Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
சுவாமிக்கு, பால், பன்னீர், தேன் மற்றும் சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனால், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகிலுள்ள திருக்கண்டலம் சிவானந்தேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் பைரவருக்கு, மிளகாய் பொடியால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒருமுறை, சிவ தல யாத்திரை மேற்கொண்ட பிருகு முனிவர், திருக்கண்டலம் வந்தார். அங்கு, எங்கு நோக்கினும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
சேமிப்பும், பிரகாசமும்!எங்கள் குடும்ப நண்பரின், 60ம் கல்யாணத்திற்கு சென்றிருந்தேன். தம்பதியரிடம் ஆசிர்வாதம் வாங்கிய எல்லாருக்கும், 'உன் வாழ்வு பிரகாசிக்கட்டும்...' என்று ஆசிர்வதித்து, ஒரு பரிசு பொருள் தந்தனர்.வீட்டிற்கு வந்த பின், எனக்கு தந்த பரிசு பொருளை பிரித்துப் பார்த்தேன். உள்ளே இரண்டு, எல்.இ.டி., பல்புகள் இருந்தன. அதனுடன், ஒரு கடிதம்... 'அன்பார்ந்தவர்களே... ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
மாடி வீட்டு ஏழை படப்பிடிப்பு நின்று விட்டது குறித்து, சந்திரபாபு கூறியது: விதி எனும் காலதேவன் அந்த அறைக்குள் காத்திருந்ததை எப்படி அறிவேன்!சுமார், 45 நிமிடங்கள், ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்ததே யுத்தம்... அதுபோன்று உள்ளே நடந்தது... 'வாங்க பாபு...''வணக்கம் மிஸ்டர் சக்கரபாணி, சவுக்கியமா... உங்க தயவு தான் வேணும்...''நான் என்ன பண்ணனும் சொல்லுங்க...''மிஸ்டர் எம்.ஜி.ஆர்., ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
நண்பர் ஒருவருக்கு, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுாரில் திருமணம் நடந்தது. ஜாதகம், ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையும், பற்றும் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். நண்பருக்கு செவ்வாய் தோஷம் இருந்ததால் திருமணம் தள்ளிப் போய் கொண்டே இருந்தது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள், 'மணி... நாளை மறுநாள் எனக்குக் கல்யாணம்...' என்றார் நண்பர்.'என்னப்பா... திடுதிப்புன்னு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
* ஆர்.வெங்கட்ராமன், சிதம்பரம்: அயல் நாடுகளுக்கு நிகராக, நம் நாட்டிலும் பெருகி வரும் விவாகரத்துகள், நம் பெண்களின் சுதந்திர தன்மையை காட்டுகிறதா அல்லது அடக்கமின்மையை வெளிப்படுத்துகிறதா?இரண்டுமே இல்லை! சகிப்புத் தன்மையின் சிகரங்கள், நம் இந்திய பெண்கள். அவர்களே விவாகரத்துக்கு துணிகின்றனர் என்றால், பொறுமையின் எல்லையைத் தொட்டு விட்டனர் என்றே அர்த்தம்.டி.கிருஷ்ணன், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
பூஜையை முடித்து, சற்று ஓய்வாக திண்ணையில் வந்து அமர்ந்தார், சங்கரலிங்கம். அவரால் அமைதியாக ஓய்வெடுக்க முடியவில்லை. இன்னும், 20 நாட்களில், சட்டசபை தேர்தல் வர இருப்பதால், தெரு முனையில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளில், தலைவர்களின் பேச்சுகளும், திரைப்பட பாடல்களும் ஒலிக்கும் சத்தம், காதை பதம் பார்த்தது.ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்கச் சொல்லலாம் என்று கிளம்பினார், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
உலகில், பெரும்பாலான நாடுகளில், கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். இப்பண்டிகையை முன்னிட்டு வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரமும், நாட்டிற்கு நாடு மாறுபட்டு இருக்கும். இதோ சில, வித்தியாசமான கிறிஸ்துமஸ் மரங்கள்:சோவியத் யூனியனிலிருந்து, 1990ல் பிரிந்த முதல் குடியரசு நாடு, லிதுவேனியா; இந்நாட்டின் தலைநகரம் வில்னியுஸில், 2015ல், ஒரு கிராமத்து வீட்டில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
கமலை தொடர்ந்து, 10 வேடங்களில் விஜயசேதுபதி!தசாவதாரம் படத்தில், கமல்ஹாசன், 10 வேடங்களில் நடித்ததைத் தொடர்ந்து, தற்போது, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் என்ற படத்தில், விஜயசேதுபதியும், 10 வேடங்களில் நடிக்கிறார். இதில், எமன் வேடத்தில், அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக சொல்லும் விஜயசேதுபதி, இவ்வேடத்தில் நடிப்பதற்கு முன், எமன் ரோலில் சில நடிகர்கள் நடித்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களை தன் வசப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்கள், இறையருளை பெற்ற மகான்கள். அத்தகைய அடியார் ஒருவரின் வாழ்வில் நடந்த நிகழ்வு இது:வடமாநிலத்தில், பரளி எனும் ஊரில், வேதியர் குலத்தில் பிறந்தவர், சகமித்திரர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் மறைந்து, 'சகமித்திரர்' எனும் காரணப் பெயரே நிலைத்து விட்டது. பெருமாள் பக்தரான இவர், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
தள்ளிப் போடுவது என்று வந்து விட்டால், அதை, அல்வா சாப்பிடுவதைப் போல் இனிய விஷயமாக எடுத்துக் கொள்வர், சிலர். தள்ளிப் போடுவதனால் அடைந்த நஷ்டங்களை, அவதிகளை, மன வேதனைகளை, காலங்காலமாக அனுபவித்தும், இந்த குணத்திலிருந்து விடுபடாத மனிதர்களின் போக்கு, வியப்பை மட்டுமல்ல, வேதனையையும் தருகிறது.பள்ளிப் பருவத்தில், 'தேர்வுக்கு இன்னும் எவ்வளவோ நாட்கள் இருக்க, இப்போதே என்ன ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
அன்பு அம்மாவுக்கு —நான், 26 வயது ஆண்; புகழ்பெற்ற பள்ளி ஒன்றில், ஆசிரியராக பணிபுரிகிறேன். எனக்கு, ஒரு தங்கை இருக்கிறாள்; கல்லுாரியில் படிக்கிறாள். என்னுடன் படித்த தோழி ஒருவள், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறாள். உடன் பணிபுரிந்த வாலிபன் ஒருவனை காதலித்தாள். அவளது பெற்றோர் எதிர்த்ததால், அவர்களது திருமணத்தை நடத்தி வைக்க, நானும், இன்னும் சில நண்பர்களும் ஏற்பாடு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
'புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...' என்ற நுாலிலிருந்து: சுமார், 1,200 புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர், அவர்; அத்தனையும் அருமையான படைப்புகள். எந்த பெண்ணையும் மணந்து கொள்ளப் போவதில்லை என்று வீராப்பு பேசி வந்தார். ஆனாலும், அவரை மடக்கி விட்டாள், ஒரு பெண்.பலரிடம் கடன் பட்டிருந்தார், அந்த எழுத்தாளர். தன் தந்தையின் மூலம், அந்தக் கடனை எல்லாம் தீர்த்து, மொத்தத் தொகைக்கு, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!வரி ஏய்ப்பு செய்வதற்குவணிக வரலாறுதெரிந்திருக்க வேண்டியஅவசியமில்லை!குனிந்து கும்பிட்டுகாரியம் சாதிக்ககூர்மாசனம் தெரிந்திருக்க வேண்டியஅவசியமில்லை!பாலில் கலப்படம் செய்யபயோ கெமிஸ்ட்ரிதெரிந்திருக்க வேண்டியஅவசியமில்லை!போதைப் பொருட்கள் விற்கபொது வணிகம்தெரிந்திருக்க வேண்டியஅவசியமில்லை!தொலைக்காட்சி தொடரில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
சைபால் நிறுவன அதிபரான, எஸ்.சங்கரநாராயணன், திடீரென, காலமாகிவிட, அப்போது தான், வெளிநாட்டில் படிப்பை முடித்திருந்த அவரது இரு பிள்ளைகளும் தவித்து போயினர். 'எங்கள் தந்தையின் மறைவு, எங்களை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எங்களை விட, எங்கள் தாயார், காந்திமதி தான் மிகவும் உடைந்து போனார். 'உலகத்துலயே சிறந்த ஒரு உத்தமரை காட்டுங்கன்னு யாராவது எங்கிட்ட கேட்டா, நான் உங்க ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
பேருந்தை விட்டு இறங்கியதும், லேசாக, துாறல் ஆரம்பித்தது. மழை பிடிக்கும் முன், பள்ளிக்கு சென்று விட வேண்டும் என நினைத்து, வேகமாக அடியெடுத்து வைத்தேன். என் அவசரம் புரியாமல் செருப்பு அறுந்து தொலைத்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன்; செருப்புக் கடை எதுவும் கண்ணில் தென்படவில்லை. சிறிது துாரம் சாலையோரம், குடைக்கு கீழ், அறுந்த செருப்புகளை தைத்துக் கொண்டிருந்தான், ஒருவன்.அவன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
மத்திய பிரதேசத்தில் உள்ள கன்னியாஸ்திரி, ராணி மரியாவின் கல்லறை முன் வணங்கி நிற்பவர் பெயர், சமந்தர் சிங். 25 ஆண்டுகளுக்கு முன், இவர் தான், அந்த கன்னியாஸ்திரியை கொலை செய்தவர். ராணி மரியா, ஆதிவாசிகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், அப்பகுதி ஜமீந்தார்கள், கூலிக்கு கொலை செய்யும் சமந்தர் சிங் மூலம், அவரை கொலை செய்து விட்டனர். சமந்தர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
ரஷ்யாவில், கி.பி., 500களில், பயன்படுத்திய குதிரை கவசம் இது. இந்த கவசத்தில், ஒரு ஆட்டின் தலையும், அதற்கு மேல் ஒரு பறவை பறப்பது போன்றும் வடிவமைத்துள்ளனர். இரும்பு, தோல், மரம் மற்றும் தங்கத் தகடுகள் ஆகியவற்றில், மிக அழகாக உருவாக்கி உள்ளனர். தங்கள் நாட்டின் கலைப் பொக்கிஷமாக கருதி, மியூசியத்தில் வைத்து, பாதுகாத்து வருகிறது, அரசு.— ஜோல்னா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
படத்தில், குப்பைகளுக்கு நடுவே உட்கார்ந்து, சுருட்டு பிடிக்கும் இவரின் பெயர், ஜார்ஜ் க்ரெகஸ்; இவரை, 'கேப்டன்' என்றே அழைக்கின்றனர்.மத்திய தரைக்கடல் பகுதியில், சிரியா நாட்டின் அருகே உள்ளது லெபனான் நாடு. 'மத்தியத் தரைக் கடலின் முத்து' என்றழைக்கப்படும் இந்நாட்டில் அமைந்துள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் தான் இவர். '90களில் ஏற்பட்ட உள்நாட்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X