Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
கூகுள் தரும் ஜிமெயிலில் எண்ணற்ற வசதிகள் உள்ளன. அவற்றில் சில வசதிகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம். இங்கு நாம் அதிகம் பயன்படுத்தாத, சில முக்கிய வசதிகளைக் காணலாம்.1. அஞ்சல் செய்தியில் ஸ்டார்:நாள் தோறும் பல மின்னஞ்சல் செய்திகள் நமக்கு வருகின்றன. இவற்றில் ஒரு சில முக்கியமானவையாக இருக்கும். ஒரு சிலவற்றிற்கு கட்டாயம் சில நாட்களில் பதில் அனுப்ப திட்டமிடுவோம். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
உலகின் 90 சதவிகித பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய திருப்புமுனை இயக்கமாக, விண்டோஸ் 8, வரும் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26ல், வெளிவர இருக்கிறது. தற்போதைய விண்டோஸ் இயக்கத்தின் செயல்பாட்டினை முற்றிலுமாகப் புரட்டிப் போட இருக்கின்ற இந்த சிஸ்டத்தினைப் பயன்படுத்த, பல லட்சக்கணக்கில் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். விண்டோஸ் 95 முதல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் போது, எதனை நாம் காப்பி செய்தாலும் அது கிளிப் போர்டுக்குச் செல்கிறது. பின்னர் எந்த இடத்தில், எந்த அப்ளிகேஷனில் நாம் இருந்தாலும், கண்ட்ரோல்+வி அல்லது இன்ஸெர்ட் கட்டளை கொடுத்தால், கிளிப் போர்டில் உள்ள ஐட்டம் அங்கு பேஸ்ட் செய்யப்படுகிறது. இங்கு பயன்படுவது சிஸ்டம் தரும் கிளிப் போர்டு ஆகும். இது இல்லாமல், இன்னொரு கிளிப் போர்டும் நம்மிடம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
ஸ்டீவ் ஜாப்ஸ் தன் ஐபேட் சாதனத்தை அறிமுகப்படுத்திய போது, ""பெர்சனல் கம்ப்யூட்டர் சகாப்தம் முடிந்துவிட்டது. அடுத்த சகாப்தம் தொடங்கிவிட்டது''என்றார். அப்போது அது மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றினாலும், தற்போது விண்டோஸ் ஆர்.டி. டேப்ளட் பிசிக்களைப் பார்க்கையில் எங்கே அது உண்மையாகிவிடுமோ என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் தோன்றியுள்ளது. மிகக் குறைவான மின்சக்தியில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
உலகின் அனைத்து நாடுகளும், அவர்களின் பொருளாதார வளத்திற்கேற்ற வகையில் தகவல் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த வேகம், உலகெங்கும் காட்டுத் தீயாய்ப் பரவி வருகிறது. இந்த கருத்தினை பன்னாட்டளவிலான தொலைதொடர்பு அமைப்பு (International Telecommunications Union) தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாடும் மொபைல் போன் பயன்பாட்டில் இரண்டு இலக்க அளவில் வளர்ச்சியைக் கொண்டுள்ளன. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்திய அமைப்பு, நம் மக்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாத, அளவற்ற இன்டர்நெட் இணைப்பு தரும் கட்டண திட்டங்களையே விரும்புகிறார்கள் என்று அறிவித்துள்ளது. ஏர்னஸ்ட் அண்ட் யங் என்னும் இந்த அமைப்பு இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா உட்பட 12 நாடுகளில் இத்தகைய ஆய்வுக் கணக்கெடுப்பினை மேற்கொண்டது. மாறாத ஒரே மாதக் கட்டணத்தில் அளவற்ற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
இசையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோ பைல்கள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக்காட்டாக எம்பி3 பைல்கள் இந்த வகையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உள்ள சில ஆடி@யா பைல் வகைகளை இங்கு காணலாம்..mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாக இசையைப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
பேஸ்புக்கின் சாதனை பிரம்மிக்கத்தக்கது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நீங்கள் கொடுத்த தகவல்கள் மட்டுமின்றி, இறுதியாக, கோடிப் பேரைச் சேர்த்து வைத்த புண்ணியம் என்று கட்டுரையை முடித்தது முத்தாய்ப்பாக இருந்தது. ஆ. சீனிவாசன், சென்னை.உலகம் முழுவதையும் பேஸ்புக்கில் இணைப்போம் என்று ஸூக்கர் பெர்க் கூறியது நிச்சயம் ஒருநாளில் நடைபெறும். பேஸ்புக் அனைவருக்கும் முகவரி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
கேள்வி: சில டாகுமெண்ட்களில், சொற்களில் முன் எழுத்துக்களை மட்டும் அகலமாகவும், சற்றுப் பெரிதாகவும் அமைக்கப்பட்டு கிடைக்கிறது. பெரிதாக அமைக்க பாண்ட் அளவினை அதிகப்படுத்தலாம்; எப்படி அகலமாக அமைக்க முடிகிறது. ஒவ்வொரு பாண்ட்டுக்கும் இது போல அகல எழுத்துக்கென தனி பாண்ட் தரப்படுகிறதா?சி. கதிரேசன், மதுரை.பதில்: இதற்கென தனி பாண்ட் அமைப்பு தரப்படவில்லை. இதனை மிக எளிதாக வேர்ட் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எப்படி "ஆப்பிள் வரும் முன், ஆப்பிள் வந்த பின்' என்று இருவேறு நிலைகளைச் சரித்திர நிகழ்வுகளாக டிஜிட்டல் உலகம் கருதுகிறதோ, அதே போல, "விண்டோஸ் 8க்கு முன், விண்டோஸ் 8க்குப் பின்' என பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு இனி பேசப்படும். இதுவரை வெளியான விண்டோஸ் போல் இல்லாமல், பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்கள் அனைத்திலும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
Wizard என்பது கம்ப்யூட்டரில் உங்களை வழிகாட்டும் ஒரு பொதுவான வழிகாட்டி. இது அனைத்து புரோகிராம்களிலும் கிடைக்கும். வரிசையாக கேள்வி கேட்டு அல்லது ஆப்ஷன்ஸ் கொடுத்து அதில் உங்களுக்கான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கச் சொல்லி வழி நடத்திச் செல்லும். சாதாரண விஸார்ட் என்றால் வேர்டில் ஒரு புதிய டாகுமெண்ட்டை திறக்கையில் உங்களிடம் கேள்வி கேட்டு ஆப்ஷன்ஸ் தரும் கட்டமும் ஒரு விஸார்ட் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
சென்ற இரண்டாவது வாரத்தில், வழக்கம் போல மைக்ரோசாப்ட் நிறுவனம், தன்னுடைய பேட்ச் பைலை வெளியிட்டது. வேர்ட், ஆபீஸ், விண்டோஸ், ஷேர் பாய்ண்ட் சர்வர், எஸ்.க்யூ.எல் சர்வர் மற்றும் தன்னுடைய பல புரோகிராம்களில் உள்ள பலவீனமான தவறுகளைச் சரி செய்திடும் பேட்ச் பைல்களை வெளியிட்டது. குறிப்பாக வேர்ட் புரோகிராமிற்கான திருத்தம் வேர்ட் 2003 லிருந்து இன்றைய வேர்ட் புரோகிராம் வரை தேவைப்பட்ட ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X