Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 15,2019 IST
பிளஸ் 2 படிக்கும் போது, வகுப்பு மாணவர்களில் பலர், தமிழாசிரியரை, 'சார்...' என்று அழைப்போம். 'மற்ற ஆசிரியர்களை, 'சார்' என்றும், தமிழாசிரியரை, 'ஐயா' என்று தான் அழைக்க வேண்டும்...' என்றார் தமிழாசிரியர்.ஒரு நாள், தமிழாசிரியரை, காய்கறிக் கடையில் பார்த்திருக்கிறான் குறும்புக்கார மாணவன் ஒருவன். உடனே, கிண்டலாக, 'என்னய்யா... காய்கறிகள் எல்லாம் வாங்கியாச்சா...' என, ஒருமையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2019 IST
கடந்த, 1966ல், மதுரை ஷெனாய் நகர், நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்தேன். வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணசாமி, போலீஸ் அதிகாரி போல, மிடுக்கும், கண்டிப்பும் மிக்கவர். ஒரு நாள், மேஜை டிராயரின் சாவியை, வீட்டில் மறந்து வைத்து, விட்டார். அன்று பாடம் நடத்த, பாட புத்தகங்கள், வருகை பதிவேடு, சாக்பீஸ், டஸ்டர் அனைத்தும், வெளியே எடுக்க வேண்டும். அவரிடம், மாற்றுச் சாவியும் இல்லை. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2019 IST
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில், 1991ல், 12ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்! ஏழ்மையின் காரணமாக, பள்ளியில் வழங்கும் மதிய உணவை சாப்பிடுவேன். 10ம் வகுப்பிற்கு மேல், சத்துணவு கிடையாது. ஆனாலும், என் சூழ்நிலையைப் பார்த்து, வழங்கினர்.வாங்கிய உணவை, சக நண்பனுடன் சாப்பிடுவது வழக்கம். அவன் வீட்டில் கொடுத்து அனுப்பும் சாப்பாடு மற்றும் காய்கறிகளை முழுதும் சாப்பிடாமல், தினமும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2019 IST
தாமிரபரணி ஆற்றங்கரையில், மகாதேவன் என்ற விறகுவெட்டி வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகனும், மகளும் இருந்தனர். மகளை அருகில் உள்ள ஊரில் திருமணம் செய்து கொடுத்தார்.மகன் சந்திரனை, செல்லப் பிள்ளையாக வளர்த்ததன் விளைவு, மிகவும் முட்டாளாக இருந்தான். எந்த வேலையும் செய்யாமல், ஊர் சுற்றிக்கொண்டிருந்தான்.குடிசையை இடித்து, சற்று பெரிதாக கட்ட முடிவு செய்தார் மகாதேவன். ஏராளமான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2019 IST
உலகின், 'மூத்த குடி' என்ற பெருமைக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள்!உலகின், உன்னத, வேத நுாலான, திருக்குறளின் சொந்தக்காரர் தமிழர்! பண்பாடு, கலாசாரம், வேளாண்மை, நாகரிகம், இயற்கையோடு இயைந்த வாழ்க்கை... அன்பு, பண்பு, உறவு, நட்பு, குடும்ப வாழ்க்கை மற்றும் உழைப்பு என, அனைத்திலும், உலகிற்கே வழிகாட்டியாக இருந்த இனத்தவர் அந்தத் தமிழர்!இன்று, எல்லா சிறப்பையும் இழந்து, நம் மொழியையே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2019 IST
'கம்பீர தோற்றமோ, செல்வாக்கோ இல்லாதவர்களால், சாதனை நிகழ்த்த முடியாது' என்று தான், உலகம் எண்ணுகிறது. இந்த எண்ணத்தை, தவிடு பொடியாக்கி, சிகரம் தொட்ட பலர் உண்டு. அதில் ஒருவர் தான், ஹம்ப்ரி டேவி! ஐரோப்பிய கண்டம், இங்கிலாந்து நாட்டில் உள்ள பென்சான்ஸ் நகரில், 1778ல், பிறந்தவர் ஹம்ப்ரிடேவி. சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால், ஆரம்பக் கல்வியுடன், படிப்பை நிறுத்தி, வேலை தேட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2019 IST
அன்று:கடந்த, செப்., 9, 1988ல், சிறுவர்மலர் இதழ் அட்டை படத்தை அலங்கரித்தார் ஜெயந்த் ஸ்ரீநிவாஸ்; வயது: 9 மாதம், பெற்றோர்: சங்கரன் - பத்மா, சென்னை.இன்று:தற்போது வயது, 30; வட அமெரிக்க கண்டத்தில் உள்ள, மேற்கு கரோலினா பல்கலை கழகத்தில், பயோ மெடிக்கல் பொறியியல் பிரிவில், 'போஸ்ட் டாக்டரேட் ரிசர்ச் ஸ்காலர்' ஆக உள்ளார்.சென்னையில் உள்ள தாத்தாவிடம், சிறுவர்மலர் இதழை சேகரித்து வைக்க கூறி, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2019 IST
01. ஆஹா... அடடா...!ஒரு பணக்கார பிரபுவிடம், சங்கீத வித்வான் ஒருவர் வந்து பாடினார். வித்வானின் எதிரே, ஒரு பெரிய தாம்பாளத்தை எடுத்து வந்து வைக்கும்படி கூறினார் பிரபு.முதல் ராகம் பாடி முடித்தவுடன், தாம்பாளத்தில், இரண்டு கை நிறையப் பொன்னை அள்ளிப் போட்டார் பிரபு; பூரித்துப் போனார் சங்கீத வித்வான்.இரண்டாவது ராகத்தை, விஸ்தாரமாகப் பாடினார். பிரபுவும் மெய் மறந்து, 'ஆஹா... அடடா...' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2019 IST
நான் பிறந்தது, அரியலுார் மாவட்டத்தில் உள்ள, திருமழபாடி என்ற கிராமம். கடந்த, 1990ல், அங்கு தான் பள்ளிப் படிப்பை படித்தேன். எங்கள் தெருவில், எங்கள் வீட்டில் தான், தினமலர் நாளிதழ் வாங்குவோம். தெருவாசிகள், எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நாளிதழ் படிப்பர்.வெள்ளிக்கிழமை வந்து விட்டால், சந்தோஷத்தோடு, பதட்டம் பற்றிக் கொள்ளும். 'சிறுவர்மலர் இதழை, யாரேனும் எடுத்து சென்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2019 IST
மன்னர் மருதன், பொன்னகரம் என்ற நாட்டை ஆண்டு வந்தார். அவருடைய கட்டுப்பாட்டின் கீழ், பல சிற்றரசர்கள் இருந்தனர்.அந்த சிற்றரசர்களில் ஒருவன், மன்னருக்கு எதிராகக் கலகம் செய்வதை அறிந்த மன்னர், தம் அமைச்சரும், படைத்தளபதியும், நல்ல அறிஞருமான நேசமணியை, கலகம் செய்யும் சிற்றரசனை அடக்கி வருமாறு அனுப்பினார். நேசமணி சென்ற பின், ஒரு போலிச் சன்னியாசி மன்னரிடம் வந்தான்.தனக்கு ஏதோ ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2019 IST
தேவையான பொருட்கள்:பப்பாளி துண்டுகள் - 2 கப்சர்க்கரை - 2 கப்நெய் - 200 கிராம்முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை, பச்சைக் கற்பூரம், ஏலப்பொடி - தேவையான அளவு.செய்முறை:பப்பாளி துண்டுகளை மையாக அரைத்துக் கொள்ளவும். சிறிது நெய்யில், பப்பாளி விழுதை இட்டு, ஐந்து நிமிடம் கிளறவும். இப்போது, சர்க்கரையை அதிலிட்டு, அவ்வப்போது, சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும். அல்வா பதமாக வரும் போது, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2019 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, கல்லூரி மாணவி எழுதிக் கொண்டது... சிறு வயதில் இருந்து, சிறுவர்மலர் படித்து வருகிறேன். வெளியூர் சென்றால் கூட, எப்படியாவது சிறுவர்மலர் வாங்கி, படித்து விடுவேன். ஆன்டி... எனக்கு திருமணம் நடக்க போகிறது; நான், ஒல்லியாக, உயரமாக இருப்பதால், எப்போதும், 'மாடர்ன்' உடைகளையே அணிவேன்; புடவை, எப்போதாவது தான் கட்டுவேன்.எனக்கு நிறைய புடவைகள் வாங்கியதுடன், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2019 IST
செல்வந்தர் ஒருவருக்கு தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வம். தன் மாளிகையைச் சுற்றி, பெரிய பூந்தோட்டம் அமைத்தார்; அதில், வண்ண வண்ணப் பூச்செடிகளை வளர்த்து வந்தார்.அவருடைய தோட்டக்காரன், கடுமையான உழைப்பாளி; அதனால், அவருடைய பூந்தோட்டம் மிக அழகாக இருந்தது.அதைப் பார்த்த எல்லாரும், 'இது போன்று, அழகிய பூந்தோட்டம் வேறு எங்கும் இல்லை...' என்று, புகழ்ந்துப் பேசினர்.இதைக் கேட்டுப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2019 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2019 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X