Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2020 IST
திருநெல்வேலி மாவட்டம், குறுக்குத்துறை, உயர்நிலைப் பள்ளியில், 1959ல், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் ஆங்கில ஆசிரியை அலமேலு. பள்ளி வளாக அரசமர கிளையில் தொட்டில் கட்டி, அவரது ஒரு வயது குழந்தையை துாங்க வைத்து, வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.எங்கிருந்தோ வந்த குரங்கு, 'தொப்' என குதித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தொட்டில் அருகே சென்றது. செய்வதறியாது திகைத்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2020 IST
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, ஹமீதியா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1986ல், 9ம் வகுப்பு படித்த போது, நடந்த இனிய சம்பவம் இது... அனைத்துப் பாடங்களிலும், நன்றாக படிக்கும் நான், கணக்கில் மட்டும் பலவீனமாக இருந்தேன். இதை கவனித்த கணித ஆசிரியை ஜூனத்பேகம், 'மனதில், 'கணக்கு வராது' என்றே முடிவு செய்திருக்கிறாய். முதலில் அந்த எண்ணத்தை உடைத்து, வெளியே வா... முடியும் என்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2020 IST
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சாட்சியாபுரம், பெண்கள் உயர்நிலை பள்ளியில், 1974ல், 9ம் வகுப்பு படித்த போது, விடுதியில் தங்கியிருந்தேன். பள்ளி ஆண்டு விழாவுக்காக, மைதானத்தை சுத்தப்படுத்தச் சொன்னார் உடற்கல்வி ஆசிரியை புஷ்பவல்லி.சுத்தம் செய்த போது, சில மரக்கன்றுகளை அறியாமல் பிடுங்கி விட்டேன். இதைக்கண்ட ஆசிரியை, 'ஒரு மரத்தையாவது உன்னால் உருவாக்க முடியுமா...' என கடுமையாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2020 IST
பர்வத நாட்டை, மரகதவண்ணன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். நாட்டு பற்றும், மக்களிடம் அளவற்ற அன்பும் கொண்டவர். பெயருக்கேற்ப, மரகதமாக ஒளிர்ந்தார். முன்னோர் கட்டியிருந்த அன்னச் சத்திரங்கள், சிறப்புற நடக்க ஆவன செய்தார்.மாறுவேடம் அணிந்து சென்று மக்கள் நலனை அறிந்து வந்தார். ஒருமுறை நாட்டை சுற்றிப் பார்த்த போது வடபகுதியில், அன்னச்சத்திரம் ஒன்று தேவைப்படுவதை அறிந்தார். இடத்தை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2020 IST
என் வயது, 87; மகளுடன், வசிக்கிறேன். சிறுவர்மலர் இதழை, என், 60 வயதிலிருந்தே வாசித்து வருகிறேன். இதுவரை, 600 இதழ்களை சேமித்து வைத்துள்ளேன். எதையும் விடாமல் படித்து விடுகிறேன். விலை மதிக்க முடியாத பொக்கிஷம் சிறுவர்மலர். 'புதிர்' போட்டிகளில் சுவாரசியமாக விடை கண்டுபிடிப்பேன். குழந்தைகள் வரையும் ஓவியங்களை ரசிப்பேன். பொதுஅறிவு தகவல்களை வாசித்து, மனதில் நிறுத்துவேன்.'மம்மீஸ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2020 IST
நெற்குப்பை என்ற ஊரில், பெரிய காடு இருந்தது. அங்கு, ஒரு நரி வசித்து வந்தது. இரை தேடி புறப்பட்ட நரி, வழிதவறி நகரத்துக்கு சென்றது. அங்கிருந்த நாய்கள் திரண்டு, பயங்கரமாக குரைத்து விரட்டின. தப்பி ஓடிய நரி, ஒரு வீட்டுக்குள் நுழைந்தது.அது, துணிகளுக்கு சாயம் ஏற்றுபவன் வீடு. வீட்டருகே, தொட்டியில் நீலச்சாயம் கலந்து வைத்திருந்தான். நாய்களுக்கு பயந்து, மறைவிடம் தேடிய நரி, நீலச்சாய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2020 IST
தேவையான பொருட்கள்:பலாச்சுளை - 15பச்சரிசி - 200 கிராம் வெல்லம் - 100 கிராம்தேங்காய் துருவல் - 1 மூடி ஏலப்பொடி, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பச்சரிசியை, இரண்டு மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் துருவல், வெல்லம் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அத்துடன், பொடியாக நறுக்கிய பலாச்சுளையையும் சேர்த்து, இட்லி மாவு பதமாக்கவும். அந்த மாவுக் கலவையில், ஏலப்பொடி சேர்த்து, நெய் தடவிய இட்லி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2020 IST
பொங்கல், பல விதங்களில் மற்ற பண்டிகைகளிடமிருந்து மேன்மையானது. சமயங்கள் சார்ந்த விழாக்களுடன், புராண கதைகளுக்கு தொடர்பு இருக்கும். அந்த விழாக்கள், நட்சத்திரம் மற்றும் திதி அடிப்படையில் அமையும். தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்றவை, நட்சத்திர அடிப்படையில் கொண்டாடப்படும்.தீபாவளி, கந்த சஷ்டி, வைகுண்ட ஏகாதசி போன்றவை, திதி அடிப்படையில் கொண்டாடப்படும். தீபாவளி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2020 IST
தமிழர் கலாசாரத்தில், நெல் தானியத்துக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. புதிதாக அறுவடை செய்த நெல் தானியத்தை அரிசியாக்கி, பொங்கல் வைத்து, இயற்கையாக வழிபடுவது தான் பாரம்பரிய வழக்கம். முதன்மை உணவுப் பயிரான நெல் தானியத்தை, தெய்வமாக பாவிப்பதையே இது காட்டுகிறது. திருமண நிகழ்வின் போது, அரிசியில், மஞ்சள் தடவி, அட்சதை துாவி வாழ்த்தும் வழக்கம் இன்றும் உள்ளது. மணமகள், பெரிய தாழியில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2020 IST
வானம் தொடலாம்!சிலர், 25 வயது கடந்தும், குட்டையாக காணப்படுவர். சிலவகை பயிற்சி மற்றும் உணவு பழக்கத்தை கடைபிடிப்பதால் உயரமாக வளர வாய்ப்பு உண்டு. உடல் வளர்ச்சியில், 'ஹார்மோன்' என்ற, இயக்குநீர் சுரப்பி முக்கிய பங்காற்றுகிறது. இது சுரப்பது, 20 வயதுக்கு பின் படிப்படியாக குறையும்.உயரமாக விரும்புபோர், தினமும் சில உடற்பயிற்சிகளை செய்யலாம். சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் பயிற்சி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2020 IST
பிறக்கும் தருணத்தில் கடவுளை பார்த்த குழந்தை, 'என்னை, பூமிக்குப் அனுப்ப போறதா சொல்றீங்க. இவ்வளவு குட்டியா இருக்கேனே... எப்படி அங்கு வாழ்வேன்...' என்று கேட்டது.'கவலைப்படாதே... தேவதைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளேன்; அது, பூலோகத்தில் உனக்காக காத்துக் கொண்டிருக்கும்; வேண்டிய உதவிகளை செய்யும்...' என்றார் கடவுள்.இதைக் கேட்ட குழந்தை, 'சொர்க்கத்தில், ஆடி, பாடி, சிரித்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2020 IST
கடுமையாக உழைத்து, ஒரு தோட்டத்தை உருவாக்கினான் முனியன். அதில், அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கின. அவற்றை சுற்றி வந்த வித விதமான வண்ணத்துபூச்சிகள், தேனை உண்டு வானில் சிறகடித்தன. தோட்டத்துக்கு, அன்று புதிதாக, ஒரு வண்ணத்துப்பூச்சி வந்தது. அதைக் கண்ட பூக்கள், 'ஏய்... நீ பல வண்ணங்களுடன் இருக்கிறாய்... உன் இறக்ககைள் படபடக்கின்றன. உன்னுடன் நட்பு கொள்ள விரும்புகிறோம்...' என்றன. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2020 IST
அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டிக்கு...மகள் எழுதுவது... என் மனதை ஆட்டி படைக்கும், ஒரு பிரச்னைக்கு தீர்வு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். என் வயது, 15; வறுமை காரணமாக, 8ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. தந்தை கூலித் தொழிலாளி; குடிப் பழக்கம் உள்ளவர். கூலியில் பாதிக்கு மேல், 'டாஸ்மாக்' சென்று விடும். வீட்டு வேலை செய்து, குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் தாய். அவருக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2020 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X