சரியாகப் பத்து ஆண்டுகளுக்கு முன்னால், ஜனவரி 9, 2007 அன்று, முதல் ஐபோன், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களால், சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற “மேக்வேர்ல்ட் கருத்தரங்கில்” அறிமுகப்படுத்தப்பட்டது. இதனுடன் இணைந்து “ஆப்பிள் உலகம்” பிறந்தது. இதைக் கடவுளாகவே மதித்த பயனாளர்களில் சிலர், ஐபோனை "Jesus Phone" எனவும் அழைத்தனர். மொபைல் போன் உலகில், புதிய தொழில் நுட்பத்தினை, ..
கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த மெமரி ட்ரைவ்களைத் தயாரித்து வரும் கிங்ஸ்டன் டிஜிட்டல் (Kingston Digital) நிறுவனம், அண்மையில் உலகில் மிக அதிகக் கொள்ளளவினைக் கொண்ட யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றை வடிவமைத்து வழங்கியுள்ளது. இதன் கொள்ளளவு 2 டெரா பைட். இதன் பெயர் DataTraveler Ultimate GT / Ultimate GT Flash Disk. அண்மையில், லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற பன்னாட்டளவிலான நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் காட்சித் திருவிழாவின் போது, இது ..
அண்மையில் Deloitte Mobile Consumer Survey 2016 அறிக்கை ஒன்று ஆய்வுக்குப்பின் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில், 53% பேர், தங்களுக்கு வேண்டிய மொபைல் போன்களை, இணைய தளம் மூலமே வாங்கி வருகின்றனர். 39% பேர் கடைகளில் வாங்குகின்றனர். 2017ல், பலர், (45% பேர்) தாங்கள் 4ஜி அலைவரிசை பயன்பாட்டிற்கு நிச்சயம் மாறி விடுவதாகக் கருத்து தெரிவித்தனர். மொபைல் அழைப்புகள் இடையே 'கட்' ஆவதை நிறுத்த 1.5 லட்சம் இணைப்பு ..
விண்டோஸ் இயக்கத்திற்கென இணையத்தில் கிடைக்கின்ற இலவச வைரஸ் தடுப்பு செயலிகளை, AV Test Institute என்னும் அமைப்பு ஆய்வு செய்து, இந்த ஆண்டில் பயன்படுத்தக் கூடிய ஐந்து செயலிகளைப் பரிந்துரை செய்துள்ளது. மால்வேர் மற்றும் வைரஸ்களிடமிருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாப்பது, நல்ல இணைய தளங்களைக் கூட மால்வேர் எனக் குறிக்கும் தவறை மேற்கொள்ளாமல் இருப்பது, கம்ப்யூட்டர் செயல்பாட்டில் ..
தொடர்ந்து பல புதிய நிறுவனங்கள், மொபைல் போன் விற்பனைச் சந்தையில் புகுந்து கலக்கி வருகின்றன. தங்களுடைய புதிய மாடல் போன்கள் குறித்துப் பலவகையான குறிப்புகளை, பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்கள் வழியாக வெளியிட்டு வருகின்றன. மொபைல் போன் வாங்குபவர்களும், மொபைல் போன் ஒன்றை வாங்கும் முன் அதன் பல கட்டமைப்பு வசதிகள் குறித்து மற்ற போன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் ..
லாஸ்வேகாஸ் நகரில் நடந்த 'நுகர்வோர் மின்னியல் கண்காட்சியில்' இன்டெல் நிறுவனம் கிரெடிட் கார்ட் அளவிலான, கம்ப்யூட்டிங் கார்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதனை, மேலாகப் பறந்து சென்று இயங்கும் 'ட்ரோன்', மனிதனின் இடத்தில் வேலை பார்க்கும் ரோபோக்கள், டிஜிட்டல் வழிகாட்டிகள் மற்றும் இது போன்ற டிஜிட்டல் சாதனங்களில் பொருத்தி இயக்கலாம். இதன் மூலம், “அனைத்திலும் இணையம்” என்ற ..
ரீபிளேஸ் விண்டோவில் டெக்ஸ்ட் வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றின் இடத்தில் நாம் விரும்பும் சொற்களை அமைத்திட Find and Replace என்னும் டூலைப் பயன்படுத்துகிறோம். இதில் ரீ பிளேஸ் செய்திடக் கட்டளை கொடுத்தால், குறிப்பிட்ட சொல்லைக் கண்டறிந்து, அதன் இடத்தில் ரீபிளேஸ் டெக்ஸ்ட்டை அமைத்துவிட்டு, இந்த டூல் அடுத்த சொல் இருக்குமிடத்தில் சென்று நிற்கும். ..
எக்ஸெல் டாஸ்க் பாரில் விடைகள்எக்ஸெல் ஒர்க் ஷீட்டைப் பொறுத்த வரை, நாம் அதில் உள்ள நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசையில் உள்ள செல்களைத் தேர்ந்தெடுத்தால், அதன் மதிப்புகள் நமக்கு டாஸ்க் பாரில் காட்டப்படும். Average, Count, Sum ஆகிய மதிப்புகள் காட்டப்படும்.எவற்றைக் காட்ட வேண்டும் என்பதனை நாம் தான் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். எண்களின் கூட்டல் மட்டுமின்றி, மேலும் பல ..
பொங்கலுக்கு நம் வீடுகளைப் புதுப்பிப்பது போல, கம்ப்யூட்டரைப் புதுப்பிப்பதற்கான காரணங்களையும், அவ்வாறு புதுப்பிக்காவிட்டால், நாம் எதிர் கொள்ளக் கூடிய அபாயங்களையும், அழகாக விளக்கும் கட்டுரை மிகப் பயனுள்ளதாக இருந்தது. இது போல பராமரிப்பிற்கான டிப்ஸ்கள் அடங்கிய கட்டுரையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது தரவும். மாணவர்களுக்கும், கம்ப்யூட்டரை முதல் முதலாகப் ..
கேள்வி: நான் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். இணையத்தில் ஒரே பொருளில் தகவல்கள் தரும் பல தளங்களைப் பார்வையிடும்போது, அவை அனைத்தையும் பின் நாளில், அடிக்கடி பார்ப்பதற்காக, புக் மார்க் செய்ய வேண்டியதுள்ளது. இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே புக்மார்க் செய்வதற்குப் பதிலாக, மொத்தமாக புக்மார்க் செய்திட முடியுமா? அதற்கான வழி உள்ளதா? நான் பயன்படுத்துவது குரோம் பிரவுசர். சிஸ்டம் ..
Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.