திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.3.66 கோடி உண்டியல் வசூல்
ADDED :741 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள், 3.66 கோடி ரூபாய் செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தினமும் வரும் பக்தர்கள், பவுர்ணமி தோறும் கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் என பலர் சுவாமி தரிசனம் செய்து, நேர்த்தித்கடனாக உண்டியல் காணிக்கை செலுத்தி செல்கின்றனர். அவ்வாறு செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, ஆவணி மாத உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள், 3.66 கோடி ரூபாய் மற்றும் 254 கிராம் தங்கம், 1,775 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.