Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010 IST
பகவானுக்கு  ஜாதி, மத பேதமில்லை. எந்த ஜாதியோ, மதமோ எதுவானாலும் அவனிடம் பக்தி யோடு வழிபட்டால் போதும். அவன் ரட்சிக்க தயாராக இருக்கிறான். பக்தர்களுக்கு ஏற்படும் துன்பத்தை கூட அவன் ஏற்றுக் கொள்கிறான். இதற்கு உதாரணமாக திருப்பாணாழ்வார் சரித்திரம் சொல்லப்படுகிறது. திருப்பாணாழ்வார் தாழ்ந்த ஜாதியினராயினும், அரங்கன் மீது பக்தி கொண்டவர். தன்னை கோவிலுக்குள் அனுமதிக்க  ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010 IST
நவ., 30 - மெய்ப்பொருளார் குருபூஜை!பக்தியைப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் மூடநம்பிக்கையை வளர்த்து, அவர்களை ஏமாற்றும் பித்தலாட்டக்காரர்கள் பெருகி விட்டனர். இந்த போலிகளிடம் சிக்கி, தங்கள் உயிர், பொருள், மானத்தை இழந்தவர்களும் உண்டு. இன்று நேற்றல்ல... புராணகாலத்திலேயே இவர்கள் இருந்திருக்கின்றனர். இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை, மெய்ப்பொருளார் என்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010 IST
மெகா சீரியலால் வந்த வினை!கிழக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி, சென்ற வருடம் இந்தியா திரும்பினார் நண்பர் ஒருவர். திருமணமாகாத அவர், மூன்று ஆண்டு காலம் அந்நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றினார். அவரின் தாயையும் உடன் அழைத்து சென்றிருந்தார்.  இந்தியா திரும்பிய சில மாதங்களிலேயே, அவரது வயதான தாயாருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு, பலமுறை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010 IST
அடுத்தவர் உழைத்து சம்பாதித்த பொருளை, கொள்ளையடிப்பது மனித குலத்திற்கு மட்டுமே உரிய குணம் என்று நினைப்பது தவறு. சில காட்டு விலங்கு களும், பறவைகளும் கூட, இத்தகைய செயல்களில் ஈடுபடு கின்றன. கடலில் பயணிக்கும் கப்பல்களை வழிமறித்து கொள்ளை யடிக்கும் கடற்கொள் ளையர்களைப் போலவே,  ஸ்குவாஸ் என்ற கடற்பறவை, மற்ற பறவைகளின் உணவை வழிமறித்து கொள்ளையடிக்கின்றன. ஸ்குவாஸ் என்பது, கடலில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010 IST
"மணி... மாமி தொல்லை தாங்கலே...  பொண்ணுக்கு பாடல் சொல்லிக் குடு, இந்தி லெசன் எடு...' என, உயிரை வாங்குகிறாள்... கணக்கு வழக்கு, ஸ்கூல் பாடமெல்லாம் வேப்பங்காயாச்சே எனக்கு... பொறுப்பு கிட்ட, "பர்மிஷன்' வாங்கு... நாலு நாள் புதுச்சேரிக்கு ஓடி விடலாம்...' என்றார் லென்ஸ் மாமா.பொ.ஆ., நல்ல மூடில் இருந்த போது, மணக்க, மணக்க காபி போட்டு, பதமாக சீனி இட்டுக் கொடுத்து, "பர்மிஷன்' வாங்கினேன். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010 IST
* எஸ்.ஏ.கிருஷ்ணன், பழனி:  மனைவி, நெருங்கிய  நண்பர் - யாரிடம்  ரகசியத்தை  சொல்லலாம்? மனைவியிடம் கூற முடியாத ரகசியங்கள்  கூட உண்டே!         ** ஜி.விதுபாலன், ஆனந்தபுரம்: நான் ஆசிரியர் பயிற்சி முடித்திருக் கிறேன். தனியார் பள்ளி ஒன்றில் வேலை கொடுக்க, என்னிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் கேட்கின்றனர். அப்படி பணம் கொடுத்து வேலையில் சேரலாமா?இந்த ஒரு லட்சத்துடன் இன்னும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010 IST
டி.வி.ஆர்.,  நினைவு  சிறுகதை  போட்டியில்  ஆறுதல் பரிசு  பெற்ற  சிறுகதை - 4கல்பகம் பாஸ்கரன்சொந்த ஊர்: சென்னை. கல்வித் துறையில் சிறிது  காலம் ஆராய்ச்சி செய்து, ஐ.ஆர்.எஸ்., (இந்தியன் ரெவன்யூ சர்வீஸ்) தேர்வு பெற்று, நிதித் துறையில்  பல்வேறு பிரிவுகளில் உயர் அதிகாரியாய் பணி புரிந்துள்ளார். கல்லூரி  நாட்களில் இவர் எழுதிய படைப்புகள், பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010 IST
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், இளம் பிராயத்தில், மேடைப் பாடல்கள் பாடுவதில், மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார். அவரது அண்ணன் கணபதி சுந்தரம், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அவர் பாடல்களை எழுதிக் கொடுப்பார். அதை மனப்பாடம் செய்து, மேடைகளில் பாடுவார் கல்யாண சுந்தரம்.அப்போது, அவருக்கு வயது எட்டு. இப்படி அவர் பாடிய மேடைப்பாடல் பயிற்சியே, பின்னாளில் பாமரர்கள் ரசிக்கும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010 IST
படம் தயாரிக்கும் இயக்குனர்கள்! "பையா' படத்தை இயக்கிய லிங்குசாமி, தன் திருப்பதி பிலிம்ஸ் சார்பில், அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாரிக்கிறார். இதேபோல், ஹாலிவுட் நிறுவனத்துடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து, தொடர்ச்சியாக படம் தயாரிக்கிறார். இவர்கள் வரிசையில், கவுதம் மேனனும், ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கிறார். இந்த மூன்று பிரபல இயக்குனர்களுமே, தாங்கள் தயாரிக்கும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010 IST
""என்ன சந்திரா... வயசான காலத்தில் உனக்கெதுக்கு பிடிவாதம். பசங்க போனில் சொன்னபோது நான் நம்பலை. நேரில் வந்து பார்த்த பின்தான் தெரியுது.""உனக்கென்ன குறை? அருமையான பிள்ளைகள், கிரானைட் பிசினசில்  கொடிகட்டிப் பறக்கிறாங்க. கோடிக்கணக்கில் லாபம் வருது. உன்னையும் சகல வசதிகளோடு நல்லபடியாக பாத்துக்கிறாங்க. அப்புறம் எதுக்கு பிடிவாதமாக ஆளுக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010 IST
அன்புள்ள அம்மா —நான் தென் தமிழகத்தைச் சேர்ந்த 32 வயது ஆண். எனக்கு திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. சென்னையில் இருவரும் சாப்ட்வேர் பணியில் இருக்கிறோம். என் தாய், தந்தை, என் அம்மா வழி பாட்டி மூவரும், ஒன்றாக சொந்த ஊரில் உள்ளனர். அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்; அம்மா ஆசிரியை பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். நான் ஒரே மகன். சந்தோஷமான என் குடும்பத்தில், தற்போது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010 IST
ஜப்பானின் புல்லட் ரயில், பிரான்சின் டி.ஜி.வி., சீனாவின் புல்லட் ரயில் ஆகிய ரயில்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடக்கூடிய சூப்பர் ரயில் ஒன்றை தயாரித்தார் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர்  என்ற தகவல், எத்தனை பேருக்கு தெரியும்? ஹிட்லரின் மறைந்து போன சாதனைகளில் ஒன்றான சூப்பர் ரயில், அது ஓடும் முன்பே ஹிட்லர் இரண்டாம் உலகப்  போரில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010 IST
""என்னண்ணே... உற்சாகம் கரைபுரண்டு ஓடுது?'' என்றபடி வந்த அப்புராஜை ஒரு மெகா புன்னகையோடு எதிர்கொண்டார் அய்யாசாமி.""கரமட்டுமாடே பொரளுது? கைப்பிடிச் சொவரு, தடுப்புச் சொவரு எல்லாம் தான் பொரளுது. "லம்ப்ப்பா' துட்டடிக்க, "ஆபரேசன் வீடியோ'ன்னு ஒரு சூப்பர் ஐடியா புடிச்சிருக்கேம்லா? அ... பம்பம் பஜக் ஜம்...'' கண் சிமிட்டினார் அய்யாசாமி."ஐடியா' என்றதும், உஷாரானான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010 IST
*ஊனம் என்பதுநமக்குஉடலில் மட்டும்தான்...உள்ளத்திலோநாம்ஒலிம்பிக் வீரர்கள்!*கவலைகொள்ளாதே...தேய்பிறையிலும்நிலா அழகுதான்!*மகிழ்ச்சி கொள்...நட்சத்திரங்களைநம்பிவானம் இல்லை...ஆனால்,நம்மை நம்பிஉலகம் இருக்கிறது!*கவனம் கொள்...கிளை ஒடிந்தாலும்கனிகள் தரமரம் மறுப்பதில்லை!* உறுதிகொள்...வால் அறுந்தபல்லிக்குத்தான்வலிமை அதிகம்!*உற்சாகம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010 IST
பைக்கின் மதிப்பு 4.5 கோடி ரூபாய்!படத்தில் காணப்படும் இந்த பைக்கின் மதிப்பு என்ன தெரியுமா? கேட்டால் அசந்து போய் விடுவீர்கள். இதன் மதிப்பு, 4.5 கோடி ரூபாய். உலகில், இந்த மதிப்பில் உள்ள ஒரே மற்றும் முதல் பைக் இதுதான். இந்த பைக் இருப்பது அமெரிக்காவில். உலகப்புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் பைக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பைக்கில், அப்படி என்ன விசேஷம் தெரியுமா? பிரபல ஓவிய கலைஞர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X