Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
புதுச்சேரியில் பாரம்பரியம் மிக்க பள்ளி, கல்வே காலேஜ். அங்கு, 1963ல், 8ம் வகுப்பு படித்தபோது, கணித ஆசிரியராக இருந்தார் பழனிபிள்ளை. துாக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட, வாய்ப்பாடுகளை பிசகாமல் சொல்லும் அளவு பலமான அஸ்திவாரம் போட்டிருந்தார். வகுப்பில் அவர் உட்காரும்போது, மேஜையில் பிரம்பும் உட்காரும். தப்பாக கணக்குப் போட்டால் பிரம்புக்கு வேலை கொடுப்பார்.அன்று, கணித ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
காஞ்சிபுரம், பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில், 1959ல், 9ம் வகுப்பு படித்தபோது, தலைமை ஆசிரியராக இருந்தார் கன்னியப்ப முதலியார். மத்திய அரசு விருது பெற்றவர்.வகுப்பறை சுவரில், ஆங்கில இதழில் வெளியான அபூர்வ விநாயகர் படம் ஒட்டப்பட்டிருந்தது. ஒரு நாள் மதிய உணவு இடைவேளையில், அந்த படத்தின் சிறப்புகள் பற்றி, குழுவாக விவாதித்தபடி இருந்தோம். இதை பின்னால் நின்று கவனித்திருக்கிறார் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
தஞ்சாவூர், மானப்புச்சாவடி, மிஷன் தெரு, புனித அந்தோனியர் மேல்நிலைப் பள்ளியில், 1974ல், 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி ஆண்டு விழா நாடகத்தில், மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியராக நடிக்க வைத்தார், வகுப்பு ஆசிரியை பார்பதா. அதற்கான உடையை சொந்த செலவில் தைத்து தந்தார்.நோயாளிகளை கவனிக்கும் முறை, அன்புடன் கூடிய கண்டிப்பு, மருத்துவ சேவையின் முக்கியத்துவம் பற்றி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
முன்கதை: லட்சுமியின் மகன் சூரியராஜா. மாணவப் பருவத்தில், வீட்டை விட்டு ஓடினான். அவனை மும்பையில் கண்டு பேசியது பற்றி விவரித்தார் உறவினர். அதை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார் லட்சுமி. இனி - ''பிடிச்ச கையை விட்டுட்டா, உங்க மகன் கூட்டத்துல பூந்து ஓடிடுவான் போல தோணுச்சி... அதனால கைய இறுக்கமா பிடிச்சிட்டே விவரத்தை கேட்டேன்...'' என பெருமையை பறை சாற்றிக் கொண்டார் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
* உடலில் களைப்பும், மூளையில் சோர்வும் ஏற்படுவதை அறிவிக்கும் செயலே கொட்டாவி * உண்ணும் உணவில், அதிகப் படியாக புரதம், புளிப்பு பொருள்கள் இருந்தால், அவற்றைச் சிதைக்கும் போது, ஏற்படும் வாயு ஏப்பமாக வெளிவருகிறது * உதரவிதானம் சரிவர சுருங்கி விரிந்து செயல்பட முடியாத போது ஏற்படும் சுவாச சிக்கலே விக்கலாக மாறுகிறது * உணவுப் பாதையில் செல்லவேண்டிய உணவுத் துணுக்குகள் சுவாசப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
சுகவனக் காட்டில், பிரசவ வேதனையால் துடித்து கொண்டிருந்தது மான்.சிறிது நேரத்தில், பிறக்கப் போகும் குட்டியை, நினைத்து சந்தோஷம் ஏற்பட்டது.அதே நேரம், அங்கு வந்தது புலி. மானை ருசித்து சாப்பிட விரும்பி நின்றது.இதைப்பார்த்ததும், 'ஐயோ கொன்று விடுமே... என்ன செய்வேன்; என் குட்டியின் முகத்தை கூட பார்க்க முடியாத துரதிஷ்டசாலியாகி விட்டேனே' என எண்ணியது மான்.கலக்கத்துடன், 'என்னை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
கரைந்தபடி குளக்கரை மரக்கிளையில் அமர்ந்தது காகம். இரை கிடைக்குமா என, சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருந்த காகம் கண்ணில், குளத்து நீரில் தத்தளித்துக் கொண்டு இருந்த முயல் தெரிந்தது. அது, கரையேற முடியாமல் தவிப்பதை கண்டு பரிதாபப்பட்டது காகம்.முயலைக் காப்பாற்ற யோசித்தது.'எப்படி குளத்தில் விழுந்தாய்...' 'வேட்டை நாய் துரத்திய போது, தவறி விழுந்து விட்டேன்... என்னை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினர். பின் படிப்படியாய் அது குறைந்து காணாமல் போய்விட்டது.* ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது* திருமணங்களில் 'ஊஞ்சல் சடங்கு' இதன் அடிப்படையில் தான் நடத்தப்படுகிறது* ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி, உடல் உற்சாகம் பெறுகிறது* நேராக அமர்ந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
சிறுவர், சிறுமியரை மலைப்புக்கு உள்ளாக்கும் கதாபாத்திரம், சூப்பர்மேன். காமிக்ஸ் வகை கதைகளால் கலக்கிவருகிறது. அசையும் படமாகவும், அசல் நடிகர்களின் பாத்திரமாகவும் பரிணமித்துள்ளது. உலகம் முழுதும், சிறுவர்களிடம் பிரபலமாகியுள்ள சூப்பர்மேன் பற்றி அறிந்து கொள்வோம்!அமெரிக்கா, ஓகியோ நகரைச் சேர்ந்த இருவர், 1933ல், மாணவப் பருவத்தில், 'சூப்பர்மேன்' கதாபாத்திரத்தை கற்பனையாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
சுட்டிப் பெண் வினிதா, 6ம் வகுப்பு படித்து வந்தாள். படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வம் காட்டுவாள். ஆசிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.அவள் அம்மா படிப்பறிவற்றவர். அவரைக் கண்டாலே வினிதாவுக்கு பிடிக்காது. இந்த குணத்தை மாற்ற எவ்வளவோ முயற்சி செய்தார், அப்பா. பலன் அளிக்கவில்லை. காலப்போக்கில் மாறும் என தேற்றிக் கொண்டார். பள்ளியில் ஆண்டு விழா வந்தது. நிறைய பரிசுகள் வாங்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
தினமலர் நாளிதழின் தீவிர வாசகன் நான்; நான்கு வயது ஆண் குழந்தை உள்ளது. குடும்பத்தில், அறிவுரை சொல்ல முதியவர் யாரும் இல்லை. மகன் ஏதேனும் கேட்டு அடம் பிடித்தால், அவன் கவனத்தை திசை திருப்புவது மிக கடினம். எவ்வளவு விலை மதிப்புள்ள பொருளையும் வாங்கி கொடுத்தேயாக வேண்டும். இது பெரும் கவலையாக இருந்தது. ஒரு நாள் அடம் பிடித்தபோது, சிறுவர்மலர் புத்தகத்தில் படங்களை காட்டி, கதைகளை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
புவிசார் குறியீடு !காஞ்சிபுரம் பட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகை உள்ளிட்டவை அந்தந்த பகுதி சார்ந்த உற்பத்தி பொருட்கள். இந்த அடையாளத்தை உறுதி செய்து சான்றளிப்பதைத் தான், புவிசார் குறியீடு என்கின்றனர். இந்த தரக் குறியீடு பெற்ற பொருளை, வேறு ஊரில் உற்பத்தி செய்து, காஞ்சிபுரத்தில் நெய்ததாக விற்க முடியாது. மதுரையை சுற்றி சாகுபடியாகும் குண்டுமல்லியை மட்டுமே, மதுரை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
வட அமெரிக்காவில் காணப்படுகிறது கனடா வாத்து. இதை, நீர்க்கோழி எனவும் அழைப்பர். உருவத்தில் மிகப்பெரியது. உடல், 110 செ.மீ., நீளம் வரை இருக்கும். இறக்கையின் நீளம் அதிக பட்சமாக, 180 செ.மீ., வரை இருக்கும். நீண் கழுத்துள்ளது. பெரும்பாலும், தலை கறுப்பு நிறத்தில் இருக்கும். கழுத்தில் வெள்ளை நிற வளையம் காணப்படும். எப்போதும் சத்தமிட்டபடியே இருப்பதால், 'சத்தமிடும் வாத்து' என்ற பெயரும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
அன்பு அம்மாவுக்கு...என் வயது, 18; இளங்கலை இயற்பியல் முதலாமாண்டு படிக்கிறேன்; தற்பெருமையடிக்கிறேன் என்று எண்ண வேண்டாம். உண்மையில் நான் மிகவும் அழகாக இருப்பேன். கச்சிதமான உயரம்; சிவந்த நிறம்; ஒல்லியான உடல்வாகு; சீரான பல் வரிசை. துாரத்திலிருந்து பார்ப்பவர்கள், என் அழகில் மயங்கி போவர். ஆனால், பக்கத்தில் வந்து பார்த்தால் கடுமையாக முகம் சுளிப்பர். காரணம், என் மேல் உதட்டில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
தேவையான பொருட்கள்:இஞ்சி - 100 கிராம்துருவிய தேங்காய் - 1 கப்பூண்டு - 1வத்தல் - 3கடுகு, மல்லி, பெருங்காயம், உப்பு, புளி - தேவையான அளவுநல்லெண்ணெய், கறிவேப்பிலை - சிறிதளவு.செய்முறை:சுத்தம் செய்த இஞ்சியை தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும். நல்லெண்ணெய்யை சூடாக்கி, கடுகு, பெருங்காயம் பொடி, மல்லி, வத்தல் போட்டு வதக்கவும். பின், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பூண்டு, தேங்காய் சேர்த்து, பொன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X