கிருமிகளோடுதான் நாம் இத்தனை ஆண்டுகளும் வாழ்ந்து வருகிறோம். அவற்றைத் தாங்கிக் கொள்வதற்கான எதிர்ப்புச் சக்தியை நமது உடல் பெற்றுவிட்டது. கொரோனா வைரஸ் போன்ற புதிய கிருமிகள் நம்மைத் தாக்கும்போதுதான், நோய் ஏற்படுகிறது. உலகெங்கும் கொரோனாவிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தனிமைப்படுத்துதல், பரிசோதனை செய்துகொள்வது, வெளியே அதிகம் ..
வைரஸ் கிருமிகள்தான் இந்த உலகில் தோன்றிய முதல் உயிரினம். 1892ஆம் ஆண்டில் வைரஸ் கிருமிகளை முதன்முதலில் கண்டுபிடித்துப் பெயர் சூட்டியவர், டிமிட்ரி ஐவனாஸ்கி (Dmitri Ivanovsky) என்ற உயிரியல் அறிஞர். சுமார் 350 கோடி ஆண்டுகளாகப் பூமியில் வாழ்ந்து வரும் வைரஸ்களை மனித குலம் கண்டறிந்து, 128 ஆண்டுகளாகின்றன. வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட போது, அவை உயிரற்றவை என்றே கருதப்பட்டது. ஆகவே, உயிரியல் ..
ஒரு செல் என்பது, அதன் மரபுப் பொருளான டி.என்.ஏ. (DNA) அல்லது ஆர்.என்.ஏ. (RNA) பிரதியெடுத்து, செல் பிரிகை நடந்து இனப்பெருக்கம் செய்யத் தேவையான பொருட்களையும் நொதிகளையும் (Enzymes) கொண்டிருக்கும். பெரும்பாலும் இன்னொரு செல்லின் உதவியின்றி அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியும்.ஆனால், ஒரு வைரஸ் என்பது, ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கும் விருந்தாளி என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு ..
வைரஸ் பயோ இன்ஜினியரிங்கில் கில்லாடி. தன் அளவு, வடிவம், நம்முள் புகும் விதம் போன்ற எல்லாவற்றையும் காலப்போக்கில் மாற்றிக் கொண்டே இருக்கும். ஏன் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கேட்கிறீர்களே? இன்றே அதற்கொரு மருந்து கண்டுபிடித்தாலும், அதை முறியடிக்கும் விதத்தில் தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் வைரஸ்களுக்கு உண்டு.பொதுவாக, உடலின் அளவைப் பொறுத்தே, உயிரினங்களின் மூளை ..
வைரஸ் என்பது நேனோ மீட்டர்களில்தான் இருக்கும். பாக்டீரியா என்பது மைக்ரோ மீட்டர்களில் இருக்கும். எனவே, பாக்டீரியாவின் அளவு பெரியதாக இருக்கும். சாதாரண மைக்ரோஸ்கோப்களில் பார்க்க முடியும். வைரஸ், நேனோ மீட்டர்களில் இருப்பதால், எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பில் பார்க்க முடியும். இது ஒரு இன்ட்ராசெல்லுலார் ஆர்கன். அதாவது ஒரு செல்லுக்குள்தான் இது வளரவும் பெருகவும் முடியும். ..
வைரஸ் காற்றில் பரவலாம். அது தவிர, ஒரு மேஜை மேலோ, நாம் உபயோகப்படுத்தும் பொருட்கள் மேலே சில வைரஸ்கள் தொற்றக்கூடும். சில வைரஸ்கள் இது மாதிரிப் பொருட்களில் இரண்டு மணிநேரத்திலேயே அழிந்து போகும். வேறு சில வைரஸ்கள் ஆறு மணிநேரம் வரை உயிர்வாழ்வதும் உண்டு. உடை, கைப்பை, போன் என எல்லா பொருட்களின் மீதும் அது பரவக்கூடும்.டாக்டர் லட்சுமி ப்ரியாஉதவிப் பேராசிரியர், நுண்ணுயிரியல் ..
மற்ற உயிரினங்களைப்போல் மனிதர்களைத் தாக்கும் வைரஸ்களுக்கும் ஒரு பரிணாம வரலாறு இருந்திருக்க வேண்டும். நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகும்கூட துரதிர்ஷ்டவசமாக தொல்மனிதப் படிமங்களில் இருந்து வைரஸ்களின் எச்சங்கள் மீட்டெடுக்கப்படவில்லை. சுமார் 450 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மனித உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட வைரஸ்தான், இதுவரை மனிதர்களைத் தாக்கிய வைரஸ்களிலேயே பழமையான ..
சமீப காலமாக விலங்குகள் மூலம் பரவும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இப்படியான தொற்று பரவ, மனிதர்கள்தான் முக்கிய காரணிகளே தவிர, விலங்குகள் அல்ல. விலங்கு வழி நோய்கள் (Zoonotic diseases) அதிக அளவில் தாக்குவதற்கு, பல்லுயிர்ப் பெருக்கத்தைத் தொடர்ச்சியாக அழித்து வருவது முக்கிய காரணம் என, சுற்றுச்சூழல், விலங்கியல் நிபுணர்களும், இயற்பியல் விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். ..
சளி, காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களில் இருந்து, ஆட்கொல்லி நோய்களான சார்ஸ் (SARS), மெர்ஸ் (MERS), வரை வைரஸ்களால் உண்டாகின்றன. சரி, ஒரு வைரஸ் இன்னொரு வைரஸைத் தாக்குமா? 2008ஆம் ஆண்டு 'மாமா வைரஸ்' (Mamavirus) எனப்படும் பெரிய வைரஸ் ஒன்றுக்குள், சிறிய வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாமா வைரஸ் இன்னொரு வைரஸைத் தாக்கிய பின், சிறிய வைரஸ்களானது, மாமா வைரஸை முடக்கின. தன் மரபுப் பொருளைப் ..
1918-ஆம் ஆண்டு தனது கோரக்கரங்களால் உலகைத் தழுவியது ஸ்பானிஷ் காய்ச்சல். உலகம் முழுவதிலும் இக்காய்ச்சலுக்கு சுமார் 5 கோடிப் பேர் மரணமடைந்தனர். பலியானவர்களில் சுமார் 7 லட்சம் பேர் அமெரிக்கர்கள். குறிப்பாக 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் அங்கு 2 லட்சம் பேர் பலியாயினர்.நாடு முழுவதும் இருந்த சவப்பெட்டி செய்வோரும், இறந்தவர்களைப் புதைக்கும் பணியில் ..
உலக சுகாதார மையத்தின் சர்வதேச நோய் வகைப்பாட்டியல் (ICD - International Classification of Diseases) அமைப்பு, பிப்ரவரி 11, 2020 அன்று, இப்போது உலகெங்கும் பரவியுள்ள புது வைரஸுக்கு, சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 (Severe Acute Respiratory Syndrome Coronavirus 2), சுருக்கமாக சார்ஸ்-கோ வி-2 (SARS-Co V-2) என்று பெயரிட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு, சார்ஸ் தொற்றுநோய்க்குக் காரணமாக இருந்த வைரஸுடன், இந்தப் புதிய வைரஸ் மரபணுரீதியாகத் ..
உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் மாஸ்க் (mask) எனப்படும் முகமூடி அணியத் தேவையில்லை. ஆனால், இவர்கள் நோயாளிகளைப் பார்க்கச் சென்றால், அல்லது கவனித்துக்கொண்டால் முகமூடி அணிய வேண்டும்.1. காற்றோட்டமான அறையில் இருப்பவர்கள், வெட்ட வெளியில் இருப்பவர்கள் முகமூடி அணியத் தேவையில்லை.2. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் முகமூடி அணிய வேண்டும். 3. ஏ.சி. ..
'கோவிட் -19' எனும் கொரோனா வைரஸ் தாக்குதலால், 185 நாடுகள் பாதிப்படைந்துள்ளன. மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அரசுகள் அறிவுறுத்துகின்றன. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கின்றனர். அவை அனைத்திலும் சோப்புப் போட்டு கை கழுவச் சொல்வது முதன்மையானது. சாதாரண சோப்பு எப்படி வைரஸை அழிக்கும்?சோப்பின் இரண்டு பகுதிகள்:1. நீரை விலக்கும் ..
கொரோனா கொள்ளை நோய் பரவலைத் தடுக்க, 'சமூக விலகலை' (Social Distancing) கடைப்பிடியுங்கள் என்று நோயியல் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் ஒன்றாகக் கூடுவதையும், ஒருவரையொருவர் தொட்டுக்கொள்வதையும் தவிர்ப்பதே சமூக விலகல் எனப்படுகிறது. இச்சமயத்தில் சமூக விலகல் ஏன் மிகவும் அவசியம் என்பதற்கு கணிதம் அளிக்கும் விளக்கத்தைப் பார்ப்போம். கொள்ளை நோய்கள் பரவத் தொடங்கும் ..
கொரோனா கொள்ளைநோய் ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த சில மருத்துவச் சோதனைகள் கையாளப்படுகின்றன. இந்திய அரசின் உத்தரவுப்படி, அறிகுறிகள் இருந்தால் மட்டுமே இந்தச் சோதனை செய்யப்படும். தற்போது இந்தியா முழுவதுமே, ஐ.சி.எம்.ஆர். உத்தரவுப்படி 'ரிவர்ஸ் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன்' (Reverse Transcription Polymerase Chain Reaction - RTPCR) என்ற சோதனை செய்யப்படுகிறது. கொரோனா ..
கொரோனா கிருமியைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை கிட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவக் குழுமமான டிரிவிட்ரான், இதற்கான ஆய்வுகளில் இறங்கியுள்ளது. இந்நிறுவனத் தலைவரான டாக்டர் ஜி.எஸ்.வேலுவிடம் பேசினோம்:''எங்களுடைய சீன பார்ட்னரான 'இன் ஷைன்' கொரோனாவைக் கண்டறிய உதவும் பிசிஆர்டி- - கிட் (PCRT-KIT-) வடிவமைத்தார்கள். இதைச் சீனாவும் ..
கொரோனா தொடர்பான பொதுவான சந்தேகங்களை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் முன்பு வைத்தோம். அவருடைய பதில்கள் இதோ:இந்த வைரஸ் எந்த உயிரில் இருந்து தொற்றியது என்பது கண்டறியப்பட்டுவிட்டதா? இல்லை. இது பழந்தின்னி வெளவால்களில் இருந்து வந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இருப்பினும் சீனாவில் வூஹான் நகரில் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.