கடைகளில், சிப்ஸ் உள்ளிட்ட சில பொருட்களை வாங்கி உபயோகிக்கும்போது, சாப்பிட்டது போக மீதியை பாதுகாப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்.காரணம், வாங்கும்போது அவை காற்றுப் புகா வண்ணம், பாக்கெட்டில் அடைத்து தருவர். பாக்கெட்டை பிரித்த பின், நம்மால் காற்று புகாமல் அதே பாக்கெட்டில் மீண்டும் வைத்துக் கொள்ள முடியாது. வேறு ஏதாவது ஒரு காற்று புகாத பாத்திரத்தை தேட வேண்டி இருக்கும். ..
மீன் செதில்களை நீக்கும்போது, அந்த செதில்கள் எங்கும் விழுந்து, சுகாதாரமும் சுத்தமும் பாதிக்கப்படுகிறது. இந்த குறைபாட்டை நீக்கும் வகையிலான, 'ஸ்க்ராப்பர்'கள் இப்போது வந்துள்ளன.மீனின் செதில்களை நீக்கும்போது, அவை ஸ்க்ராப்பரில் உள்ள சேமிப்பு கலனில் சேமிக்கப்பட்டு விடும். இறுதியில், அவற்றை நாம் மொத்தமாக அப்புறப்படுத்தி விடலாம். விலை: 249 ..
சமையலின் போது, கையுறைகளைப் பயன்படுத்துவது என்பது, சமையலை விட சங்கடமான ஒன்று. ஒவ்வொரு விரலாக மாட்டி, கழற்றி... 'போதும் போதும்' என்றாகி விடுகிறது. இதனாலேயே பலர், கையுறை என்றால் தெறித்து ஓடி விடுவர். பதிலுக்கு, துணி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி, ஆபத்தையும் வரவழைத்துக் கொள்கின்றனர்.குறிப்பாக, மைக்ரோவேவ் ஓவனைப் பயன்படுத்துவதில், பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதற்கு ..
கழுவிய பாத்திரங்களை, நீர் வடிவதற்காக, 'டிரே'யில் வைப்பதில் இருக்கும் ஒரே சிரமம், அது நமக்கு இன்னொரு வேலையை உண்டாக்கி விடுவது தான். கழுவிய பாத்திரங்களிலிருந்து வடியும் நீர், தரை எங்கும் பரவி விடும். பிறகு, தரையையும் சுத்தம் செய்தாக வேண்டும்.இந்த பிரச்னைகளுக்கு தீர்வாக வந்திருக்கும், இது போன்ற ஒரு டிரேயை வாங்கிப் பயன்படுத்தி பாருங்கள். தண்ணீர் வடிவதற்கு தனி வழி ..
கத்தியால் காய்கறிகளை வெட்டுவது, பழகிப் போனாலும், எப்போதாவது கத்தி அதன் வேலையை காட்டிவிடும்; நகத்தையோ, விரலையோ பதம் பார்த்து விடும். இதற்கு எளிதான ஒரு பாதுகாப்பு ஏற்பாடு இருக்கிறது. இந்த கவசத்தை, நடு விரலில் மாட்டியபடி வெட்டினால், விரல்கள் நிச்சயம் தப்பித்து விடும்.சமையல் கலைக்குள் முதன் முதலில் அடியெடுத்து வைக்கும் இள வயதினர், இதை வாங்கி வைத்துக் கொள்வது உத்தமம். ..
பாஸ்தா போன்றவற்றை சமைக்கும் போதோ, காய்கறிகளை அவிக்கும்போதோ, அவற்றை வடிகட்டி எடுப்பது, கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். கையை சுட்டுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். நம் திறமைக்கு அவ்வப்போது சவால் விட்டபடியே இருக்கும். இந்த பிரச்னையை சமாளிக்க, ஒரு வழி இருக்கிறது. எவர்சில்வரில் தயாரிக்கப்பட்ட, கூடை போன்றிருக்கும் இதைப் பயன்படுத்தி, எளிதாக சவாலை சமாளிக்கலாம்.அவித்தல், ..
கோடைக் காலம் நெருங்கி விட்டது. கூடவே, தர்பூசணிகளும் அதிகம் வரத் துவங்கி விட்டன. தர்பூசணியை வெட்டுவது ஒன்றும் பெரிய சவாலான விஷயம் இல்லை. அதற்கென தனியாக எந்த சாதனங்களும் தேவைப்படுவதும் இல்லை. கத்தியால் ஒரே போடு போட்டு, பிளந்து, வெட்டி சாப்பிட வேண்டியது தான்.ஆனால், 'பார்ட்டி'களின்போதும், வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு கொடுக்கும்போதும், சீரான அளவில் வரிசையாக ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.