந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
கடந்த, 1980ல் தமிழ் படங்களில் நடித்து வந்த, நடிகை, சாந்தி கிருஷ்ணா, பின், கேரளா பக்கம் சென்றார். அங்கு, மலையாள நடிகர், ஸ்ரீநாத்தை மணந்தவர் கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்தார். பின், பெங்களூரு தொழிலதிபரை மணந்தவர், பின், அவரையும் பிரிந்தார். தற்போது, நிவின்பாலி நடிக்கும், நண்டுகளுடெ நாட்டிலெ இடவேள என்ற மலையாள படத்தில், நடித்து வருகிறார். — ஜோல்னா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
படத்திலுள்ளவர் பெயர், அய்யப்பன்; வயது, 79. இவரது, மனைவி சரஸ்வதி, வயது, 70. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்கள், கேரள மாநிலம், பாலக்காடு, மண்ணுாரில் உள்ள தங்கள் வீட்டில், 'விருந்தாவனம்' என்ற பெயரில் கல்லறை கட்டி, மரணிக்கும் நாளுக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு இரு மகன்கள்; அரபு நாடான ரியாத்தில் குடும்பத்துடன் வசிக்கும் அவர்கள் அனுப்பும் பணம் மற்றும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X