Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2020 IST
வேலுார் மாவட்டம், சேர்பாடி, அரசு நடுநிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு படித்தேன். என் தம்பிகள் இருவரும் அதே பள்ளியில் படித்தனர். காமராஜர், மதிய உணவு திட்டத்தை அமல் படுத்தியிருந்தார். அந்த உணவை, தம்பிகளுடன் சாப்பிடுவேன். தீவிர காங்கிரஸ் உறுப்பினரான என் தந்தை, இதை விரும்பவில்லை. எங்களிடம், 'ஒருவேளை கூட சாப்பிட வசதியில்லாத குழந்தைகள், பள்ளியில் மதிய உணவு உண்பது தான் தர்மம்...' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2020 IST
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், நாச்சியார்பட்டி, நா.கி.நடுநிலைப் பள்ளியில், 1985ல், 8ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியராக வெங்கிடசாமி இருந்தார்.கிராமப்புற மாணவர்களிடம் பரிவும் அன்பும் மிக்கவர்.விவசாய வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம், படிக்கும் சிறுவர்களை தோட்ட வேலைக்கு அனுப்பி விடுவர் பெற்றோர்.அரையாண்டுத் தேர்வின் போது, என்னையும் தோட்ட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2020 IST
கோவில்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில், 2002ல், 9ம் வகுப்பு படித்த போது, குடும்பத்தில் வறுமை நிலவியது. வீட்டில் மின்சாரம் கிடையாது. பக்கத்து வீட்டு விளக்கு ஒளியில் தான் படிப்பேன். ஒரு நாள், வீட்டுப் பாடம் கொடுத்திருந்தார் வகுப்பு ஆசிரியர். நான் முறையாக முடித்திருந்தேன். முடிக்காதோர் வரிசையில் என் பக்கத்து வீட்டு தோழியும் இருந்தாள். அவளுக்கு அடி கிடைத்தது. அவள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2020 IST
மிக் என்ற நகரத்தை, ஆண்டு வந்தார் மன்னர் ஜார். அவரது மகள் சிறந்த அழகி. அவளுக்கு தகுந்த மணமகனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். அந்த நாட்டில் தகுதியானவன் கிடைக்கவில்லை.அதனால், நாட்டை விட்டு புறப்படும் கப்பல்களையும், வந்துசேரும் கப்பல்களையும் நன்கு கவனித்து, அரசகுமாரிக்கு பொருத்தமான மணமகனைக் கண்டுபிடிக்க, சேவகர்களுக்கு உத்தரவிட்டார்.துறைமுகத்தில் அலைந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2020 IST
மலை அடிவாரத்தில் இருந்தது மலையனுார் கிராமம். அங்கு, ராமு தாத்தாவும், சீதா பாட்டியும் குடிசையில் வசித்து வந்தனர்.தாத்தாவுக்கு, உளுந்து வடை சாப்பிடும் ஆசை வந்தது. 'இன்னைக்கு சுட்டுக்குடேன்...' என்று பாட்டியை கெஞ்சினார். 'அடே, இந்த மனுஷன் ஆசையா கேக்குறாரே' என்று உருகி, சமையல் அறையில் டப்பாக்களை திறந்து பாத்தார். உளுந்து இல்ல; எண்ணெய் மிக குறைவாக இருந்தது. பணத்தை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2020 IST
உணவுப் பொருட்களைச் சூடாக்கினால், தீமை செய்யும் பாக்டீரியா என்ற நுண்ணுயிர் அழியும் என்பதை, உறுதிப்படுத்தியவர், விஞ்ஞானி லுாயி பாஸ்டர். இதற்கு, 'பாஸ்கரிசேஷன்' என்று பெயர். பாலைக் காய்ச்சுவதும், அதில் உள்ள தீய பாக்டீரியாவை ஒழிப்பதற்குத்தான். இந்த கண்டுபிடிப்பால் மேலும் முன்னேறியது மனிதஇனம்.ஐரோப்பிய நாடான பிரான்சில், ௧௮௨௨ல் பிறந்தார் லுாயி பாஸ்டர். பள்ளி பருவத்தில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2020 IST
'இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு' என்பது பழமொழி. உடல் இளைத்தால் எள்ளு உணவு சாப்பிட வேண்டும். உடல் கொழுத்தால் கொள்ளு உணவை சாப்பிட வேண்டும். இரண்டும், உடலை ஆரோக்கிய நிலையில் பேணும் என்பது தான் இதன் பொருள்.எள்ளு பற்றிய விவரங்களை காண்போம்...குற்றுச்செடி எள்ளு; இரண்டு அடி வரை வளரும். மூன்று ரகங்கள் உள்ளன. கருப்பு நிற எள்ளில் தான் மருத்துவ பண்பு அதிகம். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2020 IST
குக்கூவனம் சிறந்த பள்ளி; அங்கு படிக்கும், மாணவ, மாணவியர் மிகவும் புத்திசாலிகளாக திகழ்ந்தனர். எதிலும் புகழ் சேர்த்தனர். அறிவில் மிளிர்ந்தனர்.மாணவ, மாணவியருக்கு, ஆண்டு இறுதியில் போட்டிகள் நடக்கும். அந்த போட்டியில் பங்கேற்போர் பட்டியலை பார்த்த தலைமை ஆசிரியர் சங்கரனுக்கு வியப்பு. எப்போதும், முதல் பரிசு வாங்கும், 9ம் வகுப்பு கீதா மற்றும் 6ம் வகுப்பு விவேக் பெயர்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2020 IST
பாட புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான் முகிலன். அவனிடம் வந்த மதன், 'மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி ஒன்றை காந்தி மன்றத்தில் நடத்துறாங்க; எழுதுறதுக்கு, தாள் அங்கேயே கொடுப்பாங்க; ஆனா... எங்கிட்ட பேனா இல்ல... உன்னுடையதை தந்து உதவுறீயா...' என, இரவலாக கேட்டான்.'நிறம் காக்கா, உடம்பு ஓணான், மூக்கு கிளி, முகம் முட்டை, சோத்துக்கு லாட்டரி... உனக்கு கட்டுரைப் போட்டியில் பங்கேற்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2020 IST
அம்பாசிடர் ரதம்!'அம்பாசிடர்' என்றவுடன், 40 வயதை கடந்தவர்கள் கண்முன் கம்பீர தோற்றமுள்ள கார் வந்து நிற்கும்; பல ஆண்டுகள் பின்னோக்கி, நினைவுகள் சூழலும். அந்த காலத்தில், தோற்றம், வசதியான இருக்கை என்று, இந்தியர்களின் பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது.எத்தகைய சாலையிலும் ஈடு கொடுத்து ஓடியது; அரசு அதிகாரிகள், பிரபலங்கள் விரும்பி வாங்கினர். நம் நாட்டின் முதல் பிரதமராக, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2020 IST
தேவையான பொருட்கள்:வெள்ளை கொண்டை கடலை - 1 கப்சோள மாவு - 2 மேஜைகரண்டிபெரிய வெங்காயம் - 1பச்சை மிளகாய் - 2மிளகாய், சீரகம், சோம்பு துாள் - தலா 1 மேஜைகரண்டிஉப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:கொண்டை கடலையை ஊற வைக்கவும். பின் தண்ணீரில் வேக வைத்து அரைக்கவும். அதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சோளமாவு, மிளகாய்துாள், சீரகம், சோம்புத்துாள் கலக்கவும். இந்த மாவு கலவையை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2020 IST
அன்புள்ள பிளாரன்ஸ் அம்மாவுக்கு...நான், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. இந்த கடிதத்தை எழுதும் முன், பல தடவை யோசித்தேன். என் மன குழப்பத்திற்கு, தங்கள் அன்பான, ஆதரவான பதிலால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். பொதுத்தேர்வு வருகிறது. நன்கு எழுதுவேனா, மாட்டேனா என்ற கவலை, மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது. எனக்கு, 10 வயதான போது, அந்த சம்பவம் நிகழ்ந்தது. எப்போதும், என் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2020 IST
கல்லுாரியில் பி.காம்., முதலாண்டு மாணவன் நான். சிறுவர்மலர் இதழை, 10 ஆண்டுகளாக படித்து வருகிறேன். தமாசு போன்ற துணுக்குகளும் எழுதி வருகிறேன். 'மொக்க ஜோக்ஸ்' பகுதியில் பல வெளிவந்துள்ளன. அவற்றுக்கு கிடைக்கும் சன்மானத் தொகையை, அஞ்சலகத்தில் சேமிப்பேன். பள்ளி, கல்லுாரி கல்விக்கட்டணம் உட்பட செலவுகளுக்கு பயன்படுகிறது. இதனால் ஏழ்மையில் இருக்கும் என் பெற்றோரின் சிரமம், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2020 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X